பேட்டி, அரசியல், கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு

தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கையைக் கையோடு அறிவிக்க வேண்டும்: சமஸ் பேட்டி

10 May 2024, 5:00 am
1

நாட்டிலேயே தனித்துவ முயற்சியாக 2014 தேர்தல் சமயத்தில் நாடு தழுவிய பயணம் மேற்கொண்ட ஆசிரியர் சமஸ், 2024 தேர்தலை ஒட்டி மீண்டும் ஒரு பயணத்தை மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை குறுக்கும் நெடுக்குமாக மக்கள் இடையே பயணித்து அவர்களுடைய உணர்வுகளை எழுதுகிறார். ‘இந்தியாவின் குரல்’ தொடரானது அச்சில் ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ இதழிலும் இணையத்தில் ‘அருஞ்சொல்’ இதழிலும் வெளியாகிறது. மட்டுமல்லாமல் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் சேனல்களுக்கும் தொடர்ச்சியாகப் பேட்டிகளும் அளித்துவருகிறார். அந்த வகையில் ‘நியூஸ் 18 தமிழ்நாடு’ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் எழுத்து வடிவத்தை ‘அருஞ்சொல்’ தன் வாசகர்களுக்காக இங்கே தருகிறது.

தற்போது நடந்து முடிந்த மூன்று கட்ட தேர்தலிலும் 2019 தேர்தலைக் காட்டிலும் வாக்குச் சதவீதம் குறைந்திருப்பது என்பதை எப்படிப் பார்ப்பது? மக்களிடம் ஓர் அதிருப்தி இருக்கிறது என்று பார்ப்பதா அல்லது மக்களுக்கு வாக்களிப்பதிலுள்ள ஆர்வமின்மை என்று பார்ப்பதா?  

அதாவது, நேரடியாக இந்த எண்களை வைத்துக்கொண்டு எதிர்ப்பலை அல்லது ஆதரவு அலை என்ற முடிவுகளுக்குச் செல்வதற்கு அப்படிப் பெரியளவிலான மாற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை. வாக்குச் சதவீதம் 90%க்கு மேல் கூடவோ 50%க்குக் கீழ் குறைந்துவிடவோ இல்லை. ஆனால், குறைகிறது என்பது நிதர்சனம். இது நிதர்சனம் என்பது மட்டுமல்லாமல், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலில், ஏன் இந்த ஒரு சதவீதம் இரண்டு சதவீதம்கூட முக்கியமான காரணி என்று சொன்னால், கிட்டத்தட்ட 97 கோடி வாக்களர்களைக் கொண்ட தேர்தல் களம் இது. அப்படியென்றால், அதில் ஒரு சதவீதம் என்பது 97 லட்சம் பேரைப் பிரதிநித்துவப்படுத்தக்கூடியது. இதனால், இதில் அரை சதவீதம்கூட ஒரு பெரிய தாக்கம்தான். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் உலகின் பல நாடுகளின் கூட்டு மக்கள்தொகையைக் காட்டிலும் இந்த ஒரு சதவீதம் அதிகமாக இருக்கும். ஆக, இது மிகவும் முக்கியமானது. 

இதை மக்களின் அரசியல் ஆர்வத்தோடு பொருத்திப் பார்க்க வேண்டும் என்பதைவிடவும் நான் வேறொரு விஷயத்தைச் சுட்டிக்காட்டுவேன், அது சமூகச் சூழல். தற்போது இந்தியாவுக்குள் புலப்பெயர்வு என்பது பெரியளவில் நடந்துகொண்டிருக்கிறது. அது உள்புலப்பெயர்வு. மாநிலங்களுக்கிடையே நடந்துகொண்டிக்கும் புலப்பெயர்வு ஒருபுறம், அதாவது பிஹார், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் போன்ற இடங்களிலெல்லாம் மாநிலம் விட்டு மாநிலம் செல்வது பெரியளவில் நடந்துகொண்டிருக்கிறது. மறுபுறம் மாநிலங்களுக்குள்ளேயே நடக்கும் புலப்பெயர்வு. 

உதாரணமாக, நான் சென்னையில் இருக்கும் டாக்ஸி ஓட்டுநர்களிடம், இந்த வாக்குப்பதிவுக்குப் பிறகு தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன். நான் இதுவரை பயணித்த ஓட்டுநர்கள் ஒருவர்கூட வாக்களிக்கவும் இல்லை, அவர்கள் ஊருக்குச் செல்லவும் இல்லை. அவர்கள் வாக்குகளெல்லாம் எங்கிருக்கிறது என்றால் சங்கரன்கோவில், விழுப்புரம், தருமபுரி, பெரம்பலூர், நாகப்பட்டணம் ஆகிய ஊர்களில் இருக்கிறது. ஆக, இவர்களின் வாக்குகள் என்ன ஆனது என்றால் அங்கே விழாது. சரி, அப்போது சென்னையில் வாக்குச் சதவீதம் குறைந்திருக்கிறது என்றால், இதைத் தனித்துப் பார்க்க வேண்டும். 

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

சென்னையைப் பொறுத்தவரைக்கும் என்னவென்றால், இது நகர்புறங்களுக்கே உரிய தன்மை. ஆக, நாம் இந்த இரண்டு தன்மைகளாகத்தான் பிரித்துக்கொள்ள வேண்டும். நகர்ப்புறங்களுக்கு உரிய தன்மை என்பது எதனால் பிரதிபலிக்கிறது என்றால், இயல்பாகவே அரசியல் ஆர்வம் அல்லது அரசியல் மீதான தன்னுடைய பற்றுறுதி குறைவாக இருப்பது.

அதேவேளையில், இன்னொரு புறம் பார்த்தோம் என்றால், வாக்களிக்க வாய்ப்பிருந்தும் வெளியூர்களில் இருக்கக்கூடியவர்களால் வாக்களிக்க முடியாதது. இந்த இரண்டு விஷயங்களிலுமே தேர்தல் ஆணையத்துக்கு மிக முக்கியமான பங்கிருக்கிறது. நாம் திரும்பத் திரும்ப என்ன செய்கிறோம் என்றால், இந்தப் பந்தை அரசியல் கட்சிகள் மீது வீசுகிறோம். அரசியல் கட்சிகள் அப்படி இருக்கிறார்கள், அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் பிரதிபலிக்கவில்லையா?  எதிர்க்கட்சிகள் மீது நம்பிக்கை இல்லையா? அல்லது ஆளுங்கட்சி மீது அதிருப்தியா? என்பதல்ல விஷயம். இதுபோன்ற மனநிலை இருக்கிறதென்றால், தீவிரமாக வந்து வாக்கு செலுத்த வேண்டும். 

ஆக, வாக்களிப்பதை ஒருவர் தவறவிடுகிறார் என்றால் அது அரசின் பொறுப்பு. மிகக் குறிப்பாக இதில் தேர்தல் ஆணையத்துடைய பங்கு முக்கியமானது. கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் இருக்கக்கூடிய யாரிடமாவது சென்று கேட்டுப் பாருங்கள், வாக்கு இயந்திரத்தின் மீது நம்பகத்தன்மை இல்லை. நீங்கள் வெறுமனே பத்து பேரிடம் கருத்தெடுப்பு எடுத்தால் அதில் எட்டு பேருக்கு இந்த இயத்திரத்தின் மீது நம்பகத்தன்மை இல்லை. 

தற்போது நான் அதை நம்பகத்தன்மையோடு பார்க்கிறேன். எனக்கு வாக்கு இயந்திரத்தின் மீது எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், பெருவாரியான மக்களுக்கு அதன் மீது சந்தேகம் இருக்கிறது. அதேபோல், களத்தின் பங்கேற்பாளர்கள், அதாவது யாரெல்லாம் போட்டியிடுகிறார்களோ அவர்களுக்கும் இதில் சந்தேகம் இருக்கிறது என்று சொன்னால், அது ஒரு முக்கியமான விஷயம், அதை நாம் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதைத் தேர்தல் ஆணையம், இது தொடர்பில் வழக்கு நடக்கும்போதோ பொதுவெளியில் ஒரு விவாதமாக வரும்போதோ எதிரில் நின்று மல்லுக்கட்டுவது தேர்தல் ஆணையத்தினுடைய வேலை இல்லை. தான் நடத்தக்கூடிய தேர்தல் மீதான நம்பகத்தன்மை அதிகரிப்பதற்கான வழிமுறைகளைத் தேர்தல் ஆணையம் சிந்திக்க வேண்டும்.     

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

சமூகத்தின் முன்னத்தி ஏர் பிரதமர்: சமஸ் பேட்டி

07 May 2024
 

தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவின் மீதான நம்பகத்தன்மை ஒருபுறம் இருந்தாலும் இன்னொரு புறம் வாக்காளர்களின் பட்டியலைத் தயார்செய்யும்போது அதில் மக்களின் பெயர்கள் விடுபடுவது, ஒருவரது வாக்கு இரண்டு இடங்களில் இருப்பது என இந்த நடைமுறைகளிலும் அதிக கவனம் செலுத்துவதும்கூட இந்த வாக்குச் சதவீதம் குறைவதைத் தடுக்குமா? 

நிச்சயமாக, வெறுமனே வாக்கு இயந்திரத்தை மட்டும் நான் சொல்லவில்லை. உதாரணமாக, தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையை ஒரு சாமானியர் இழப்பது என்பது மிக மோசமான விஷயம். நீங்கள் இந்தத் தளத்தை எப்படிப் பார்க்கிறீர்கள் என்பது இருக்கிறதல்லவா, அதாவது ஒரு வெறுப்புப் பேச்சின் மீதான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் நீங்கள் என்ன மாதிரியான நடவடிக்கையை எடுத்தீர்கள்? 

இல்லையென்றால் வழக்குப் பதிவு செய்கிறீர்கள், வெறுமனே வழக்குப் பதிவு செய்து என்ன ஆகப்போகிறது. தேர்தல் பிரச்சாரங்களில் ஒருவர் வெறுப்புப் பேச்சைப் பேசுகிறார், அவர் வெல்லக்கூடியதை வெல்கிறார், அவர் பற்ற நினைக்கு அதிகாரத்தைக் கைப்பற்றுகிறார் என்றால் நீங்கள் வழக்குப் பதிவு செய்வதனால் ஆகக்கூடிய பலன் என்ன? 

குறைந்தபட்சம், தெலங்கானாவில் பிஆர்எஸ் தலைவருக்கு 42 மணி நேர தடை விதிக்கப்பட்டது. அந்த மாதிரியான தடை என்பது ஒரு பலனைக் கொடுக்கும். அல்லது தேர்தல் போட்டியிலிருந்து விலக்கிவைப்பது போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், இங்கு பல விதங்களில் சமப் போட்டிக் களம் என்பதே இல்லை. தேர்தல் களத்தில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக எந்தளவுக்கு எதிக்கட்சிகளால் புகார்கள் அளிக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தொகுத்துப் பாருங்கள். 

இதில் மிக முக்கியமான நேற்றைய தினம் காங்கிரஸ் தலைவர் கார்கே ஒரு பிரச்சினையைச் சுட்டிக்காட்டி இருக்கிறார். அது நான் சுட்டிக்காட்டிய பிரச்சினையும்கூட. அது என்னவென்றால், தேர்தல் ஆணையம் அறிவிக்கக்கூடிய வாக்குச் சதவீதம் இருக்கிறதல்லவா, அது அப்படியே அடியோடு மாற்றமடைகிறது. அது இவ்வளவு தாமதமாக வர வேண்டிய தேவை இல்லை. நடந்து முடிந்த முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகளிலும் பார்த்தீர்கள் என்றால், 6 மணிக்கு ஒன்று சொல்வது, அதே 8 மணிக்கு ஒன்று சொல்வது, போலவே 11 மணிக்கு ஒன்று சொல்வது, மறுநாள் ஒன்று சொல்வது என இப்படித் தள்ளிப்போய்க்கொண்டே இருப்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும் என்று தெரியவில்லை. 

ஏனென்றால், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் ஒரு இயந்திரத்தில் 1200 வாக்குகள் எடுக்கிறோம் அல்லது ஒரு சாவடிக்கு 1200 வாக்குகள் என்று சொன்னால், அது எப்போது வாக்குப்பதிவு முடிகிறதோ அப்போதே அது எத்தனை வாக்குகள் என்பது துல்லியமாகத் தெரிந்துவிடுகிறது. ஆக, அதை வைத்து சதவீதக் கணக்கிட்டால் உங்களுக்குத் தெரிந்துவிடும். ஒரு தொகுதிக்கு இத்தனைச் சாவடிகள் இருக்கிறதென்றால் எல்லோரிடமும் இருந்து வரக்கூடிய எண்களை வைத்துக் கூட்டுத்தொகை போடுவதற்கு எவ்வளவு நேரம் ஆகிவிடும்? 

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

பாஜகவை வீழ்த்த கடும் உழைப்பு தேவை: சமஸ் பேட்டி

26 Apr 2024

அந்த இடத்தில்தான், ஏன் உடனுக்குடன் தகவல்களைக் கொடுக்க வேண்டும்? அப்படி உடனுக்குடன் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு வரும்போது அந்த எண்ணிக்கையில் அதிகாரிகள் தவறிழைக்கிறார்கள் என்ற கருத்தை நமக்கு அளித்த பேட்டியில் சொல்கிறார் முன்னாள் தேர்தல் ஆணையர் ஒருவர். இதை எப்படிப் பார்ப்பது? 

முன்னாள் தேர்தல் ஆணையர் சொல்வதில் பிரச்சினை இல்லை. நான் கேட்பது என்னவென்றால், இவ்வளவு அதிகாரிகளை வைத்து நடத்தக்கூடிய தேர்தலில் ஒரு சாதாரண கூட்டுத்தொகை கணக்கில் எப்படித் தவறு வர முடியும்? இது எவ்வளவு பெரிய பொறுப்பு? சுமார் 97 கோடி மக்கள் வாக்களிக்கக்கூடிய நிகழ்வு, அந்த வாக்களிப்பின் மீது நம்பிக்கை இருக்க வேண்டுமென்றால் அதுவொரு தீவிரமான விஷயம் இல்லையா? அப்படி அந்த அதிகாரிகள் தவறிழைக்கிறார்கள் என்றால் அவர்களை வெளியில் கொண்டுவாருங்கள். தவறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுங்கள். என்ன விஷயம் என்பதை வெளியே சொல்லுங்கள். அது எப்படி நாடு முழுவதுமே இப்படி நடக்கும்? அதேபோல், அது எத்தனை சதவீதங்கள் மாறுகிறது, கொஞ்ச நஞ்சமாகவா? மேலும் வாக்குச் சதவீதத்தை மட்டும் ஏன் சொல்கிறீர்கள்? வாக்கு எண்ணிக்கையை ஏன் சொல்வதில்லை? 

ஒரு இடத்தில் 1000 வாக்குகள் இருக்கிறதென்றால், அங்கு 800 வாக்குகள் பதிவாகியிருக்கும்போது அதை 80% என்று முடிவுசெய்கிறீர்கள். அப்படியென்றால், அந்த எண்ணிக்கையைத்தானே நீங்கள் முதலில் சொல்ல வேண்டும்! 

அப்படியில்லாமல், வெறும் 80%, 81%, 61% என்று சதவீதம் மட்டும் வருகிறபோது கார்கேவின் பேச்சில் என்ன நியாயம் வெளிப்படுகிறதென்றால், நீங்கள் ஒரு சதவீதம் கூடியிருக்கிறது என்று சொன்னால் அதுவொரு பெரிய மாற்றம். முன்பே சொன்னதுபோல 97 கோடி பேர் வாக்களிக்கும் இடத்தில் ஒரு சதவீதம் என்பது 97 லட்சம் வாக்குகள் ஆகும். இது மிக முக்கியமான எண்ணிக்கை இல்லையா? 

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

ராகுல் வசதி மோடிக்குக் கிடையாது: சமஸ் பேட்டி

25 Apr 2024

இங்கே வாக்குகள் எந்தளவுக்கு வித்தியாசத்தில் தோல்விகள் இருக்கிறதென்றால் வெறும் 100 வாக்குகள், 1000 வாக்குகள், 10,000 வாக்குகள் எனப் பல எண்களில் இருக்கின்றன. அப்போது, லட்சக் கணக்கான வாக்குகள் மாற்றம் என்றால் அது மிகப் பெரிய எண்ணிக்கை அல்லவா? 

ஆக, சொல்லவருவது என்னவென்றால், நான் தேர்தல் ஆணையத்தை முழுமையாக நம்புகிறேன், அனால் நம்பகத்தன்மை என்பது மிக முக்கியம். என்னுடைய நம்பிக்கையின் காரணமாக நீங்கள் அதை எப்படி வேண்டுமானாலும் எடுத்துச் செல்ல முடியாது. அதனால், தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை என்பது அதன் சுயாட்சியான அதிகாரத்தின் மீதான நம்பிக்கை என்பதை வலுப்படுத்த வேண்டியது அவசியம். 

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள் 

சமூகத்தின் முன்னத்தி ஏர் பிரதமர்: சமஸ் பேட்டி
பாஜகவை வீழ்த்த கடும் உழைப்பு தேவை: சமஸ் பேட்டி        
ராகுல் வசதி மோடிக்குக் கிடையாது: சமஸ் பேட்டி
முதல் என்ஜினைப் பின்னுக்கு இழுக்கும் இரண்டாவது என்ஜின்
உத்தரவாதம்… வலுவான எதிர்க்கட்சி
இந்தியாவின் குரல்கள்
தென்னகம்: உறுதியான போராட்டம்
மத்திய இந்தியா: அழுத்தும் நெருக்கடி
இந்தியாவின் பெரிய கட்சி எது?
காங்கிரஸ் விட்டேத்தித்தனம் எப்போது முடிவுக்கு வரும்?
அடித்துச் சொல்கிறேன், பாஜக 370 ஜெயிக்காது
மோடியின் தேர்தல் காலத்தில் நேருவின் நினைவுகள்
பாஜகவுக்கு முன்னிலை தரும் சாலைகள்
அமேத்தி, ராய்பரேலி: காங்கிரஸின் மோசமான சமிக்ஞை

        

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

1






பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Thamilvelan    7 months ago

This is digital era. Whatever the issues raised in this article will be addressed in future. Digitalization of electorate is not complete. Once the aadhar number is linked fully with electoral identity card, all the double entry will be deleted. The existing website which offers various services like registration , transfer of electoral booth , deletion etc is not a standard one and fails to meet out the basic requirements. In passport offices, A and B services are handled by private and C is handled by the govt. Because of this, the issue of the passport ha sbecome hassle free. Like this, Here, the Govt should engage private IT in electoral preparation. EVMs are tamper proof and the same has been proved for the past 25 years. Common man is not aware of how it functions, how it is handled by various polling officials and sealed. On election day, he presses the button and beyond that role, he knows nothing about it. He is not the best judge. Political parties make this issue whenever they are defeated . i agree the election commission has failed to infuse the confidence about EVMs . Samas should write series of articles about EVM right from how it is maufactured, technology used, how it is stored, how, symbols are fixed, how it is handled by the various polling officials during election day, protocol for transportation, how mock polling conducted, how, it is sealed, role of polling agents, and finally, how it is handled by the counting day. Some issues like malfunction of the machines, improper sealing , mishandling of the machines by the poorly trained officers are blown out of proportion and these are not the tampering. In parliament elections, for a constituency, the set up is the election conducting officer(IAS officer), Asst Election conducting officer( Each assembly constituency), Zonal officers, Asst Zonal officers and finally presiding officers for each booth. Earlier, very two hours, the presiding officer will inform the Asst zonal officer by phone and it flows through zonal officer, AECO, ECO and finally state election commission. Nowadays, it seems they are using app . Here there are some problems. All presiding officers can not be tech savvy . Every name of the voter who comes for voting is written in the register and the total number in the register is tallied with EVMs. Election commission need not publish the polling percentage every two hours which unnecessary work for the polling officials .

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

சித்தார்த்பொருளாதார நிர்வாகம்தன்பாலின ஈர்ப்புமோடி அரசின் செயல்மனநல மருத்துவர்கள்ஜெயமோகன் பேச்சு: எது விவாதப் பொருள்?விசாரணைவிழுமியங்கள்கவிக்கோ அரங்கம்மௌனம் சாதிப்பது அவமானம்மாநகர்சிப்கோதீட்சிதர்கள்பொதுவாழ்விலிருந்து ஓய்வு எப்போது?வாசகர்களின் சந்தாக்கள்கருணை அடிப்படையில்லீஜெ.பிரசாந்த் பெருமாள் கட்டுரைமக்களின் மனவெளிஅம்பேத்கர் உரைமூன்றாவது மகன்துயரம்தொன்மக் கதைகம்யூனிஸம்தெற்காசியாசாக்கடைக்கு இயந்திரம் இல்லையே!: பெஜவாடா வில்சன் பேஃபைப்ரோமயால்ஜியாஅருஞ்சொல் அன்வர் ராஜா பேட்டிதனித் தொகுதிகள்tamilnadu now

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!