கட்டுரை, நூல் விமர்சனம், வரலாறு, புத்தகங்கள் 3 நிமிட வாசிப்பு

கட்டாயம் வாசிக்க வேண்டிய பெட்டகம்

என்.மாதவன்
13 Jan 2024, 5:00 am
0

பாடநூல் உருவாக்கத்தில் பங்கெடுத்துக்கொள்பவனான எனக்கு இயல்பாகவே வரலாற்று ஆர்வம் உண்டு. 

ஒரு தேசிய கருத்தரங்கில் அறிஞர் கே.என்.பணிக்கரைச் சந்திக்க வாய்ப்பு கிட்டியது. அன்றைய தேநீர் இடைவெளியில் “வரலாற்றில் ஆயிரக்கணக்கான வருடங்களில் பலரும் ஆட்சி செய்ய நாம் ஒரு சில அரசர்களைப் பற்றி மட்டுமே மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறோமே, மற்றவர்களைப் பற்றியெல்லாம் ஏன் சொல்லிக் கொடுப்பதில்லை?” என்று கேட்டேன். “பெரும்பாலும் அவர்களது வரலாறுகள் சொல்லிக் கொடுக்கும்படியானதாக இருப்பதில்லை” என்று அவர் பதில் கொடுத்தார்.

அடுத்து அவரே சொன்னார் “ஆனால், வரலாறு குறித்த புரிதலை மாணவர்கள் மத்தியிலும் சமூகத்தின் மத்தியிலும் அதிகப்படுத்த நாம் தொடர்ந்து தவறுகிறோம்!” 

நிச்சயமாக அது ஒரு முக்கியமான கடமை. எனது முனைவர் பட்ட ஆய்வை சமூக அறிவியல் பாடநூல்களின் மொழி குறித்ததாக நான்  அமைத்துக்கொள்ள அதுவே காரணமாக அமைந்தது. மாணவர்களுடன் அன்றாடம் வகுப்பறையில் புழங்கினாலும், இந்த ஆய்வில் நான் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில்தான் ஒரு புரிதல் எனக்குள் ஏற்பட்டது. பாடநூல்களில் வரலாற்றுக் காலத்தைப் படம்பிடிக்க முயல்வது மிகவும் கடினமான செயல்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

வரலாற்றைச் சுருக்குவதன் சிரமம்

சுமார் 2000 வருடங்களை 100 பக்கங்களுக்குள் ஒருவர் சொல்லிவிட வேண்டும் என்று சொன்னால், ஒரு நூற்றாண்டுக்குச் சுமார் 20 பக்கங்கள் என்ற வகையிலேயே விளக்க இயலும்.

இவ்வளவு குறைவான பக்கங்களுக்குள் சொல்லும்போது எவ்வளவு சம்பவங்களைச் கடந்து செல்ல வேண்டும்? இதனால் வாசகனுக்கு எவ்வளவு புரிதல் தடை ஏற்படும்? இந்த இடைவெளியை எப்படிக் கடப்பது? வரலாற்றை வாசிப்பது சுவாரஸ்யமானது. ஆனால், வரலாற்றைச் சுவைபட சுருக்கமாகச் சொல்வது பெரும் சவாலானது. 

பெரும்பாலான வரலாற்று நூல்கள் பக்கங்களுக்குள் சிக்கித் திணறவே செய்யும். இதனைத் தமிழ்நாட்டின் சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ்  மூலம் சமூக அறிவியல் பாடநூல் தயாரிப்பில் ஈடுபட்டபோது மேலும் உணர்ந்தேன்.

வாராது வந்த அற்புத நூல்

வரலாற்றறிஞர் இர்பான் ஹபீப் ‘இந்திய மக்கள் வரலாறு’ (People’s History of India) என்ற தலைப்பில் சுமார் 30 நூல்களுக்கும் மேல் தொகுத்து வெளியிட்டுள்ளார். மிகவும் அற்புதமான கூட்டுழைப்பில் உருவானது இது. அந்த நூல்களை எல்லாம் வாசிக்கும்போது,  'இப்படிப்பட்ட ஒரு முயற்சி தமிழில் வராதா?' என்று பல சமயங்களில் ஏங்கியிருக்கிறேன்.

சமீபத்தில் 'சோழர்கள் இன்று' நூலை  வாசித்தபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஏன் அவ்வளவு மகிழ்ச்சி அடைந்தேன் என்றால், நீண்ட நாள் ஏக்கத்தை, தமிழில் மிக முக்கியமான ஒரு தேவையை அது போக்குவதாக இருந்தது.

தமிழில் இப்படி ஒரு நூல் இதுவரை இல்லை. வெறும் 303 பக்கங்களுக்குள் 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைச் சொல்லும் இந்த நூல் ஒரு பேருழைப்பின் வெளிப்பாடு என்றுதான் சொல்ல வேண்டும்.

பொக்கிஷம் இந்த நூல்

- தினத்தந்தி

சோழர்கள் இன்று

வீட்டிலிருந்தபடி ரூ.500 ஜிபே செய்து, முகவரியை அனுப்பி, கூரியர் வழியே நூலை வாங்க வாட்ஸப் செய்யுங்கள் 👇

75500 09565

மாணவர்கள் முதல் அறிஞர்கள் வரை

வரலாறு ஏன் நம் அனைவருக்கும் அவசியமானது என்று சொல்வதில் ஆரம்பிக்கிறது நூல். சங்க காலம் ஏன் தமிழ் வரலாற்றில் முக்கியமானது, 2500 ஆண்டுகளில் தமிழ் நிலம் யார் யாரெல்லாம் ஆளப்பட்டுள்ளது, இவ்வளவு அரசக் குடிகளில் சோழர்கள் எந்த வகையில் தமிழ் வரலாற்றில் பிரதான இடத்தைப் பிடிக்கிறார்கள், ராஜராஜன்  எப்படி தமிழின வரலாற்றிலேயே உயரமானவராக உருவெடுக்கிறார், தமிழ்நாடு எப்படி அவரால் ஒருங்கிணைக்கப்பட்டது, சோழர்கள் காலத்தில் எப்படி தமிழகம் உச்சம் நோக்கி நகர்ந்தது, எல்லாவற்றுக்கும் மேல் இன்றைய நம்முடைய வாழ்வில் சோழர்களின் பங்களிப்பு என்னவாக இருக்கிறது என்று விரிவாகப் பேசுகிறது இந்நூல்.

சோழர்களைப் பற்றி மட்டும் அல்லாது, சேரர்கள், பாண்டியர்கள், களப்பிரர்கள், பல்லவர்கள்,  நாயக்கர்கள், பிரிட்டிஷார் என்று தமிழகத்தை ஆண்ட பேராட்சியாளர்கள் முதல் சிற்றாட்சியாளர்கள் வரை யாவரைப் பற்றியும் இந்நூல் அறிமுகம் தருகிறது.

சிறு சிறு கட்டுரைகள். கூடவே கண்கவர் ஓவியங்கள். வரலாற்றை இவ்வளவு சுவாரஸ்யமாக சொல்ல முடியுமா? அதேசமயம், நூலின் ஆழமும் குறைச்சல் இல்லை. சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பல ஆய்வறிஞர்கள் பங்களித்துள்ளார்கள்.

தமிழ்நாட்டின் சாதிகள் எப்படி நிலைப்பெற்றன, சமயம் எப்படி உருவெடுத்து வளர்ந்தது, நீர்நிலைகள் எப்படி உருவாக்கப்பட்டன, வேளாண்மை வழியே பொருளாதாரம் எப்படி கட்டமைக்கப்பட்டது, கலைகள் எப்படி செழித்தன? இவையெல்லாம் துளி வாசிப்பு நெருடலின்றி விவரிக்கப்பட்டுள்ளன. இன்றைக்குத் தமிழகம் பேசும் கூட்டாட்சிக்கு சோழர் கால குடவோலை முறை எப்படி முன்னோடியாக இருந்தது என்றும், ஈராயிரம் ஆண்டுகளாகவே தமிழ்நாடு இருமொழிக் கொள்கையைத் தக்க வைத்திருப்பதையும் அறியும்போது ஆச்சரியம் ஏற்படுகிறது.

வரலாற்றுப் பெட்டகம்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தொலைநோக்கோடு, மக்களின் தேவைகள் நிறைவேற, சோழர்கள் சிறந்த ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டுள்ளது இந்நூலின் மூலம் தெளிவுற நிறுவப்பட்டுள்ளது. நூலைத் தொகுத்த சமஸ் குழுவினரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். காரணம், இது மாணவர்களும் வாசிக்கத்தக்க அளவில், அறிஞர்களும் போற்றத்தக்க அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. வரலாற்றுப் பெட்டகம் என்றே சொல்லலாம்.

தமிழுக்கு இப்படிப் பல நூறு வரலாற்று நூல்கள் வேண்டும். அதற்கு 'சோழர்கள் இன்று' நூல் ஒரு தொடக்கப்புள்ளியாக அமைய வேண்டும்.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

நூலைப் பெற அணுகவும்:

சோழர்கள் இன்று 
தொகுப்பாசிரியர்: சமஸ் 
விலை: 500 
நூலை வாங்குவதற்கான இணைப்பு:
https://pages.razorpay.com/pl_Llw0QORt935XFn/view

செல்பேசி எண்: 1800 425 7700
ஜிபே மூலம் ரூ.500 செலுத்தி, முகவரி அனுப்பி, கூரியர் வழி நூலைப் பெறுவதற்கான வாட்ஸப் எண்: 75500 09565

க்யூஆர் கோட்:

தொடர்புடைய கட்டுரைகள்

சோழர்கள் இன்று
எப்படி இருந்தது பண்டைய தமிழகம்?
இருமொழிக் கொள்கைக்கு வயது 2000: வெ.வேதாசலம் பேட்டி
மன்னராட்சியின் பொற்காலம் சோழர் காலம்: ஜெயமோகன் பேட்டி
சங்க காலம் ஏன் ஒவ்வொரு தமிழருக்கும் முக்கியமானது? கா.ராஜன் பேட்டி
சோழ தூதர் மு.கருணாநிதி
மக்கள் மொழியாக நின்றது தமிழ்: பெருமாள் முருகன் பேட்டி
சோழர்களின் கலை முதலீடு நமக்குப் பாடம்: ட்ராட்ஸ்கி மருது பேட்டி
நம்முடைய அடித்தளமே விமானமாக இருக்கிறது: வித்யாசங்கர் ஸ்தபதி பேட்டி
கடலை நன்கு அறிந்திருந்தார்கள் சோழர்கள்: விஜய் சகுஜா
இன்பத்தின் நினைவூட்டல்: நர்த்தகி நடராஜ் பேட்டி

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
என்.மாதவன்

என்.மாதவன், கல்வியாளர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினர்.


5






சூரியன்அரசே வழக்காடிகின்ஷாசாஅரசமைப்புச் சட்டத் திருத்தம்தொழிலாளர் அதிகரிப்புகருப்புச் சட்டம்கோபம்ரோ எதிர் வேட்ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவு: பாஜகவுக்கு நெருக்கடிஉடற்பயிற்சிமீள்கிறது நாசிஸம்ஹைதராபாத்மின்வெட்டுகாளியம்மன்புலப்பெயர்வுகுழந்தை வளர்ப்புசச்சின் பைலட்விஷ்ணுபுரம் விருதுஇரட்டையாட்சி சமஸ் புதிய காலங்கள்மக்கள் நலக் குறியீடுசுழற்பந்து வீச்சாளர்கள்அண்ணா ஹசாரேஎஸ்.வி.ராஜதுரை கட்டுரைஅரசியல் – பொருளாதாரம்விமர்சனம்புதிய மாவட்டங்கள்பொருளாதாரப் பரிமாணம்அடக்கமான மனிதரின் மிதமான கணிப்பு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!