இன்னொரு குரல் 2 நிமிட வாசிப்பு

திருமாவின் உரையாடல் நம்பிக்கை தருகிறது

வாசகர்கள்
04 Oct 2021, 4:59 am
0

நம்பிக்கை வெளிச்சம் தரும் உரையாடல்
@ திமுக, அதிமுக இரண்டுமே வலிமையாக இருக்க வேண்டும்: திருமாவளவன் பேட்டி காணொளி

தமிழ்நாட்டு அரசியலர்களில் கருத்தியல்ரீதியாக மிகவும் பண்பட்டு அம்பேத்கரி்ய, பெரியாரிய சிந்தனைகளை தொடர் உழைப்பினால் தனது பொது வாழ்க்கைக்கு உரமாக்கிக்கொண்டிருப்பவர் திருமாவளவன் அவர்கள். அவரது மேடைப் பேச்சுகளும், நேர்காணல்கள் போதான உரையாடல்களும் ஆவணப்படுத்தப்பட்டு அடுத்தடுத்த தலைமுறை அரசியலர்களுக்குக் கொண்டுசெல்லப்பட தகுந்தவை. அவரது பல அரசியல் தரிசனங்கள் ஆச்சரியப்பட வைக்கும் வகையில் நடுநிலையானவை. நிதானம், எதிர் சித்தாந்தங்கள் மீது அவர் வைக்கும் அறிவுபூர்வமான விமர்சனம், சமகாலத்திய அரசியலர்களைக் கண்ணியத்துடன் சீர்தூக்கும் பண்பு ஆகியன அவரைத் தமிழ் அரசியல் சூழலுக்கு முற்றிலும் அந்நியமாக்குகின்றன. இந்த நேர்காணலின் முதல் பகுதியிலும் இவ்வகையான குணநலன்களே திருமா அவர்களிடமிருந்து வெளிப்படுகிறது. நம்பிக்கையூட்டும் அரசியலர். சமஸ் தனது புதிய இணையவழி ஊடகத்தில் முதல் காணொளி வழி நேர்காணலைத் திருமா அவர்களிடமிருந்து தொடங்கியிருப்பது, அரசியல் வெறிக்கூச்சல் நிரம்பிய சூழலில், வெளிச்சமும் நம்பிக்கையும் அளிப்பதாக உள்ளது.

- பிரபு

தொல். திருமாவளவனுடனான உரையாடல் ‘அருஞ்சொல்’லின் அருமையான முன்னெடுப்புகளில் ஒன்று என நினைவுகூரப்படும். அந்த அளவிற்குக் கேள்விகளும் பதில்களும் சிறப்பாக அமைந்துள்ளன. இதன் அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.

-பி.சரவணன்

இந்தியர்கள் அடுத்த தலைமுறைக்காக பாரம் சுமக்கிறார்கள்
@ கொஞ்ச நேரம் வேலையில்லாமல்தான் இருங்களேன்!

இந்தியர்கள் தமக்காக உழைப்பதில்லை. தமது வருங்காலத் தலைமுறையினருக்காக உழைக்கிறார்கள். அதனால் தேவை எவ்வளவு என்பது அவர்களுக்குப் புலப்படுவதில்லை. பணியில் பாதுகாப்பின்மை, பணியிட அடக்குமுறை போன்றவை இந்தியர்களை ஓய்வின்றி உழைக்கவைக்கிறது. சிங்கப்பூர் சென்ற புதிதில் வெளிநாட்டவர் முதுகில் கனமான சுமைகளுடன் மேப்பை கையில் வைத்துக்கொண்டு தெருத்தெருவாக சுற்றி வருவது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்களிடம் விசாரித்தபோது பதினோரு மாதங்கள் வேலை செய்யும்போது ஒரு மாதம் சுற்றுலா செல்வதற்காக சேமிப்போம் என்றார்கள். நாம் அதை ஐந்தாம் தலைமுறை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக சேமித்துவைப்போம். இப்படியாக இந்தியர்கள் வாழ்வது மிகவும் குறைந்த காலமே!

- அய்யாபுரத்தான்

அட்டகாசம்... வாரம்தோறும்.. படிக்க காத்திருக்கேன்!

- வி.ஹரி

The article is quite good bringing an analysis on, whether to work for making a living as a life balancing act or timeless working forgoing life needs and pleasure. It is a fact that Indians work long hours irrespective of their functioning as IT official, BPO official or in government job, production industry or in civil engineering construction work, etc., All most 60 to 70 % of Indians work with interest in executing their work to the best possible manner. For them, work is also life balancing act, for such people.This is the reason for the progress that we, Indians achived till date.

- S.Sivakumar 

குப்புசாமி கட்டுரையில் நியாயம் தெரிகிறது @ சாருவுக்கு ஒரு பதில்: குறுகத் தரித்தவரா கார்வர்?

சாருவின் பதிவிற்கு மிக விளக்கமான பதில் இந்தக் கட்டுரையில் இருந்தது. கார்வெரின் இந்தக் கதையின் சுருக்கப்பட்ட வடிவத்தையே நானும் வாசித்திருந்தேன், இந்தக் கட்டுரை கதையை இன்னும் தெளிவுபடுத்தியது. கார்வெரை அரைகுறை என நிறுவுவதற்காக தமிழர்களின் ‘xenophobic’ மனநிலையைக் காரணமாகச் சொல்கிறார் சாரு. வாழ்நாளெல்லாம் அயல் இலக்கியத்தை மட்டுமே வாசித்திக்கொண்டிருக்கும் அவர் போன்ற ஒருவர் 'xenophobic’ மனநிலையைப் பற்றிப் பேசுவது நகைப்புக்குரிய முரண்பாடு. கார்வெரின் ஒற்றைக் கதையை வைத்து அவரை மதிப்பிட மாட்டேன் எனச் சொல்லும் அவரே கார்வெரை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கும் தோரணையில் எழுதியிருப்பது சரியல்ல. கார்வெரின் மற்ற சில கதைகளையும், ஜி. குப்புசாமியின் மொழிபெயர்ப்புகளையும் வாசித்தவன் என்ற வகையில் இந்தக் கட்டுரையில் உள்ள நியாயங்கள் தெளிவாகின்றன.

- ராசு

இளைய தலைமுறைக்கு உந்துசக்தி @ சாம் பிட்ரோடா - தொழில்நுட்பமும், சமூக மேம்பாடும்!

ஆஹா! இவர் போன்ற ஆளுமைகளை இதுவரை தெரியாமல்போய்விட்டதே என்பதுதான் எனது வருத்தம்! இவர் போன்ற காந்தியர்களின் அறிமுகம் தொடரட்டும்! அது இன்றைய இளைய தலைமுறைக்கும் ஒரு உந்துசக்தியாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.

எஸ்.சிவபிரகாசம்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.







அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

கௌதம் அதானிஎழுத்தாளர்வயிற்றுப் புற்றுநோய்ரிசர்வ் வங்கியின் சொற்சித்திரமும் உண்மை நிலையும்பால் உற்பத்தியோகேந்திர யாதவ் கட்டுரைசோறுவளர்ச்சிப் பாதைகாலவெளிராகேஷ் பாண்டேஉக்ரைன் ராணுவம்கடுவாய்ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் பேட்டிசட்டப்பூர்வமாக்கப்பட்ட ஊழல்!பீட்டர் அல்ஃபோன்ஸ் சமஸ்அருஞ்சொல் நாராயண குருஷூட்டிங்நவீன எழுத்தாளர்கள்குறுந்தொகைபுனித உடன்படிக்கைநியாண்டர்தால் மனிதர்கள்சிறப்பு நிர்வாகப் பகுதிபுத்தகம்அயோத்தி பிரதேசம்பெட்டியோஇரவுத் தூக்கம்சாதிப் பிரச்சினைபெட்ரோல் டீசல் விலை உயர்வுமாற்று மருத்துவம்தமிழ்நாட்டில் காந்தி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!