காணொளி 33 நிமிட வாசிப்பு
திமுக, அதிமுக இரண்டுமே வலிமையாக இருக்க வேண்டும்: திருமாவளவன் பேட்டி காணொளி
02 Oct 2021, 4:59 am
3
aruncholarunchol.comtamilnadu nowthiruma interviewsamaswriter samaswriter samas thirumaஉள்ளதைப் பேசுவோம்உள்ளத்தைப் பேசுவோம்சமஸ் பேட்டிகாணொளிதமிழ்நாடு நவ்அருஞ்சொல்அருஞ்சொல்.காம்திருமாவளவன் பேட்டிதிருமா
பின்னூட்டம் (3)
Login / Create an account to add a comment / reply.
Veera Thirunavukkarasu 3 years ago
வணக்கம். அருஞ்சொல் முயற்சிக்கு வாழ்த்துக்கள். வளர்க... ஆசிரியர் சமஸ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். ஆசிரியரின் அரசியல் பழகு புத்தகத்தையும் அவரது கட்டுரைகள் சிலவற்றையும் படித்திருக்கிறேன். அவரது அகன்ற வாசிப்பை மெச்சுகிறேன். ஆனால், அவர் சார்புதன்மை கொண்டவராகவே எனக்குப் படுகிறார். அருஞ்சொல்லில் சார்புதன்மை இல்லாமல் இருக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். திருமாவளவன் அவர்களை நம் தமிழக ஊடகங்கள் அதீதமாக மெச்சுகின்றன. அதற்கு அவர் தகுதியானவர் அல்ல என்பது எனது கருத்து. அண்ணன் திருமாவளவன் அவர்கள் வேண்டுமென்றே அவதூறு பரப்புகிறார். அவரும் ஒரு சாதாண அரசியல்வாதியைப் போலவே நடந்துகொள்கிறார். முதிர்ச்சியோடு நடந்துகொள்வதில்லை. எந்த காங்கிரஸ் கட்சியை அண்ணல் அம்பேத்கர் அவர்கள் மிகக் கடுமையாக எதிர்த்தாரோ, அந்த காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்துக்கொண்டு பா.ஜ.க.வை எதிர்க்கிறார் திருமாவளவன்! ராம்விலாஸ் பாஸ்வான், ராம்தாஸ் அத்வாலே போன்ற தலைவர்கள் எல்லாம் மாபெரும் ஆளுமைகள். விவரமில்லாமலோ, வேறு வழி இல்லாமலோ அவர்கள் பா.ஜ.க.வோடு சேரவில்லை. பாஜக நம் நாட்டு மக்கள் எல்லோரும் முன்னேற வேண்டும் என நினைத்துப் பணியாற்றி வருகிறது; தங்களோடு கூட்டணி சேரும் தலைவர்கள் அனைவரையும் மரியாதையோடு நடத்துகிறது. அதனால் தான் பல அரசியல் கட்சிகள் பா.ஜ.க.வோடு சேர்கின்றன. தலித்திய அரசியல் கட்சிகள் பா.ஜ.க.வோடு கூட்டணி சேர்வதோடு மட்டுமல்லாமல், பா.ஜ.க.விலும் பட்டியல் சமுதாய ஆளுமைகள் பலர் கோலோச்சுகிறார்கள். பா.ஜ.க.வில் அதிகப்படியான SC MPக்கள் & MLAக்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் விவரமற்றவர்களா? திருமாவளவன் மட்டும் தான் விவரமானவரா? RSS மற்றும் BJP மீது ஆதாரமே இல்லாமல், கற்பனையானக் குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார் திருமா! RSSஆல் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்று சொல்வதெல்லாம் பிதற்றல். கொஞ்சங்கூட மனசாட்சி இல்லாத மனிதரின் குற்றச்சாட்டு. எதற்கெடுத்தாலும் சனாதனம், சனாதனம் என்கிறார் திருமா. சனாதனம் என்று சொல்லிவிட்டு - Demonetisation, GST, Article 370 நீக்கப்பட்டது குறித்தெல்லாம் குறிப்பிடுகிறார். இவற்றிற்கும் சனாதனத்துக்கும் என்ன சம்பந்தம்? எந்தவொரு தத்துவமும் கொஞ்சம்கூட மாறாமல் தொடர முடியாது. சனாதன இந்து தர்மம் தன்னைத் தானே புதுப்பித்துக்கொண்டு நீடித்து வருகிறது. ஆதிசங்கரர், அம்பேத்கர் எனப் பலரும் சீர்திருத்தங்களுக்கு வித்திட்டிருக்கிறார்கள். அவர்களின் வழியில் RSSம் காலத்துக்கு ஒவ்வாத விசய்ங்களை ஒருபோதும் கண்மூடித்தனமாக ஆதரிப்பதில்லை. மாற்றங்களை மனப்பூர்வமாக வரவேற்கின்றன RSS மற்றும் BJP உள்ளிட்ட இயக்கங்கள். RSS ஸ்வயம்சேவகர்கள் பலர் சாதி தாண்டிய திருமணம் செய்துவருகிறார்கள். RSSகாரர்கள் சாதியத் தீண்டாமை பார்ப்பதில்லை என்று காந்திஜி, அண்ணல் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் எல்லாம் சொல்லியிருக்கிறார்கள். உண்மை இப்படியிருக்க, தேவையில்லாமல் RSS மற்றும் BJPயைக் குறை சொல்வது அண்ணன் திருமாவின் வெறுப்பரசியலையே காட்டுகிறது. சமூக நீதியை RSS & BJP தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இட ஒதுக்கீடு தொடர வேண்டும் என்கின்றன. தீண்டாமை கூடவே கூடாது என்கின்றன. SC, ST, OBC, Minorities, Poor people in other c.categories என அனைவரும் முன்னேற வேண்டும் என நினைத்துச் செயல்படும் BJP எந்த விதத்தில் தவறிழைத்துவிட்டது? அண்ணல் அம்பேத்காரால் தான் நான் பிரதமரானேன் என்று சொன்னது நரேந்திர மோடி மட்டும் தானே? காங்கிரஸ் பிரதமர் யாராவது அப்படிச் சொல்லியதுண்டா? "நாங்கள் கடைபிடிப்பது அம்பேத்கர் ஸ்மிருதி மட்டும்தான்" என்று சொன்னது பா.ஜ.க.வின் வாஜ்பாய் தானே. "அம்பேத்கர் கொடுத்த அரசியலமைப்புச் சட்டம் நாம் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய புனித நூல்" என்று சொன்னது RSS & BJP வளர்ப்பான மோடி தானே. இதுபோன்று பல விசயங்கள் இருக்க, பொய் - புரட்டுகளையும், கற்பனைகளையும் கலந்து RSS மற்றும் BJP மீது அவதூறுகளை அள்ளி வீசி வருகிறார் திருமாவளவன். சில விசயங்களில் திட்டமிட்டே பொய் சொல்கிறார் திருமா. சில விசயங்களில் அவருக்கு அறிவுக் குறைவு. உதாரணமாக, அவரது சமீத்தியப் பேட்டியில் NEET & GST குறித்தான அவரது அறிவுக்குறைவு வெளிப்பட்டது. இளைஞர்கள் சிலர் முன் அவர் விளக்கிய 'இட ஒதுக்கீடு' விவரங்கள், அவருக்கு Reservation குறித்துக் கூட போதிய அறிவில்லை என்பதையே காட்டியது. நேர்காணல்களின் போது தவறான விசயங்களைச் சொன்னாலும் கூட அவற்றை நாகரிகமாகச் சொல்லும் திருமா, பொதுக் கூட்டங்களில் பேசும்போது நாகரிகமற்ற முறையில் பேசுகிறார். BJP தலைவர்களை 'அவன், இவன்' என்கிறார்! உத்தரப்பிரதேசத்தில் ஏதாவது பிரச்னை என்றால், "மோடி அரசே! யோகி அரசே" என்று உரக்கக் கத்தும் திருமாவளவன், நம் தமிழகத்தில் வி.சி.க.வினர் தங்களது கொடியை ஏற்ற அனுமதிப்படவில்லை என்பதற்காகக் கண்டனம் தெரிவிக்கும்போது "ஸ்டாலின் அரசே!" என்று தைரியமாக சொல்லாமல் வெறும் காவல் துறையை மட்டும் குற்றம் சொல்கிறார்! இது எந்த வகையில் நேர்மையானது? அண்ணன் திருமாவளவன் அவர்கள் அரசியல் மட்டுமே செய்கிறார். அதுவும் திரைப்படங்களில் வரும் அரசியல்வாதிகளைப் போல செயல்படுகிறார். அவரை ஒரு உன்னதத் தலைவர் போல போற்றுவது முறையல்ல. அவரது விமர்சனங்களில் உண்மை இல்லை, நேர்மை இல்லை, தர்க்கம் இல்லை. மாறாக, வெறுப்பரசியல் இருக்கிறது, போலித்தன்மை இருக்கிறது, அரசியல் நிர்ப்பந்தம் இருக்கிறது, அநாகரிகம் அவ்வப்போது தென்படுகிறது, தி.மு.க.வுக்கு அடங்கிப் போகும் தன்மை தெரிகிறது. லட்சியத் தாகம் கொண்டு பொது வாழ்க்கைக்கு வந்த அண்ணன் திருமாவளவன் அவர்கள், ஒரு சாதாரண அரசியல்வாதியாக சுருங்கிப் போனது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவர் நேர்மையோடு நடந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். பேரன்புடன், வீர. திருநாவுக்கரசு மாநில செயலாளர், பாஜக இளைஞரணி.
Reply 0 2
Login / Create an account to add a comment / reply.
P.Saravanan 3 years ago
தொல் திருமாவளவனுடனான உரையாடல் அருஞ்சொல்லின் அருமையான முன்னெடுப்புகளில் ஒன்று என நினைவு கூறப்படும். அந்த அளவிற்கு கேள்விகளும் பதில்களும் அமைந்துள்ளன. இதன் அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.
Reply 5 1
Login / Create an account to add a comment / reply.
Prabhu 3 years ago
தமிழ்நாட்டு அரசியல்வாதிகளில் கருத்தியல் ரீதியாக மிகவும் பண்பட்டு அம்பேத்கரி்ய, பெரியாரிய சிந்தனைகளை தொடர் உழைப்பினால் தனது பொது வாழ்க்கைக்கு உரமாக்கிக் கொண்டிருப்பவர் திருமாவளவன் அவர்கள். அவரது மேடைப் பேச்சுக்களும், நேர்காணல்கள் போதான உரையாடல்களும் ஆவணப்படுத்தப்பட்டு அடுத்தடுத்த தலைமுறை அரசியல்வாதிகளுக்கு கொண்டு செல்லப்பட தகுந்தவை. அவரது பல அரசியல் தரிசனங்கள் (observations) ஆச்சரியப்பட வைக்கும் வகையில் நடுநிலையானவை. நிதானம், எதிர் சித்தாந்தங்கள் மீது அவர் வைக்கும் அறிவுபூர்வமான விமர்சனம், சமகாலத்திய அரசியல்வாதிகளை கண்ணியத்துடன் சீர்தூக்கும் பண்பு அவரை தமிழ் அரசியல் சூழலுக்கு முற்றிலும் அன்னியமாக்குகிறது. இந்த நேர்காணலின் முதல் பகுதியிலும் இவ்வகையான குணநலன்களே திருமா அவர்களிடமிருந்து வெளிப்படுகிறது. நம்பிக்கையூட்டும் அரசியல்வாதி. சமஸ் தனது புதிய இணையவழி ஊடகத்தில் முதல் காணொளி வழி நேர்காணலை திருமா அவர்களிடமிருந்து துவங்கியிருப்பது, அரசியல் வெறிக்கூச்சல் நிரம்பிய சூழலில், வெளிச்சமும் நம்பிக்கையும் அளிப்பதாக உள்ளது.
Reply 12 1
Login / Create an account to add a comment / reply.