இன்னொரு குரல் 5 நிமிட வாசிப்பு

சாருவுக்கு ஒரு பதில்: குறுகத் தரித்தவரா கார்வர்?

ஜி.குப்புசாமி
30 Sep 2021, 5:00 am
4

னது மொழிபெயர்ப்பில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளிவந்திருக்கும் ரேமண்ட் கார்வரின் 'வீட்டுக்கு இவ்வளவு அருகில் இவ்வளவு தண்ணீர்' சிறுகதை தொடர்பில், புகழ்பெற்ற எழுத்தாளரும் என் நண்பருமான சாரு நிவேதிதா ஒரு விமர்சனத்தை அவரது வலைப்பக்கத்தில் எழுதியிருக்கிறார் ( <ரேமண்ட் கார்வர் கதை பற்றி…>).

வழக்கம்போல சாரு பாணியில் சற்று காட்டமான அபிப்பிராயங்கள் கொண்ட பதிவு. அவசரக்குடுக்கைத்தனமான தடாலடி பதிவும்கூட. சாரு என் இனிய நண்பர். என் மொழிபெயர்ப்புகளை நாங்கள் ஒருவருக்கொருவர் நேரடியாக அறிமுகமாவதற்கு முன்பிருந்தே மனம் திறந்து பாராட்டிவருபவர். தமிழின் நட்சத்திர எழுத்தாளர்களில் அவரைப் போல என் மொழிபெயர்ப்புகளை சிலாகித்த இன்னொருவர் இதுவரை இல்லை. எங்களுக்குள் குழந்தைத்தனமான சண்டைகளும் நடந்திருக்கின்றன. அவருடைய இயல்பை அறிந்திருக்கிறேன் என்றாலும், இந்தப் பதிவு எனக்குப் பல வகைகளில் திகைப்பைத் தந்தது!

Ω 

ரேமண்ட் கார்வரை இதுவரை சாரு படித்ததேயில்லை என்று சொல்வது முதல் திகைப்பு. என்னுடைய இதற்கு முந்தைய கார்வர் கதைகளை சாரு வாசித்துவிட்டு என்னிடம் பாராட்டிப் பேசியிருக்கிறார். அது போகட்டும்! 

இந்த ‘வீட்டுக்கு இவ்வளவு…’ என்ற அபாரமான கதையை ‘ஸ்டுப்பிட்’ என்கிறார். அதுதான் பெரிய அதிர்ச்சி. சாரு உலக இலக்கியங்களை அறிந்தவர். மிக நுட்பமான படைப்புகளை மிகவும் ரசித்து வாசகர்களிடம் பகிர்ந்துகொள்பவர். ரேமண்ட் கார்வருக்கு இணையாகச் சொல்லக்கூடிய சமகால எழுத்தாளர்கள் தமிழில் மட்டுமல்ல, பிற நாட்டு இலக்கியங்களிலும் அதிகம் பேர் இல்லை என்று கார்வரின் மற்ற கதைகளையும் படித்தால் அவர் நிச்சயமாக எழுதுவார், இப்போது சொல்லியிருக்கும் கருத்தை மாற்றிக்கொள்வார் என்றே நம்புகிறேன். ஆனால் இப்போது ஸ்டுப்பிட் என்று சொல்வதைப் பார்த்ததும் மனம் வருந்தினாலும் சாரு உணர்ச்சிவசப்பட்டுவிட்டால் ஒரு குழந்தை என்று தெரியுமென்பதால் புன்னகையோடு கடந்துவிடுகிறேன்.

ரேமண்ட் கார்வர் ஒரு புதிர்த்தனமான எழுத்தாளர் (enigmatic writer) என்றுதான் சொல்ல வேண்டும். அவர் எழுத்து மேம்போக்காகப் பார்க்கும்போது மிகச் சாதாரணமானது. கடினமான நடையில் எழுதப்படும் நவீன எழுத்துகளைப் படித்துவிட்டு கார்வரைப் படிக்கும் எவருக்கும் முதல் வாசிப்பில் ஏமாற்றமாகவே இருக்கும். நாமறிந்த பெரும்பாலான அமெரிக்க எழுத்தாளர்களின் அமெரிக்க உணர்வியல் கூறுகள் (American sensibility) இவரிடம் இருப்பதில்லை. 

மெலோடிராமா தலைதூக்க வேண்டிய இடங்களில் அவர் வேறு திசையில் கதையை நகர்த்துகிறார். கதைப்போக்கைக் கணிக்க முடியாமல் இருப்பது ஒரு சுவாரஸ்யம்தான், ஆனால் கதையின் முடிவுகளை அந்தரத்தில் நிறுத்துகிறார் அல்லது கடைசி பத்தியை எழுதிவிட்டு, அதை நீக்கியும்விடுகிறார். 

சமீபத்தில் நான் மொழிபெயர்த்திருந்த ‘இறகுகள்’ கதையிலும் கடைசியில் அந்த கதைசொல்லிக்குப் பிறந்த மகனைப் பற்றி ஒரு மெலிதான குறிப்பு போகிறபோக்கில் சொல்லப்படுகிறது. உடனே அவர் அந்த மகன் பிறந்ததற்குப் பிறகு அவர்களுடைய வாழ்க்கை மாறிவிட்டதாகச் சொல்கிறார். என்ன மாற்றம்? அதற்கான எந்த ‘க்ளூ’வையும் வைப்பதில்லை. ‘லிட்டில் திங்க்ஸ்’ (Little Things) கதையின் முடிவை இன்னும் பல ஆய்வாளர்கள் விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள். ‘தி காம்’ (The Calm) என்ற சிறுகதையில் இரண்டு கதைகள். ஒரு கதைக்குள் இன்னொரு கதை. உள்ளேயிருக்கும் கதை முடிந்தவுடனே கதையை முடித்துவிடுகிறார். 

வெளியில் உள்ள முதல் கதை வாயைத் திறந்துகொண்டு மூடாமலேயே இருக்கிறது. கதை இலக்கணப்படி முதல் கதையை முழுமையாக்க வேண்டாமா என்று கார்வரின் நண்பரும், மிக முக்கியமான எழுத்தாளருமான ரிச்சர்ட் ஃபோர்ட் கேட்கும்போது ‘கதை அவ்வளவுதான்’ என்று கடந்துபோய்விடுகிறார். கார்வர் கதைகளின் முடிவில் விடுகதைகளையோ, புதிர்ப் பாதைகளையோ பொதித்து வைப்பதில்லை. வாசலுக்கு சில மீட்டர்கள் முன்பாகவே நின்றுவிடுகிறார். வாசகன் தானாக நடந்துசென்று கதவைத் தேர்ந்தெடுத்து திறந்துகொள்ளவேண்டும். இதைப் போன்ற மீச்செறிவான கதைகள் கதைகள் சாருவுக்குத் தெரியாததல்ல. எனக்கெல்லாம் அவர் அறிமுகப்படுத்திய அபாரமான எழுத்தாளர்கள் அநேகம்.    

இனி அவருடைய விமர்சனப் பதிவில் எழுப்பியுள்ள கேள்விகளைப் பார்ப்போம்.

முதல் கேள்வி, அவரிடம் இருக்கும் புத்தகத்தில் இல்லாத ஒரு அத்தியாயமே எப்படி எனது மொழிபெயர்ப்பில் வந்திருக்கிறது?

இதற்கு ஒரே வாக்கியத்தில் பதில் சொல்லிவிடலாம்: அவரிடம் இருப்பது எடிட்டட் வெர்ஷன்.  நான் மொழிபெயர்த்தது மூலப் பிரதி.

சாரு வைத்திருக்கும் புத்தகத்தில் உள்ள கடைசி பத்திக்குப் பிறகு ஒரு பக்கமே அசல் பிரதியில் இருக்கிறது. 

Stuart sits at the table with a drink in front of him. His eyes are red and for a minute I think he has been crying. He looks at me and doesn't say anything. For a wild instant I feel something has happened to Dean, and my heart turns.

"Where is he?" I say. ''Where is Dean?"

"Outside", he says.

"Stuart, I'm so afraid, so afraid," I say, leaning against the door. "What are you afraid of, Claire? Tell me, honey, and maybe I can help. I'd like to help, just try me. That's what husbands are for."

"I can't explain," I say. "I'm just afraid. I feel like, I feel like, I feel like."

He drains his glass and stands up, not taking his eyes from me. "I think I know what you need, honey. Let me play doctor, okay ? Just take it easy now." He reaches an arm around my waist and with his other hand begins to unbutton my jacket, then my blouse. "First things first," he says, trying to joke.

" Not now, please," I say.

"Not now, please," he says, teasing. "Please nothing." Then he steps behind me and locks an arm around my waist. One of his hands slips under my brassiere.

"Stop, stop, stop" I say. I stamp on his toes.

And then I am lifted up and then falling. I sit on the floor looking up at him and my neck hurts and my skirt is over my knees. He leans down and says, "You go to hell, then, do you hear, bitch? I hope your cunt drops off before I touch it again." He sobs once and I realize he can't help it, he can't help himself either. I feel a rush of pity for him as he heads for the living room.

He didn't sleep at home last night.

This morning, flowers, red and yellow chrysanthemums. I am drinking coffee when the doorbell rings.

"Mrs. Kane? " the young man says, holding his box of flowers. I nod and pull the robe tighter at my throat.

"The man who called, he said you'd know.'' The boy looks at my robe, open at the throat, and touches his cap. He stands with his legs apart, feet firmly planted on the top step, as if asking me to touch him down there. "Have a nice day," he says.

A little later the telephone rings and Stuart says, "Honey, how are you? I'll be home early, I love you. Did you hear me? I love you, I'm sorry, I'll make it up to you. Good-bye, I have to run now."

I put the flowers into a vase in the center of the dining room table and then I move my things into the extra bedroom.

Last night, around midnight, Stuart breaks the lock on my door. He does it just to show me that he can, I suppose, for he does not do anything when the door springs open except stand there in his underwear looking surprised and foolish while the anger slips from his face. He shuts the door slowly and a few minutes later I hear him in the kitchen opening a tray of ice cubes.

He calls today to tell me that he's asked his mother to come stay with us for a few days. I wait a minute, thinking about this, and then hang up while he is still talking. But in a while I dial his number at work. When he finally comes on the line I say, "It doesn't matter, Stuart. Really, I tell you it doesn't matter one way or the other."

"I love you," he says.

He says something else and I listen and nod slowly. I feel sleepy. Then I wake up and say, "For God's sake, Stuart, she was only a child."

சுருக்கப்படாத இக்கதைப் பிரதி ‘வேர் ஐ அம் காலிங் ஃப்ரம்’ (Where I am Calling From), பிகினர்ஸ், கார்வர்: கலெக்டட் ஸ்டோரிஸ்’ (Beginners, Carver: Collected Stories) ஆகிய தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளன. 

Ω 

டுத்ததாக சாரு எழுப்பும் கேள்வி ஆச்சரியமளிக்கிறது. கடைசி வரியில் குறிப்பிடப்படும் ‘அவள்’ யார்? என்கிறார்.  வேறு யாராக இருக்க முடியும் சாரு? இறந்து கிடந்த அந்தப் பெண்தான். இதில் என்ன குழப்பம்?

சாருவின் விமர்சனத்துக்கு பதிலாக இந்த விளக்கமே போதும் என்று நினைக்கிறேன். கார்வரின் அசல் பிரதியைப் படித்த பிறகும் இக்கதையை அபத்தம் என்று சொல்வாரென்றால்,  நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

ஆனால், ரேமண்ட் கார்வரின் கதைகள் ‘எடிட்’ செய்யப்பட்டு ‘மினிமலிஸ கதைகள்’ என்று மாற்றப்பட்ட விவகாரத்தை இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு சொல்லலாம் என்று நினைக்கிறேன். இதற்குமுன் ஃபேஸ்புக்கில் கார்வரின் கதைகள் சுருக்கப்பட்டு வெளிவந்ததை சில பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறேன். விரிவாக எழுதியதில்லை. இப்போது வம்சி பதிப்பகம் என்னுடைய மொழிபெயர்ப்பில் ரேமண்ட் கார்வர் கதைகளை வெளியிடுவதற்காக கார்வரின் ஏஜென்ட்டிடம் உரிமை பெறும் முயற்சியில் இருப்பதால் அத்தொகுப்புக்கு எழுதும் முன்னுரையில் அதைப் பற்றி விளக்கமாக எழுத நினைத்திருந்தேன். நண்பர் சாருவின் விமர்சனம் இப்போதே எழுதவைத்திருக்கிறது;

ரேமண்ட் கார்வர் கிட்டத்தட்ட வாழ்நாள் முழுக்க அனுபவித்த கொந்தளிப்புகளை வாசகர்களில் பலர் அறிந்திருப்பார்கள். தீவிர குடிநோயாளியாக இருந்தவர். மிகவும் இளம் வயதிலேயே திருமணம், குழந்தைகள், வேலையின்மை, கடுமையான வறுமை… இவற்றுக்கு மத்தியிலும் அவரிடமிருந்து வெளிவந்துகொண்டிருந்த அபாரமான கதைகள், பின் மணமுறிவு, குடிநோய் சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்டது, மரணத்தின் வாசல் வரை சென்று மீண்டு வந்தது என அவருடைய வாழ்க்கையின் பெரும்பகுதி அவராக உண்டாக்கிக்கொண்ட நரக வேதனைகளின் உச்சம்.

அந்த நேரத்தில் அவருடைய கதைகள் எந்தவிதத் திட்டமிடலும் இல்லாமல் வந்து கேட்பவர்களுக்கெல்லாம் தரப்பட்டிருகின்றன. பல சிறிய கல்லூரி மேகஸின்கள், உள்ளூர் பத்திரிகைகள், யாருடைய கவனத்தையும் ஈர்த்திருக்காத சிற்றிதழ்கள் என அவருடைய ஏராளமான சிறுகதைகள் சிதறியிருக்கின்றன. கார்வர் தன் இலக்கிய வாழ்க்கையில் அடைந்த அதிர்ஷ்டம் அவருக்கு வாய்த்த நண்பர் கார்டன் லிஷ். அவர் ஒரு இலக்கிய எடிட்டர். ‘ஆல்ஃப்ரட் எ நாஃப்’ (Alfred A Knopf) பதிப்பகத்தில் பணிபுரிந்துவந்தவர். கார்வரின் மேதமையை முழுசாக அறிந்திருந்தவர்.  சிதறியிருந்த கதைகளைப் பெருமுயற்சி கொண்டு சேகரித்து கார்வரின் தொகுப்புகளை வெளியிட்டார். ஆனால் அக்கதைகளின் அசல் வடிவத்தில் அல்ல. 

எல்லாக் கதைகளுமே கடுமையாக வெட்டி சுருக்கப்பட்டன. கார்வரின் முதல் தொகுப்பான ‘வாட் வி டாக் அபௌட் வென் வி டாக் அபௌட் லவ்’வில் (What We Talk About When We Talk About Love) இடம்பெற்ற எல்லாக் கதைகளிலும் மூன்றில் ஒரு பங்கு வெட்டியெறியப்பட்டது. அதற்குக் காரணம் லிஷ் கொண்டிருந்த சில நம்பிக்கைகள். அடங்கிய தொனியில், பூடகமாகச் சொல்லப்படும் கார்வரின் தீவிரமான கதைகளுக்கு அவ்வளவு நீளமான வாக்கியங்கள், வர்ணனைகள் பலவீனம் என்று லிஷ் நினைத்தார். இப்படி சுருக்கப்பட்ட கதைகளின் ‘கட் கட் அண்டு ஜம்ப்’ (cut cut and jump)  கதைசொல்லும் உத்தி அறுபதுகளின் ஆரம்பத்தில் சுணங்கிப்போயிருந்த அமெரிக்க சிறுகதை உலகில் புதுக் காற்றைக் கொண்டுவருவதாக இருந்தது. மினிமலிஸம் (நுண்ணியல்) என்று இந்த வகைமை கொண்டாடப்பட்டது. இது கார்வரே எதிர்பாராதது. இதழ்களில் முழு வடிவத்தில் வெளிவந்தபோது கண்டுகொள்ளப்படாத கதைகளுக்கு இப்போது விருதுகள் வரத் தொடங்கின. ஆனால் உண்மையில் வெட்டி சுருக்கப்பட்ட விதம் கார்வருக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. 

லிஷ்ஷுக்கு இது குறித்து அவர் எழுதிய ஒரு நீண்ட புலம்பல் கடிதம் கார்வரின் பரிதாப நிலையைப் புலப்படுத்துவதாக இருக்கிறது. (இக்கடிதத்தையும் அதைத் தொடர்ந்து நடந்த விவகாரங்களையும் இன்னொரு கட்டுரையில் விரைவில் எழுதுகிறேன்). 

ஆனால், கார்வரின் பலவீனமான எதிர்ப்பையும், புலம்பலையும் பொருட்படுத்தாமல் கார்டன் லிஷ் கார்வரின் கதைகளைத் தொடர்ந்து வெட்டிச் சுருக்கியும், தலைப்புகளை மாற்றியும் வெளியிட்டுவந்துள்ளார். இப்போது நாம் பேசத் தலைப்பிட்டிருக்கும் ‘வீட்டுக்கு இவ்வளவு அருகில் இவ்வளவு தண்ணீர்’ கதையின் முடிவை லிஷ் தன்னிச்சையாக மாற்றியிருப்பதுமல்லாமல், சில வரிகளைக் கூடுதலாகவும் சேர்த்திருக்கிறார் (கார்வர் தனது கடிதத்தில் ரத்தக் கண்ணீர் வடித்திருக்கிறார். சாரு அவர்கள் லிஷ் மாற்றி எழுதிருக்கும் கதையின் முடிவே தனக்குப் பிடித்திருப்பதாக எழுதியிருப்பதால் நானும் கார்வரின் அத்தியந்த சீடன் என்ற முறையில் ஒரு சில துளிகள் ரத்தக்கண்ணீர் வடித்துக்கொள்கிறேன்). 

கார்வரின் மரணத்துக்குப் பிறகு லிஷ் அளித்த பேட்டியில் “என்னுடைய எடிட்டிங்கால்தான் கார்வர் புகழடைந்தார். அவருடைய கதைகளை வெட்டிச் சுறுக்கியதற்கும், மாற்றி எழுதியதற்கும் நான் வருந்தவில்லை!” என்றார். கார்வர் தனது கல்லறைக்குள் நெளிந்து புரண்டிருப்பார்.

மேலும் இந்தக் கதையைப் பற்றி எனக்குச் சொல்வதற்கு இன்னுமொரு விஷயம் இருக்கிறது. உயிர்மை இதழில்  கார்வரின் ‘கதீட்ரல்’ எனது மொழிபெயர்ப்பில் வெளிவந்து ‘நாளை வெகுதூரம்’ தொகுப்பிலும்  இடம்பெற்றிருந்தது. நான் பெருமதிப்பு கொண்டிருந்த ‘க்ரியா’ எஸ்.ராமகிருஷ்ணன் 2013ம் வருடம் சென்னை புத்தகத் திருவிழாவில் அக்கதையை நான் மிகச் சிறப்பாக மொழிபெயர்த்திருப்பதாகச் சொல்லிப் பாராட்டியதை மறக்க முடியாது. அவர் கேட்டார், “ஸோ மச் வாட்டர் ஸோ மச் க்ளோஸ் டு ஹோம் கதையைப் படிச்சிருக்கீங்களா? கார்வரோட கதைகளிலேயே எனக்கு ரொம்பப் பிடித்தமான கதை. இப்போ அந்தக் கதையின் அன் எடிட்டட் ஒரிஜினல் வெர்ஷன் வந்திருக்கு தெரியுமா?” என்று கேட்டார். நான் அந்த பிகினர்ஸ் தொகுப்பை வாங்கிவிட்டதாகச் சொன்னபோது, “அந்தக் கதையை நீங்கள் மொழிபெயர்த்தால் என்ன தலைப்பு வைப்பீர்கள்?” என்று கேட்டார். நான் யோசித்து, “உடனடியா எதுவும் தோணலை சார்” என்றேன். அவர் அப்போது சட்டென்று சொன்ன தலைப்புதான் ‘வீட்டுக்கு இவ்வளவு அருகில் இவ்வளவு தண்ணீர்!’.

அவர் மறைவுக்குப் பிறகுதான் அக்கதையை மொழிபெயர்க்க முடிந்திருக்கிறது. அவர் பரிந்துரைத்த தலைப்போடு.

நன்றி ராம் சார்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ஜி.குப்புசாமி

ஜி.குப்புசாமி, மொழிபெயர்ப்பாளர். ஓரான் பாமுக் எழுதிய ‘என் பெயர் சிவப்பு’, ‘பனி’, ஜான் பான்வில் எழுதிய ‘கடல்’, அருந்ததி ராய் எழுதிய ‘பெருமகிழ்வின் பேரவை’, ரேமண்ட் கார்வர் சிறுகதைகள், ஹாருகி முரகாமி என்று பல முக்கியமான எழுத்தாளர்களையும் நூல்களையும் ஆங்கிலித்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவர். தொடர்புக்கு: gkuppuswamy62@yahoo.com


1






பின்னூட்டம் (4)

Login / Create an account to add a comment / reply.

Rasu   2 years ago

சாருவின் பதிவிற்கு மிக விளக்கமான பதில் இந்தக் கட்டுரையில் இருந்தது. கார்வெரின் இந்தக் கதையின் சருக்கப்பட்ட வடிவத்தையே நானும் வாசித்திருந்தேன், இந்தக் கட்டுரை கதையை இன்னும் தெளிவுபடுத்தியது. சாரு கார்வெரை அரைகுறை என நிறுவுவதற்காக தமிழர்களின் ‘xenophobic’ மனநிலையைக் காரணமாகச் சொல்கிறார். வாழ்நாளெல்லாம் அயல் இலக்கியத்தை மட்டுமே வாசித்திக்கொண்டிருக்கும் அவர் போன்ற ஒருவர் 'xenophobic’ மனநிலை பற்றிப் பேசுவது நகைப்புக்குரிய முரண்பாடு. கார்வெரின் ஒற்றைக் கதையை வைத்து அவரை மதிப்பிடமாட்டேன என சொல்லும் அவரே கார்வெரை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கும் தோரணையில் எழுதியிருப்பது அவருக்கே உரிய ஒரு பண்பு. கார்வெரின் மற்ற சில கதைகளையும், ஜி. குப்புசாமியின் மொழிபெயர்ப்புகளையும் வாசித்தவன் என்ற வகையில் இந்தக் கட்டுரையில் உள்ள நியாயங்கள் தெளிவாகின்றன.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Ananth    2 years ago

Charu’s writings are very shallow without any depth, better to ignore than responding

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Saravanan   2 years ago

சிறப்பான விளக்கமளிக்கும் பதிவு சார்.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Akilan Ethiraj   2 years ago

திரு. ஜி. குப்புசாமி போன்ற கவனமான மொழிபெயர்ப்பாளர்களிடம் குறை கண்டுபிடிக்கும் முன் திரு. சாரு நிவேதிதா போன்ற பிரபல எழுத்தாளர்கள் கூடிய கவனத்துடன் இருந்திருக்க வேண்டும். திரு. குப்புசாமியின் பண்பட்ட பதில் மனத்துக்கு இதமாக இருக்கிறது.

Reply 5 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

ஜாட் அருஞ்சொல்தண்ணீர்க்குன்னம் பண்ணைவிந்து நீச்சல்சர்ச்சைப் பேச்சுசமஸ் பதில்பால் ஆஸ்டர் கட்டுரைபெண் வெறுப்புராம்மனோகர் லோகியாஇந்தியப் பொருளாதாரம்குறிப்பு எடுத்தல்மதச்சார்பற்ற ஜனதா தளம்எம்.எஸ்.ஸ்வாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்மனத்திண்மைஆசை கட்டுரைஇத்தாலிபணம்மக்கள் பணிஈறுகள்வெறுப்பை ஊட்டும் பேச்சுமந்திர்மின்சார சீர்திருத்தம்தேசியத் தேர்தல்சேகர் பாபுபழங்குடிதட்சிணாயனம்கலகக் குரல்கள்ராணுவக் கிளர்ச்சிசமூக உளவியல் சிக்கல்மைசூர் எம்பிதி டிஸ்கவரி ஆஃப் இந்தியா

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!