இன்னொரு குரல் 10 நிமிட வாசிப்பு

மூன்று வேளாண் சட்டங்களையும் சேர்த்து நிராகரிப்பது பகுத்தறிவு அல்ல

வாசகர்கள்
26 Nov 2021, 4:30 am
1

தமிழில் தீவிரமான விவாதங்களை வளர்க்கும் பணியில் தன்னையும் ஈடுபடுத்திக்கொள்கிறது ‘அருஞ்சொல்’. அதனால்தான் தலையங்கம், கட்டுரை ஆகியவற்றுக்கு இணையான முக்கியத்துவத்தை ‘இன்னொரு குரல்’ பகுதிக்கு அளித்து, இணையதளத்தின் பிரதான இடத்திலேயே அதற்கு இடமும் அளிக்கிறது. ‘அருஞ்சொல்’ இதழை வாசிப்பவர்கள் வெறும் வாசகர்கள் மட்டும் இல்லை; எழுத்தாளர்கள், அறிஞர்கள், பத்திரிகையாளர்கள், கொள்கை வகுப்பாளர்களான அரசியலர்கள் ¬– அதிகாரிகள், செயல்பாட்டாளர்கள், ஆசிரியர்கள் என்று பல்வேறு துறை ஆளுமைகளும் ‘அருஞ்சொல்’லை வாசிக்கிறார்கள் என்பதை அறிந்திருக்கிறோம். ஆகையால், கட்டுரைகளை வாசிப்பவர்கள் ‘எனக்குப் பிடிக்கிறது அல்லது பிடிக்கவில்லை’, ‘நான் இதை ஆதரிக்கிறேன் அல்லது எதிர்க்கிறேன்’ என்பதுபோல ஓரிரு வரிகளில் தங்கள் கருத்துகளை எழுதாமல் விரிவாக எழுதிட வேண்டுகிறோம். அப்படி எழுதப்படும் கருத்துகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை ‘இன்னொரு குரல்’ பகுதியில் வெளியாகும். கருத்துகளைப் பின்னூட்டப் பகுதியில் எழுதிடுங்கள் அல்லது aruncholeditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடுங்கள். தயவுசெய்து உங்கள் பெயருடன், ஊர் பெயரையும் குறிப்பிடுங்கள்.

 

தொடரும் வேளாண் சட்ட அபாயம்

மூன்று விவசாயச் சட்டங்களையும் ஒரே அடியாக ரத்துசெய்ய வேண்டும் என்பது, இம்மூன்றுக்கும் இருக்கும் முக்கிய வேறுபாடுகளை, சாதக, பாதக அம்சங்களைக் கணக்கில் கொள்ளாமல் வைக்கப்படும் கோரிக்கை. ஏபிஎம்சி மண்டிக்குகளுக்கு வெளியே, யார் வேண்டுமானாலும் வாங்க, விற்க அனுமதியளிக்கும் முதலாவது சட்டம்பற்றி தான் எதிர்ப்புகள், ஆட்சேபங்கள், மிகை அச்சங்கள். இதை மட்டும் எதிர்ப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால், இதர இரண்டு சட்டங்களும் மிக முக்கிய தேவைகளை நிறைவுசெய்யும் சட்டங்கள். விளைப்பொருட்களைச் சேமிக்க போதுமான குளிர்பதனக் கிடங்குகள் மிகத் தேவை. இவற்றைத் தனியார்கள்தான் பெரிய அளவில், நாடு முழுவதும் உருவாக்க முடியும். இதை ஊக்குவிக்கதான் இரண்டாவது சட்டம் வகை செய்கிறது. வெங்காயம் உள்ளிட்ட பல பண்டங்களை யார் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சேமித்து, பிறகு தேவைப்படும்போது விற்க அனுமதிக்க அளிக்கும் சட்டம். மத்திய பிரதேசத்தில் வெங்காய விலை மிக மிகச் சரிந்தபோது, வெறுத்துப்போன விவசாயிகள், சாலைகளில் அவற்றைக் கொட்டிவிட்டுச் சென்ற காட்சிகளை அவ்வப்போது பார்த்தோம். பற்றாக்குறைக் காலங்களில் கிலோ ரூ.150 வரை எகிறுவதையும் பார்க்கிறோம். இதையெல்லாம் தவிர்க்க இந்தச் சட்டம் வகை செய்கிறது.

மூன்றாவது சட்டம், ஒப்பந்த விவசாயப் பாதுகாப்பு சட்டம். ஒப்பந்த முறை விவசாயம் ஏற்கனவே இங்கு பல ஆண்டுகளாக, பல பகுதிகளில் நடந்துவருகிறதுதான். இதில் விவசாயிகள் பாதுகாப்பை மேலும் உறுதிசெய்து, தம் நிலங்களை கார்ப்பரேட்களிடம் இழக்காமல் தடுப்பதற்கு இந்தச் சட்டம் வகை செய்கிறது. எனவே பிரச்சினைக்குரிய முதலாவது சட்டத்தை எதிர்த்துப் போராடும்போது, இதர இரண்டு சட்டங்களையும் முற்றிலும் நிராகரிப்பது பகுத்தறிவல்ல.

- K.R.அதியமான் 

தமிங்கிலத்தைப் பெருமிதமாகப் பேசுங்கள்

யோகேந்திர யாதவ் சொல்வது ஏற்றுக்கொள்ளவே முடியாதது. மேலும், மொழியின் அரசியலைச் சார்ந்த எண்ணம் இது. கூர்ந்து பார்த்தால், கிரிக்கெட்டிற்கும் கில்லி தாண்டல் விளையாட்டிற்கும் நிறையத் தொடர்பு இருப்பதாகத் தோன்றுவதால் முன்னதைப் பின்னதாக மாற்றிவிடலாமா? ஒன்றைக் கற்றுக்கொள்ளும்போது, சிரத்தையுடன் மனம் ஒன்றி கற்றுக்கொள்ள வேண்டும். இன்னொரு விடயம் இருக்கிறது. ஒருமுறை ஏ.கே.ராமானுஜம் சொன்னார். "இந்தியர்கள் யாரும் ஆங்கிலத்தை எழுத முடியாது. ஆங்கிலத்தில் வேண்டுமானால் எழுதலாம்."

இளம் சிறார்களுக்கு ஒரு பொதுக் குறியீடான ‘ஜெனரல் இண்டியன் இங்கிலீஷ்’ என்பதைக் கற்றுக்கொடுக்க முடியும். இந்தியாவின் ஆங்கில அச்சு மற்றும் காணொளி ஊடகங்கள் இதை ஓரளவு நன்றாகவே செய்துவருகின்றன.  1970-களில் ஹைதராபாத்தில் உள்ள இந்திய நடுவண் அரசின் ஆங்கில மற்றும் பிறநாட்டு மொழிகளுக்கான மையத்தின் இயக்குனர் பன்சால் அவர்களும் ‘ஜெனரல் இண்டியன் இங்கிலீஷ்’ என்ற ஒன்றை மையமாகக் கொண்டு ஆங்கிலம் கற்பித்தல் இந்தியாவில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதான சீரிய முயற்சிகள் பலவற்றை மேற்கொண்டார். இவையெல்லாம் எதற்காகவென்றால், இந்தியா முழுக்க ஆங்கில மொழியைக் குறித்து ஒரு பொதுப் புரிதலை ஏற்படுத்துவதற்காக. பரதநாட்டியத்தை முடிந்த வரை ஒழுங்காக ஆடலாம்; நடுநடுவே லோக்கலாகவும் ஆடலாம் என்றால், ஏற்றுக்கொள்வார்களா?

உண்மையில், 1990-களின் பிந்தைய வருடங்களில் உலக அளவில் ஆங்கிலம் வணிகத்திற்கான மொழியாக பிரம்மாண்டம் காட்டுகிறது. அதை ஒழுங்காக, குறைந்தபட்சம் ஜெனரல் இண்டியன் இங்கிலீஷ் கற்றுக்கொள்ள ஆக வேண்டியதைப் பார்ப்பதை விட்டுவிட்டு, தமிங்கலம்... திமிங்கலம்... என்று கதையடிக்காமல் இருப்பது நல்லது. இந்தியர்கள் பேசும் - எழுதும் - ஆங்கிலத்தில், அவர்கள் இந்தியாவில் எங்கு வசிப்பினும், ஒரு பொதுவான 'மண்வாசம்' உள்ளது. ஆனால், இது தமிங்கலம், தெலுங்கலம் என்ற வகையில் எல்லாம் வராது!

- பிரபு 

Disagree with author, I feel , whatever language we learn to speak , we should try to speak as close as to Native language. But in Indian union, we speak English as we wish/like... ( we don't even care) when we work with foreigners , we could literally see that how bad our English pronunciations and how difficult for them to understand us first time clearly. So there's nothing wrong in teaching proper English to our children. Example : TMC MP ,Ms.Mahua Moitra parliamentary speeches go viral online and attracts/reaches many Indians than many of her peers (eg:Tamil Nadu MP's English speech). Thanks.

- Sasikumar T

I agree with author. MTI is a default condition of our brain. We require additional training and efforts to overcome the same. Not everyone can afford for that training and effort . What those peoples need to do? That's what the author mentioned here. Those who has a real need like who works predominantly with foreigners and can afford that training and efforts, it make sense and please go ahead. We agree, tolerate and even encourage if some outsiders learn and speak our mother tongue improperly. The same way people in UK and US are seeing us (my professional experience) In our society, English is not only used as a language for communication, it also used to measure a person. Even skilled people (some other skill) got de motivated and get into inferiotic complex if they can't cope with it. Author's point of view will be a good solution to this problem. Note to Sasikumar: I am able to understand those MP's speeches. Most importantly, I am able to understand that's how it also can be. So I didnt find anything wrong in it..

 - Saravana

ஆண்களை இப்படி அலையவிடலாமா?

interesting but a very conservative and thoughtless view point. women behave the way author has described because of all the restrictions men have put on them !! they have to cautious and careful... and to blame them without acknowledging the wrongs done (still being done) to them is not right... and even after they have been careful they still fall into the trap men has set up for them and fall prey.. pen yen adimaiannal precisely talks on this... and Periyaar in his seminal work Ini Varum UIlagam, clearly says that the institution of marriage would disappear and men and women would come together more for intellectual purpose rather than procreation... this is already happening in scandic countries... lot has changed in rest of the world... perhaps asia is still behind... in europe and north europe this has changed completely due to equality between sexes... so, Key is equality. till then view points like these like the ones we see in Tamil movies !!! even if we were to take the authors view point, are men and women equal in the indian society? can women take independent decisions without any interference? point is men have not grown up and kept with the times... not now but through the past many millennia !!!  

- Kannan

அராத்துவின் கட்டுரையைப் படித்த பிறகு, ஏன் இந்த அளவு - வேறு எந்த எண்ணமும் இல்லாமல் - தன்னை தானே மிகவும் வருத்திக்கொண்டு அப்போது அலைந்தோம் என்று பலரும் நினைத்திருக்கலாம். அதேவேளையில் இன்னொரு எண்ணமும் எழுந்தது. உருகி உருகி ஏங்கும் ஆண்கள் அழகிகளுக்காகத்தானே இப்படி மன்றாடுகிறார்கள். இதில் பாசம், பரிவு, நேசம் என்றெல்லாம் எதுவும் இருக்கிறதா என்ன? அதென்ன பாசமும் நேசமும் அழகான பெண்களைக் கண்டால் மட்டும் பொங்குகிறது! மனித மனம் மிகவும் சிக்கலானது. அனைத்துச் சிக்கல்களுக்கும் வேதனைகளுக்கும், ‘நான்’ என்ற புள்ளியே அடிப்படை என்று எனக்கு தோன்றுகிறது.  

ராஜா

ஆள்வோரின் ஆணவத்துக்குக் கொடுக்கப்பட்ட சம்மட்டி அடி

சரியான தலைப்பு. மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் அறிவிப்பும், மன்னிப்புக் கோரலும் பிரதமரின் செயல்பாட்டிற்குச் சம்மட்டி அடிதான். வேளாண் பெருமக்களின் சத்தியாகிரகத்துக்கான வெற்றிதானா? முறையற்ற முறையில் நிறைவேற்றப்பட்ட முறையற்ற சட்டங்கள் எந்த உணர்வின் அடிப்படையில் திரும்பப் பெறப்படுகின்றன? இந்தச் சட்டங்கள் வேளாண் மக்களுக்கு எதிரானது, தனியார் ஆதிக்கத்திற்கு உடந்தையானது என்ற புரிதலின் அடிப்படையிலா, அல்லது தேர்தல் இழப்பச்சத்தின் அடிப்படையிலா? புரிந்துணர்வு காரணமாகத் தவறைத் திருத்திக்கொள்ளும் விதமானால், அது சத்தியாகிரகத்தின் வெற்றியே! ஆனால், உ்ண்மை அதுவல்லவே? அறிவிப்பிலும் அது புலனாகவில்லையே! வாக்குச்சீட்டின் வலிமை குறித்த இழப்பச்சமே ஓங்கி நிற்கிறது. முறையற்ற விதத்தில் நிறைவேற்றியது மக்கள் நலனுக்கு எதிரானது. தனியார் நலன் கருதிய உள்நோக்கம் உடையது. திரும்பப் பெறுவதோ, தேர்தல் குறித்த அச்சத்தின் காரணமான அரசியல் உள்நோக்கம் உடையது. 

-சே.நா. விசயராகவன், காரைக்குடி

இன்றுதான் முதன்முதலில் இந்த தளத்தை எனது கல்லூரி பேராசிரியர் ஒருவர் மூலம் நான் அறிந்தேன். அரசியலில் நமது கருத்தை தெரிவிக்க வேண்டும் என்றால், நாம் அரசியலை அறிந்திருக்க வேண்டும். அதற்கு, ‘அருஞ்சொல்’ இணையதளம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். நன்றி!

- விஷால், கல்லூரி மாணவர்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Rajarajacholan   2 years ago

வாசகர்கள் உள் வந்து வாசிக்கவே முடியாமல் பூட்டி வைத்திருக்கும் மின்னிதழ்கள் மத்தியில் எளிமையாக உள் வந்து கட்டுரைகளை, விவாதங்களை வாசிக்க வழிவிட்டதோடு அல்லாமல் வாசகனின் உடன் பாட்டுக்குரலுக்கும் எதிர்க்குரலுக்கும் இடமளிப்பது என்பது எதிர் குரலை நசக்கி மயக்கத்தில் கிடக்கும் சனநாயகத்தின் முகத்தில் நீர்தெளித்து உயிர்ப்பிக்கும் செயல். நல்ல முயற்சி. மகா.இராஜராஜசோழன், தமிழாசிரியர். திருச்சி.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

வெறுப்பைத் தூண்டும் பேச்சு செழிக்கிறதுஎக்காளம் கூடாதுவாக்கு வித்தியாசத்தைக் கவனத்தில் கொள்ளுங்கள்தொல்லைமழை குறைவுநிதிநிலை அறிக்கைநிவாரணம்பல்பீர் சிங் ராஜேவால்பி.ஏ.கிருஷ்ணன்சமஸ்சர்வாதிகாரிஆல்-ரவுண்டர்பொதுவுடைமை இயக்கம்இசையோகேந்திர யாதவ்ஒரியன்டலிஸம்இரு உலகங்கள்பேராசிரியர் கல்யாணி பேட்டிசென்னை கோட்டைகலைஞர் தெற்கிலிருந்து ஒரு சூரியன்உதயசூரியன்சீனிவாசன் ராமாநுஜம் - அசோகர்சல்மான் ருஷ்டிஹரித்துவார் வெறுப்புப் பேச்சுதெற்கிலிருந்து ஒரு சூரியன் சமஸ்பி.சி.ஓ.எஸ்.தெலங்கானா முதல்வர்அலைச்சல்அரசமைப்புச் சட்டம்பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!