கோணங்கள், கட்டுரை, மொழி 6 நிமிட வாசிப்பு

தமிங்கிலத்தைப் பெருமிதமாகப் பேசுங்கள்

யோகேந்திர யாதவ்
24 Nov 2021, 5:30 am
7

தீபாவளிக்குப் பிறகு, உறவினர்களைப் பார்க்க ஹரியாணா சென்றிருந்தோம். என்னுடைய உறவினர், பள்ளியில் படிக்கும் தன் இரு பெண் குழந்தைகளுக்கும் தரமான ஆங்கிலக் கல்வி கொடுப்பதற்காகக் கிராமத்திலிருந்து பெரிய நகரத்துக்குக் குடிபெயரப்போவது தொடர்பில் பேசினார். “இப்போதே அவர்கள் அருகில் உள்ள நகரத்தில் ஆங்கிலவழிக் கல்வியில்தானே கற்கிறார்கள்?” என்று இடைமறித்தேன். அப்போதுதான் அவர் “ஆங்கிலவழிப் பள்ளி என்பது சரிதான்; ஆனால் பயனில்லை. எல்லா ஆசிரியர்களுக்கும் ‘எம்டிஐ’ பாதிப்பு இருக்கிறது. குழந்தைகள் அவர்களிடமிருந்து எந்தவிதமான ஆங்கிலத்தைப் படிப்பார்கள்?” என்றார். அப்போதுதான் நான் ‘எம்டிஐ’ என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டேன்.

எங்களுக்கு அதற்குப் பொருள் என்ன என்று விளங்கவில்லை. இதைக் கேட்டதும், என்னுடைய உறவினருக்கு வியப்பு. படித்த மாமா, மாமியான உங்களுக்கு ‘எம்டிஐ’ என்றால் தெரியவில்லையா என்று வாய்விட்டே கேட்டுவிட்டார்! பிறகு அவரே புதிரை விடுவிக்கும் வகையில் ‘எம்டிஐ’ என்றால், ‘மதர் டங் இன்ப்ளுயன்ஸ்’ – தாய்மொழியின் ஆதிக்கம் என்று விளக்கினார். அதற்குப் பிறகு எங்களுக்கு விளங்கிவிட்டது. பக்கத்து ஊரில் ஆங்கிலவழி வகுப்பில் சொல்லித்தரும் ஆசிரியர்கள் ஆங்கிலத்தை இந்தி உச்சரிப்புடன் சொல்லித் தருகிறார்கள் என்று!

பிறகு வீட்டுக்கு வந்து ‘எம்டிஐ’ என்ற வார்த்தை புழக்கத்தில் இருக்கிறதா என்று கூகுளில் தேடினோம். நாங்கள்தான் முட்டாள்களாக இருந்திருக்கிறோம் என்பது புரிந்தது. அதாவது, ‘எம்ஐடி’ என்பது வார்த்தையல்ல, இந்திய சமூகத்தவரால் நன்கு அங்கீகரிக்கப்பட்ட ஒரு பிரச்சினை! ‘மதர் டங் இன்ப்ளூயன்ஸ்’ என்று தேடுபொறியில் தேடினால், ஆயிரக்கணக்கான பக்கங்களுக்குத் தகவல்கள் கொட்டுகின்றன. ஏகப்பட்ட வீடியோக்கள், போர்ட்டல்கள். பெரும்பாலும் இந்தியர்களால் ஏற்றப்பட்டவை. அனைத்துமே ஆங்கிலத்தைத்தான் குறிவைக்கின்றன.

இந்தப் பிரச்சினையிலிருந்து எப்படி விடுபடுவது என்று பல ஆலோசனைகள்! ‘இயல்பாக ஆங்கிலம் பேசுங்கள்’, ‘ஆங்கிலம் பேசுவதில் தன்னம்பிக்கை பெறுங்கள்’, ‘வளமான எதிர்காலத்துக்கு ஆங்கிலம் பயிலுங்கள்’ என்று பல விளம்பரங்கள்!

சோக – நகைச்சுவை

எந்த மொழியறிஞரும் சொல்லிவிடுவார் ‘எம்டிஐ’ என்று வியாதி எதுவும் இல்லை. இது உலகம் முழுவதும் உள்ள நிலைமை. மானுடர்களுக்கு அவரவர் தாய்மொழியின் செல்வாக்கு சிந்தனையில் பேச்சில் எழுத்தில் வருவதுதான் இயற்கை, இயல்பு, நல்லதும்கூட. நம் நாட்டில் ஆங்கிலம் பேசுகிறவர்கள் இந்த ‘எம்டிஐ’ காரணமாக மிகவும் பாதிக்கப்படுகிறார்கள், அவர்கள் அதன் வளையத்திலிருந்து மீண்டுவருவதே இல்லை.

சின்னஞ்சிறிய தீவான கிரேட் பிரிட்டனிலேயே பல்வேறு விதமான ‘எம்டிஐ’ இருப்பது பலருக்கும் தெரியாது. இங்லீஷ் மட்டுமல்ல ஸ்காட்டிஷ், ஐரிஷ் பேசுகிறவர்களும் அந்தத் தீவில் உண்டு. பர்மிங்காமியர்களுக்குத் தனி உச்சரிப்பு வேறு!

உலகம் முழுவதும் தடம் பதித்துவிட்ட ஆங்கிலம், ஒரே வகையில் ஒரே மாதிரி உச்சரிக்கப்படும் மொழியாக இனி இருக்க முடியாது. பலதரப்பட்ட பதிவுகள், பலவிதமான பேச்சுநடைகள், பலவிதமான உச்சரிப்புகள் ஆங்கிலத்தில் வருவது தவிர்க்க முடியாதது. அமெரிக்க ஆங்கிலம், ஆஸ்திரேலிய ஆங்கிலம், கனடிய ஆங்கிலம் என்று சில வகைகள் இருக்குமென்றால், இந்திய ஆங்கிலம், வங்காங்கிலம், தமிங்கிலம் என்று மேலும் பல வகைகள் நிச்சயம் ஏற்படத்தான் செய்யும்.

ஆங்கிலத்தை அகராதிப்படி உச்சரிக்க வேண்டும் என்ற முனைப்பில் தங்களுடைய சொந்த மொழியையே மறந்துவிடும் இந்தியர்கள் இருப்பது சோகமான நகைச்சுவை. ஆங்கிலத்தை இரண்டாவது வேற்று மொழியாக எடுத்துப் படித்த என் போன்றவர்களுக்கு, கட்டுரைகள் எழுதும்போது சரியான முன்னிடைச் சொல்லை (பிரிபொசிஷன்) பயன்படுத்தினோமா என்ற சந்தேகம் தோன்றிக்கொண்டே இருக்கும்.

சமூக வெறுப்பு

நாங்கள் எப்படி ஆங்கிலத்தை பாடுபட்டு படித்தோம் என்பதை நினைக்காமல் இருக்க முடியாது. ஆங்கிலத்தை முதல் மொழியாகவே எடுத்து பள்ளி, கல்லூரிகளில் ஆங்கில வழியிலேயே படித்த இந்தியர்களுக்கும், எப்படி மாற்று மொழி உச்சரிப்பைத் தவறின்றிப் பேச பயிற்சி எடுத்தோம்; அமெரிக்கப் பேச்சுநடைக்கு எப்படி எளிதாக மாறினோம் என்பதையெல்லாம் மறக்க முடியாது. ஆனால், கலாச்சாரத் தாழ்வுணுர்வுக்கும் சுயவெறுப்புக்கும் ‘எம்டிஐ’ என்பது அடையாளச் சொல்லாக இருக்கும் என்றால், இந்த நோய்க்குறி நம் அனைவரையும் பாதிக்கிறது என்றும் பொருள்.

கிராமங்களுக்கு அப்பால், எனக்கேற்பட்ட இன்னொரு அனுபவத்தையும் கூற அனுமதியுங்கள். இருபதாண்டுகளுக்கு முன்னால் வெளிநாடுகளில் நன்கு பயிற்சிபெற்ற, புகழ்பெற்ற அறிஞர் ஒருவரைச் சந்தித்தோம். அவருடைய பேச்சு மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது. அதில் ‘எம்டிஐ’ கலப்பே இல்லை. நான் பரப்புரைகளை இந்தியில்தான் எழுதுகிறேன் என்பதற்காகப் பாராட்டு தெரிவித்தார்.

என்னுடைய மூல ஆய்வுக் கட்டுரைகளையே இந்தியில்தான் பதிப்பித்திருக்கிறேன் என்று கூறி, அவரைத் திருத்தினேன். “சிந்தித்து எழுதும் ஆக்கங்களை எப்படி இந்தியில் எழுத முடியும்?” என்று அவர் கேட்டார். இந்தி மட்டும் அல்லாது தமிழ் அல்லது கன்னடம் என்று எந்த இந்திய மொழி தொடர்பிலும் அவருடைய பார்வை இதுவாகவே இருந்தது. இந்திய மொழிகளில் கதைகளை எழுதலாம், பாடல்களை எழுதலாம்; சமூக ஆய்வுக் கட்டுரைகளை எழுத இந்திய மொழிகள் வளமானவை இல்லை என்று கூறி உரையாடலை முடித்தார். ஆங்கிலம் மட்டுமே தெரிந்துபேசும் நம் நாட்டின் மேட்டுக்குடிகளின் சார்பாக அவர் பேசுகிறாரோ என்றுகூட சந்தேகப்பட்டேன். 

வெளிப்படையாகச் சொல்வதென்றால், ஆங்கில மொழிப் புலமை மட்டும் இருந்துவிட்டால் நவீனமாகிவிடலாம், முன்னேற்றம் அடைந்துவிடலாம், படித்துவிடலாம் என்ற நம்பிக்கையே பெரும்பாலானவர்களிடம் இருக்கிறது. ஆங்கிலத்தை அறிவாற்றலுக்கான மொழி, நிபுணத்துவத்தை அளிக்கும் மொழி, அறிவியல் மொழி, பொருளாதாரம் உள்ளிட்ட நவ கலைகளைப் பயில்வதற்கான மொழி என்று பார்க்கிறோம். நம் நாட்டு மொழிகள் அனைத்தும் வீதியில் வம்பு பேசவும், சிறு வயது நினைவுகளை அசைபோடவும், நம்முடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் மட்டுமே உதவும் மொழிகள் என்று கருதுகிறோம். இந்த ஆழமான கலாச்சாரப் பாரபட்சம்தான் நவீன மூடநம்பிக்கையாக, தாய்மொழி ஆதிக்கமில்லாமல் ஆங்கிலத்தைத் தூய்மை கெடாமல் படிக்க வேண்டும் என்ற உந்துதலுக்கு இட்டுச் செல்கிறது.

மொழி ஒதுக்கல் வெறி

பெரும்பாலான சமூகங்களில் வர்க்கப் போராட்டத்துக்கான களமாக மொழியும் இருந்துள்ளது. கலாச்சார மேலாதிக்கத்தை நிலைநாட்ட மொழியே விருப்பமான தளமாக கையாளப்பட்டிருக்கிறது. இந்தப் போட்டி நம் போன்ற, காலனியாதிக்கத்திலிருந்து விடுபட்ட நாடுகளில் அதிகமாக இருக்கிறது.

ஆங்கிலத்தைத் தெரிந்துகொள்வது இன்னொரு மொழியறிவைப் பெற்றோம் என்பதாக இல்லாமல் - அதிகாரத்துக்கான கடவுச் சீட்டாகவே பயன்படுகிறது. எனவேதான் ஆங்கிலத்துக்கு - மக்களுடைய ஆசைகள், ஏக்கங்கள், நகைச்சுவை, சோகம், கேலிக்கூத்து ஆகிய  அனைத்துடனும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டுவிடுகிறது.

உண்மை என்னவென்றால், விக்டோரியா மகாராணியார் காலத்து ஆங்கிலத்தைப் பயின்று நம்மால் மனித குலத்துக்கு மிகப் பெரிய பங்களிப்பைச் செய்துவிட முடியாது. நம்முடைய கற்பனை வளமும், திறமைகளும் தாய்மொழியின் ஆதிக்கத்திலிருந்துதான் எதையும் பெற முடியும். தாய்மொழியின் செல்வாக்கிலிருந்துதான் உலகம் முழுவதிலுமே ஆங்கில மொழியும் நவீன சிந்தனைகளும்கூட வளம் பெற முடியும்.  நாகரிகமான மனிதருக்குப் பக்கத்தில் நின்றுகொண்டு அவரைப் பக்கவாட்டில் பார்ப்பதாலேயே, நாமும் நாகரிகம் அடைந்துவிட முடியாது என்பார் ராம் மனோகர் லோகியா.

நாம் நம்முடைய சொந்தக் காலிலேயே ஊன்றி நின்றுகொண்டு நேராகப் பார்க்க வேண்டும். ‘ஆங்கிலம் ஒழிக’ என்று லோகியா  சொன்னதை நாம் இன்று பின்பற்றத் தேவையில்லை. நம்முடைய காலத்துக்கு ஏற்ற முழக்கம் எதுவென்றால், ‘ஆங்கிலத்தையே மாற்றுவோம்’ என்பதுதான். ஆங்கில மொழியை இந்தியமயப்படுத்துவோம், இந்திய மொழிகளின் வார்த்தைகளையும் பழமொழிகளையும் அதில் நிறையக் கலப்போம். அது நம்மைக் காப்பாற்றுவதுடன், மேட்டுக்குடியினரின் மொழிஒதுக்கல் வெறியையும் தணிக்கும் - யார் கண்டார்கள் அது ஆங்கிலத்தையேகூட காப்பாற்றலாம்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
யோகேந்திர யாதவ்

யோகேந்திர யாதவ், சமூக அறிவியலாளர், அரசியல் செயல்பாட்டாளர். ஸ்வராஜ் இந்தியாவின் தேசியத் தலைவர்.

தமிழில்: வ.ரங்காசாரி







பின்னூட்டம் (7)

Login / Create an account to add a comment / reply.

Saravana   3 years ago

I agree with author. MTI is a default condition of our brain. We require additional training and efforts to overcome the same. Not everyone can afford for that training and effort . What those peoples need to do? That's what the author mentioned here. Those who has a real need like who works predominantly with foreigners and can afford that training and efforts, it make sense and please go ahead. We agree, tolerate and even encourage if some outsiders learn and speak our mother tongue improperly. The same way people in UK and US are seeing us (my professional experience) In our society, English is not only used as a language for communication, it also used to measure a person. Even skilled people (some other skill) got de motivated and get into inferiotic complex if they can't cope with it. Author's point of view will be a good solution to this problem. Note to Sasikumar: I am able to understand those MP's speeches. Most importantly, I am able to understand that's how it also can be. So I didnt find anything wrong in it. - Saravana...

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Sasikumar T   3 years ago

Disagree with author, I feel , whatever language we learn to speak , we should try to speak as close as to Native language. But in Indian union , we speak English as we wish/like... ( we don't even care) when we work with foreigners , we could literally see that how bad our English pronunciations and how difficult for them to understand us first time clearly. So there's nothing wrong in teaching proper English to our children. Example : TMC MP ,Ms.Mahua Moitra parliamentary speeches go viral online and attracts/reaches many Indians than many of her peers (eg:Tamil Nadu MP's English speech). Thanks.

Reply 0 3

Sivasankaran somaskanthan   3 years ago

// I feel , whatever language we learn to speak , we should try to speak as close as to Native language.// I appreciate your aspiration . You might achieve this already or wish you to achieve. But we can't make it common goal for all Indians. Especially setting this goal to school students is unnecessary. There are lot of skills . Every person will have their own interest. I agree learning English should be a common goal for all students. Like learning basic mathematical skills. Individual can choose which skill to specialize. As a student my friend wanted to spend more time on history of science and science itself. now he is working Taiwan. He is so successful and still he has Mother Tongue Influence. If someone's business is to deal with American, he could spend some time to hone his pronunciation skill. This is mere specialization, any one can work on it if they feel it is necessary in near future or later . //how difficult for them to understand us first time clearly// We should try as much as possible to pronounce as intelligible as possible.

Reply 0 0

Sivasankaran somaskanthan   3 years ago

your argument is similar to argument of Hindi as compulsory subject to all school students. Their one of reason is that student might go to North India to work so Hindi is useful. My reply is if someone need to deal with Hindi speaking, they could learn around that time. Though I encourage student who learns Hindi as extra curricular activity. it is a specialization. Each individual can work on their interest. ------------------------- Even in software development / IT Infra / InfoSec fields, there are lot of technical persons do good in their job with mother Tongue Influence. At the same time I know lot of others who has good pronunciation / communication skill doing good in their management or non-technical roles. -------------------------------- If you think management roles are superior to technical roles, and so to climb up the corporate ladder accurate English without MTI is necessary. I disagree. I don't believe in hierarchies. And I know lot of Non English speakers with their Mother tongue Influence working in management roles including COO, CEO, CTO roles. I know English without MTI is advantage. But to succeed in life it is not necessary. Someone with other advantages will make use of it and succeed in their career. Choosing which tool/skill to achieve success is needed to be decided by individuals

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

செல்வம்   3 years ago

தமிழக வானிலை ஆர்வலர்கள் சிலர் ஆங்கிலத்தில் எழுதும்போதுகூட veppa salana rains என்றே எழுதுவது நல்ல எடுத்துக்காட்டு. எம். டி. ஐ இல்லாமல் பேசுவதைத்தான் பீட்டர் விடுவது என்று தமிழில் சொல்கிறார்கள் போலும்

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Prabhu   3 years ago

யோகேந்திர யாதவ் சொல்வது ஏற்றுக் கொள்ளவே முடியாதது. மேலும் மொழியின் அரசியலை சார்ந்த எண்ணம் இது. கூர்ந்து பார்த்தால், கிரிக்கெட்டிற்கும் கில்லி தாண்டல் விளையாட்டிற்கும் நிறைய தொடர்பு இருப்பதாக தோன்றுவதால் முன்னதை பின்னதாக மாற்றி விடலாமா? ஒன்றை கற்றுக் கொள்ளும் போது, சிரத்தையுடன் மனம் ஒன்றி கற்றுக் கொள்ள வேண்டும். இன்னொரு விடயம் இருக்கிறது. ஒருமுறை ஏ.கே.ராமானுஜம் சொன்னார். இந்தியர்கள் யாரும் ஆங்கிலத்தை எழுத முடியாது. ஆங்கிலத்தில் வேண்டுமானால் எழுதலாம். Writing English is different from writing in English. இளம் சிறார்களுக்கு ஒரு பொதுக் குறியீடான General Indian English என்பதை கற்றுக் கொடுக்க முடியும். இந்தியாவின் ஆங்கில அச்சு மற்றும் காணொளி ஊடகங்கள் இதை ஓரளவு நன்றாகவே செய்து வருகின்றன. தொள்ளாயிரத்து எழுபதுகளில் ஹைதராபாத்தில் உள்ள இந்திய நடுவண் அரசின் ஆங்கில மற்றும் பிறநாட்டு மொழிகளுக்கான மையத்தின் இயக்குனர் Bansal அவர்களும் General Indian English என்ற ஒன்றை மையமாகக் கொண்டு ஆங்கிலம் கற்பித்தல் இந்தியாவில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதான சீரிய முயற்சிகள் பலவற்றை மேற்கொண்டார். இதுவெல்லாம் எதற்காகவென்றால், ஒரு common understandability இந்தியா முழுக்க ஆங்கில மொழியைக் குறித்து ஏற்படுத்துவதற்காக. பரத நாட்டியத்தை முடிந்த வரை ஒழுங்காக ஆடலாம்; நடுநடுவே லோக்கலாகவும் ஆடலாம் என்றால், ஏற்றுக் கொள்வார்களா? உண்மையில், தொண்ணூறுகளின் பிந்தைய வருடங்களில் உலக அளவில் ஆங்கிலம் வணிகத்திற்கான மொழியாக பிரம்மாண்டம் காண்பிக்கிறது. அதை ஒழுங்காக, குறைந்தபட்சம் General Indian English, கற்றுக்கொள்ள ஆக வேண்டியதை பார்ப்பதை விட்டுவிட்டு, தமிங்கலம் திமிங்கலம் என்று கதையடிக்காமல் இருப்பது நல்லது. (பன்சால் நிலை தோற்றுப் போகவில்லை. அதில் சில குறைகள் உள்ளன. இருப்பினும் இந்தியர்கள் பேசும் எழுதும் ஆங்கிலத்தில், அவர்கள் இந்தியாவில் எங்கு வசிப்பினும், ஒரு பொதுவான "மண்வாசம்" உள்ளது. ஆனால், இது தமிங்கலம் - தெலுங்கலம் என்ற வகையில் வராது.) இந்தக் கட்டுரையின் சாரம் மொழியியலுக்கானது. வெறுமனே சல்லியடிக்க வேண்டாம்.

Reply 6 1

Sivasankaran somaskanthan   3 years ago

Untill the communication is intelligible nothing wrong in having Mother tongue influence. I agree Indians can't write English. I will say Indians don't need to care about it. Voluntarily if anyone take training to speak without mother tongue influence is fine. But it is not needed for all. Any one can succeed in technical roles and non-technical roles in Corporates with their own set of skills. English without MTI might be part of someone's skill set. but it is not mandatory for all

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

சைக்கோபாத்எதிர்க்கட்சிகள்பத்திரிகையாளர்கள் சங்கம்தன்பாத்க்ரூடாயில்கருங்கடல் மோஸ்க்வாசின்னச் சின்ன எலும்புவடிவமைப்புக் கொள்கைடெல்லி வாழ்க்கைதிருமாவளவன்ஊபர்ஒரு நிமிடம் யோசியுங்கள் முதல்வரே!கோணங்கள்இன்டியா கூட்டணி புவியியலும்கலைஞர் தெற்கிலிருந்து ஒரு சூரியன்கடவுச்சொல்நைரேரேவின் விழுமியங்களும்சளிலலிதா ராம் கட்டுரைவி.பி.சிங்: ஓர் அறிமுகம்அரசியல் அடைக்கலம்வாக்காளர் பட்டியல்சாலிகிராமம்லடாக்அணைப் பாதுகாப்பு மசோதா என்றால் என்ன?ஜி.முராரிஎருமைகள்மோடி - அமித் ஷாவுக்குப் பிறகு பாஜகவில் யார்?இரண்டாம் கட்டம்: பாஜகவுக்குப் பிரச்சினைகள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!