கட்டுரை, வாழ்வியல், இரு உலகங்கள் 9 நிமிட வாசிப்பு

ஆண்களை இப்படி அலையவிடலாமா?

அராத்து
20 Nov 2021, 5:30 am
6

ரு உலகங்கள். இது ஆணும் பெண்ணும் மாறிமாறி தங்கள் அபிலாஷைகளை, புகார்களை, எதிர்பார்ப்புகளை, குற்றச்சாட்டுக்களை வெளிப்படையாக அப்படியே முன்வைக்கும் தொடர். அரசியல் சரித்தன்மைக்கோ, சமநிலை உணர்வுக்கோ இதில் இடமில்லை. ஆண்களைப் பெண்களும், பெண்களை ஆண்களும் புரிந்துகொள்ள ஏதுவாக அவரவரைச் சுற்றியுள்ள உலகத்தை அப்படியே பேசுகிறது. பின்னர், விவாதங்கள், உரையாடல்கள் நடக்கும். பெண்களின் சார்பில் அனுஷா எழுதினார். இப்போது ஆண்களின் சார்பில், அராத்து எழுதத் தொடங்குகிறார். 

 

லகில் பல பிரச்சினைகளுக்குத் தீர்வே கிடையாது. பிரச்சினைகளைத் தெளிவாகப் புரிந்து கொள்வதுதான் சில விஷயங்களில் தீர்வு.

ரயில் வருகையில் எதிரே தண்டவாளத்தின் மீது நடப்பேன். அது மோதினாலும் சாகக்கூடாது என்று தீர்வை நாம் சிந்திக்க முடியுமா? ரயிலில் தூங்கிக்கொண்டு ஜாலியாகப் பயணிக்கலாம். ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து இளையராஜா மகன் யுவன் போட்ட பாட்டுக்களை கேட்டுக்கொண்டே பயணிக்கலாம். அதை விட்டுவிட்டு அது ஓடும் தண்டவாளத்தில் படுப்பதோ அல்லது அது வேகமாக ஓடிக்கொண்டு இருக்கையில் அதில் ஏற முயற்சிப்பதோ எவ்வளவு முட்டாள்த்தனம்? அதற்கெல்லாம் ஒரு தீர்வு வேண்டும் என்று மெனக்கெடுவோமா?

அப்படித்தான் ஆண் பெண் உறவுச்சிக்கலுக்குத் தீர்வு காண முற்படுவதும். அதற்குத் தீர்வே இல்லாததால்தான் அது காலாகாலமாக சுவாரசியமான விஷயமாக இருந்துவருகிறது.

ஆண் வேறு பெண் வேறு

நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆணும் பெண்ணும் ஒன்றல்ல. அதாவது மனிதர்கள் என்ற ஒரே இனத்தில் அடக்கக் கூடாது. அப்படியென்றால் - ஆடு, மாடு போன்ற உயிரினங்களில்  ஆண் - பெண் இருக்கின்றன. அவற்றைப் பொதுவாக நாம் ஆடு, மாடு என்றே அழைக்கிறோம். ஏன் மனிதர்களையும் அப்படி அழைக்கக் கூடாது என்று கேள்வி எழலாம். இந்த ஆறாம் அறிவு, சிந்தனை இப்படி எல்லாம் மனித இனத்தில்தானே பேசுகிறோம். அதனால்தான் சொல்கிறேன், சிந்திக்கத் தெரிந்த ஆணும், பெண்ணும் வெவ்வேறு உயிரினங்கள். 

ஆண் - பெண் இவர்களுக்கு இடையே உடல்ரீதியாக சில பொதுவான அம்சங்கள் உள்ளன. அவ்வளவுதான். இவர்கள் இருவரும் இணைந்து செயல்பட்டால்தான் மானுட குலம் நீடிக்கும் என இயற்கை விடுத்த சவாலை எதிர்கொண்டு இவ்வளவு காலமும் சேர்ந்து வாழ முயற்சித்துவருகிறது ஆண் இனமும் பெண் இனமும்.

இந்தத் தொடரில், தனிப்பட்ட முறையில் என்னுடைய நடுநிலைத்தன்மை, நான் கற்றுணர்ந்து பண்பட்டது, என்னுடைய நாகரிகம் போன்றவற்றைக் கைவிட்டு, ஒரு 'ரா'வான ஆணாகப் பேசலாம் என முடிவெடுத்து இருக்கிறேன். இதுவும் ஒரு விளையாட்டுதான். புதிர்த்தன்மையை இன்னும் கொஞ்சம் அருகில் சென்று பார்க்கும் ஆர்வம்தான்.

ஆண்களின் அழைப்பு

காதல், காமம், புணர்ச்சி இருபாலருக்கும் பொதுவானதுதான் என்றாலும், அதற்கு முதல் அடியை எடுத்துவைப்பதும், தன் இணையைக் கவருவதற்கு முயற்சிப்பதும் பெரும்பாலும் ஆண் இனமாகத்தான் இருந்தாக வேண்டியிருக்கிறது.

ஒருமுறை சாரு நிவேதிதாவுடன் இதைப்பற்றி வருத்தப்பட்டு, பொதுவான ஆண்களின் பிரதிநிதியாக, ஒரு அறச்சீற்றத்துடன் ஆக்ரோஷமாகக் கேட்டேன்.

“ஏன் சாரு எப்பவும் ஆம்பளை மட்டுமே அலைஞ்சானாக இருக்க வேண்டும்? அவளுக்கும்தானே ஜாலி? அவ ஏன் டிரை பண்ண மாட்டேங்கிறா? அதனாலதான் எப்பவும் ஆம்பளைக்குக் கெட்ட பேரு?”

சாரு சப்பையாகச் சொன்னார் - “அதெல்லாம் ஒண்ணும் இல்ல. அதான் இயற்கை. நாய்லகூட ஆம்பளை நாய்தான் பொம்பளை நாயை மோந்து பாத்துட்டு அலையணும்.

ஆக, இயற்கையே ஆண்களை வஞ்சித்துவிட்டது என்கிறேன். பெண்கள், ஆர்வமாக ஆண்களை நாடி வந்தால் ஆண் ஏன் அலையப்போகிறான்? ஆணும் பெண்ணும் கிட்டத்தட்ட சரிசமமான அளவில் இருக்க, எப்போதும் ஆண்தான் பெண்ணைத் தேடி அலைய வேண்டியிருக்கிறது. அவளுக்கும் அதே தேவை இருப்பினும். அவர்கள் அமுக்கமாக இருக்கும்படி இயற்கை அவர்களுக்கு ஒரு வசதி செய்து கொடுத்திருக்கிறது. “அண்ட் ஹி செட்  யெஸ்” என்று எங்காவது கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?

முறையான திருமண உறவிற்கே உலகம் முழுக்க இதுதான் நிலைமை. திருமண உறவல்லாத உறவை நினைத்துப் பாருங்கள்.

ஆக, இருவருக்கும் உறவு தேவை என்றாலும், பெண்ணைத் தேடி அலையும் இடத்தில் ஆண் இருப்பதால் அவனுக்கு இயற்கையிலேயே ஒரு குற்றவுணர்வு இருக்கிறது. செக்ஸ் உறவு மட்டும் என்றில்லை. உடல்ரீதியான எந்த உறவுக்கும் வாய்ப்பில்லாத நட்புரீதியிலான உறவுக்கும் ஒரு ஆண்தான் முதல் அடி எடுத்துவைக்க வேண்டியிருக்கிறது.

"இல்லை... அப்படி எல்லாம் இல்லை... நாங்களெல்லாம் தானாகவே ஒரு 'நல்ல ஆணி'டம் நட்புக்கரம் நீட்டுவோம்" என நவீன பெண்கள் சொல்லலாம். விதி விலக்குகளைப் பற்றி நான் சொல்லவில்லை. பெரும்பான்மையைப் பற்றிப் பேசுகிறேன். அதேபோல பெண்கள் இலக்கணத்தில், 'நல்ல ஆண்'  இருப்பது போல 'நல்ல பெண்' என்பது ஆண்கள் அகராதியிலேயே கிடையாது தெரியுமா?

ஆண்கள் அகராதியில் 'சகோதரி', 'சைக்கோ' என்ற இரண்டே கேட்டகிரிதான். இதில் சைக்கோ கேட்டகிரி பெண் அழகாகவும், செக்ஸியாகவும் இருப்பாள். இந்த சைக்கோ கேட்டகிரி பெண்தான் கேர்ள் ஃபிரண்ட், காதலி, லிவ் இன் மற்றும் மனைவியாக மாறுகிறாள். 

இன்றைய  2கே கிட்ஸில் 'ஸ்வீட் சிஸ்டர்', 'செக்ஸி சிஸ்டர்' என்றெல்லாம் போய்க்கொண்டு இருக்கிறார்கள். இப்போது அதற்குள் போக வேண்டாம்.

மானுட குல நீட்சிக்காகத்தானே போராடுகிறான்?

ஒரு பெண்ணை அணுகுவதற்கும், அவளுடன் பேசுவதற்கும், அவளுடன் ஓர் உறவை உருவாக்குவதற்கும், ஓர் ஆண் நாய்போல அலைகிறான். முதல் அடியை வைத்துக்கொண்டே இருக்கிறான். எத்தனை முறைதான் அவன் முதல் அடியை வைத்து செருப்படி வாங்குவான்? ஒவ்வொரு முறையும் அவனுக்குள் உண்டாகும் தாழ்வுணர்வும், குற்றவுணர்வும் கணக்கிலடங்கா. இதைப் பற்றி எந்த உலக இலக்கியமும் பேசியதில்லை. உண்மையில் ஒவ்வொரு ஆணும் நாய்போலவே உணருவான். அவன் என்ன பிச்சையா எடுக்கிறான்? மானுட குல நீட்சிக்காகத்தானே அவனும் போராடுகிறான்? என்னமோ உங்களுக்குச் சம்மந்தமே இல்லாதது போல, அவனைக் கண்டுகொள்ளாமல் இருப்பது... அவனை அலையவிட்டு... பிறகு ஒத்துக்கொள்வது... அவனை மண்டியிட வைத்துப்பின் மனம் மாறுவது... அவனுக்கு உலகில் கிடைப்பதற்கறிய ஒன்றான விஷயம் போல உங்களை முன்னிறுத்தி, பின் போனால் போகட்டும் என 'ஐ டூ லவ் யூ' சொல்வது - இதைப் போல எல்லாம் கூத்தடித்து ஒரு உறவுக்குள் நுழைந்தால் அது விளங்குமா?

உறவு என்பது இயல்பாக அமைய வேண்டும் அல்லவா? சிரமப்பட்டு வாங்கிய ஒரு கார்போலவோ அல்லது பைக்போலவோ இருந்தால் எப்படி இருக்கும்? அந்த காரோ பைக்கோ நமக்குச் சொந்தம் என்ற திமிர்த்தனம் வரும் அல்லவா? அதுபோலதான் பெரும்பாலான உறவுகள் மலர்கின்றன.

சிரமப்பட்டு வாங்கிய கார் அல்லது பைக்கை முதல் சில நாட்கள் பதமாக துடைத்து வைப்பது, பெருமையாக நண்பர்களிடம் காட்டுவது என்று கழியும். அது இனிமே நமக்குத்தான் என்ற நிலை வரும்போது அதன் மேல் கவர்ச்சி குறையும். அதிலும் ஃப்ரீ சர்வீஸ் முடிந்து, பெய்ட் சர்வீஸ் வரும்போது ஒரு கொலை வெறி வரும் பாருங்கள்.

அதை விடுங்கள். இந்த காரோ பைக்கோ, வழியில் நின்று தொலைந்தால் எப்படி இருக்கும் ?

நான் உனக்குக் கிடைப்பதற்கரிய ஒரு பொருள் என்று தன்னை முன்னிறுத்திக்கொண்டு, ஒரு ஆணை அலையவிட்டு, வெறுப்பேற்றி, தன் மதிப்பை உயர்த்திக்கொள்வதாக நினைத்து, தட்டிக்கழித்து, சில காலம் கழித்து உறவுக்கு ஒப்புக்கொள்ளும் எந்த ஒரு பெண்ணின் நிலைமையும் கார் அல்லது பைக் போலத்தான் ஆகிறது.

தான் ஒரு கமாடிட்டி அல்ல என்பதை ஒரு பெண் உணர வேண்டும். தன் மதிப்பைக் கூட்டிக்கொள்ள அவள் தன் உடல் அழகிலும், பழகும் விதத்திலும், அறிவுக்கூர்மையிலும், அன்றாட வாழ்வில் பணம் சம்பாதிக்கும் முறையிலும்தான் தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டுமே அன்றி, “நான் என்னையே உனக்குக் கொடுக்கிறேன்” என்ற ரொமாண்டிசைஷேன் இனி வேலைக்காகாது.

நீ உன்னையே எனக்குக் கொடுத்தால் - நீ ஒரு கமாடிட்டிதான்.

உன்னை நான் அடைந்த பின்பு - நீ என் அடிமைதான்.

(பேசுவோம்..)

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
அராத்து

அராத்து, தமிழ் எழுத்தாளர். டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றுகிறார். 'பிரேக் அப் குறுங்கதைகள்', 'ஓப்பன் பண்ணா' உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.


1

2



1


பின்னூட்டம் (6)

Login / Create an account to add a comment / reply.

Tamilnadan   3 years ago

<< பெண்கள், ஆர்வமாக ஆண்களை நாடி வந்தால் ஆண் ஏன் அலையப்போகிறான்?>> இன்னா உலகமகா பிரச்சனை-டா சாமீ.....! உம்மை மாதிரியே எல்லா ஆண்களையும் 'அலந்து கொண்டிருப்பதாக' நினைக்க வேண்டாம். உங்க ஊரில் உம்போன்ற ஆளுங்க அலைவதுக்கு காரணம், பேராசை, கொழுப்பு, அப்புறம் சட்டம் ரொம்ப வீக். அடிக்க வேண்டிய இடத்தில அடித்தால் அலைகிற நாய்கள் அடங்கிவிடும். (மாறாக, பெண்ணுக்கு சமூக, உடலியல் பாதிப்புகள் அதிகம்)

Reply 0 9

Login / Create an account to add a comment / reply.

Rajaguru P   3 years ago

Arumayana pathivu. ஆண்கள் அகராதியில் 'சகோதரி', 'சைக்கோ' என்ற இரண்டே கேட்டகிரிதான்... mika unmayana varikal

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Kannan   3 years ago

interesting but a very conservative and thoughtless view point. women behave the way author has described because of all the restrictions men have put on them !! they have to cautious and careful... and to blame them without acknowledging the wrongs done (still being done) to them is not right... and even after they have been careful they still fall into the trap men has set up for them and fall prey.. pen yen adimaiannal precisely talks on this... and Periyaar in his seminal work Ini Varum UIlagam, clearly says that the institution of marriage would disappear and men and women would come together more for intellectual purpose rather than procreation... this is already happening in scandic countries... lot has changed in rest of the world... perhaps asia is still behind... in europe and north europe this has changed completely due to equality between sexes... so, Key is equality. till then view points like these like the ones we see in Tamil movies !!! even if we were to take the authors view point, are men and women equal in the indian society? can women take independent decisions without any interference? point is men have not grown up and kept with the times... not now but through the past many millennia !!! @samas @arunchol

Reply 8 0

Login / Create an account to add a comment / reply.

Raja   3 years ago

உங்களின் பதிவை படித்த பிறகு ஏன் இந்த அளவு வேறு எந்த எண்ணமும் இல்லாமல் தன்னை தானே மிகவும் வேதனைப்படுத்தி கொண்டு அப்போது அலைந்தோம் என்று பலரும் நினைத்து இருக்கலாம். அதே வேளையில் இன்னொரு எண்ணமும் எழுந்தது. உருகி உருகி ஏங்கும் ஆண்கள் அழகிகளுக்காக தானே அனைத்தும் செய்து மன்றாடுகிறார்கள். இதில் பாசம்,பரிவு, நேசம் என்றெல்லாம் எதுவும் இருக்கிறதா என்ன!அதென்ன பாசமும் நேசமும் அழகான பெண்களை கண்டால் மட்டும் பொங்குகிறது! தவறு சுற்றலில் விடும் அந்த அழகான பெண்களிடமும் உள்ளது. அதே வேளையில் மாருதி காரும் பென்ஸும் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருக்கும் போது பென்ஸ் கிடைத்து விடாதா..எப்படியாவது பென்ஸ் கிடைத்து விட்டால் எல்லோரிடமும் பெருமையடித்து கொள்ளலாமே என்ற எண்ணமே அனைத்து வலிகளுக்கும் காரணம். பென்ஸின் சொகுசை விட பென்ஸ் என்னிடம் இருக்கிறது பார் என்று காட்ட வேண்டும் என்ற எண்ணம்தான் முதல் பொறி! அதன் தொடர்ச்சியே அடுத்தடுத்து கொண்டு போய் விடுகிறது. தவறு தேர்ந்து எடுப்பவரின் மீதா அல்லது பென்ஸ் காரின் மீதா? மனித மனம் மிகவும் சிக்கல் ஆனது. அனைத்து சிக்கல்களுக்கும் வேதனைகளுக்கும் "நான்" என்ற புள்ளியே அடிப்படை என்று எனக்கு தோன்றுகிறது.  

Reply 12 0

Login / Create an account to add a comment / reply.

Raja   3 years ago

அதிரடியான பதிவு. பதிவை பார்த்தவுடன் வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸில் வைத்து விட்டேன். எதிர்பார்த்தது போல் விசாரிப்புகள். "செம", "இதை காலேஜ் படிக்கும் போது யாராவது எழுதி இருக்க கூடாதா", "எப்படியெல்லாம்"..என்று அங்கலாய்ப்புகள். நீங்கள் சொல்வது சரியா தவறா என்று இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆனால் எழுதிய சங்கதி எதிர்ப்பார்த்த விளைவை எனக்குள் ஏற்படுத்தி விட்டது. 

Reply 3 1

Login / Create an account to add a comment / reply.

Muthuramalingam A   3 years ago

//செக்ஸ் உறவு மட்டும் என்றில்லை. உடல்ரீதியான எந்த உறவுக்கும் வாய்ப்பில்லாத நட்புரீதியிலான உறவுக்கும் ஒரு ஆண்தான் முதல் அடி எடுத்துவைக்க வேண்டியிருக்கிறது.// கை தட்டல்கள்

Reply 4 1

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

உலக அமைதிக்கான நோபல் பரிசு – 2022வர்ண ஒழுங்குஅனைத்துமே கறுப்பு அல்லது வெள்ளை!வாசகர் கடிதம்சித்தராமய்யா அருஞ்சொல்அருஞ்சொல் தலையங்கம் சென்னை புத்தகக்காட்சிமுன்பருவக் கல்விநியூட்ரினோஉரைகள்நவீன ஓவியம் அறிமுகம்சமஸ் கட்டுரை ராஜாஜிசங்க காலம்தேர்தல் ஆணையர்கள்பிராந்தியச் சமநிலை அறிவிப்புக்கு வேண்டும் முன்னுரிபத்திரிகை ஆசிரியர்பைஜூஸ் ஊழியர்கள்ஜே.எம்.கூட்ஸிகி.வீரமணிஅஜித் தோவல்ஹைதராபாத்தங்க ஜெயராமன் கட்டுரைசமஸ்கீழத் தஞ்சையும் கொஞ்சம் வாழட்டுமே!தேர்தல் அறிக்கைதேர்தல் ஜனநாயகம்சீர்த்திருத்தங்கள்அஞ்சலிக் குறிப்புவேலையின் தரம்திரிக்குறள்விற்க முடியாத நிலை!

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!