இன்னொரு குரல் 5 நிமிட வாசிப்பு

தமிழில் மருத்துவக் கல்வி

வாசகர்கள்
02 Nov 2021, 5:00 am
0

தமிழில் தீவிரமான விவாதங்களை வளர்க்கும் பணியில் தன்னையும் ஈடுபடுத்திக்கொள்கிறது ‘அருஞ்சொல்’. அதனால்தான் தலையங்கம், கட்டுரை ஆகியவற்றுக்கு இணையான முக்கியத்துவத்தை ‘இன்னொரு குரல்’ பகுதிக்கு அளித்து, இணையதளத்தின் பிரதான இடத்திலேயே அதற்கு இடமும் அளிக்கிறது. ‘அருஞ்சொல்’ இதழை வாசிப்பவர்கள் வெறும் வாசகர்கள் மட்டும் இல்லை; எழுத்தாளர்கள், அறிஞர்கள், பத்திரிகையாளர்கள், கொள்கை வகுப்பாளர்களான அரசியலர்கள் ¬– அதிகாரிகள், செயல்பாட்டாளர்கள், ஆசிரியர்கள் என்று பல்வேறு துறை ஆளுமைகளும் ‘அருஞ்சொல்’லை வாசிக்கிறார்கள் என்பதை அறிந்திருக்கிறோம். ஆகையால், கட்டுரைகளை வாசிப்பவர்கள் ‘எனக்குப் பிடிக்கிறது அல்லது பிடிக்கவில்லை’, ‘நான் இதை ஆதரிக்கிறேன் அல்லது எதிர்க்கிறேன்’ என்பதுபோல ஓரிரு வரிகளில் தங்கள் கருத்துகளை எழுதாமல் விரிவாக எழுதிட வேண்டுகிறோம். அப்படி எழுதப்படும் கருத்துகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை ‘இன்னொரு குரல்’ பகுதியில் வெளியாகும். கருத்துகளைப் பின்னூட்டப் பகுதியில் எழுதிடுங்கள் அல்லது aruncholeditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடுங்கள். தயைகூர்ந்து உங்கள் பெயருடன், ஊர் பெயரையும் குறிப்பிடுங்கள்

@ உத்தர பிரதேசம்: எவராலும் ஆள முடியாத பிரதேசம்

ராமச்சந்திர குஹாவின் உத்தர பிரதேசத்தைப் பிரித்தல் குறித்த கட்டுரை மிக முக்கியமானது. சரியான காலகட்டத்தில் வரலாற்றில் நினைவுக்கூரத்தக்கது. உத்தர பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்களின் வளர்ச்சி இன்னும் தற்காலத்திற்கு ஏற்றதாக இல்லாமல் இருப்பதும், அங்கிருந்தே பெரும்பான்மையானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியாளர்களாய் மாறுவதும் ஆணாதிக்க இந்துத்துவச் சிந்தனைகள் ஓங்கி இருப்பதற்கான சூழலையே  மிகையாக்கி வைத்திருக்கின்றன. தமிழகம் போன்ற முன்னேறிய மாநிலங்களிலிருந்துப் பெறப்பட்ட வரி வருமானத்தின் பெரும் பகுதி உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு அதிகப்படியாகத் தரப்பட்டாலும், அது முன்னேற முடியாத அளவுக்கு அதன் ஆட்சியாளர்கள் பிற்போக்கானவர்களாக இருக்கிறார்கள். சிறிய மாநிலங்களாக அது பிரிக்கப்படும்போது அதன் வளர்ச்சி சாத்தியம் என்பது கண்கூடு.

- யாழன் ஆதி, கவிஞர்

@ இளம் சாவர்க்கர் 1883-1906

இந்தக் கட்டுரை என்னை 2019 கேரளா இலக்கிய விழா நினைவுகளுக்கு அழைத்துச்செல்கிறது. சாவர்க்கரைப் பற்றிய அரங்கில் நூலாசிரியர்களுடன் மனு எஸ்.பிள்ளை நிகழ்த்திய உரையாடலுக்குப் பின் எழுந்த முதல் கேள்வி, "இது சாவர்க்கருக்கு வெள்ளை அடித்து ஒரு சுதந்திரப் போராட்ட வீரராக நிறுவ முயலும் நிகழ்ச்சியா?" தான் நம்பும் விஷயங்களுக்கும் உண்மைக்குமுள்ள தூரம் தெளிந்த பின் அதை ஏற்க மறுத்து அப்பெரும் கூட்டம் ஆர்ப்பரித்தது  (காணொளி இணையத்தில் உள்ளது). அது தமிழ்ச் சூழலில் நிகழாதிருப்பதாக. சாவர்க்கர் இந்துத்துவத்திற்கான அடிப்படைக் கட்டமைப்பில் செயலாற்றியிருந்தாலும், அவருள்ளும் ஆதிக்கத்திற்கு எதிரான நெருப்பெரிந்தது. சாவர்க்கரை மன்னிப்புக் கடிதம் எழுதியவராக மட்டும் குறுக்கி நிறுவுவோம் என்றால் அது வரலாற்றில் அத்தனிமனிதனின் பங்களிப்புக்கு நாம் செய்யும் துரோகம்; அதை அறிவியக்கத்தினர் செய்யலாகாது.

- விஜயகுமார்

@ ரத்த அழுத்தமும் பார்வையைப் பறிக்கும்

மருத்துவர் கு.கணேசனின் கட்டுரையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மருத்துவக் கலைச் சொற்கள் வியப்பைத் தருகின்றன. விழித்திரை, ஒளிக்குவியம் எனும் அருஞ்சொற்கள் அப்படியே பொருந்துகின்றன. விழித்திரை வலுவிழப்பு நோய், நுண் இரத்தக் குழாய்கள், புறக் கழிவுக் கசிவு (exudate ஐ அனைத்து விதத்திலும் சுட்டும் ஒரு பெயர்!), விழித்திரை விலகல், குறுதுளை ஒளி சோதனை, ஒளிக்குவிய நோய், ஒளிக்குவிய வீக்கம் என்று எத்தனை அருஞ்சொற்கள்!

விழிப்படிகத் திரவம் என்பதற்கு, ‘மண்ணில் விழுவதற்கு முன் மழைத்துளிபோல்’ என்ற உவமை எப்படி மருத்துவர் கணேசனுக்குத் தோன்றியது என்று  பிரமிக்கிறேன். 

நோய் அறிகுறிகளை மருத்துவர் குறிப்பிட்ட விதமும் மிகச் சிறப்பு!

இப்படி மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவது மிகப் பெரிய சேவை!

தமிழ்நாட்டில் மக்களுக்கு நோய் தொடர்பிலான விழிப்புணர்வை உருவாக்குவதோடு, மருத்துவர்களுக்கும் மருத்துவத் துறை தொடர்பான புதிய முன்னேற்றங்களையும், கலைச்சொற்களையும் அறிமுகப்படுத்துவதாக மருத்துவர் கணேசன் எழுத்துகள் அமைகின்றன.    

- டாக்டர் வித்யா சங்கரி, ஆத்தூர்

@ உங்களுடைய 'டு டூ லிஸ்ட்' தயாரா?

’டு டூ லிஸ்ட்’ தயாரித்து பணியாற்றுவதின் பயனை உணர்ந்தவனாய் இந்தக் கட்டுரையை வாசித்தேன். அந்தப் பழக்கத்தை இன்னும் வலுப்படுத்திக்கொள்ள இக்கட்டுரை உதவும். நன்றி.

- என்.அல்மாஸ் அஹமத்

@ எழுதுவது எப்படி? சொல்கிறார்கள் உலக எழுத்தாளர்கள்!

உலகின் பெரும் எழுத்தாளர்களின் கருத்துக்களை கட்டுரையில் கொண்டுவந்ததின் மூலம் அவர்களோடு உரையாடுவது போன்ற உணர்வு ஏற்பட்டது.

- பி.சரவணன்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.







அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

அதர்மம்தாக்குதல்கமலா ஹாரிஸ் அருஞ்சொல்ஈறுகள்மதசார்பின்மைகலை அறிவியல் கல்லூரிகள்மலிஹா லோதிசோராகணக்குகளும் கற்பனையும்தொழில்நுட்பப் புரட்சிமத்திய பிரதேசம்சத்தியமங்கலம் திருமூர்த்திமன்னிப்புபி.சி.கந்தூரிபால்ய விவாகம்நீதிபதி சந்துருகாங்கோ நதிடெல்லி பச்சையை நம்மூருக்குக் கொண்டுவர முடியாதா?துக்ளக் ஆண்டு விழாநீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்குற்றவியல் வழக்குகள்பிளவுசீனாவைச் சுற்றிவரும் வதந்திகோட்சேடயபடிக் நியூரோபதிகர்நாடக தேர்தல்காணொலிஎண்ணெய்ச் சுரப்பிகள்தேவாலயம்செலவுக் குறைப்பு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!