கட்டுரை, அரசியல், விவசாயம், பொருளாதாரம், சர்வதேசம் 2 நிமிட வாசிப்பு
மோடியின் அமெரிக்கப் பயணத்தின் பின்விளைவுகள்
சென்ற ஆண்டு மோடி அமெரிக்கப் பயணத்தின் பின்னணியில் இரண்டு முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதையும், அது இந்திய உழவர்களை எப்படிப் பாதிக்கும் என்பதையும் பற்றி ஒரு கட்டுரையாக எழுதியிருந்தேன்.
அதில் முதலாவது, ஆப்பிள் இறக்குமதிக்கான வரி 70%லிருந்து 50% ஆகக் குறைக்கப்பட்டது. கடந்த இரண்டு வருடங்களாக ஆப்பிளின் விலை வீழ்ச்சியைத் தொடர்ந்து, ஆப்பிள் உற்பத்தியாளர்கள், இறக்குமதி வரியை அதிகரிக்க வேண்டுகோள் வைத்திருந்தார்கள். மாறாக, மோடியின் அமெரிக்கப் பயணத்தின் பின்னணியில், ஆப்பிளுக்கான இறக்குமதி வரிக் குறைப்பு அமெரிக்க ஆப்பிள் உற்பத்தியாளர்களுக்குப் பேருதவியாக மாறியிருக்கிறது.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
கடந்த 6 மாதங்களில் அமெரிக்காவில் இருந்தது இந்தியாவுக்கு ஆப்பிள் ஏற்றுமதி 160% அதிகரித்திருக்கிறது. இந்த அதிகரிப்பைச் சியாட்டில் நகர ஆப்பிள் உற்பத்தியாளர்கள் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடுசெய்து கொண்டாடினார்கள். அந்த நிகழ்வில், இந்தியாவின் கான்சல் ஜெனரலும் பங்கெடுத்துக்கொண்டதாகச் செய்திகள் கூறுகின்றன.
இதில் 2022 - 2023ஆம் ஆண்டு 1.3 மில்லியன் டாலர் மதிப்பு அளவில் இருந்த ஏற்றுமதி, இந்த ஆண்டு முதல் ஆறு மாதங்களில் 20 மில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்திருக்கிறது. வரும் ஆண்டில் இன்னும் ஏற்றுமதி அதிகரிக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.
இதை நான் ஜூன் மாதம் எழுதிய கட்டுரையிலேயே எச்சரித்திருந்தேன். இந்த ஆப்பிள் இறக்குமதியால், உள்ளூர் ஆப்பிள் விலை மேலும் சரியக்கூடும் என்பதுதான் இமாச்சல் பிரதேச மாநிலத்தின் ஆப்பிள் உற்பத்தியாளர்களின் கவலை. அது சரி நம் உழவர்கள் எப்படிப் போனால் யாருக்கு என்ன கவலை?
ஆப்பிள் கொள்முதலில் அண்மையில் அதானி குழுமம் சில ஆண்டுகளுக்கு முன்பு இறங்கியிருந்தது கூடுதல் செய்தி!
ஜூன் மாதம் எழுதிய கட்டுரை இது | மோடி பயணத்தின் பேசப்படாத கதைகள்
தொடர்புடைய கட்டுரைகள்
மோடி பயணத்தின் பேசப்படாத கதைகள்
ஜனநாயகம் கண்டுபிடிக்கப்பட்டது அமெரிக்காவில்!
காங்கேயம்: அறியப்படாத தொழில் நகரம்
ஒட்டுண்ணி முதலாளித்துவத்தின் புதிய முகம்
2
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.