கட்டுரை, சமஸ், ஆசிரியரிடமிருந்து... 1 நிமிட வாசிப்பு

சாருவுக்கு வாழ்த்துகள்

ஆசிரியர்
01 Sep 2022, 5:00 am
1

வாசகர்களோடு ஆசிரியர் பகிர்ந்துகொள்ளும் வகையில், ‘ஆசிரியரிடமிருந்து’ பகுதி வெளியிடப்படுகிறது. கூட்டங்கள், சமூகவலைதளங்கள் வழி ஆசிரியர் பகிர்ந்துகொள்ளும் குறிப்பிடத்தக்க செய்திகள் இங்கே இடம்பெறும்.

நவீன தமிழ் இலக்கியத்தை ஒரு சிறு கூட்டத்திலிருந்து பெரும் கூட்டத்துக்குக் கடத்தியதில் என் தலைமுறையில் நால்வருக்குப் பெரும் பங்கு உண்டு. ஜெயமோகன், சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன்.

இப்படிச் சொல்லும்போது ஏனையோர் பங்களிப்பை நான் மறுதலிக்கவில்லை. அதேபோல, தமிழ் இலக்கியத்தில் என்னுடைய ஆதர்ஷங்களும் இவர்கள் இல்லை. ஆனால், இலக்கியம் தெரியாதவர்களிடமும் இலக்கியம் குறித்த மதிப்பைக் கூட்டியவர்கள் இவர்கள். அதனாலேயே, 'தி இந்து' தமிழ் நாளிதழில் பணியாற்றுகையில் ஒவ்வொரு புத்தகக்காட்சி சிறப்பிதழ்களின் நிறைவு நாளிலும் இவர்கள் நால்வரைப் பற்றிய செய்திகளையும் கட்டாயமாகச் சேர்க்கச் சொல்வேன். "நமக்கு ரஜினி, கமல் பிடிக்கலாம்; பிடிக்காமல் போகலாம். இண்டஸ்ட்ரிக்கு அவர்கள் முக்கியம் என்பதை நினைவில் வையுங்கள்!" என்று சகாக்களிடம் சொல்வேன். எட்டாண்டுகளில் ஒருமுறைகூட இது தவறியது இல்லை. அடிதடிகள் தனிக்கதை. 

சாருவுக்கு இணையாக அபுனைவு எழுத்துகளை சுவாரஸ்யமாக எழுதும் ஒருவர் தமிழில் இன்று இல்லை என்பது என்னுடைய உறுதியான முடிவு. தமிழில் முழு காஸ்மோபாலிடன் எழுத்தாளர் என்றும் அவரையே நான் சொல்வேன். ஜெயமோகனின் 'விஷ்ணுபுரம் விருது' சாருவுக்கு அறிவிக்கப்பட்டிருப்பது ஒரு தாதா இன்னொரு தாதாவுக்கு கேக் அனுப்புவதான உணர்வை இன்று காலை தந்தது.

சாருவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! 


3

2





பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

J. Jayakumar   1 year ago

Unfortunately, none of them are recognized properly by authorities and society! But for the advent of internet, even their contributions would have gone unnoticed like so many Tamil literary stalwarts of yesteryears!

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

ஜாதிய ஏற்றத்தாழ்வுவெற்றிடத்தின் பாடல்கள்அ.குமரேசன்கோணங்கி விவகாரம்மூட்டு எலும்பு வளைவுதலைகாந்தியர்யோகேந்திர யாதவ் கட்டுரைஅரசு நிறுவனங்கள்ஊடகங்கள்Thirunavukkarasar Samas Interviewவழிபாடுகாமம்ஜப்பான் பிரதமரின் புதிய பொருளாதாரத் திட்ட அறிவிப்பகட்டற்ற நுகர்வுராஜஸ்தானில் காற்று இரண்டு பக்கமும் வீசுகிறது!கோலார்ரவிக்குமார் கட்டுரைஎழுதல்சந்தையில் சுவிசேஷம்எக்காளம் கூடாதுமொழியும் பிம்பங்களும்சமூக நீதிபொருளாதார வளர்ச்சி: உண்மையும் கனவும்அண்ணா நூலகம்தேசிய பயண அட்டைநிதிநிலை அறிக்கைவெற்றியின் சூத்திரம்ஒரு கடல்சமூகப் பிளவு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!