இன்னொரு குரல் 4 நிமிட வாசிப்பு

தனியார் பள்ளி ஆசிரியர்களை வஞ்சிக்கும் அரசு!

வாசகர்கள்
10 Feb 2022, 5:00 am
0

தமிழில் தீவிரமான விவாதங்களை வளர்க்கும் பணியில் தன்னையும் ஈடுபடுத்திக்கொள்கிறது ‘அருஞ்சொல்’. அதனால்தான் தலையங்கம், கட்டுரை ஆகியவற்றுக்கு இணையான முக்கியத்துவத்தை ‘இன்னொரு குரல்’ பகுதிக்கு அளித்து, இணையதளத்தின் பிரதான இடத்திலேயே அதற்கு இடமும் அளிக்கிறது. ‘அருஞ்சொல்’ இதழை வாசிப்பவர்கள் வெறும் வாசகர்கள் மட்டும் இல்லை; எழுத்தாளர்கள், அறிஞர்கள், பத்திரிகையாளர்கள், கொள்கை வகுப்பாளர்களான அரசியலர்கள் ¬– அதிகாரிகள், செயல்பாட்டாளர்கள், ஆசிரியர்கள் என்று பல்வேறு துறை ஆளுமைகளும் ‘அருஞ்சொல்’லை வாசிக்கிறார்கள் என்பதை அறிந்திருக்கிறோம். ஆகையால், கட்டுரைகளை வாசிப்பவர்கள் ‘எனக்குப் பிடிக்கிறது அல்லது பிடிக்கவில்லை’, ‘நான் இதை ஆதரிக்கிறேன் அல்லது எதிர்க்கிறேன்’ என்பதுபோல ஓரிரு வரிகளில் தங்கள் கருத்துகளை எழுதாமல் விரிவாக எழுதிட வேண்டுகிறோம். அப்படி எழுதப்படும் கருத்துகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை ‘இன்னொரு குரல்’ பகுதியில் வெளியாகும். கருத்துகளைப் பின்னூட்டப் பகுதியில் எழுதிடுங்கள் அல்லது aruncholeditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடுங்கள். தயவுசெய்து உங்கள் பெயருடன், ஊர் பெயரையும் குறிப்பிடுங்கள்.

 

@ ஏன் மதவெறிக்கு எதிராக நாம் ஒவ்வொருவரும் பேசுவது அவசியம்?

மிகச்சிறந்த கட்டுரைரையை எழுதியிருக்கிறார் மு.இராமநாதன் அவர்கள். அவர் குறிப்பிடுவது போல வெறுப்பை விதைப்பவர்கள் எந்த வடிவத்திலும் வரலாம். நாம் கவனமாக இருக்க வேண்டும்.

- ஜான் சத்தியசீலன்

@ சொற்கள் எனும் சதுரங்கக் காய்கள் 

பேராசிரியர் செ.வே.காசிநாதன் அவர்களின் 'விற்கன்ஸ்ரைன்: மொழி, அர்த்தம், மனம்' என்ற நூலுக்கு தங்க ஜெயராமன் அவர்கள் எழுதியுள்ள விமர்சன உரை பளிங்குத் தெளிவானது. நூலின் சாராம்சத்தை நேர்த்தியாக எடுத்துக் கூறுவதற்கு அவரின் நுண்ணிய வாசிப்பும் விரிந்த மொழியியல் ஞானமும் கைகொடுத்திருக்கின்றன. காசிநாதன் அவர்களின் நூலைக் கிரகிக்க தங்க ஜெயராமன் அவர்களின் இக்கட்டுரை சிறந்த கையேடாக அமையவல்லது. பாராட்டுகள்.

- முத்தையா நித்தியானந்தன்

@ ஆண்கள் ஏன் 'அலைஞ்சான்'களாகவே இருக்கிறார்கள்?

இத்தொடரில் அட்டகாசமான கட்டுரை இது. எந்த ஓர் உறவு இழப்பும் 3 மாதத்துக்கு மேல துக்கப்படுகிற அளவுக்கு மதிப்புள்ளது இல்லை. அதுவும் காதல் தோல்விக்கு அந்த மதிப்பு சுத்தமா இல்லை. ஆனால், எனக்கு இதைப் புரிஞ்சுக்க 10 வருஷம் ஆச்சு!

- ராஜேஷ் ஆறுமுகம்

@ அண்ணாவின் கனவு நாடு எப்படிப்பட்டது?

வினோபா-அண்ணா சந்திப்பு ஒரு வரலாற்று நிகழ்வுபோல ஆகிவிட்டதை இக்கட்டுரை வெளிப்படுத்துகிறது. நல்லதையே நினைக்கும் இருவரும் சந்தித்து உரயாடுவது ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள உதவுவதோடு, அடுத்து முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு உரம் சேர்க்கும் வகையிலும் அமையும். தமிகழத்தில் சர்வோதய இயக்கத்தின் பங்களிப்பாக ஆங்காங்கே ஆக்கபூர்வமான செயல்கள் நடந்தேறின. உதாரணமாக் தஞ்சை மாவட்டத்தில் கீழ்வெண்மணியில் நடந்த படுகொலைக்ககுப் பின்னர், ஜெகன்னாதன் தம்பதியினரின் முயற்சியால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட சாகுபடி நிலங்களைச் சொல்லலாம்.. சர்வோதய இயக்கம் பெரிய அளவில் நேரடியாக நிலப்பங்கீட்டில் வெற்றிபெற முடியவில்லை என்பது கசப்பான உண்மையாக இருந்தாலும் அவ்வியக்கம் ஏற்படுத்திய தாக்கம் பின்னாளில் நிலச்சீர்திருத்தச் சட்ட நடைமுறைகளில் மாநில அரசுகள் ஈடுபட வழிவகுத்தது என்பதை மறுப்பதற்கில்லை.

- பி.சரவணன்

@ தமிழக ஆளுநரின் அதிகார மீறல்

ஆளுநரின் அதிகாரம் மற்றும் செயல்பாடுகள் பற்றி தெளிவான சட்ட வரையறை உள்ளதா என்று தோன்றும் அளவுக்கு ஆளுநரின் நடவடிக்கை காணப்படுகிறது. நீதியரசர் சந்துரு அவர்களின் இக்கட்டுரை சட்டரீதியான பல புரிதலை ஏற்படுத்தியுள்ளது.

- கார்த்திகேயன்

@ தனியார் கல்வி நிறுவனங்கள் கஷ்டத்தில் இருக்கின்றனவா?

தனியார் பள்ளி ஆசிரியர்களை வஞ்சித்ததில் அரசின் பங்களிப்பும் இருக்கிறது. கரோனா காலத்தில் ஓர் ஆட்டோ ஓட்டுநருக்கும் கட்டுமானத் தொழிலாளருக்கும் செய்த சலுகையைக்கூட, ஊதியம் நிறுத்தப்பட்ட/ வெட்டப்பட்டதனியார் பள்ளி ஆசிரியருக்குச் செய்யவில்லை அரசு. ஆசிரியர்கள் தனியாரிடம் நீதி கேட்டுப் போராடினாலும் வேலை பறிக்கப்பட்டுவிடும். அரசிடம் கேட்டுப் போராடினாலும் வேலை போய்விடும். கூடவே வேறு எந்தப் பள்ளியிலும் இவர் பணியாற்ற முடியாத சூழலும் உருவாக்கப்பட்டுவிடும். அதன் பின் இவர் எப்படித் தன்னை ஆசிரியர் என அடையாளப்படுத்திக்கொண்டு போராட முடியும்? இன்னொரு பக்கம் தனியார் பள்ளி, கல்லூரிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசியல்வாதிகளின் முதலீடுகள் புழங்குகிற இடங்களாக மாறிவிட்டன. தனியார் பள்ளி என்பது அதன் உரிமையாளரும் அரசியல்வாதிகளும் சேர்ந்து கறக்கின்ற கறவைமாடாகிவிட்டன. ஆசியரியர்கள் எந்த வகையிலும் போராட முடியாத கன்றுக் குட்டிகளாக நிற்கின்றனர். தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலை குறித்து அரசின் காதில் விழுமாறு ஆராய்ச்சிமணியை முதல் மனிதராக அடித்திருக்கிறார் பெருமாள் முருகன் ஐயா. அந்த மணியைத் தொடர்ந்து அசைத்து அரசின் காதில் நாம் விழவைக்க வேண்டும். 

- மகா.இராஜராஜசோழன்

@ ஐஏஎஸ் அதிகாரிகள் பணி விதிமுறைத் திருத்த யோசனையைக் கைவிடுக

மத்திய அரசு எல்லா நிலைகளிலும் தனது அதிகாரத்தைக் கோலோச்ச நினைக்கிறது. அதற்காக மாநில அரசுகளைக் கலந்து ஆலோசிக்காமலேயே முடிவுகள் எடுத்துவிட்டு, பிறகு கண் துடைப்பிற்காகக் கருத்துக் கேட்கவும் செய்கிறது. ஜனநாயக மாண்புகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்படுவதை கண்கூடாகக் காண்கிறோம். எல்லாச் சட்டங்களையும் திருத்துகிறேன் என ஒவ்வொன்றாக மாற்ற நினைப்பதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

- உமா மகேஸ்வரி

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

1






அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

அடித்துச் சொல்கிறேன்நவீனக் கல்விமதிப்பெண்களை வாரி வழங்குகின்றனவா மாநிலக் கல்வி வாரஜெ.சிவசண்முகம் பிள்ளைசர்வாதிகார நாடுபக்கிரி பிள்ளைசட்டம் - ஒழுங்குபோர்மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்: ராமனை பின்பற்றுமாகோர்பசெவ்தசை வலிமிஸோரம்பா.சிதம்பரம் கட்டுரைமையவியம்சித்த மருந்துமூக்குமுதல் பதிப்புகள்சாவர்க்கர் விடுதலைக்கு காந்தி எழுதிய கட்டுரைமோடிகோணங்கி விவகாரம்முதலாம் உலகப் போர்சாவர்க்கர் வரலாறுமிரியாஉள்ளூர் மொழிஓய்வுபெற்ற அதிகாரிகள்மான்டேகு-செம்ஸ்ஃபோர்ட்மாயாவதி எங்கே?நவீன எலக்ட்ரிக் வாகனங்கள்கொரியா ஹெரால்டுபகவத் கீதை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!