இன்னொரு குரல் 5 நிமிட வாசிப்பு

மயிர் பிரச்சினை: எதிர்வினைக்கு மறுவினை

11 Apr 2022, 5:00 am
1

தமிழில் விவாதங்களை வளர்க்கும் பணியில் தன்னையும் ஈடுபடுத்திக்கொள்கிறது ‘அருஞ்சொல்’. அதனால்தான் தலையங்கம், கட்டுரை ஆகியவற்றுக்கு இணையான முக்கியத்துவத்தை ‘இன்னொரு குரல்’ பகுதிக்கு அளித்து, இணையதளத்தின் பிரதான இடத்திலேயே அதற்கு இடமும் அளிக்கிறது. ‘அருஞ்சொல்’ இதழை வாசிப்பவர்கள் வெறும் வாசகர்கள் மட்டும் இல்லை; எழுத்தாளர்கள், அறிஞர்கள், பத்திரிகையாளர்கள், கொள்கை வகுப்பாளர்களான அரசியலர்கள் – அதிகாரிகள், செயல்பாட்டாளர்கள், ஆசிரியர்கள் என்று பல்வேறு துறை ஆளுமைகளும் ‘அருஞ்சொல்’லை வாசிக்கிறார்கள் என்பதை அறிந்திருக்கிறோம். ஆகையால், கட்டுரைகளை வாசிப்பவர்கள் ‘எனக்குப் பிடிக்கிறது அல்லது பிடிக்கவில்லை’, ‘நான் இதை ஆதரிக்கிறேன் அல்லது எதிர்க்கிறேன்’ என்பதுபோல ஓரிரு வரிகளில் தங்கள் கருத்துகளை எழுதாமல் விரிவாக எழுதிட வேண்டுகிறோம். அப்படி எழுதப்படும் கருத்துகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை ‘இன்னொரு குரல்’ பகுதியில் வெளியாகும். கருத்துகளைப் பின்னூட்டப் பகுதியில் எழுதிடுங்கள் அல்லது aruncholeditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடுங்கள். தயவுசெய்து உங்கள் பெயருடன், ஊர் பெயரையும் குறிப்பிடுங்கள்.  பெருமாள் முருகன் எழுதி சமீபத்தில் வெளியான ‘மயிர்தான் பிரச்சினையா?’ கட்டுரைக்கு ஏராளமான எதிர்வினைகள் வந்தன; அவற்றை வெளியிட்டோம். இப்போது எதிர்வினைகளுக்கு மறுவினைகள் வருகின்றன. அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவற்றையும் இங்கே தருகிறோம்.

பிரச்சினை பெண்களுக்கும்தான்

ஆமாம்! இங்கு மயிர்தான் ஆசிரியர்களுக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது. இது ஆண்களுக்கு மட்டுமல்ல; பெண்களுக்கும்தான். உங்களின் அறிவு, கல்வி, நடத்தையை இதனுடன்தான் தொடர்புபடுத்துகிறார்கள்.

கல்லூரியில் அந்த ஆங்கிலப் பேராசிரியர் (ஆண்) அவ்வளவு கூட்டத்தின் மத்தியில் அந்த பெண்ணின் சிகை அலங்காரத்தைக் கலைக்கச் சொன்னார். காரணம், அவள் தலையில் இருந்த பஃப் ஹேர்ஸ்டைல். வகுப்பில் வந்து சொல்கிறார், இதெல்லாம் இங்கு செய்யக் கூடாதாம். தன் மகள் படிக்கும் சிபிஎஸ்ஸி பள்ளிகளில் இப்படி போகலாமாம். ஏனென்றால், அங்கு இது கலாச்சாரமாம். நாங்கள் இப்படி வரக் கூடாதாம். அன்றிலிருந்து அவர் வரும்போது தலைமறைவாகிவிடுவோம். 

இங்கு நீங்கள் தலையில் அணியும் ஹேர்க்ளிப் முதல் கால் கொலுசு வரை ஆசிரியர்கள் உங்களுக்கான ஒழுக்க முலாமைப் பூசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். 

- ஸ்ரீதேவி

குற்றவாளிகளாக சித்தரிக்கக் கூடாது!

பெருமாள் முருகனின் ‘மயிர்தான் பிரச்சினையா?’ கட்டுரையை வாசித்தேன். அவர் கூறியதில் எவ்வித மாறுபட்ட கருத்தும் எனக்கில்லை. ஆகவே வாசித்ததும் கடந்துவிட்டேன். ஆனால், ‘இன்னொரு குரல்’ பகுதியில் பலரின் எதிர்வினைகளை வாசித்தபோது நகைப்புதான் வந்தது. 

ஆசிரியர்கள் தங்கள் அணுகுமுறைகளையோ கற்பித்தல் முறைகளையோ மாணவர்கள் விரும்பும்படி மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லை. அவர்களின் கருத்துகளுக்கும் உடல் - மன எழுச்சிகளுக்கும் காதுகொடுக்க, வழிகாட்டிட நேரத்தை ஒதுக்கவோ சூழலை உருவாக்கவோ சிந்திப்பதில்லை. சிந்திக்கும் மாறுபட்ட ஆசிரியர்கள் இருக்கின்றனர். ஆனால், சொற்ப எண்ணிக்கையில்தான்.

தனது சம்பளத்துக்கான வேலை, பாடங்களை முடித்து துறையிடம் நல்ல பெயர் வாங்குவது, தனது குடும்பத்தைப் பற்றி யோசிப்பது, தனது குழந்தைகளை மிகப்பெரிய பள்ளிகளில் சேர்த்து அவர்களது எதிர்காலத்திற்காக சிந்திப்பது என தங்களைச் சுற்றியே வண்ணமயமான வாழ்க்கையைப் பின்னிக்கொள்ள நேரம் செலவழிக்கும் ஆசிரியர்கள்தான் பெரும்பான்மை. இதில் வேறுபட்டு இருக்கும் சிறுபான்மையைப் பாராட்டுகிறோம். 

மாணவர்களுடன் நேசக்கரம் நீட்டி பரஸ்பரம் உரையாட நேரமே இல்லை என்பவர்கள் கல்வித் துறையின் உயர் அதிகாரிகளிடம் இப்பிரச்சினைகளைக் குறித்து உரையாடுவதில்லை என்பதே யதார்த்தம். 

இத்தகைய சூழலில் இன்றைய டிஜிட்டல் உலகில் மாணவர்கள் பார்க்கும் சமுதாயம் அவர்களது தலைமுடியை பலக் கோணங்களில் பராமரிக்கத் தூண்டுகிறது. மாணவர்கள் புறக்காரணிகளால்தான் அகத்தூண்டல் பெறுகின்றனர் என்பதை ஏன் இந்த ஆசிரியர் சமுதாயம் புரிந்துகொள்ள மறுக்கிறது எனப் புரியவில்லை. ஆசிரியர்கள் தங்கள் வீடுகளைக் கட்டவோ வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கவோ லேட்டஸ்ட் டிரெண்ட்டைத் தேடி, தங்கள் விருப்பம் சார்ந்து வாங்குகின்றனர். கிராமங்களில்கூட இன்டர்நேஷனல் ஷாப்பிங் சென்டர்கள் வந்துவிட்டன.

தங்கள் உடைத் தேர்வுகளும் அப்படியே, தங்களது குழந்தைகளுக்கான உடைகளைத் தேர்வுசெய்வதிலும் நாகரிக விருப்பம் சார்ந்தவர்களாகவே ஆசிரியர்கள் இருக்கின்றனர். இவை எதையும் நாம் தவறான கண்ணோட்டத்தில் முன்வைக்கவில்லை.  இதே மனப்போக்கில் மாணவர்களின் தேடல்களும் இணையாக மாறியிருக்கின்றன. அவர்களுக்குப் பிடித்த விளையாட்டு வீரர்கள், திரைப்படக் கதாநாயகர்கள் வைத்திருக்கும் தலைமுடியின் நாகரிகத் தோற்றத்தைத் தங்களுக்கும் வைத்துக்கொள்ள நினைத்து அதன் மீது ஈடுபாடு காட்டுகின்றனர். வளர்ந்த மனிதர்களும் தங்களுக்குப் பிடித்தமான சிகை அலங்காரங்களைச் செய்துகொள்கின்றனர். இது தவறு எனில் பெரியவர்கள் தேடும் லேட்டஸ்ட்களும் தவறுதான்.

இது பள்ளி, கல்லூரிகளில் ஒழுக்கச் சீர்கேட்டை உருவாக்கும், இப்படி சிகை அலங்காரம் செய்துகொள்பவர்கள் ஒழுக்கமில்லாதவர் என ஒதுக்கவோ திட்டவோ நடவடிக்கை எடுக்கவோ ஆரம்பித்தால் புதிய புதிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இது இன்று மாணவருடைய உளவியலுடன் தொடர்புடையதாக இருக்கிறது. ஆகவே அவர்களிடம் உளவியல்ரீதி அணுகுமுறையை ஆசிரியர்கள் கையாள முயற்சிக்காமல் தொடர்ந்து அவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது தவறு. 

தனது சமூகத்தைப் பார்த்துதான் மாணவர்கள் வளர்கின்றனர். ஆகவே சமூகம் அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். 10, 11,12ஆம் வகுப்பு மாணவர்கள், நீங்கள் சொல்லும் அத்துமீறல்களைத் திடீரென நிகழ்த்திவிடவில்லை. இந்த சமூகத்தால், திரைப்பட நாயகர்களால், கையிலுள்ள இணைய வசதியால் செதுக்கப்பட்ட மாணவன், பத்து வருடங்களாக பள்ளிக் கல்வியில் அவன் பெற்ற, பெறாத அறிவினால்தான் வன்முறைகள் என்று அறியாமலேயே பள்ளிக்குள்ளும் அத்தகைய செயல்களில் ஈடுபடுகிறான். ஆக, ஒரு மாணவன் நடத்தைப் பிறழ்வுக்கு பெற்றோர், ஆசிரியர், சமூகம் என அனைத்தும்தான் பொறுப்பேற்க வேண்டுமே ஒழிய அவர்களைக் குற்றவாளிகளாக சித்தரிக்கக்கூடாது. மயிர் ஒரு பிரச்சினையே அல்ல. 

-சு.உமாமகேஸ்வரி

தொடர்புடைய கட்டுரைகள்:
மயிர்தான் பிரச்சினையா?
ஆம், மயிரும் பிரச்சினைதான்: ஆசிரியர்கள் எதிர்வினை

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

1






பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Thiruvasagam   3 years ago

Of Course, Addressed issue is a serious one. Tamil Nadu CM himself is so conscious about his wig, hair colouring dye etc. Even his fellow ministers who have had crossed 75+, senior MP's from other parties too wish to hide their corresponding age looks. Ironically Actor Kamal stopped to colour his hair but Mr.Stalin & Mr.Vaiko continue to do so. Considering this facts, we can confirm "ஆம், மயிரும் பிரச்சினைதான்".

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

சேரர்கள்ஷியா முஸ்லிம்ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவு: பாஜகவுக்கு நெருக்கடிஆய்வறிக்கைகள்சைபர் குற்றவாளிகள்புலம்பெயர்வுவழக்குகள் கோடிக்கணக்கில் தேங்குவது ஏன்?சுதேசி உணர்வுஜார்கண்ட் சட்டமன்றம்தேர்தல் நன்கொடைதகவல் தொடர்புசிறுபான்மைசாதி அமைப்புஅணுக்கருபிட்ரோடாவிமான நிலையம்உற்பத்திஆந்திரம்பெற்றோர்கள்நவீன இந்திய சமூகம்ஹரிஹரசுதன் தங்கவேலு கட்டுரைநாடாளுமன்ற பொதுத் தேர்தல்கட்டற்ற நுகர்வுமத்திய பிரதேசம்: காங்கிரஸுக்குச் சாதகம்தமிழகக் காவல் துறைதென்னாப்பிரிக்க நாவல்விசிககாவிரிப் படுகையை மீட்டெடுக்க ஒரு வழிபுதுமடம் ஜாஃபர் அலி கட்டுரைபிரேம் ஆனந்த்வேலு கட்டுரை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!