கட்டுரை, அரசியல், நிர்வாகம் 4 நிமிட வாசிப்பு

தேர்தல்களை பாஜக எப்படி வெல்கிறது? மேலும் ஒரு காரணம்!

சங்கர் ஆர்னிமேஷ்
27 Dec 2023, 5:00 am
0

பாஜக எந்தத் தேர்தலை வெல்லும்போதும், மோடிதான் வெற்றிக்கு ஒரே காரணம் என்று சொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறது. பலரும் அதை நம்பவும் செய்கின்றனர். மோடி மட்டுமே காரணம் இல்லை என்பதை இந்தச் செய்திக் கட்டுரை விளக்குகிறது. வேட்பாளர் தேர்வுக்கு பாஜக கொடுக்கும் முக்கியத்துவத்தை பத்திரிகையாளர் சங்கர் ஆர்னிமேஷ் இங்கே தருகிறார்.  

தேர்தல்களுக்கு முன் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்து கட்சி உறுப்பினர்கள், அந்தந்தத் தொகுதி மக்கள், ஊடகத்தினர் உள்ளிட்ட பொதுவெளி மக்கள் ஆகியோரிடமிருந்து கருத்துகளைப் பெறுவதை பாஜக தலைமை முக்கியமான செயல்பாடாகக் கருதுகிறது.

கட்சி மூலமாக கருத்துகளைப் பெறுவதுடன் ‘அசோசியேஷன் ஆஃப் பிரில்லியண்ட் மைண்ட்ஸ்’ (ஏபிஎம்) என்ற முகமையுடனும் இதற்காக கட்சி ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. இந்நிறுவனம் சேகரிக்கும் தகவல்களை மாதந்தோறும் கட்சித் தலைமைக்குத் தருகிறது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் பலருக்கு இந்த வகையில் வாய்ப்பு மறுக்கப்பட்டது சமீபத்தில் பேசப்பட்டது.

அடுத்து, 2024 மக்களவைத் தேர்தலில் இப்போது பதவி வகிக்கும் மக்களவை உறுப்பினர்களில் சுமார் 100 பேருக்கும் வாய்ப்பை இழப்பார்கள் என்று தெரிகிறது.

நாம் இங்கே நினைவில் கொள்ள வேண்டிய விஷயம், 2019 மக்களவைப் பொதுத் தேர்தலின்போதும், இப்படி 99 பேருக்கு மீண்டும் போட்டியிடும் வாய்ப்பை பாஜக மறுத்தது என்பது ஆகும். 

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

எப்படி நடக்கிறது தேர்வு?

பொதுவாக இரண்டு வகையிலான உறுப்பினர்களுக்கு மீண்டும் இடம் தர வேண்டாம் என்று தேசிய தலைமை கருதுவதாகச் சொல்லப்படுகிறது.

தொடர்ந்து ஐந்து, ஆறு, ஏழு முறை என்று தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்குப் பதிலாக புது முகங்களைக் களமிறக்க விரும்புகிறது. அடுத்ததாக தொகுதிப் பணியில் ஆர்வம் காட்டாத – மக்களிடையே அதிருப்தியை சம்பாதித்தவர்களுக்கு பதிலாக செயலூக்கம் மிக்கவர்களுக்கு வாய்ப்பு தர நினைக்கிறது.

அடுத்து, இப்போதுள்ள உறுப்பினர்களில் வயது முதிர்ந்தவர்கள், ஓடியாடி களப்பணி செய்ய முடியாமல் நலிவுற்றவர்கள், கட்சியின் செயல்களிலும் தொகுதி வேலைகளிலும் ஆர்வம் காட்டாதவர்கள், மக்களிடம் கெட்டபெயர் சம்பாதித்தவர்கள் இவர்கள் எல்லாமும் வாய்ப்பை இழப்பார்கள்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

2024: யாருக்கு வெற்றி?

யோகேந்திர யாதவ் 09 Jun 2023

செயலி வழியே அமையும் திசை 

இப்படி வெளி நிறுவனம் வழியே பெறும் அறிக்கைகள் மட்டுமே தேர்வை முடிவுசெய்துவிடுவதில்லை. 

கட்சியே தன்னுடைய மாவட்ட, மாநில நிர்வாகிகளிடமிருந்து ஒவ்வொருவர் குறித்தும் அறிக்கை பெறுகிறது.

இதோடு பிரதமரின் நமோ செயலி மூலம் திரட்டப்படும் தரவுகளும் வேட்பாளர் தேர்வில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தச் செயலியில் மட்டும் பாஜக நிர்வாகிகள் இரண்டு கோடிக்கும் மேற்பட்டவர்கள் இருக்கின்றனர்.

2023 டிசம்பர் மாத முதல் வாரத்தில் ‘ஜன் மன் சர்வே’ என்ற கருத்தறியும் ஆய்வை தனது செயலியில் தொடங்கினார் மோடி. இது மக்களுடைய மனங்களில இருப்பதென்ன என்பதை அறியும் பொதுக் கருத்தறியும் ஆய்வு. அதில் 14 கேள்விகள் கேட்கப்படுகின்றன. ‘பாஜகவின் மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடு எப்படி?’ என்ற கேள்வியுடன் குறிப்பிட்ட பதில்களை வரவழைக்கும்படியான கேள்விகளும் இடம்பெற்றுள்ளன. கூடவே அரசின் திட்டங்கள், மக்களுடைய எதிர்பார்ப்புகளைக் கட்சியினர் வழியே அறிந்துகொள்ளும் வகையிலும் கேள்விகள் இடம்பெற்றுள்ளன.

இப்படி மக்களிடம் கருத்தறியும் வாக்கெடுப்புக்குப் பிறகுதான் 2018இல் விவசாயிகளுக்கு சாகுபடி உதவித் தொகை அளிக்கும், ‘பிஎம்-கிஸான் சம்மான் நிதி திட்டம்’ கொண்டுவரப்பட்டது. 

அரசின் நலத் திட்டங்கள் எப்படி அமலாகின்றன என்பதையும் நாடாளுமன்ற பாஜக உறுப்பினர்கள் எப்படிச் செயல்படுகின்றனர் என்பதைத் தெரிந்துகொள்ளவும் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன என்று இதற்குப் பொறுப்பாக இருக்கும் குலஜீத் சாஹல் தெரிவிக்கிறார்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

மோடி - ஷாவுக்கு அடுத்து பாஜகவில் யார்?

டி.கே.சிங் 04 Jan 2023

ஹேமமாலினி - வருண் காந்தி - மேனகா காந்தி

உத்தர பிரதேசம்தான் மக்களவைக்கு அதிகபட்ச உறுப்பினர்களை அனுப்புகிறது. இப்போது பாஜக சார்பில் உறுப்பினர்களாக  இருப்பவர்களில் 15 பேருக்கு மீண்டும் வாய்ப்பு தர வேண்டாம் என்று கட்சி மேலிடம் முடிவுசெய்திருப்பதைக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. 

சத்யதேவ் பச்சௌரி (கான்பூர்), ஹேமமாலின் (மதுரா), ரீட்டா பகுகுணா ஜோஷி (பிரயாக் ராஜ்), அக்ஷய் லால் கௌர் (பாரைச்) ஆகியோர் 75 வயதைக் கடந்துவிட்டனர். தினேஷ் லால் யாதவ் நிராஹுவா, பி.பி.சரோஜ், கௌஷல் கிஷோர், கேசரி தேவி படேல், சங்கமித்ரா மௌரியா, முகேஷ் ராஜ்புத், உபேந்திர சிங் ரவாத், சங்கம் லால் குப்தா, மேனகா காந்தி, வருண் காந்தி ஆகியோருக்கு மக்கள் மத்தியில் நற்பெயர் இல்லை என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவர்களைப் போலவே குஜராத்தில் 8, பிஹாரில் 10, மகாராஷ்டிரத்தில் 10, மத்திய பிரதேசத்தில் 11 பேர் வாய்ப்பு மறுக்கப்படும் பட்டியலில் இருக்கின்றனர். தில்லி மாநிலத்தில் கௌதம் கம்பீர், ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ் நீக்கப்படும் பட்டியலில் இருக்கின்றனர். ஹர்ஷ வர்தன், மீனாட்சி லேகி ஆகியோருக்குப் பதிலாக புதிய வேட்பாளர்களை நிறுத்த கட்சி மேலிடம் பரிசீலிக்கிறது. கிரண் கேர் (சண்டீகர்), ஒன்றிய அமைச்சர் ஸ்ரீபாத யசோ நாயக் (கோவா) ஆகியோருக்கும் வாய்ப்பு கிடைக்காது என்று தெரிகிறது.

இதையும் வாசியுங்கள்... 3 நிமிட வாசிப்பு

யதேச்சதிகாரத்தின் பிடியில் நாடாளுமன்றம்

ஆசிரியர் 20 Dec 2023

அத்வானி - சுமித்ரா

மூத்தத் தலைவர்கள் லால் கிருஷ்ண அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, பி.சி.கந்தூரி, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் போன்ற தலைவர்களுக்கு 2019 தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அப்போது பலரும் அதை விமர்சித்ததோடு, தவறான விளைவுகளைத் தேர்தலில் தரும் என்றும் சொன்னார்கள்.

ஆனால், மூத்தவர்கள் என்பதாலேயே தொடர் வாய்ப்பளிப்பது அடுத்தடுத்த தலைமுறையினர் இடையே அதிருப்தியை உண்டாக்குவதோடு, தொடர்ந்து உறுப்பினராக இருப்பதால் ஒருவர் மீது வாக்காளர்களுக்கு ஏற்படக்கூடிய சலிப்பையும் அயர்ச்சியையும் தவிர்க்க இத்தகு முடிவுகள் அவசியம்  என்பதையே தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தின.  

தொடர்ந்தும் அதே பாதையில் பயணிக்கிறது பாஜக!

© த பிரின்ட்

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

2024: யாருக்கு வெற்றி?
மோடி - ஷாவுக்கு அடுத்து பாஜகவில் யார்?
பிஹாரிலிருந்து ஆரம்பிக்கும் 2024 ஆட்டம்
யதேச்சதிகாரத்தின் பிடியில் நாடாளுமன்றம்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
தமிழில்: வ.ரங்காசாரி

3






மார்க்ஸ் ஜிகாத்செபி - ஹின்டன்பர்க்: மறைப்பது ஒரு பாதிசங்கம் புகழும் செங்கோல்பக்கவாட்டு பணி நுழைவுரூபாய் - டாலர் செலாவணி விகிதம்ஊடகர் கலைஞர்மூட்டுவலிக்கு முழுமையான தீர்வுரிச்மாண்ட் தொகுதிமுதியவர்கள்தனித் தெலங்கானாஇந்திய ஆட்சிப் பணிநெருக்கடிநிலைமழைநீர் வடிகால்எருமை பால்டிசம்பர் மழை1232 கி.மீபாலாசூர்இந்தியா வங்கதேசம்நீர்ப் பெருக்குஜன தர்ஷன்கர்ப்பப்பை வாய் புற்றுநோய்சாட்ஜிபிடிராஜ்பவன்கள்குஜராத் முதல்வர் மாற்றம்இயம்ங்கொரொங்கொரோநவ நாஜிகள்அடிப்படை உரிமைசாமானியர் பிம்பம்சந்திர கிருஷ்ணா கட்டுரை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!