கட்டுரை, வரலாறு, புத்தகங்கள் 10 நிமிட வாசிப்பு

இந்தியா: வாசிக்க வேண்டிய 50 நூல்கள்

ராமச்சந்திர குஹா
24 Sep 2022, 5:00 am
5

சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய ஜனநாயக அமைப்புகளின் வரலாறு தொடர்பில் முன்பு ஒரு கட்டுரையை - சுருக்கமான ஆய்வுத் தொகுப்பாக - எழுதியிருந்தேன். இப்போது நம்முடைய குடியரசின் சிக்கல்களை எளிதில் புரிந்துகொள்ள உதவக்கூடிய, புத்தகங்களில் சிலவற்றை இக்கட்டுரையில் பட்டியலிடுகிறேன்.

எழுபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டதைக் குறிக்க சமச்சீராக எழுபத்தைந்து நூல்களைத் தேர்ந்தெடுக்கவே விரும்புகிறேன். ஆனால், கட்டுரை எழுதக் கிடைக்கும் இடத்துக்கு அவ்வளவு புத்தகங்களைப் பட்டியலிடவும் அவை குறித்து மிகச் சுருக்கமாகவேனும் ஓரிரு வாக்கியங்களை எழுதவும் இடம் போதாது என்பதால் ஐம்பதுடன் நிறுத்துகிறேன். 1947க்குப் பிறகு பிரசுரமான புத்தகங்கள் என்று வரையறுத்துள்ளேன். இது இந்திய வரலாற்றைப் படிப்பதற்கான பட்டியல் அல்ல, சுதந்திர இந்தியாவில் வெளியான நூல்களைப் பற்றிய பட்டியல். புத்தகம் வெளியான ஆண்டு அடைப்புக் குறிக்குள் உள்ளது. (இந்நூலைப் படிக்கும் வாசகர்கள் தமிழ் ஒலிபெயர்ப்பைவிட அப்படியே ஆங்கிலத்தில் படிப்பது எளிதாகவும், புத்தகத்தைத் தேடவும் வசதியாக இருக்கும் என்பதால் ஆங்கிலத்தில் தரப்படுகிறது).

புத்தகப் பட்டியல்… 

இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியபோது அரசமைப்புச் சட்ட தேசியப் பேரவையில் நடந்த விவாதங்களைத் தொகுத்து ஜி.ஆஸ்டின் எழுதிய ‘தி இந்தியன் கான்ஸ்டிட்யூஸன்: கார்னர்ஸ்டோன் ஆஃப் ஏ ரிபப்ளிக்’ (The Indian Constitution: Cornerstore of a Republic -1966) நூலுடன் கட்டுரையைத் தொடங்குகிறேன். இந்தப் புத்தகத்துடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய மற்றொரு நூல், நீரஜா கோபால் ஜெயாள் எழுதிய ‘சிட்டிசன்ஷிப் அண்ட் இட்ஸ் டிஸ்கன்டன்ட்ஸ்: ஏன் இந்தியன் ஹிஸ்டரி’ (Citizenship and Its Discontents: An Indian History -2013). இது அதிக ஆண்டுகளின் தொகுப்பு என்பதுடன் சமூகவியல் கண்ணோட்டத்துடன் எழுதப்பட்டது.

சுதந்திர இந்தியாவின் முதல் பத்தாண்டுகளில் மன்னர்களால் ஆளப்பட்ட சுதேச சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதும், மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டதும் மிக முக்கியமான நிகழ்வுகளாகும். சுதேச சமஸ்தானங்கள் இணைப்பு பற்றிய மிகச் சிறந்த நூல் வி.பி.மேனன் எழுதிய  ‘இண்டெக்ரேஸன் ஆஃப் தி இந்தியன் ஸ்டேட்ஸ்’ (Integration of the Indian States -1956). மொழிவாரி மாநிலங்கள் உருவானது தொடர்பாக ராபர்ட் டி.கிங் எழுதிய ‘நேரு அண்ட் தி லேங்குவேஜ் பாலிடிக்ஸ் ஆஃப் இந்தியா’ (Nehru and the Language Politics of India -1997).

அடுத்து, முக்கியத்துவம் மிக்க இந்திய ஆளுமைகள் குறித்து எழுதப்பட்ட வாழ்க்கை வரலாற்று நூல்களைப் பார்க்கலாம். இந்த வகையில் வருவன. வால்டர் கிராக்கர் எழுதிய ‘நேரு: கான்டெம்ரரிஸ் எஸ்டிமேட்’ (Nehru: A Contemporary’s Estimate -1966). ராஜ் மோகன் காந்தி எழுதிய ‘படேல்: ஏ லைப்’ (Patel: A Life -1990). காத்தரீன் பிராங்க் எழுதிய ‘இந்திரா: தி லைப் ஆஃப் இந்திரா நேரு காந்தி’ (Indira: The Life of Indira Nehru Gandhi -2001). சி.பி.ஸ்ரீவாஸ்தவ எழுதிய ‘லால் பகதூர் சாஸ்திரி’ (Lal Bahadur Shastri -1995). தனஞ்ஜெய கீர் எழுதிய ‘அம்பேத்கர்’ (Ambedkar -1954, திருத்திய பதிப்பு 1990). ஆலன் மற்றும் வெண்டி ஸ்கார்ஃப் எழுதிய ‘ஜேபி: ஹிஸ் பயோகிராப்பி’ (JP: His Biography -1975; திருத்திய பதிப்பு 1998). எல்லன் கரோல் டுபோஸ், வினய் லால் எழுதிய ‘ஏ பேசனேட் லைப்: ரைடிங்ஸ் பை அண்ட் ஆன் கமலாதேவி சட்டோபாத்யாய்’ (A Passionate Life: Writings by and on Kamaladevi Chattopadhyay -2017).

சுதந்திரம் அடைந்த வெகு சில மாதங்களுக்குள்ளாக  காந்தி இறந்துவிட்டதால் அவரைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூலைப் பரிந்துரைக்கவில்லை. இருந்தாலும், அவருடைய தொடர் செல்வாக்குக்குக் காரணம் என்ன என்று அறிய விரும்புவோர், ரஜினி பக்ஷி எழுதிய ‘பாபு குட்டி: ஜேர்னீஸ் இன் ரீடிஸ்கவரி ஆஃப் காந்தி’ (Bapu Kuti: Journeys in Rediscovery of Gandhi -1998) புத்தகத்தைப் படிப்பது அவசியம்.

சுதந்திர இந்தியாவின் முன்னணி அரசியல் தலைவர்களில் அம்பேத்கரும் நேருவும் சிறந்த சிந்தனையாளர்களாகவும் திகழ்ந்தனர். எனவே, வலேரி ரோட்ரிஜஸ் எழுதிய ‘தி எஸென்சியல் ரைடிங்ஸ் ஆஃப் பி.ஆர்.அம்பேத்கர்’ (The Essential Writings of B.R. Ambedkar -2002) வாசிக்கப்பட வேண்டியது. புருஷோத்தம் அகர்வால் தொகுத்த ‘ஹூ இஸ் பாரத மாதா? ஹிஸ்டரி, கல்ச்சர் அண்ட் தி ஐடியா ஆஃப் இந்தியா: ரைட்டிங்ஸ் பை அண்ட் ஆன் ஜவஹர்லால் நேரு’ (Who is Bharat Mata? History, Culture and the Idea of India: Writings by and on Jawaharlal Nehru -2019) நூலும் முக்கியமானது.

சமீப காலங்களில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தர் எம்.எஸ்.கோல்வால்கர் செலுத்தத் தொடங்கியிருக்கும் செல்வாக்கு, நேரு–அம்பேத்கருக்கு இணையாக அல்லது அதை மிஞ்சும் அளவுக்குக்கூட வளர்கிறது. எனவே, அவருடைய ‘சிந்தனைக் கொத்து’ என்ற கட்டுரைத் திரட்டான (A Bunch of Thoughts -1966) நூலைப் பரிந்துரைக்கிறேன்.

சுதந்திர இந்தியாவின் அரசியல் நடைமுறைகள் பற்றி அறிய, நீரஜா கோபால் ஜெயாள், பிரதாப் பானு மேத்தா இணைந்து எழுதிய ‘ஆக்ஸ்போர்டு கம்பேனியன் டூ இந்தியன் பாலிடிக்ஸ்’ (Oxford Companion to Indian Politics -2010) நூலைப் படிக்கலாம். வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை என்ற முடிவை இந்தியா எப்படி – ஏன் எடுத்தது என்பதை அறிய ஆர்னித் ஷானியின் ‘ஹவ் இந்தியா பிகேம் டெமாகிரேட்’ (How India became Democratic -2017) நூல் பெரிதும் உதவுகிறது. இந்தியாவின் தேர்தல் அரசியல் எப்படிப்பட்டது என்பதை அறிய மிலன் வைஷ்ணவ் எழுதிய ‘வென் க்ரைம் பேஸ்: மனி அண்ட் மசில்ஸ் இன் இந்தியன் பாலிடிக்ஸ்’ (When Crime Pays: Money and Muscle in Indian Politics -2017) நூலைப் படிக்கலாம். ஆர்எஸ்எஸ் குறித்து அறிய விரும்புவோர் படிக்க வேண்டிய சிறந்த புத்தகம் தேஷ் ராஜ் கோயல் எழுதிய ‘ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்’ (Rashtriya Swayamsewak Sangh -1979) நூல்.

இந்தியப் பொருளாதாரக் கொள்கையின் வரலாற்றை அறிய, பிரான்சின் பிராங்கெல் எழுதிய ‘இந்தியாஸ் பொலிடிகல் எகானமி’ (India’s Political Economy, 1947-2004) படிக்க வேண்டும். இந்தியா இப்போது எதிர்கொள்ளும் பொருளாதாரச் சவால்களை அறிய நௌஷத் ஃபோர்ப்ஸ் எழுதியுள்ள ‘தி ஸ்ட்ரகுள் அண்ட் தி ப்ராமிஸ்: ரீஸ்டோரிங் இந்தியாஸ் பொடென்சியல்’ (The Struggle and the Promise: Restoring India’s Potential -2022) பயன்படும். இந்திய ராணுவக் கொள்கையைப் புரிந்துகொள்ள ஸ்ரீநாத் ராகவன் எழுதியுள்ள ‘வார் அண்ட் பீஸ் இன் மாடர்ன் இந்தியா’ (War and Peace in Modern India -2009), வெளியுறவுக் கொள்கையை அறிய சிவசங்கர் மேனன் எழுதியுள்ள ‘சாய்ஸஸ்: இன்சைட் தி மேக்கிங் ஆஃப் இந்தியாஸ் ஃபாரின் பாலிசி’ (Choices: Inside the Making of India’s Foreign Policy -2016) நூல்கள் உதவும்.

நமக்கு பக்கத்திலேயே இருக்கும் மிகப் பெரிய ஆசிய நாட்டுடனான சிக்கல் மிகுந்த உறவுகள் குறித்து அறிய காந்தி பாஜ்பாய் எழுதிய ‘இந்தியா வெர்சஸ் சீனா: வொய் தே ஆர் நாட் ப்ரண்ட்ஸ்’ (India Versus China: Why They are not Friends -2021) கைகொடுக்கும்.

நவீன அரசைத் தாங்கும் உறுதியான நிறுவனங்கள் என்றால் அவை நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம், சிவில் சர்வீஸ் அமைப்புகள்தான். தேவேஷ் கபூர், பிரதாப் பானு மேத்தா, மிலன் வைஷ்ணவ் ஆகியோர் ‘ரீதிங்கிங்  பப்ளிக் இன்ஸ்டியூசன்ஸ் இன் இந்தியா’ (Rethinking Public Institutions in India -2019) என்ற நூலில் அவை பற்றி நாம் புரிந்துகொள்ளும் விதத்தில் எழுதியுள்ளனர். இந்திய ராணுவம் குறித்து ஸ்டீவன் வில்கின்சன் ‘ஆர்மி அண்ட் நேசன்: தி மிலிட்டரி அண்ட் இந்தியன் டெமாகிரஸி’ (Army and Nation: The Military and Indian Democracy -2015) என்ற நூலை எழுதியிருக்கிறார். நரேந்திர மோடி அரசியலில் செல்வாக்கு பெறுவதற்கு முன்பு - இந்திய ஊடகம் எப்படி உருவாகி வளர்ச்சி பெற்றது என்பது குறித்து ராபின் ஜெஃப்ரி எழுதியுள்ள நூல்தான்  ‘இந்தியாஸ் நியூஸ்பேபர் ரெவல்யூசன்: கேப்பிடலிசம், பாலிடிக்ஸ் அண்ட் தி இந்தியன் லேங்குவேஜ்’ (India’s Newspaper Revolution: Capitalism, Politics and the Indian Language -2000).

நவீன இந்தியாவில் சமூக கட்டமைப்பு குறித்தும் சமூக மாற்றங்கள் குறித்தும் எழுதப்பட்ட நூல்களை இப்போது கவனிப்போம். இந்திய கிராமப்புறங்களில் சாதியின் ஆதிக்கம் குறித்து அறிய நான் இரு நூல்களைப் பரிந்துரைக்கிறேன். அவை தொன்மையான இனவியல் பற்றிய நூல்கள். முதலாவது, இந்தியரான எம்.என்.சீனிவாசன் எழுதிய ‘தி ரிமெம்பர்டு வில்லேஜ்’ (The Remembered Village -1977). மற்றொன்று டச்சு நாட்டு அறிஞரான ஜேன் பிரேமனின் ‘பேட்ரனேஜ் அண்ட் எக்ஸ்பிளாய்டேஸன்’ (Patronage and Exploitation -1974). சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்களின் அந்தஸ்து - இக்கட்டான நிலை குறித்து முஷிருல் ஹாசன் எழுதிய ‘லெகசி ஆஃப் ஏ டிவைடெட் நேசன்: இந்தியாஸ் முஸ்லிம்ஸ் சின்ஸ் இண்டிபெண்டென்ஸ்’ (Legacy of a Divided Nation: India’s Muslims Since Independence -1997) படிக்கப்பட வேண்டியது. பழங்குடிகள் குறித்து அறிய, நந்தினி சுந்தர் எழுதிய ‘தி ஷெட்யூல்டு டிரைப்ஸ் அண்ட் தெய்ர் இந்தியா’ (The Scheduled Tribes and their India -2016) சிறந்த நூல்.

இந்திய ஒன்றியத்தின் மாநிலங்கள் - சமூக, கலாச்சார, அரசியல், சுற்றுச்சூழல் அம்சங்களில் ஒன்றுக்கொன்று பெருமளவு வேறுபட்டவை. அவை பற்றி நன்கு ஆராய்ந்து, ஆய்வுநோக்கில் எழுதிய வரலாற்று நூல்கள் மிகச் சிலவே. அப்படி விதிவிலக்கான சில நூல்களில் ராபின் ஜெஃப்ரியின் ‘பாலிடிக்ஸ், வுமென் அண்ட் வெல்-பீயிங்: ஹவ் கேரளா பிகேம் ஏ மாடல்’  (Politics, Women and Well-Being: How Kerala became ‘A Model’ -1992), நரேந்திர சுப்ரமணியனின் ‘எத்னிசிட்டி அண்ட் பாப்புலிஸ்ட் மொபிலைஷேசன்’ (Ethnicity and Populist Mobilization -1999) குறிப்பிடப்பட வேண்டியவை. நரேந்திர சுப்பிரமணியன் தமிழ்நாடு தொடர்பாக எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து, சமூக இயக்கங்கள் பற்றிய நூல்களைப் பார்ப்போம். பட்டியல் இனத்தவர்களுடைய இயக்கங்கள் குறித்து டி.ஆர்.நாகராஜ் எழுதியது ‘தி ஃப்லேமிங் ஃபீட் – தி தலித் மூவ்மெண்ட் இன் இந்தியா’ (The Flaming Feet - The Dalit Movement in India -2010); மகளிர் இயக்கங்கள் குறித்து ராதா குமார் எழுதியது ‘ஏ ஹிஸ்டரி ஆஃப் டூயிங்: ஏன் இல்லஸ்டிரேடட் அக்கவுண்ட் ஆஃப் மூவ்மென்ட்ஸ் ஃபார் வுமென்ஸ் ரைட்ஸ் அண்ட் ஃபெமினிஸம்’ (A History of Doing: An Illustrated Account of Movements for Women’s Rights and Feminism -1993). பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தொடர்பாக கிறிஸ்டோப் ஜஃப்ரலாடு எழுதியது இந்தியாஸ் சைலென்ட் ரிவல்யூசன்’ (India’s Silent Revolution -2003). சுற்றுச்சூழல் இயக்கங்கள் பற்றிய நூல், சேகர் பாடக் எழுதிய ‘தி சிப்கோ மூவ்மென்ட்: ஏ பீப்ள்ஸ் ஹிஸ்டரி (The Chipko Movement: A people’s History -2020).

அடுத்து வருவன இந்தியாவின் நெடிய பூசல்கள் மிக்க பிரதேசங்களைப் பற்றியவை. காஷ்மீர் பிரச்சினை எப்படித் தொடங்கியது, இப்போது எந்த இலக்கை நோக்கிச் செல்கிறது என்று பலர் புத்தகங்கள் எழுதியுள்ளனர். பிரச்சினையின் தொடக்க காலத்திலேயே எழுதப்பட்ட மிகச் சிறந்த புத்தகம் சிசிர் குப்தாவின் ‘காஷ்மீர்: ஏ ஸ்டடி இன் இந்தியா - பாகிஸ்தான் ரிலேசன்ஷிப்’ (Kashmir: A Study in India-Pakistan Relations -1965) என்ற நூலாகும். இந்திய, பாகிஸ்தான் தொன்மக் கதைகள் காரணமாக காஷ்மீரப் பள்ளத்தாக்கு இரு நாடுகளுக்குமே விட்டுக்கொடுக்க முடியாத பகுதியாகத் தொடர்கிறது. கொந்தளிப்பான வட – கிழக்கு மாநிலங்கள் தொடர்பாக அறிய வாசிக்க வேண்டியது சஞ்சீவ் பருவா எழுதிய ‘இன் தி நேம் ஆஃப் தி நேசன்: இந்தியா அண்ட் இட்ஸ் நார்த் ஈஸ்ட்’ (In the Name of the Nation: India and its North East -2020). இந்தியாவின் மத்திய மாநிலங்களில் மாவோயிஸ்ட்டுகள் நிகழ்த்திய கிளர்ச்சிகள் குறித்தும் அவற்றால் ஏற்பட்ட விரிவான விளைவுகள் குறித்தும் அறிய நந்தினி சுந்தர் எழுதிய ‘தி பர்னிங் ஃபாரெஸ்ட்’ (The Burning Forest -2016) படிக்கப்பட வேண்டும்.

இதுவரை பட்டியலிடப்பட்ட நூல்கள் அனைத்துமே தீவிர ஆய்வுக்குப் பிறகு கிடைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட அறிவார்ந்த தொகுப்புகளாகும். இந்த நூல்களில் விரிவான அடிக்குறிப்புகளும் மூல நூல்கள் – ஆய்வுகள் பற்றிய தரவுகளும் தரப்பட்டுள்ளன.

மிகவும் பிரபலமான சில நூல்கள் பற்றி இப்போது பார்ப்போம். இவற்றில் இரண்டு கல்வியாளர்களுடையது. ஜீன் திரெசே, ஆந்திரே பெடைய்ல் இவற்றை எழுதியுள்ளனர். ஜீன் திரெசே எழுதியது ‘சென்ஸ் அண்ட் சாலிடாரிட்டி: ஜோலாவாலா எகானமிக்ஸ் ஃபார் எவ்ரிஒன்’ (Sense and Solidarity: Jholawala Economics for Everyone -2017). ஆந்திரே பெட்டைல் எழுதியது Chronicles of Our Time (2000). இவர்களில் திரெசே வளர்ச்சிப் பொருளியல் அறிஞர். பெட்டைல் ஆகச் சிறந்த சமூகவியலாளர்.

அடுத்து பத்திரிகையாளர்கள் எழுதிய நான்கு சிறந்த புத்தகங்களைக் குறிப்பிடுகிறேன். மும்பை சேரிப்பகுதி குறித்து மிகச் சிறப்பாக கேத்தரின் பூ எழுதியது ‘பிஹிண்ட் தி ப்யூட்டிஃபுல் ஃபாரெவர்ஸ்’ (Behind the Beautiful Forevers -2012). கிராமப்புற மக்களின் போராட்டம், வாழ்க்கை குறித்து பி.சாய்நாத் எழுதியது ‘எவ்ரிபடி லவ்ஸ் ஏ குட் ட்ராட்’ (Everybody Loves a Good Drought -2019); சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத் தேர்தல் தொடர்பாக ராஜ்தீப் சர்தேசாய் எழுதியது ‘ஹவ் மோடி வான் இந்தியா’ (How Modi Won India -2020). மார்க் டுலி எழுதியது ‘நோ ஃபுல் ஸ்டாப்ஸ் இன் இந்தியா’ (No Full Stops in India -1991). இந்தியர்களால் பெரிதும் மதிக்கப்பட்டவரும் நீண்ட காலம் இந்தியாவில் பணிபுரிந்தவருமான டுலியின் ஒன்றுக்கொன்று தொடர்புள்ள நீண்ட கட்டுரைத் தொடர் இந்நூல்.

வாழ்க்கை வரலாற்று நூல் என்பது அந்தந்த காலத்திய சமூக, அரசியல் வரலாற்றை வெளிப்படுத்துவது. சுய வரலாற்று நூலுக்கும் அதே தன்மை உண்டு. நான் விரும்பிய அத்தகைய நூல்களை இங்கே பட்டியலிடுகிறேன். அவற்றில் இரண்டு பட்டியல் இனத்தவரால் எழுதப்பட்டவை. ஒன்று ஆங்கிலத்தில் - சுஜாதா கிட்லா என்பவரின் ‘ஏன்ட்ஸ் அமாங் எலெஃபென்ட்ஸ்’ (Ants among Elephants -2017). இன்னொன்று ஓம்பிரகாஷ் வால்மீகி என்பவரால் இந்தியில் முதலில் எழுதப்பட்டது. ‘ஜூதன்’ (Joothan) என்ற அந்த நூலை அருண் முகர்ஜி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் (2004). இரண்டு நூல்கள் பெண்களால் எழுதப்பட்டவை. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பத்மா தேசாய் ஆங்கிலத்தில் எழுதியது ‘பிரேக்கிங் அவுட்’ (Breaking Out -2012). மல்லிகா அமர் ஷேக் என்பவர் உழைக்கும் வர்க்க பின்புலத்தில் மராத்தி மொழியில் முதலில் எழுதி பிறகு ஜெர்ரி பின்டோ என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ‘ஐ வான்ட் டூ டெஸ்ட்ராய் மைசெல்ப்’ (I Want to Destroy Myself -2019) என்ற நூல்.

1950கள் முதல் வெளியான இந்தப் புத்தகங்கள் பொருளாதாரம் – கலாச்சாரம் ஆகியவற்றைவிட சமூக – அரசியல் சார்பு அதிகமுள்ளவை. ‘நியூ இந்தியா ஃபவுண்டேஷன்’ என்ற நிறுவனத்துடன் நீண்ட காலமாகத் தொடர்புள்ளவன் என்பதால் அது வெளியிட்ட நூல்களை இங்கே குறிப்பிடவில்லை. மேற்கொண்டு அறிய அணுக வேண்டிய மின்னஞ்சல்: https://www.newindiafoundation.org/books.

நான் குறிப்பிட்டுள்ள ஐம்பது நூல்களில் சிலவற்றையாவது வாசகர்கள் படித்துப் பார்க்க விரும்புவார்கள் என்று நம்புகிறேன். இவை அனைத்துமே இப்போது பெரும்பாலும் அச்சில் உள்ளன. அப்படி இல்லாதவற்றை archive.org என்ற இணையதளத்தில் வாசித்துவிடலாம். பல புத்தகங்கள் இந்தியிலும் பிற மாநில மொழிகளிலும் மொழியாக்கமும் கண்டுள்ளன.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

தமிழில்: வ.ரங்காசாரி

6






பின்னூட்டம் (5)

Login / Create an account to add a comment / reply.

Lakshmi narayanan   12 months ago

Vp Singh's biography is missing,

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Saravanan P   2 years ago

A good feed for those who are interested to understand India in right perspective.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

K.R.Athiyaman   2 years ago

விரிவான பட்டியலுக்கு நன்றி. ஆனால் ராம் குஹா, சோசியலிச மனோபாவம் கொண்டவர் என்பதால் பொருளியல் வரலாறு பற்றி, சில முக்கிய ’வலதுசாரிகளின்’ நூல்களை புறம் தள்ளியுள்ளார். இந்திய பொருளியல் வரலாற்றை எளிதாக புரிந்து கொள்ள உதவும் முக்கிய நூல்கள் : 1.சுவாமிநாதன் அங்கலேஸ்வரியா ஐயர் எழுதிய Escape from the Benevolent Zookeepers, (https://www.amazon.in/Escape-Benevolent-Zookeepers-S-Swaminathan/dp/8189906119), 2.குர்ச்சரன் தாஸ் எழுதிய India Unbound (https://www.amazon.in/India-Unbound-Independence-Global-Information/dp/0143419250), 3.சாம் பிட்ரோடாவின் சுயசரிதை - Dreaming Big: My Journey to Connect India (https://www.amazon.in/Dreaming-Big-Journey-Connect-India/dp/0670085677)

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

Christopher J Aalan   2 years ago

குஹாவின் நூல்கள் இறுதியில் காவியை தூக்கி பிடிப்பதாக நண்பர்கள் கூற கேள்வி பட்டு இருக்கிறேன் ... இந்திய வரலாறு காந்திக்கு பிறகு என்ற நூலின் இரண்டாம் பகுதி அதை மெய்ப்பிப்பதாக அறிகிறேன் பின்னுரை நீங்கள்தான் சொல்ல வேண்டும்

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

விஷ்வ துளசி.சி.வி   2 years ago

அருமை

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

மீன் குழம்புஇருமொழிஅப்பாவின் மீசைஈனுலைசிஏஏஇந்தியாவின் மகத்தான இடதுசாரிகள்ஏ.எம்.ஜிகீஷ் கட்டுரைஅருந்ததி ராய்ஸ்டாலினிஸ்ட்டுகள்இருவேறு உலகம்தம்பிமாறிய நடுத்தர வர்க்கம்வெள்ளைப் பொய்கள்சாப்பாட்டுப் புராணம் சமஸ்இங்கிலீஷ் ஆட்சிபிரதமர்பாரத ஒற்றுமை யாத்திரைசித்தாந்த அரசியல்என்எஸ்ஓமீண்டும் கறுப்பு நாள்ஸ்ரீ ரங்கநாதர்விசிலூதிகளுக்கான பாதுகாப்பு என்னஉணவுமுறைஅசோகர்மடாதிபதிகள்உலகள்ளூரியத்துக்கான அறைகூவல்தொல்லியலாளர்கள்வெண்மைப் புரட்சிஅக்பர்malcolm adiseshiah

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!