இன்னொரு குரல் 2 நிமிட வாசிப்பு

தேவை அதிகாரம் கோராத, உரிமைக் குரல் எழுப்பும் ஓர் ஆளுமை!

வாசகர்கள்
13 Oct 2021, 4:59 am
0

தமிழில் தீவிரமான விவாதங்களை வளர்க்கும் பணியில் தன்னையும் ஈடுபடுத்திக்கொள்கிறது ‘அருஞ்சொல்’. அதனால்தான் தலையங்கம், கட்டுரை ஆகியவற்றுக்கு இணையான முக்கியத்துவத்தை ‘இன்னொரு குரல்’ பகுதிக்கு அளித்து, இணையதளத்தின் பிரதான இடத்திலேயே அதற்கு இடமும் அளிக்கிறது. ‘அருஞ்சொல்’ இதழை வாசிப்பவர்கள் வெறும் வாசகர்கள் மட்டும் இல்லை; எழுத்தாளர்கள், அறிஞர்கள், பத்திரிகையாளர்கள், கொள்கை வகுப்பாளர்களான அரசியலர்கள் ¬– அதிகாரிகள், செயல்பாட்டாளர்கள், ஆசிரியர்கள் என்று பல்வேறு துறை ஆளுமைகளும் ‘அருஞ்சொல்’லை வாசிக்கிறார்கள் என்பதை அறிந்திருக்கிறோம். ஆகையால், கட்டுரைகளை வாசிப்பவர்கள் ‘எனக்குப் பிடிக்கிறது அல்லது பிடிக்கவில்லை’, ‘நான் இதை ஆதரிக்கிறேன் அல்லது எதிர்க்கிறேன்’ என்பதுபோல ஓரிரு வரிகளில் தங்கள் கருத்துகளை எழுதாமல் விரிவாக எழுதிட வேண்டுகிறோம். அப்படி எழுதப்படும் கருத்துகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை ‘இன்னொரு குரல்’ பகுதியில் வெளியாகும். கருத்துகளைப் பின்னூட்டப் பகுதியில் எழுதிடுங்கள் அல்லது aruncholeditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடுங்கள். தயைகூர்ந்து உங்கள் பெயருடன், ஊர் பெயரையும் குறிப்பிடுங்கள். 

 

தேவை அதிகாரம் கோராத, உரிமைக் குரல் எழுப்பும் ஓர் ஆளுமை!

@ போராட்டம் என்றாலே வன்முறையா: பத்ரிக்கு ஒரு மறுப்பு

இதை இரண்டு வழிகளில் பார்க்கிறேன். 1. ஒரு சமூக அமைப்பில் ஏற்கெனவே நிலையான சமூக மற்றும் பொருளாதார  பாதுகாப்பைப்  பெற்றிருப்பவர்கள், மாற்றங்களை விரும்புவது இல்லை. தமக்குச் சாதகமான அந்நிலையே தொடர விளைவார்கள்,  அந்நிலைக்கு  குந்தகம் விளைவிக்கும் எந்த ஒரு செயல்பாடு சார்ந்தும் எதிர்மனநிலையே கொண்டிருப்பார்கள். தங்கள் நிலை அப்படியே தொடர முதல் தேவை அதிகார அமைப்பு வலுவானதாக இருக்க வேண்டும். எனவே எப்போதும் இந்த அதிகார அமைப்பு சார்ந்த இவர்கள் ஆதரவு வலுவானதாக இருக்கும். அதை எல்லா நிலைகளிலும் இவர்கள்  ஆதரிப்பதைக் காணலாம். Even they  prefer leaders whom they see as decisive, authoritative and dominant, even if they are morally questionable.They only see even democratic way protest as a disorder, threat to their present security, feel tremendous anxiety if power is challenged. To bring a sense of safety back into their lives, they latch on to authoritarianism.  Insecurity and weakness are linked to the rise of autocrats and the erosion of democracy. 2. தமக்கு உகந்த ஆட்சி நடைபெறும்போது  அதற்கு எதிரான நியாயமான மக்கள் போராட்டங்களைக்கூட ‘அநியாயமாக’ பெயர் பண்ணுவது. ஒரு பெரும் அமைதியான மக்கள் போராட்டத்தில் நடக்கும் ஒன்று இரண்டு சிறு மாற்று நிகழ்வுகளை சுட்டிக்காட்டி மொத்த போராட்டத்தையும் கொச்சைப்படுத்தி அவற்றை அநியாயங்களாக வகைப்படுத்துவார்கள். அதே  நேரத்தில் தமக்கு விருப்பமற்ற ஆட்சி இருக்கும் காலத்தில், நடக்கும் தொடர் போராட்டத்தை  ‘இரண்டாம் சுதந்திரப் போர்’ என்று முழங்கிச் சிலிர்ப்படைவார்கள். “போராட்டத்துக்குப் பதில், நீதிமன்றத்துக்குச் செல்லலாம். அல்லது, அடுத்த தேர்தலில், வாக்குகள் வழியே வேறொரு அரசைக் கொண்டுவரலாம். ஆனால்,  இந்த இரண்டு வழிகளைத் தவிர்த்து, நாங்கள் எங்களுக்கென்று ஒரு போராட்ட வடிவத்தை வைத்திருக்கிறோம், அதை நாங்கள் செயல்படுத்துவோம் எனச் சொல்வது  அராஜகம்” என்ற இந்தச் சிந்தனை இந்த இரண்டு மனநிலைகளில் இருந்தே கிளந்தெழுகிறது.

- சரண் விவேகா

 

@ மக்களிடமிருந்து விலகும் இந்திய வெகுஜன ஊடகங்கள்

இது வெகுஜன ஊடகம் குறித்த ஒரு வலைதள ஊடகத்தின் செய்தி. ஊடகம் என்றால் அதில் நம்ப ஒன்றுமில்லை அல்லது நம்பிக்கை கொள்ள ஒன்றுமில்லை என்ற எண்ணம் இந்தியச் சாமானியர்களுக்கு அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்தியாவில் ஊடகங்களால் பாதிப்புக்குள்ளான சமூகங்களும், துறைகளும், தளங்களும், தனிமனிதர்களும் கொஞ்சமல்ல. இன்று விரிந்து கிடக்கும் வலைதளத்தின் வீச்சு சிற்சில அச்சத்தை ஊடகத்துறையில் உருவாக்கியிருக்க வாய்ப்புண்டு. என் போன்ற வாசகர்களின் ஆதங்கம் எல்லாம், ஊடகமும் ஊடகவியலும் தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்பதே. அப்போதுதான் ஊடகத்தை நடத்துவோர், ஊடகவியலாளர்களின் குரல் மக்களுக்கான குரலாக மாறும். இல்லையேல் ஊடகத்தின் மீதான நம்பகத்தன்மை என்பது என்றும் எப்போதும் கானல் நீரே! 

- செய்யத் புகாரி

 

@ முதல்வர்களுக்கான தமிழக முதல்வரின் கடிதம் சரியான ஆரம்பம்!

பா.ஜ.க அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியிருப்பது, காலம் தாழ்ந்த செயல்பாடு என்றாலும் நாடு எடுக்க வேண்டிய நல்ல நடவடிக்கை. திரும்பிப் பார்க்கிறேன். நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டதை முதல் ஆளாக வரவேற்ற எம்ஜிஆர், அந்த நெருக்கடி நிலையில் மாநில உரிமை பறி்க்கப்பட்டபோது, படப்பிடிப்பில் மூழ்கிவிட்டார். மக்களாட்சி மீட்பில் ஜெயப்பிரகாஷ் நாராயணனோடும் தேசிய இயக்கங்களோடும் உடன்பாடு கொண்டு உருகிய கலைஞர் ’இரண்டாம் விடுதலைப் போருக்குப்’ பின்னால் மாநில உரிமையை மீட்க முயலவில்லை. சர்க்காரியா வழக்கு மீட்டிப்புப் போராட்டத்தில் தோற்று உடன்பாடு முறித்தார். நேருவின் மகளை அழைத்து, நிலையான ஆட்சியைப் பெறத் துணைநின்றவர்கள் சர்க்காரியா ஆணையத்தைத் திரும்பப் பெறுவதில் வென்றார்களே தவிர, நேருவின் மகள் பறித்த மாநில உரிமையை மீட்கவில்லை. போபர்ஸ் வழக்கினால் மக்களால் ராஜீவ் தண்டிக்கப்பட்டு வி.பி.சிங் தலைமையேற்ற அரசில் பங்கு பெற்றாரேயன்றி, மாநில உரிமை கோரவில்லை. பாசக 13 நாள் ஆட்சிக்குப் பின்னால், ஜெயலலிதா அம்மையார் கூட்டோடு நிலையான ஆட்சியை அமைத்தாலும் ஆண்டொன்றுக்குப் பின்னால், அம்மையாரே அதைக் கவிழ்த்தார். மீண்டும் அமைந்த ஆட்சியிலே பங்கு பெற்று, மாறனும் பாலுவும் மற்றோரும் அமைச்சராய் வீற்றிருந்தும், மாநில உரிமை மீட்க அமைச்சரவையில் முன்மொழியவில்லை. பிறகு கூட்டணி மாறி மன்மோகன் ஆட்சியில் பத்தாண்டுக் காலம் வீற்றிருந்த காலத்திலும் மாநில உரிமைகளுக்கான முயற்சிகள் பெரிதாக இல்லை. ‘மோடி என் நண்பர்’ என்று உரக்கச் சொல்லிய சமூக நீதி காத்த வீராங்கனை ஜெயலலிதாவும் மாநில உரிமைகளைப் பற்றிச் சிந்திக்கவில்லை. நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்தும், ஆள்வோரோடு கூட்டணி இருந்தும், நாலாண்டுக்காலத்தில் எடப்பாடியும் உரிமையைக் கனவிலும் நினைக்க அஞ்சினார். உரிமையை இழந்து ஏறத்தாழ நாற்பத்தைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. பல மாநிலக் கட்சிகளின் ஆதரவில் ஒன்றிய அரசு வாழ்ந்த காலங்களில் நடக்காத முயற்சியை, அறுதிப் பெரும்பான்மை பெற்று ஒருகட்சி ஆட்சி நிகழும் காலத்திலேனும் தொடங்கியது வரவேற்கத்தக்கதே. இது ஒரு கட்சியின் சிக்கல் இல்லை. கூட்டாட்சியின் சிக்கல். நிலப்பரப்பின் ஆட்சியல்ல - மொழிவழி மாநிலங்களின் கூட்டாட்சி. கூட்டாட்சி நிலப்பரப்பு முழுமையும் இக்கருத்து உருவாக வேண்டும். சுயாட்சி கோரும் பஞ்சாப் ஒருபக்கம், நாங்கள் தனித்துவமானவர்கள் எனும் வடகிழக்கு ஒருபக்கம், ’தேசிய இனங்களின் சுயாட்சி’ என்று முழங்கிய மார்க்ஸ் எனும் பேரறிவாளனின் சின்னம் தாங்கிய செங்கொடிக் கேரளா ஒருபுறம், மாநில சுயாட்சி முழங்கிய அண்ணா வாழ்ந்த தமிழ்நாடு ஒருபுறம், இத்தனை மக்களையும் இணைக்க அதிகாரம் கோராத உரிமைக் குரல் எழுப்பும் ஓர் ஆளுமை காலத்தின் தேவை. தோன்றுவாரா? முதல்வர்களுக்கான தமிழக முதல்வரின் கடிதம் சரியான ஆரம்பம்!

- எஸ்.என்.விஜயராகவன்
அதிகம் வாசிக்கப்பட்டவை

தவில் கலைஞர்இம்ரான் கான்மார்ட்டின் லூதர் கிங்அலுவலகப் பிரச்சினைமாநிலத்தின்வீழ்ச்சிபாரதிய ஜனதா கட்சிடேவிட்சன் தேவாசீர்வாதம்காந்திய சோஸலிஷம்மதன்லால் திங்க்ராவியாபாரிகள்பயிர்வாரிசாதனைச் சிற்பிகுடல் இறக்கம்: என்ன செய்வது?வியூக அறிக்கைமக்கள்தொகைராஜாஜி சமஸ்கழுத்து வலியால் கவலையா?ரவிச்சந்திரன் சோமு கட்டுரைஊடகம்கோணங்கிஅஜித் தோவல் மார்க்கேஸ் மற்றும் ஜெயகாந்தன்புனித பிம்பம்கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்சமஸ் கல்யாணி அருஞ்சொல் பேட்டிஆசியாகூட்டுறவு கூட்டாச்சிரிசர்வ் வங்கிவிவசாயிகள்ஆண்களைக் காக்க வைப்பதில் அப்படியென்ன அல்ப சுகம்?

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!