கட்டுரை, கல்வி 5 நிமிட வாசிப்பு

பரக் அகர்வால் நியமனத்தைக் கொண்டாட ஏதும் இல்லை, ஏன்?

சேஷாத்ரி குமார்
03 Dec 2021, 5:01 am
5

ர் இந்தியர் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருடைய பெயர் மறந்துவிட்டது, கூகுளில் தேடிப் பார்த்துவிட்டேன். ஆம், அவர் பரக் அகர்வால். கட்டுரையில் சுவை சேர்ப்பதற்காக இப்படி நடிக்கவில்லை, உண்மையிலேயே நினைவுக்கு வரவில்லை. இதை ஒரு முக்கிய சாதனையாக நான் நினைக்கவில்லை என்பதும் ஒரு காரணம். இது ஏன்?

அகர்வால் ஐ.ஐ.டி.யில் படித்தவர், ஆம், அப்படித்தான்.

இதனால் இந்தியர்கள் தங்களுக்குள் - வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்குள்ளும் - சுய பாராட்டுகள் வளர்ந்துகொண்டே வருகின்றன. ‘பாருங்கள், நாம் அறிவாளிகள் என்பது மீண்டும் நிரூபணமாகிவிட்டது. அகர்வால் அதை நிரூபித்திருக்கிறார். சுந்தர் பிச்சை, நாதெள்ளா, கிருஷ்ணா, இந்திரா நூடி, நாராயண் போன்று பல இந்தியர்கள் அமெரிக்காவின் உலகப் புகழ் வாய்ந்த நிறுவனங்களின் தலைவர்களாகி வருகின்றனர்’ என்கின்றனர்.

இருக்கலாம், இதற்காக நீங்கள் ஏன் போர்த்திக்கொண்டு புளகாங்கிதம் அடைய வேண்டும்?

நீங்கள் என்னைக் கேட்கலாம், ‘ஏன் உனக்கு இதில் மகிழ்ச்சி இல்லையா, நீ பெருமிதப்படவில்லையா?’ என்று.

ஆமாம், நான் பெருமிதப்படவில்லை, துள்ளிக்குதிக்கவில்லைதான். காரணம், அறிவுக்கூர்மை என்பது ஏதோ ஒரு நாட்டுக்கோ, இனத்துக்கோ மட்டும் உரியதல்ல. உலகத்தின் அனைத்து மக்களிடமும் அனைத்து இனங்களிலும் சாதிகளிலும் மதங்களிலும் மொழிகளிலும் விரிந்து கிடக்கிறது.

விகிதத்தைக் கவனித்தீர்களா?

உலகின் பெரும் நிறுவனங்களில் சுமார் ஒரு டஜன் நிறுவனத்துக்கு மட்டும், உலகின் 18% மக்கள் தொகையைக் கொண்டுள்ள பெரிய நாட்டைச் சேர்ந்தவர்கள் தலைவராவதற்கு நான் ஏன் வியப்படைய வேண்டும்? 

நீங்கள் விகிதத்தைக் கவனித்தீர்களா? நம்முடைய மக்கள்தொகைக்கேற்ப உலகின் முன்னணி 500 நிறுவனங்களில் குறைந்தபட்சம் 90 பேராவது இந்தியத் தலைவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். நிச்சயமாக நாம் இன்னும் அந்த நிலையை எட்டிவிடவில்லை. இந்த ஒப்பீட்டின்போது நான் ரிலையன்ஸ் போன்ற நம் நாட்டு நிறுவனங்களைச் சேர்க்கவில்லை, காரணம் நாம் வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்பாகத்தான் பெருமையும்படுகிறோம். 

அது மட்டுமல்ல; இந்தியாவின் மிகச் சிறந்த மூளைகள் அமெரிக்கா நோக்கித்தான் பெயருக்காகவும் சுய முன்னேற்றத்துக்காகவும் செல்கின்றன. இந்தியாவையே சேர்ந்த 500 முன்னணி நிறுவனங்களைப் பட்டியலிட்டால்கூட தலைமை நிர்வாகிகளாக 90 இந்தியர்கள் கிடைப்பார்களா என்பது சந்தேகம்தான். நன்கு படித்த, அறிவாளிகளான இந்தியர்கள் பெரிய வாய்ப்புகளுக்கான நாடான அமெரிக்காவுக்குத்தான் அதிகம் படையெடுக்கின்றனர். 

உள்நாட்டில் வழி இல்லையா?

மிகச் சிறந்தவர்களில் மிகச் சிறந்தவர்களான அறிவாளிகள் அமெரிக்காவுக்குச் செல்வதற்கு முன்பு இடைத்தங்கல் இடமாக இருப்பவைதான் ஐஐடிக்கள். இந்தியாவின் முதன்மையான தொழில்நுட்பக் கழகங்களான இவற்றில் பயில்வதற்கு மிகவும் கடினமான நுழைவுத் தேர்வை எழுதியாக வேண்டும். இது கூட்டு நுழைவுத் தேர்வு (ஜேஇஇ) என்று அழைக்கப்படுகிறது. தேர்வு எழுதுவோரில் 1% முதல் 2% பேர்தான் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். எஞ்சியவர்கள் நிராகரிக்கப்படுகின்றனர்.

ஐஐடிக்களில் சேருவோரில் பெரும்பான்மையானவர்களின் லட்சியம் படித்து முடித்ததும் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்குச் சென்றுவிட வேண்டும் என்பதுதான். முப்பதாண்டுகளுக்கு முன்னால் ஐஐடியில் படித்தபோது என்னுடன் பயின்றவர்களில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமானவர்கள் பி.டெக். முடித்ததும் அமெரிக்கா சென்றனர் - நான் உள்பட. (அப்படி வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டு மீண்டும் இந்தியா திரும்பிய வெகு சிலரில் நானும் ஒருவன்).

ஐஐடியில் படித்த அறிவாளிகள் மட்டும் அமெரிக்கா செல்வதில்லை. 1990-ல் நான் அங்கு சென்றபோது எனக்கு அறைத் தோழராகக் கிடைத்தவர் கர்நாடக மாநிலத்தின் தாவணகரே பொறியியல் கல்லூரியில் படித்தவர். அங்கே தங்கப் பதக்கம் வாங்கியவர். மிகச் சிறிய நகரங்களில் வளர்ந்த அவரைப் போன்றவர்கள், ஐஐடியில் பயில நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்ற விவரங்களையே கல்லூரியில் படிக்கும்போதுதான் தெரிந்துகொள்கின்றனர். அவர்கள் அதைத் தெரிந்துகொள்ளும்போது அதற்கான வயது அல்லது தருணம் கடந்துவிடுகிறது.  

அடுத்ததாக வருகிறவர்கள், பொறியியல் துறை சாராதவர்கள். இந்திய முன்னணிக் கல்வி நிறுவனங்களான ஐஐஎம்கள், செயின்ட் ஸ்டீபன் கல்லூரி, ஜேஎன்யு, பிரசிடென்சி போன்றவற்றில் படித்தவர்கள். அவர்களும் தங்களுக்கு வாக்களிக்கப்பட்ட புனித பூமிக்குச் செல்வதற்கு முன்னால் இந்தியக் கல்வி நிறுவனங்களில் பயின்றவர்கள்தான்.

ஆகவே, இந்தியாவின் அறிவாளிகளில் பெரும்பாலானவர்கள் மேற்கொண்டு முன்னேறுவதற்காக அமெரிக்காவுக்குச் செல்கின்றனர். இப்படி இந்திய மூளை ஏற்றுமதி கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடக்கிறது. இதைப் பற்றியும் தொடர்ந்து பலமுறை விவாதங்கள் நடக்கின்றன.

சீனாவைக் கவனியுங்கள்

ஏன் இப்படி வெளிநாடு செல்கிறவர்களுக்கு இந்திய அரசு மானியச் செலவில் உயர் கல்வி தர வேண்டும் என்று நியாயமாகவே கேட்கின்றனர். இந்தியாவிலிருந்து செல்வோர் அறிவாளிகள் என்றால் உலகின் முதல் 500 நிறுவனங்களில் இந்தியர்கள் தலைமை வகிக்கும் எண்ணிக்கை இப்போதிருப்பதைவிட பல மடங்கு அதிகமாகத்தான் இருக்க வேண்டும். எனவேதான் நான் உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கவில்லை. 

ஐம்பதாண்டுகளில் நம்மால், விரல்விட்டு எண்ணக்கூடிய வகையில் சில நிறுவனங்களுக்கு மட்டுமே தலைமை நிர்வாகிகளாகும்படி இவ்வளவு குறைந்த எண்ணிக்கையிலானவர்களைத்தான் உயர் பதவிக்குத் தயார் செய்ய முடிந்ததா என்ற கேள்வியை நான் வியப்போடு எனக்குள் கேட்டுக்கொள்கிறேன்.

உண்மையிலேயே பெருமைப்பட வேண்டியவர்கள் யார் தெரியுமா, சீனர்கள்தான். நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக உயர சீனர்கள் அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டியதில்லை. சீனத்தில் அமர்ந்தபடியே அவர்களால் வெற்றி வரலாறுகளைப் படைக்க முடிகிறது. இந்தியர்கள், அமெரிக்கர்களால் நிறுவப்பட்ட கூகுள், மைக்ரோசாஃப்ட், ட்விட்டர் ஆகிய நிறுவனங்களின் தலைமைப் பதவிக்குத்தான் வர முடிகிறது. சீனர்களோ - அலிபாபா, டென்சென்ட், டீடி, ஜியோமி, கிரேட் வால் மோட்டார்ஸ், ஹுவாவே, இசட்டிஇ, ஃபாக்ஸ்கான் மற்றும் பல நிறுவனங்களை சொந்த நாட்டில் உருவாக்கவே முடிகிறது.

இந்தியர்களும் அப்படிச் சாதிக்கும்போது நான் உற்சாகக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வேன்!

© தி வயர், www.thewire.in

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சேஷாத்ரி குமார்

சேஷாத்ரி குமார், ஆய்வாளர். மும்பை ஐஐடியில் வேதிப் பொறியியலில் பி.டெக். பயின்று, ஆராய்ச்சி - வளர்ச்சிப் பிரிவில் பணிபுரிகிறவர். அமெரிக்காவின் உடா பல்கலைக்கழகத்தில் எம்எஸ், பி.ஹெச்டி. பட்டங்களைப் பெற்றவர்.

தமிழில்: வ.ரங்காசாரி


1





பின்னூட்டம் (5)

Login / Create an account to add a comment / reply.

Kannan   3 years ago

சமஸ் Samas Arunchol அருஞ்சொல் what a naïve article.... the author Seshadri Kumar knows very well that government spends around 9000 crores on IITs IMMs etc., just for the 'elite' to get educated without any obligation to serve the country and leave the country once they complete their graduation... can we count the number of instances that IITian or IIMans have been innovative or created something useful to the people of the subcontinent ? for the 'elite' who were not supposed to travel overseas due to religious beliefs, with the advent of democracy knew that they cannot compete in a equal opportunity space, 'fled' the subcontinent using FREE government resources and then invented a phrase 'brain drain is better than brain down the drain'... WHY are we always pushing the actual things that need to be discussed under the carpet and act surprised why things are not happening in the subcontinent?

Reply 1 1

மன்னை. அரவிந்தன்   3 years ago

இந்திய மக்களின் வரி பணத்தில் கட்டமைக்கப்பட்ட ஐஐடி(IIT), ஐஐஎம் (IIM) -கள் மிக குறைந்த கல்வி கட்டடத்தில் உலகத்தரம் வாய்ந்த லட்சகணக்கான தொழில்நுட்ப வல்லுநர்களையும், தொழில் மேலாண்மை வல்லுனர்களையும் உருவாக்கி வருகின்றது! அவர்களை இந்தியா பயன்படுத்திக்கொள்கிறதா? என்றால் இல்லை என்பதே நிதர்சனம்! பெரும்பாண்மையான மாணவர்கள் அதுவும் அதிக மதிப்பெண் பெற்று தேர்வுபெறும் மாணவர்களை அமெரிக்க மற்று ஐரோப்பிய நாடுகள் / நிறுவனங்கள் கவர்ந்து சென்று விடுகிறார்கள், நமது மாணவர்களும் படிக்க வைத்த நாட்டை மறந்து, யார் பணத்தில் படித்தோம் என தெரியாமல் பணம் தேடி, சுக வாழ்வு தேடி ஓடிவிடுகிறார்கள்! இந்த நிலையை கட்டுப்படுத்த ஒரு சட்டம், அதாவது அவர்கள் ஐஐடி, ஐஐஎம் கல்லூரிகளில் இளங்கலை அல்லது முதுகலை படிப்பு முடிந்த பின் அவர்களுக்கு கொடுக்கப்படும் புரவிஷ்னல் (provisional degree) டிகிரியை வைத்து கொண்டு, இந்தியாவில் ஐந்தாண்டுகள் பணி புரிந்த பின் (தனியார் அல்லது அரசு நிறுவனங்களில்) சர்டிஃபிக்கேட்டை சமர்பித்து பின் அவர்களது பட்டத்தை பெற்று கொள்ளும் வகையில் சட்டம் இயற்றி, அவர்களின் திறமைகளை வெளிநாடுகள் பயன்படுத்திக் கொள்வதை தடுத்து, இந்தியா பயண்படுத்திக்கொள்ள வேண்டு

Reply 4 0

மன்னை. அரவிந்தன்   3 years ago

https://mannaiaravind.blogspot.com/2017/03/ceos.html இதையும் படித்து தங்கள் கருத்துக்களை சொல்லவும் Reply 0 0 Delete

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Kannan   3 years ago

சென்ற வாரம் Rediff இணைய தளத்தில் ஒரு கட்டுரையில் இந்த trend இனி குறைந்துவிடும் என குறிப்பிட்டுள்ளனர். Zomoto, Flipkart, PayTM போன்ற நிறுவனங்களின் தலைவர்கள் இந்தியாவிலேயே அந்த அளவு சம்பாதிக்க துவங்கிவிட்டது காரணமென சொல்லப்பட்டுள்ளது.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

மன்னை. அரவிந்தன்   3 years ago

என்.னுடைய 👇 இந்த 2017 ஆண்டு பதிவே பின்னூட்டமாக தந்து, இந்த காரணத்திற்காகவும் இதில் கொண்டாட ஒன்றுமில்லை என்பதை பதிவிட விரும்புகிறேன். https://mannaiaravind.blogspot.com/2017/03/ceos.html

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

சிறுநீரகப் பாதிப்புஉண்மைக்கு அப்பாற்பட்டதுகாங்கோ நதிfinancial yearரசிகர்கள்அருணாசலக் கவிராயர்இஞ்சிராநடைமுறைச் சிக்கல்கள்Amulகுலசேகரபட்டினம்சத்யஜித் ரே அருஞ்சொல் சரியா?ருவாண்டாகாங்கிரஸ் மடிந்துவிட வேண்டும்கூடுதல் தலைமை அரசு வழக்கறிஞர்ஃபாலி சாம் நாரிமன்ஆண்களைக் காக்க வைப்பதில் அப்படியென்ன அல்ப சுகம்?பொதுச் சமையல்உள்கட்டமைப்புமாநில நிதிநிலை அறிக்கை பிறகு…மதிப்பெண்களை வாரி வழங்குகின்றனவா மாநிலக் கல்வி வாரவி.டி.சாவர்க்கர்கட்டமைப்புப் பொறியாளர்பாரம்பரிய விவசாயம்லட்சியவாதிசமஸ் உதயநிதிமுதல் தியாகி நடராசன்நெல் கோதுமைகர்நாடக முதல்வர்களைக் கலக்கும் ஆப்ரஹாம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!