அரசியல், ஆசிரியரிடமிருந்து..., கூட்டாட்சி 2 நிமிட வாசிப்பு

ஸ்டாலினும் ராகுலும்

ஆசிரியர்
13 Apr 2024, 5:00 am
0

வாசகர்களோடு ஆசிரியர் பகிர்ந்துகொள்ளும் வகையில், ‘ஆசிரியரிடமிருந்து’ பகுதி வெளியிடப்படுகிறது. கூட்டங்கள், சமூகவலைதளங்கள் வழி ஆசிரியர் பகிர்ந்துகொள்ளும் குறிப்பிடத்தக்க செய்திகள் இங்கே இடம்பெறும்.

முதல்வரைச் சந்திக்க போயிருந்தேன். 'சோழர்கள் இன்று' புத்தகத்தைத் தமிழக முதல்வர் வெளியிட்டால் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணியது திடீர் யோசனை. கேட்டவுடன் மறுநாளே வீட்டுக்கு வரச் சொல்லிவிட்டார். புத்தக வெளியீடு முடிந்ததும் கையோடு திரும்பிவிடுவது என்றே திட்டம். அன்று அவருக்கு நெருக்கடியான நாள். வெளியீடு முடிந்ததும் புறப்பட்டோம். "இருங்கள், காபி சாப்பிட்டு செல்லலாம்" என்றார். 

வீட்டுக்குச் செல்வோருக்கு அவரைச் சந்திக்கும் முன்னரே வரவேற்பறையில் காபி / மோர் கொடுத்து உபசரிப்பார்கள். நான் ஏற்கெனவே அருந்தியிருந்தேன். அவருக்கும் இது தெரியும். கொஞ்சம் பேச விரும்புகிறார் என்றுணர்ந்து அமர்ந்தேன். 

ஆட்சியைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள், எப்படியான அபிப்ராயங்கள் இருக்கின்றன என்று கேட்டார். விமர்சனங்கள் எதுவாயினும் நேரடியாக அவரிடம் சொல்ல முடியும். நான் சொன்ன விஷயங்களைக் கேட்டுக்கொண்டார். அடுத்து, வேறு சில விஷயங்களைப் பேசியவர் ராகுல் காந்தியின் வீடு மோதி அரசால் பறிக்கப்பட்ட விவகாரத்துக்கு வந்தார். 

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

அந்த சமயத்தில்தான் அது நடந்திருந்தது. குமுதத்தில் இந்த விவகாரத்தைப் பற்றி எழுதியும் இருந்தேன் (கீழே இணைப்பு உள்ளது). கிட்டத்தட்ட பத்து நிமிஷம் ராகுலைப் பற்றி மட்டுமே பேசினார். "எப்பேர்ப்பட்ட குடும்பம் அது! நாட்டுக்காக உயிரையே கொடுத்தவங்க. அலகாபாத்துல உள்ள நேருவோட வீடு எவ்வளவு பெருசு! நாட்டுக்குக் கொடுத்துட்டாங்களே! ராகுலைக் குறிவெச்சு அடிக்கிறாங்க. அற்பத்தனமான கேஸ் இது. இவ்வளவு கீழே போய் தலைவர்கள் நடந்துக்கக் கூடாது. என்னால இதை ஜீரணிச்சுக்கவே முடியலை!" என்றார். ராகுலைப் பற்றி இன்னமும் அவர் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் அவரைத் தனிப்பட்ட வகையில் இந்த விவகாரம் ஆழமாகப் பாதித்திருப்பதை உணர்த்தியது. மக்கள்  திருப்பியடிப்பார்கள் என்றார்.

ராகுலை பிரதம முகமாக 2019இல் ஸ்டாலின் அறிவித்தது பெரிய முன்னகர்வு. வேறு யாரும் அப்போது அதற்குத் துணியவில்லை. காங்கிரஸ் அதைப் பயன்படுத்திக்கொண்டிருக்க வேண்டும். அந்தக் காலகட்டத்தில் அவரைச் சந்தித்தபோதும் ராகுல் மீது மிகுந்த நம்பிக்கையோடுதான் பேசினார். நேற்று தானே சென்று இனிப்பு வாங்கிக்கொண்டு ஸ்டாலினைச் சந்திக்கச் சென்ற ராகுல் "அண்ணன்" என்று அழைத்ததை வெறும் சம்பிரதாய அழைப்பாக நான் நினைக்கவில்லை. ஸ்டாலின் அதற்குப் பொருத்தமானவர்!

 

முன்னதாக ராகுல் காந்தி பற்றி ‘குமுதம்’ இதழில் ‘அருஞ்சொல்’ ஆசிரியர் எழுதிய கட்டுரையின் இணைப்பு இங்கே... | சக்தி வாய்ந்த இடத்தில் ராகுல்

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

3

2





அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

மானக்கேடுவால் நட்சத்திரம்தகுதித்தேர்வுபி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கட்டுரைமணி மண்டபம்இந்தித் திணிப்பு போராட்டம்மிகைல் கோர்பசெவ்பத்திரிகையாளர்கள் சங்கம்சோனியா காந்தி கட்டுரைதொழில்நுட்பக் கல்விபாரத ஒற்றுமை யாத்திரைஎஸ்.எஸ்.ஆர். பேட்டிசாப்பாட்டுப் புராணம் சமஸ்ஆஆகவாட்ஸப்புவி வெப்பமடைதல்விவிபாட் இயந்திரம்விவசாயிகள்வினையூக்கிவிசுவ இந்து பரிஷத்பெரியார் சொன்ன ‘சீவக்கட்டை’என்ன செய்கிறார்கள் ஆசிரியர்கள்?வர்த்தகம்தமிழ்ப் புத்தாண்டுஜீன் டிரேஸ் கட்டுரைரஜினி 63 - மறுபார்வை: நாம் ஏன் ரஜினியை நேசிக்கிறோமபூனைகள்முன்கழுத்துக்கழலைவிளிம்புநிலை மக்களிடம் ராகுலுக்கு ஆதரவுopposition

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!