கட்டுரை, சமஸ், ஆசிரியரிடமிருந்து... 2 நிமிட வாசிப்பு
தமிழ்நாட்டைப் புரிந்துகொள்ள ஒரு படம்!
வாசகர்களோடு ஆசிரியர் பகிர்ந்துகொள்ளும் வகையில், ‘ஆசிரியரிடமிருந்து’ பகுதி வெளியிடப்படுகிறது. கூட்டங்கள், சமூகவலைதளங்கள் வழி ஆசிரியர் பகிர்ந்துகொள்ளும் குறிப்பிடத்தக்க செய்திகள் இங்கே இடம்பெறும்.
பல வகைகளில் தமிழ்நாட்டின் சமூக யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள இந்தப் படம் உதவுவதாகச் சொல்லலாம். பொறிக்கப்பட்ட மீன், கோழி, காடைகளின் அருகிலேயே பூ சுற்றப்பட்டிருப்பது வள்ளலார் திருவிளக்கு. பக்கத்திலேயே தட்டில் விபூதி, சந்தனம். நெற்றியில் குங்குமமும் பூசியிருந்தார் அவர். பின்னணியில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் படம் கடைக்காரர் சார்ந்திருக்கும் கட்சியைக் குறிக்கிறது என்றால், படத்தின் மீது உள்ள மூவண்ணக் கொடி இயல்பான அவருடைய தேசப் பற்றைக் குறிப்பதாகக் கொள்ளலாம். நியாயமான விலையில் நல்ல கறியுடன் சூடான பிரியாணி தந்தார். வாழ்க ஜீவகாருண்யம்!
- சமஸ், முகநூல் குறிப்பு...

3

1



1


பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
Melkizedek 3 years ago
அண்ணா கடையின் முகவரி குறிப்பிடவில்லை.... சிறிய வருத்தம்...
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.