கட்டுரை, வாழ்வியல், கல்வி 3 நிமிட வாசிப்பு

குழந்தைகளை யார் வளர்க்க வேண்டும்?

என்.மாதவன்
02 May 2024, 5:00 am
0

குழந்தை வளர்ப்பு முறைகள் காலந்தோறும் மாற்றம் அடைந்துவருகிறது. மாற்றம் அடைந்துவருகிறது என்பதைவிட பெற்றோர்களின் கனவுகளுக்கு ஏற்ப அவர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தை மாற்றி அமைத்துவருகிறார்கள். ஆனால், உண்மை என்னவென்றால் குழந்தைகள் அவர்களாகவே வாழ்கிறார்கள். வளர்கிறார்கள். அவர்களாகவே எல்லாவற்றையும் செய்கிறார்கள்.

அடிப்படையில் எந்த ஒன்றையும் பிறர் செய்ய நாம் பயிற்றுவிக்கவே முடியாது. அவ்வாறு அவர்கள் பயில்வதற்கான சூழ்நிலையை எளிதாக்க மட்டுமே இயலும். கல்விக்கூடங்களும் பெரும்பாலும் இந்தப் பணியைத்தான் செய்துகொண்டிருக்கின்றன. 

பள்ளிக்கு மகிழ்ச்சியாக செல்கிறார்களா?

உலகம் முழுக்க பெற்றோர்களின் கனவுகளின் வீச்சு அதிகரித்துவருகிறது. இவ்வாறு அதிகரிப்பதற்கு ஏற்ப அவர்களது குழந்தை வளர்ப்பு முறைகளில், குழந்தைகளைக் கண்காணிப்பதில், கண்டிப்பதில் தீவிர கவனம் செலுத்துவோராக மாறிவருகின்றனர். ஒரு விஷயத்தை நாம் எளிதில் மறந்துவிடுகிறோம். அதாவது, ஒருவர் கற்றுக்கொள்கிறாரா என்ற மதிப்பீட்டை வெளியில் இருந்து ஒருவர் செய்வதைவிட கற்பவரே செய்துகொள்வதே மிகவும் சாலச் சிறந்தது.

மேலும் எந்தவொரு கற்றல் செயல்பாட்டிலும் கற்போரின் மகிழ்ச்சியானது உத்தரவாதப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. அவ்வாறு மகிழ்ச்சி உத்தரவாதப்படுத்தக்கூடிய எந்தப் பணியை யாரும் வெளிப்புறத்திலிருந்து செய்ய வேண்டியதில்லை. உதாரணமாக எந்தவொரு திருமண விசேஷத்திற்கும், காதணி விழாவிற்கும், கோயில் திருவிழாவிற்கும் யாரும் வருத்தத்துடன் புறப்படுவதில்லையே, ஏன்? அவர்களுக்கான மகிழ்ச்சி அங்கே குவிந்திருப்பதை அவர்கள் அறிந்திருப்பதே இதற்குக் காரணம்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

ஆனால், இதே மகிழ்ச்சியோடு இவ்விடங்களுக்குச் செல்லும் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்ல எவ்வளவு தூரம் மகிழ்ச்சியைக் காட்டுகிறது? என்று நாம் மதிப்பீடு செய்ய வேண்டும் அவ்வாறு மதிப்பீடு செய்வது எளிதான செயல்பாடு அல்ல. மேலும் சில கேள்விகளைக் கேட்டுப் பதில்கள் வரவழைப்பதும் சரியான செயல்பாடு அல்ல. இயல்பாக ஒரு தேர்வு நடத்துவதுபோல் உனக்குப் பள்ளிக்கூடம் போகப் பிடிக்கிறதா? ஆசிரியரைப் பிடிக்கிறதா? இவ்வாறான கேள்வி பதில் முறையில் அந்த மதிப்பீட்டினை நிகழ்த்திவிட முடியாது.

  • பள்ளி என்று நாம் சொல்லும்போதோ, அல்லது ஒரு ஆசிரியர் பெயரைச் சொல்லும்போதோ அந்தக் குழந்தைக்கு எப்படிப்பட்ட முகமாற்றங்கள் ஏற்படுகின்றன? 
  • எவ்வளவு ஆர்மாக அவர்கள், அவர்களுடைய வகுப்பறையைப் பற்றியோ அல்லது பள்ளியைப் பற்றியோ உரையாடலை தொடர் விரும்புகிறார்கள்? 
  • தொடர் விடுமுறை என்னும்போது அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்களா? அல்லது அவர்கள் பள்ளிய, பள்ளி நேரத்தை இழப்பதாக பார்க்கிறார்களா? 

இப்படியான பல்வேறு மதிப்பீடுகளைக் கொண்டு ஒரு பள்ளியானது அந்தக் குழந்தைக்கு மகிழ்வான இடமாக இருக்கிறதா என்பதை நாம் முடிவுசெய்ய வேண்டும்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

கண்களைத் திறக்கும் அறிவியல்காட்சிகள்

என்.மாதவன் 07 Apr 2023

நடைமுறை என்ன?

இயல்பில் என்ன நடைபெறுகிறது. பல விஷயங்களுக்கு, பல வேலைகளுக்கு நாம் ஒப்பந்தம் செய்வதுபோல ஒரு பள்ளியைக் குழந்தையின் கற்றலுக்கான ஒப்பந்ததாரராக பள்ளிகளை மாற்றி அங்கு இருக்கக்கூடிய ஆசிரியரை ஒரு ஒப்பந்ததாரராக மாற்றிவிட்டால் தங்களுடைய பணி தீர்கிறது என்ற வகையில் பெற்றோர்கள் தங்களது கடைமைகளை நிறைவுசெய்கின்றனர்.  பலரும் விரும்பக்கூடிய ஒரு ஒப்பந்ததாரராக இருக்கக்கூடிய பள்ளிக்கூடங்களில் நாம் குழந்தைகளைச் சேர்த்துவிடுகிறோம். அவர்களும் தான் மேற்கொண்ட ஒப்பந்தத்திற்கு ஏற்ப குழந்தைகளைப் பயிற்றுவிக்க விரும்புகிறார்கள்.     

உண்மையில் குழந்தைக்கு தனது கற்றலை எவ்வாறு மதிப்பீடு செய்துகொள்வது என்பதைப் பயிற்றுவிக்க வேண்டும். தங்களைத் தாங்களே மதிப்பீடு செய்துகொள்வதற்கான ஆர்வம் அவர்களுக்கு உண்டாக வேண்டும். அதுபோலவே ஆசிரியர்களுக்கும் அவர்களது கற்பித்தல் திறன் மீதான மதிப்பீடு நடைபெற வேண்டும். நேற்று நடத்தியது எவ்வாறு குழந்தைகளுக்குப் புரிந்தது? இன்று நாம் இந்த விஷயத்தை எப்படிச் சொல்லப்போகிறோம்? இதற்கான தயாரிப்பும் தேவையாகிறது. 

மேலும் 40 குழந்தைகள் உள்ள வகுப்பறையில் ஓர் ஆசிரியர் ஒவ்வொரு குழந்தையும் தனிப்பட்ட கற்போராக பார்ப்பது மிகவும் அவசியமானதாக இருக்கிறது. இந்நிலையில் ஒவ்வொரு குழந்தை பற்றிய ஒரு மதிப்பீட்டை ஆசிரியர் வைத்திருப்பது அவசியம். ஆனால், அதேநேரத்தில் 40 குழந்தைகளின் பெற்றோர்களால் அந்தக் குழந்தையின் பலம் பலவீனங்களைத் தனிப்பட்ட முறையில் ஆசிரியர்களிடம் பகிர்வது என்பது எளிமையான செயலாகவே இருக்கும்.

40 பேரையும் பார்த்து ஆசிரியர் புரிந்துகொள்ள ஆகும் நேரத்தைவிட தன் குழந்தையை ஒரு பெற்றோர் எளிதாக மதிப்பீடு செய்துவிட முடியும். ஆனால், இவ்வாறான மதிப்பீடு என்பது ஒரு புகார் தருவது போன்ற இயந்திரகதியாக நடக்காமல் குழந்தைகளுக்கு எதிரே அவர்களுடைய பாராட்டத்த விஷயங்களை சொல்லிவிட்டு, ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்களைத் தனியாக சொல்லிவிட்டு வர வேண்டும்.

ஆசிரியர்களும் பெற்றோர்களும்

இது ஏதோ பார்ப்பதற்கு ஒரு கடினமான செயல்போலத் தோன்றலாம், ஆனால் உண்மையில் ஒரு குழந்தை நன்றாக வளர்ந்து நல்ல மதிப்பீட்டு திறன் அடைந்து ஒரு நல்ல ஒரு தொழிலில் அவர்கள் பிரகாசிக்க வேண்டும் என்று சொன்னால், அதற்கு அவர்கள் 20வது வயதுகளில் தயாராக துவங்குவது என்பது அந்தக் குழந்தைக்கும் பாரமாக இருக்கும். அந்த மாணவனைப் பயிற்றுக்கும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் பாரமாக இருக்கும்.

அதற்கு பதிலாக ஒரு குழந்தையின் நடத்தையில் ஆரோக்கியமான மாற்றங்களைக் கொண்டுவருவதற்காக பணியை ஆசிரியர்களிடம் மட்டும் விட்டுவிடாது பெற்றோர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய காலம் கனிய வேண்டும். 

நல்வாய்ப்பாக என்று கூறிய பெற்றோர் பெரும்பாலும் துவக்க கல்வியோ அல்லது மேல்நிலை கல்வி படித்துள்ளார்களாக இருப்பதால் இந்த விஷயத்தை அவருடைய வாழ்வு அனுபவத்தின் அடிப்படையில் புரிந்துகொண்டு உதவி செய்ய வர இயலும். இது ஒரு வகையில் சுயநலமாக அவரவர்களது குழந்தை வளர்ப்பு என்ற சுயநலம்போலப் பார்த்தாலும்கூட இதன் மூலம் உருவாகும் சூழலால் பல நல்ல குடிமகன் / குடிமகள் இந்த நாட்டிற்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

அப்படிப்பட்ட புனிதமான செயலாக குழந்தை வளர்ப்பை இந்தச் சமூகம் அணுக இவ்வாறான புரிதல்களைக் காலந்தோறும் விதைத்துக்கொண்டிருப்பதே நமது கடமையாகட்டும். குழந்தைகளைச் சமூகமே சேர்ந்து வளர்க்கும் காலம் விரைவில் கனியட்டும்.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

அக்கறையுடனேயே அடியெடுத்து வைத்திருக்கிறது பள்ளிக்கல்வித் துறை
கண்களைத் திறக்கும் அறிவியல்காட்சிகள்
கல்விக் கொள்கையில் கவனம் அளிக்க வேண்டிய சில விஷயங்கள்

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
என்.மாதவன்

என்.மாதவன், கல்வியாளர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினர்.


2






அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

வொலோதிமீா் ஜெலன்ஸ்கிதேசத் தந்தைசம்பா சாகுபடி: நெல்வளமும் சொல்வளமும்காவியம்சனாதன தர்மம்தமிழாசிரியர் வரலாறு புதிய காலங்கள்சாதிப் பிரிவினைசு.வெங்கடேசன்தரவுப் புள்ளிகள்முதல் பதிப்புசாதியினாற் சுட்ட வடுசாதி அழிந்துவிடுமா? காட்சி ஊடகமும்திமுகவின் சரிவுகிராந்திகுடியரசு மாண்டுவிட்டதுகேசிஆர்முன்னோடி மாநிலம்விகடன் குழுமம்நவீன அறிவியல்சாரு நிவேதிதா சமஸ்ஆட்சியாளர்தமிழ்நாடு என்று என் மாநிலத்தை அழையுங்கள்!தகுதி நீக்கம்கீர்த்தி பாண்டியன்மா.சுப்பிரமணியம்வெற்றியாளர்கள்லக்கிம்பூர் கெரிசமூகப் பிரதிநித்துவம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!