கட்டுரை, ஆசிரியரிடமிருந்து... 2 நிமிட வாசிப்பு

தலைமைச் செயலகத்திலிருந்து ஓர் அழைப்பு

ஆசிரியர்
29 Mar 2022, 5:00 am
3

வாசகர்களோடு 'அருஞ்சொல்' சார்ந்த நகர்வுகளை ஆசிரியர் பகிர்ந்துகொள்ளும் வகையில் 'ஆசிரியரிடமிருந்து' பகுதி வெளியிடப்படுகிறது. நேரடி அறிவிப்புகள் போக கூட்டங்கள், சமூகவலைதளங்கள் வழி ஆசிரியர் பகிர்ந்துகொள்ளும் 'அருஞ்சொல்' தொடர்பான செய்திகளும் இங்கே இடம்பெறும்.

சற்றுமுன் ஒரு அழைப்பு. தலைமைச் செயலகத்திலிருந்து பேசுவதாக சொன்ன ஊழியர் தலைமைச் செயலர் பேச விரும்புவதாகக் கூறி, அழைப்பை இணைத்தார். 

தலைமைச் செயலர் திரு. இறையன்பு பேசினார். சமீபத்தில் 'அருஞ்சொல்' இதழில் வெளியான 'திராவிட மாதிரி எதிர்கொள்ளும் சவால்!' தலையங்கத்தையும், 'தமிழ்நாட்டின் பிஹார், உபி மாவட்டங்களை என்ன செய்யப்போகிறோம்?' கட்டுரையையும் அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டதாகக் கூறியவர், இன்று நடந்த அரசு செயலர்கள் கூட்டத்தில் அதை மையமாகக் கொண்டு விவாதித்ததாகத் தெரிவித்தார். 

தமிழ்நாட்டின் சில மாவட்டங்கள் ஆப்பிரிக்கா, உபி, பிஹார் சூழலுடன் ஒப்பிடத்தக்க அளவுக்கு மோசமாக இருப்பதையும், பிராந்தியரீதியாக தமிழகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வையும் விரிவாகச் சுட்டிக்காட்டும் தலையங்கம், கட்டுரை அவை. 

இந்த ஏற்றத்தாழ்வைப் போக்கும் வகையில் அரசின் கொள்கைகள் நடவடிக்கைகள் அமையும் என்று கூறிய அவர் துறைவாரியாக இது சம்பந்தமான நடவடிக்கைகள் அமையும் என்றும் தெரிவித்தார்.

சொற்கள் காரியங்கள் ஆகும் நாளில், தமிழகத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான பெரும் நடவடிக்கைகளில் ஒன்றுக்கான அடிக்கல்லாக இன்றைய கூட்டம் அமையும் என்று எண்ணுகிறேன்.

தொடர்ந்து 'அருஞ்சொல்' சுட்டும் விஷயங்களுக்கு அரசு உரிய கவனம் அளிப்பதும், தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதும் உவகை தருகிறது. விமர்சனங்களுக்குத் திறந்த மனதுடன் காது கொடுக்கும் தமிழக அரசின் இத்தகு அணுகுமுறை தொடர வேண்டும். 

தமிழக முதல்வர், தலைமைச் செயலர் மற்றும் இது சார்ந்த நடவடிக்கைகளோடு தொடர்புடைய அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி. மிக முக்கியமான ஒரு பிரச்சினையைப் புள்ளிவிவரங்களுடன் அணுகிய கட்டுரையாளர் மூர்க்குமாவுக்கு வாழ்த்துகள்?

தொடர்புடைய பதிவுகள்

திராவிட மாதிரி எதிர்கொள்ளும் சவால்!

தமிழ்நாட்டின் பிஹார், உபி மாவட்டங்களை என்ன செய்யப்போகிறோம்?

 

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

3






பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

DEVADOSS STEPHAN JOSEPH   2 years ago

வாழ்த்துகள். அருஞ்சொல்லின் பணி அரசுக்கு ஒரு மகுடம்

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அ.பி   2 years ago

வாழ்த்துக்கள். தொடரட்டும் arunchol நல்ல பணி.. இன்னும் பல விளிம்பு நிலை மக்களின் வாழ்நிலை தங்கள் பணியின் காரணமாக உயரட்டும்

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

செல்வம்   2 years ago

அருஞ்சொல்லின் நம்பகத்தன்மைக்கான உரைகல்லாக இரண்டு விஷயங்களைப் பார்த்தேன். ஒன்று தமிழ்நாட்டின் உ.பி., பிகார் மாவட்டங்கள் கட்டுரை. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடப்பதற்கு சில நாட்கள் முன்பு சில நிமிடங்கள் தோன்றி மறைந்தது இக்கட்டுரை. மீண்டும் வெளிவருகிறதா என உன்னிப்பாகக் கவனித்தேன். இன்னொன்று அந்த நேரத்தில்தான் சித்ரா ராமகிருஷ்ணன் விவகாரம் கசியத் தொடங்கி அது நடந்த காலம் காரணமாக ப.சி க்கு தொடர்பு உள்ளதுபோல சித்தரிக்கப்பட்டது. எனவே இந்த விவகாரம் பற்றி அருஞ்சொல் மௌனம் சாதிக்குமா என்றும் பார்த்தேன். அருஞ்சொல் தனது நம்பகத்தன்மையை தக்கவைத்துக்கொண்டுள்ளது என்றே சொல்லவேண்டும்.

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

ஜெயமோகன் அருஞ்சொல் சமஸ்டி.வி.பரத்வாஜ் பேட்டிமாற்றங்கள்இசைக் கச்சேரிஉலக ஆசான்மணீஷ் சபர்வால் கட்டுரைபட்டினி குறியீட்டு எண்ட்ரம்ப்பொதுவுடைமைக் கட்சிநினைவேற்றல்ஜாதிய சமூகம்விமானப் படைநாகூர் தர்காவெறுப்பைத் தூண்டும் பேச்சு செழிக்கிறதுசமஸ் - சாரு நிவேதிதாதிப்பு சுல்தான்ஆன்மிகம்தங்கம் சுப்ரமணியம்கார்போஹைட்ரேட்காவிரிப் படுகைசிலம்புகுடும்ப விவரங்கள்ராமச்சந்திர குஹா கட்டுரைகள்வதந்திராஜகோபாலன்கற்பிப்பதில் வேதனைஇளைஞர் அணிசெய்திவியூக வகுப்பாளர்வசந்திதேவி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!