இன்னொரு குரல் 3 நிமிட வாசிப்பு
நெல் கொள்முதல்: அருஞ்சொல் முறையீட்டுக்கு அரசு நடவடிக்கை
இரு நாட்களுக்கு முன்னதாக ‘இன்னொரு குரல்’ பகுதியில், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், தடாகம் ஊராட்சியைச் சேர்ந்த விவசாயியும் ‘அருஞ்சொல்’ வாசகருமான ஏ.அருண்குமார் எதிர்கொண்ட பிரச்சினையை வெளியிட்டிருந்தோம். கோடை சாகுபடி நெல் விளைச்சலுக்குத் தயாராகி நிற்கும் சூழலில், அரசின் நேரடி கொள்முதல் நிலையத்துக்குக் கொண்டுபோய் விற்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதை நாம் வெளியிட்டிருந்த முறையீடு தெரிவித்தது.
இந்த விஷயம் தமிழக முதல்வர் அலுவலகத்தின் கவனத்தை அடைந்திருக்கிறது. சென்னையிலிருந்து பறந்த உத்தரவின்பேரில் கையோடு அந்த கிராமத்துக்குச் சென்று விவசாயியைச் சந்தித்த அரசு அலுவலர்கள் நெல் கொள்முதலுக்கு உடன் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். இதற்காக நன்றி தெரிவித்து வாசகர் ஏ.அருண்குமார் எழுதியுள்ள கடிதத்தை இங்கே வெளியிடுகிறோம்.
மனமார்ந்த நன்றி!
என் பெயர் ஏ.அருண்குமார். தந்தை பெயர் ஏழுமலை நான் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், தடாகம் ஊராட்சியில் வசிக்கிறேன். அடுத்த சில நாட்களுக்குள் நாங்கள் விளைவித்த நெல்லை அறுக்க வேண்டிய நிலையில் இருந்தோம். ஆனால், எங்கள் பகுதியில் உள்ள கொள்முதல் நிலையத்தில் நெல்லைக் கொண்டுசேர்க்க இணையதளம் வழியே தேதி பெற முடியாத சூழல் நிலவியது. கோடை மழை அச்சுறுத்திவந்த நிலையில், எங்கள் முழு உழைப்பும் நாசமாகிவிடுமோ என்ற கவலை உருவானது. கையோடு இதுகுறித்து ‘அருஞ்சொல்’ இதழுக்கு எழுதியிருந்தேன். அந்தப் பதிவு 13.05.2022 அன்று ‘நெல் கொள்முதலில் கவனம் தேவை!’ என்ற தலைப்பில் வெளியானது.
இதன் விளைவாக அன்றைய தினமே அரசுத் துறையினர் என்னைத் தொடர்புகொண்டு பேசியதோடு, மறுநாள் 14.05.2022 காலை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், விழுப்புரம் மண்டல மேலாளர் பாலமுருகன் (RM TCSC VPM) எங்கள் தடாகம் ஊராட்சிக்கு நேரில் வந்தார். இங்குள்ள என்னை உள்ளிட்ட விவசாயிகளின் இடர்பாடுகளைக் கேட்டறிந்த அவர், பின்னர் எங்கள் பகுதிக்கான ‘நல்லான்பிள்ளைபெற்றாள் நேரடி நெல் கொள்முதல் நிலையம்’ சென்று அங்கு பார்வையிட்டு, ஆய்வுசெய்தார். ஒரு மாத காலம் அளவுக்கு நெல் கொள்முதலுக்கு வாய்ப்பு இல்லாத அளவுக்கு அங்கு எல்லா தேதிகளிலும் பதிவுகள் நிறைந்திருந்தன. அதனால், அருகேயுள்ள கண்டாச்சிபுரம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் (P07121391) சென்று நான் விளைவித்த நெல் மூட்டைகளை அங்கு விற்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தார். விளைவாக 30.05.2022 அன்று என்னுடைய நெல்லை அங்கே விற்பதற்குப் பதிவுசெய்யப்பட்டது.
மேலும், கோடை சாகுபடிக்கான நெல் கொள்முதல் நிலையங்கள் அனைத்திலும் குளறுபடிகள் ஏதும் இருப்பின் களைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், பதிவுகள் நிறைந்த கொள்முதல் நிலையங்களுக்கு அருகில் உள்ள நிலையங்களில் கூடுதல் பதிவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

என்னுடைய பெரும் மனவுளைச்சல் முடிவுக்கு வந்தது. மாதக் கணக்கில் உழைத்து அறுவடைக்குப் பயிரைக் கொண்டுசெல்லும் நிலையில், கொள்முதலில் குளறுபடிகள் ஏற்பட்டால் விவசாயிகளுக்கு அதனால் ஏற்படும் உளக்கொதிப்பு சொல்லில் அடங்காதது. அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு கையோடு நடவடிக்கை எடுத்தது நான் எதிர்பாராதது, பெரும் மகிழ்ச்சிக்கு உரியது. இதற்காக தமிழக அரசுக்கும், விவசாயிகளின் குரலைக் கொண்டுசேர்த்த ‘அருஞ்சொல்’ இதழுக்கும் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். நெல் கொள்முதல் நிலையங்களின் செயல்பாடு வெற்றிகரமாக நடப்பதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் உறுதிசெய்திடவும் கேட்டுக்கொள்கிறேன்.
- ஏ.அருண்குமார், தடாகம்.
தொடர்புடைய கட்டுரை: நெல் கொள்முதலில் கவனம் தேவை!

4






பின்னூட்டம் (5)
Login / Create an account to add a comment / reply.
அ.பி 9 months ago
Cmcell special petition care ஆக arunchol செயல் படுவது arunchol லின் மேன்மை... இதற்காக தனி பிரிவை ( section) arunchol இல் இணைக்க வேண்டும்.. எழுத்துப்பணி மூலம் சமுகப்பணி எல்லோரும் செய்ய முடியாது.. நன்றி.
Reply 0 0
KMathavan 9 months ago
"அருஞ்சொல்" காண கிடைக்காத இடமாக பார்க்கிறேன்.காரணம் வாசிப்பாளனுக்கு அனைத்து துறைகளிலுள்ள உண்மையை சரியாக முன் எடுத்து செல்கிறது.அடுத்த நிலைக்கு தங்கள் கருத்து எடுத்து செல்வது மகிழ்ச்சியே!
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
ARUNKUMAR 9 months ago
அருஞ்சொல் பத்திரிக்கை மற்றும் அருஞ்சொல் பத்திரிக்கை ஆசிரியர் பெரும் மரியாதைக்குரிய சமஸ் ஐயா அவர்களுக்கு என்னுடைய மனம் நெகிழ்வான வணக்கமும், நன்றிகளும் உரித்தாக்குகிறேன்... ஒரு விவசாயியாக பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்....
Reply 3 0
Periasamy 9 months ago
வாழ்த்துக்கள் சகோ
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
KMathavan 9 months ago
"அருஞ்சொல் " நெஞ்சார்ந்த நன்றிகள்!
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.