கட்டுரை, பொருளாதாரம், நிர்வாகம் 15 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் பிஹார், உபி மாவட்டங்களை என்ன செய்யப்போகிறோம்?

மூர்க்குமா செ
17 Mar 2022, 5:00 am
10

மிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல்செய்யவிருக்கும் நிலையில், தமிழகம் எதிர்கொள்ளும் சில முக்கியமான பிரச்சினைகளை ‘அருஞ்சொல்’ கவனத்துக்குக் கொண்டுவர விழைகிறது. அதன் ஒரு பகுதியாக பிராந்தியரீதியிலான ஏற்றத்தாழ்வின் அபாயத்தைப் பேசும் இந்தக் கட்டுரையை வெளியிடுகிறது;  இந்த வாரம் முழுவதும் இது தொடர்பான விவாதங்களை முன்னெடுக்கிறது. 

மது சிந்தனைகளும் கனவுகளும் குறிக்கோள்களும் பெரிதாக இருந்தால்தான் நமது சாதனைகளும் பெரிதாக இருக்கும். நாட்டின் பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டு நாம் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்று பெருமிதப்பட்டுக்கொள்ளும் மனநிலையைத் தவிர்ப்போம். வளர்ந்த நாடுகள் மற்றும் தெற்காசிய நாடுகளின் செயல்பாடுகளுக்கு இணையாக நம்முடைய இலக்குகளை நிர்ணயித்துப் பயணிக்க வேண்டும்! - இது சில மாதங்களுக்கு முன் தமிழ்நாட்டின் தலைமைச் செயலகத்தில் நடந்த அனைத்துத் துறைச் செயலர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய உரையில் ஒரு முக்கியமான பகுதி. 

முதல்வரின் பேச்சு உண்மை, பேசிய இடமும் மிகச் சரியானது. ஆனால், இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களும் வளர்ந்துவிடவில்லை. தமிழ்நாட்டுக்குள்ளேயே ஐரோப்பாவோடு ஒப்பிடத்தக்க மாவட்டங்களும் ஆப்பிரிக்காவோடு ஒப்பிடத்தக்க மாவட்டங்களும் இருக்கின்றன.  

இருவேறு தமிழகம்

ஐக்கிய நாடுகளின் அவையினால் ஏற்படுத்தப்பட்ட மனித வள மேம்பாட்டு குறியீட்டின் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரமானது அளவிடப்படுகிறது. இது ஒரு நாட்டில் வாழும் மக்களின் ஆயுள் எதிர்பார்ப்பு, எழுத்தறிவு, அவர்கள் பெறும் கல்வி, வாழ்க்கைத்தரம், சுற்றுப்புற சூழ்நிலையின் தரம், தனிநபர் வருமானம், மனித உரிமைகள் (முக்கியமாக பெண்கள், குழந்தைகள் உரிமை), முதியோர் பராமரிப்பு போன்ற பல்வேறு அளவுகோல்களை உள்ளடக்கிக் கணிக்கப்படுகின்றது.  

அதனடிப்படையில் தமிழகத்தின் சராசரி மனித வள மேம்பாட்டு குறியீடு 0.708 என்று தமிழகத் திட்டக் குழு 2017ஆம் ஆண்டு கணக்கிட்டுள்ளது. அதிர்ச்சி தரும் தகவல் என்னவென்றால்,  அபாயகரமான ஓர் ஏற்றத்தாழ்வு நம்  தமிழகத்துக்குள்ளேயே இருப்பது இந்த ஆய்வின் வழி மேலும் ஆதாரபூர்வமாக நிரூபணம் ஆகிறது.

இந்தக் குறியீட்டில் கன்னியாகுமரி (0.944), விருதுநகர் (0.855), தூத்துக்குடி (0.852), சென்னை (0.847), காஞ்சிபுரம் (0.845), கோயம்புத்தூர் (0.844), திருநெல்வேலி (0.802), திருவள்ளூர் (0.801) போன்ற மாவட்டங்கள் ஐரோப்பிய மற்றும் வளர்ந்த நாடுகளின் அளவுக்குச் சிறந்து விளங்குகின்றன. சென்னை, கோயம்புத்தூரில் வாழ்பவர்கள் அதிக தனி நபர் வருமானமும், நீண்ட ஆயுளும் பெற்றவர்களாக இருக்கிறார்கள். கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு எழுத்தறிவும் நீண்ட ஆயுளும் இருக்கிறது. 

நாகப்பட்டினம் (0.601), திருவண்ணாமலை (0.596), திருவாரூர் (0.568), விழுப்புரம் (0.561), தேனி (0.539), பெரம்பலூர் (0.447), அரியலூர் (0.282) போன்ற மாவட்டங்களின் மனிதவளக் குறியீடு பாகிஸ்தான், ஆப்பிரிக்கா நாடுகளுக்கு இணையாக மட்டுமே உள்ளது. அதாவது இந்த மாவட்டங்களில் மக்களின் ஆயுள் எதிர்பார்ப்பு, கல்வி, வாழ்க்கைத்தரம், தனி நபர் வருமானம் எல்லாமே ஆப்பிரிக்க நாடுகளுக்கு இணையாகத்தான் இருக்கிறது. இதற்கு முன்பு வந்த அறிக்கையின்படி புதுக்கோட்டையும் தர்மபுரியும்கூட பின்தங்கிய நிலையிலேயே இருந்தன.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

பாலினச் சமத்துவ குறியீட்டிலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் சிறப்பாகவும், தருமபுரி, விழுப்புரம், பெரம்பலூர் மாவட்டங்கள் பின்தங்கியும் உள்ளதாகக் கூறுகிறது அந்த அறிக்கை. கன்னியாகுமரி, கோயம்புத்தூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், சிவகங்கை போன்ற மாவட்டங்கள் குழந்தைகள் வளர்ச்சிக் குறியீட்டில் சிறந்து விளங்குகின்றன. ராமநாதபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, அரியலூர் மாவட்டங்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளன.

பல பரிமாண வறுமைக் குறியீட்டு எண்ணின்படி காஞ்சிபுரம், சென்னை, கடலூர், கோவை, நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்கள் வளமாகவும் (தமிழகத்தின் முதல் 5 இடங்களில் உள்ள மாவட்டங்கள்), அரியலூர், விருதுநகர், ராமநாதபுரம், பெரம்பலூர், தர்மபுரி மாவட்டங்கள் வறுமையிலும் (பட்டியலில் கடைசி 5 மாவட்டங்கள்) உள்ளன. ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர் மாவட்டங்கள் சில பிஹார் மாவட்டங்களைவிடவும் பின்தங்கியுள்ளன.

தேனி, பெரம்பலூர், அரியலூர் போன்ற மாவட்டங்களின் மனிதவளக் குறியீடு பாகிஸ்தான், ஆப்பிரிக்க நாடுகளுக்கு இணையாகவே மட்டுமே இருக்கிறது. சில மாவட்டங்களோ வளர்ச்சியில் உத்தர பிரதேசம், பிஹார் அளவுக்குப் பின்தங்கியிருக்கின்றன. 

புறக்கணிக்கப்படும் விவகாரம்

பல ஆண்டு காலமாகப் பேசப்பட்டுவந்தாலும், இந்த விவகாரம் உரிய கவனம் அளிக்கப்படாமல்  புறக்கணிக்கப்பட்டேவருகிறது. 

தமிழகத்தின் சில மாவட்டங்கள் மட்டும் தொழில் துறை சார்ந்தவையாகவும், பல மாவட்டங்கள் இன்னும் வேளாண்மையை மட்டுமே நம்பியிருப்பவையாகவும் இருக்கின்றன. வெளிநாட்டு முதலீடுகளை நாம் எவ்வளவு ஈர்த்தாலும், அந்த மூலதனமானது தொழில் துறையில் வளர்ச்சியடைந்த மாவட்டங்களுக்கே மீண்டும் செல்கின்றன. வேலைவாய்ப்பும் சமூக வளர்ச்சியும் அங்கு மேலும் அதிகரிக்கின்றது. சேவைகள் சார்ந்த துறையும் அங்கு சிறப்பாக வளர்கின்றது. குறிப்பாக மனிதவள மேம்பாடு, தொழில்நுட்பம், கல்வி மற்றும் சுகாதாரம், போக்குவரத்து, வங்கி, நிதி சேவைகள் போன்றவையும் சிறந்து விளங்குகின்றன. அங்குள்ள கிராமங்களும் நகரங்களும் சாலைப் போக்குவரத்து வசதிகளால் நன்கு இணைக்கப்பட்டுள்ளன. இது வறுமையை ஒழித்து பொருளாதார வளர்ச்சியில் அந்த மாவட்டங்களை 50 ஆண்டுகளுக்கு மேலாக முன்னிறுத்தியுள்ளது.

இங்கே அழுகிற குழந்தைகளுக்குத்தான் பால் கிடைக்கிறது. பலவீனமான குழந்தைக்கு ஊட்டச்சத்து அளிப்பது எப்படி அரசின் கடமையோ, அதேபோல வளர்ச்சியில்லா பகுதியின் வாழ்வாதாரத்தை வளப்படுத்துவதுவும் அரசின் வேலைதான்.

நாட்டின் வளங்களைத் தேவைக்கேற்ப பங்கிட்டு, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி, தொழில், கல்வி மற்றும் சுகாதார வளர்ச்சியை ஏற்படுத்தி, அனைவரும் சமமாக வளர்வதற்கான பொருளாதார வாய்ப்புகளைப் பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களிலும் உருவாக்கித்தருவது நல்லாட்சியின் கூறுகளில் ஒன்று. பின்தங்கிய மாநிலமும், மாவட்டங்களும் சீரான வளர்ச்சியடைய அரசின் போதுமான நிதி ஒதுக்கீடும் சரியான கொள்கை முடிவும் தேவை. 

சீரான வளர்ச்சியின் முக்கியத்துவம்

சீரான பொருளாதார வளர்ச்சியே சமூகநீதியை நிலைநாட்டும். இல்லையெனில், சில மாவட்டங்கள் பொருளாதார, சமூகக் கட்டமைப்பு வசதிகளில் ஏற்றம் பெறும், பல மாவட்டங்கள் வீழ்ச்சியடையும்; அப்பகுதி மக்களின் வளர்ச்சியும் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். இதனால் உள்நாட்டு புலம்பெயர்தலும் நகரங்களை நோக்கி மக்கள் படையெடுப்பதுவும் அதிகரிக்கும். இறுதியில் மாநிலத்திற்குள்ளேயே ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் அமைதியின்மையை உண்டாக்கக்கூடும்.

மாவட்டங்களுக்கிடையே சமச்சீரற்ற வளர்ச்சி ஏற்படுவதற்கு வரலாற்றுரீதியான ஏற்றத்தாழ்வுகள், புவியியல் அமைப்பு சார்ந்த காரணங்கள், கனிம வளம், மாவட்டம் அமைந்துள்ள இடம், சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள், அரசின் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வேகம், மக்களின் ஒத்துழைப்பு, கல்வி, சுகாதார வசதிகள், தொழில் முதலீடுகள் போன்றவை காரணிகளாக அமைகின்றன. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களின் வளர்ச்சிக்கு அரசு திட்டமிட வேண்டும். வளர்ச்சிக்கான திட்ட ஒதுக்கீடுகளும் அவ்வாறே அமைய வேண்டும். நடைமுறையில் அவ்வாறு இல்லை. 

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும்கூட தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு இடையில் சமச்சீரான வளர்ச்சி இல்லை. இந்தியாவின் நிலையைப் பார்த்து அன்று அண்ணா சொன்னாரே, “வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது!” என்று அதேபோல இன்று தமிழகத்தில், “மேற்கு வாழ்கிறது; ஏனையவை தேய்கின்றன.”

குழுமிய விளைவுக் கோட்பாடு சொல்வது என்ன?

குழுமிய விளைவுக் கோட்பாட்டின்படி (Cumulative causation theory-Gunnar Myrdal -1956 Swedish economist), ஒரு பகுதியில் ஒரு நிறுவனத்தில் ஏற்படும் மாற்றமானது தொடர்ந்து பல நிறுவனங்களிலும் ஏற்படும். இந்த மாற்றங்கள் தொடர் நிகழ்வுகளாகவும் சுழற்சி முறையிலும் இருக்கும். இந்த மாற்றங்கள் மிக வேகமாக எதிர்மறை விளைவுகளையும் குழப்பங்களையும் உண்டாக்கும். இதனால் வளர்ச்சியடைந்த பகுதிகள் மீண்டும் வளர்ச்சிப்பெறும் பின்தங்கிய பகுதிகள் தொடர்ந்து வீழ்ச்சிக்குள்ளாகும்.

ஓர் எடுத்துக்காட்டாக, புதிய இடத்தில் தொடங்கப்படும் தொழிற்சாலையானது மற்ற தொழிற்சாலைகள் வளரவும் வேலைவாய்ப்பு பெருகவும் கல்வி சுகாதார வசதிகள் அப்பகுதிகளில் அதிகரிக்கவும் வழிவகுக்கும். பிறகு அங்கும் முதலீடு வரத்தொடங்கும். இது நேரடியாகவும் மறைமுகமாகவும் அப்பகுதி வளர்ச்சியடைய உதவும். தொழிற்சாலை இல்லாத இடம் மேலும் தேக்கத்தை அடையும்.

சந்தைப் பொருளாதார வளர்ச்சியை, அரசின் கொள்கைகள் சரியான முறையில் ஒழுங்குப்படுத்த வேண்டும். இல்லையெனில், வளரும் பொருளாதாரத்தில் தொழிற்சாலை உற்பத்தி, வணிகம், வங்கிகள், காப்பீடு, ஏற்றுமதி-இறக்குமதி போன்ற நடவடிக்கைகள் குறிப்பிட்ட மாவட்டங்களிலேயே அதிக லாபத்தை ஈட்டித்தரும். அத்துடன் அறிவியல், கலை, இலக்கியம், உயர்கல்வி போன்றவையும் அங்கு வளர்ச்சி பெறும். மற்ற மாவட்டங்கள் தொடர்ந்து பின்தங்கிய நிலையிலேயே இருந்துவிடும்.

அது நேரமோ, பணமோ...

அறிவுக்குச் செலவிட தயங்காதீர்கள்.
இது உங்கள் ஆளுமை, சமூகம் இரண்டின் வளர்ச்சிக்குமானது!

வேளாண்மை சார்ந்திருக்கும் மக்கள் வறுமையில் இருப்பார்கள் என தியோடர் சுல்ட்ஸ் (Theodore Schultz-1971) எனும் நோபல் பரிசுப்பெற்ற விஞ்ஞானி கூறுகிறார். வறுமையும் வேளாண்மையும் ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள். வேளாண் வளர்ச்சியானது உரம், பூச்சி மருந்து, விதை உற்பத்திக்கு மட்டுமே வழிவகை செய்கிறது. தமிழகத்தில் வேளாண்மையையும் வேளாண் சார்ந்த தொழில்களையும் மட்டுமே நம்பி டெல்டா மாவட்டங்கள் அமைந்துள்ளன. இம்மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியும் சேவைகள் சார்ந்த வளர்ச்சியும் கிடையாது. தனி நபர் ஆண்டு வருமானமும் மிகக் குறைவு.

தருமபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், சிவகங்கை போன்ற மாவட்டங்கள் வறட்சியினால் தொடர்ந்து வறுமையில் உள்ளன. இங்கு நீர்ப்பாசன வசதிகள் அதிகம் இல்லை. இப்பகுதியில் வேளாண்மையைச் சார்ந்திருக்கும் மக்களுக்கு வேறு தொழில் வருமானங்களும் இல்லை. எனவே இப்பகுதியின் பொருளாதாரச் சமூக வளர்ச்சிக்கு அரசின் தனிக்கவனமும் திட்டங்களும் தேவைப்படுகின்றன. இங்கு சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்க வேண்டும் என்கிறார் மதராஸ் பொருளாதார பள்ளியின் இயக்குநர் சண்முகம் (6 மே 2016). இந்த மாவட்டங்களுக்கு வரலாற்றுரீதியாகவும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கைகளில் வளர்ச்சிக்கான சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்றும் கூறுகிறார்.

தமிழகம் சமச்சீரான வளர்ச்சியடைய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கப்போவதில்லை. ஆனால், அதற்கான பிரத்யேக முயற்சியை அரசு எடுக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட பகுதி மக்களை வாக்கு வங்கிகளாகவும் வளர்ச்சியடைந்த பகுதிகளில் அரசியலுக்காக மீண்டும் அதிக முதலீடுகளின் மூலம் சமாதானப்படுத்த முயல்வதுவும் பிரிவினையையும் அமைதியின்மையையும் உருவாக்கவே வழிவகுக்கும்.  

என்னவெல்லாம் பிரச்சினைகள்?

முதலாவதாக, தொழில் துறை வளர்ச்சிக்காக பொருளாதார, புவியியல் எல்லைகளை அரசு மாற்றியமைக்க வேண்டும். வளர்ச்சி அடைந்த மாவட்டங்கள் புதிய முதலீடுகளையும் திறன் மிக்க தொழிலாளர்களையும் தொடர்ந்து இழுத்துக்கொண்டிருப்பதால், இளைஞர்களும் படித்தவர்களும் மூளை வலிமையுள்ளவர்களும் அங்கே குடியேறுகிறார்கள்.

இதனால் பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களில் மனிதவளம் குறைந்துகொண்டேவருகிறது. வளர்ச்சி அடையாத மாவட்டங்கள் கச்சாப் பொருட்களை மட்டுமே வழங்குகின்றன. அவை அதிலிருந்து முழுப்பொருட்களையும் உற்பத்தி செய்யவும் முனைவது இல்லை. பிற்படுத்தப்பட்ட மாவட்டங்கள் தொழில், பொருளாதார, சுகாதார, கல்வி குறியீடுகளில் தேக்கமடைகின்றன.

வளர்ச்சி அடைந்த பகுதியானது சமூக, அரசியல், பொருளாதார, கல்வி அறிவில் தொடர்ந்து வேகமாக முன்னேறுகின்றது. இதனால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் மாவட்டங்களுக்கிடையே பிரிவினையை உண்டாக்குகின்றது. ராமநாதபுரம், சிவகங்கையில் முதலீடுகள் அதிகமில்லை. தமிழக அரசின் அறிக்கையின்படி (2010-11) தமிழகத்தில் திருவண்ணாமலை, தேனி, அரியலூர் மூன்று மாவட்டங்களும் தொழில் வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியுள்ளன. இம்மாவட்டங்கள் மாநில அளவில் 4% நிகர மாவட்ட உள்நாட்டு உற்பத்தியையே (Net District Domestic Product) பங்களிக்கின்றன்.

இம்மாவட்டங்களில் தனிநபர் ஆண்டு வருமானமும் மிகக் குறைவாக உள்ளது. இம்மாவட்டங்களில் வங்கிகள் இருந்தாலும் அவைகளிலிருந்து வேளாண்மைக்கு மட்டுமே கடன் பெறப்படுகிறது. தொழில் வளர்ச்சிக்கோ மற்ற சேவை சார்ந்த பணிகளுக்கும் எவ்விதக் கடன் பெறவும் வாய்ப்பில்லை. பின்தங்கிய மாவட்டங்களில் கல்வி, தனிநபர் வருமானமும் குறைவு. முதலீடுகள் செய்ய வாய்ப்பில்லை. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகம். எனவே அங்குள்ள மக்கள் புலம்பெயர்கிறார்கள். இல்லையெனில் அவர்களின் எதிர்காலமும் மனிதவளம் திறமைகளும் குன்றி வறுமையின் பிடியிலிருந்து வெளிவருவது இயலாத ஒன்றாகும்.

இம்மாவட்டங்களில் சிறு குறு தொழில்களின் வளர்ச்சியும் முதலீடுகளும் குறைவாகவே உள்ளது. 2012-13ம் ஆண்டு தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனத்தில் தொழில் தொடங்க பெறப்பட்ட 2139 முன்மொழிவுகளில் இம்மாவட்டங்களிலிருந்து 61 முன்மொழிவுகள் மட்டுமே வந்திருக்கின்றன. அதுவும் வேளாண் சார்ந்த முன்மொழிவுகள்தான். இந்நிலை மாற்றப்பட வேண்டும்.

புதிய தொழில் முதலீட்டு மண்டலங்கள் பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களை நோக்கி இன்னும் நகரவில்லை. தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் நன்கு வளர்ச்சி அடைந்துவருகின்றன. சென்னை-பெங்களூரூ தொழில் முதலீட்டு மண்டலம் முன்பே நன்கு வளர்ந்துவிட்டது. இங்கு போக்குவரத்து வாகன உற்பத்தி, எலக்ட்ரானிக்ஸ், தோல் தொழிற்சாலைகள் அதிகமுள்ளன. இங்கு முதலீடுகள் மேலும் அதிகரிப்பது தொழிலாளர் பற்றாக்குறையை ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்து ராணுவப் பாதுகாப்புத் தளவாட தொழில் வளாகம். இது சென்னை, ஓசூர், சேலம், கோயம்புத்தூர், திருச்சி மாவட்டங்களை உள்ளடக்கியது. இங்கு தற்போது ரூ.3,123 கோடி முதலீடுசெய்யப்பட உள்ளது. பெரும்பாலான முதலீடுகள் முன்பே தொழிற்சாலைகள் அமைந்துள்ள இடங்களில் மட்டுமே நடைபெறுகின்றது. அந்தத் தொழிற்சாலைகளை பிற்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு எடுத்துச்செல்ல போதிய முயற்சிகள் இல்லையென்றே தோன்றுகிறது.

அடுத்து, சென்னை - கன்னியாகுமரி தொழில் முதலீட்டு மண்டலம். இதிலுள்ள கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, தென்காசி, தர்மபுரி போன்ற மாவட்டங்கள் தொடர்ந்து பின்தங்கிக்கொண்டிருக்கின்றன. இதில் கிழக்குக் கடற்கரைப் பொருளாதார வளர்ச்சி மண்டலங்களை உருவாக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இங்கு முதலீடுகள் அதிகம் வரவில்லை.

கடந்த பத்து ஆண்டுகளில் அரசு ஏறத்தாழ 6.59 லட்சம் கோடிக்கு முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. அது 18.70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகவும் கூறுகின்றது. ஆனால், இவையனைத்தும் சென்னை-பெங்களூரூ தொழில் முதலீட்டு மண்டலத்திற்கும் திருச்சி கரூர் நாமக்கல் சேலம் திருப்பூர் ஈரோடு கோயம்புத்தூர் விருதுநகர் தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டங்களுக்கும் மட்டுமே பயனளித்துக்கொண்டிருக்கிறது.

அடுத்ததாக, முதலீட்டாளர்களும் தொழிலதிபர்களும் வளர்ச்சியடைந்த மாவட்டங்களிலேயே புதிய தொழில்களையும் தொடங்குவார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால், அதனை பரவலாக்குவதும், சீர்படுத்துவதுவும் அரசின் கடமையாகும். அது நடக்கவில்லை.

கோயம்புத்தூரில் மட்டுமே 30,000க்கும் மேற்பட்ட சிறு குறு, நடுத்தர, பெரிய என்று அனைத்துப் பிரிவு தொழில் நிறுவனங்களும் இயங்குகின்றன. இதற்கு வரலாற்றுக் காரணங்களும் உண்டு. இருப்பினும் மற்ற பகுதிகளுக்கும் முதலீட்டினை கொண்டு செல்வது அரசின் கடமையேயாகும். அதேபோல் சென்னையைச் சுற்றியே அனைத்து போக்குவரத்து வாகனங்களின் உற்பத்தி, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி நடைபெறுகிறது. பருத்தி நெய்தலும் ஜவுளி உற்பத்தியும் திருப்பூரை டாலர் நகரமாக மாற்றியுள்ளது. பேருந்து லாரிகளின் கட்டமைப்பும், கொசுவலை உற்பத்தியும் கரூர், நாமக்கல் மாவட்டங்களிலேயே நடைபெறுகிறது. கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் நூற்பு ஆலைகள் திறம்பட செய்யப்படுகின்றன. அங்கு மக்கள் தொழில் முனைவோராகவும் இருக்கலாம். இந்த மண்டலங்களில் கடந்த 30-40 ஆண்டுகளாக வளர்ச்சி தெரிகிறது. வருடத்திற்கு 20,000 கோடிக்கு மேல் ஏற்றுமதியும் நடைபெறுகின்றது. முதலீடுகளும் இந்த பகுதிகளில் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. இது பரவலாக்கப்பட வேண்டும்.

அடுத்ததாக, சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி மாவட்டங்களிலேயே கனரக வாகன உற்பத்தியும், ராணுவ தளவாடங்கள், விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சியும் நடைபெறுகின்றன. ஓசூர், நாகர்கோவில் உறுதுணை உற்பத்தி மையங்களாக உருவெடுக்கின்றன. பிரெஞசு விண்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனம் விண்வெளித் திட்டத்திற்காக 7,200 கோடிக்கு மேல் சென்னையில் முதலீடுசெய்துள்ளது. கோயம்புத்தூர், சேலம் உறுதுணை நகரங்களாகவும், ராணுவ பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கும் உதவுகின்றன. டாட்டா (டிசிஎஸ்), விப்ரோ, இன்போசிஸ், காசினிசன்ட், அக்ஸ்சென்சர், வெரைசோன் போன்ற அனைத்து தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களும், மோட்டரோலா, பாக்ஸ்கான், சாம்சங், சோனி-எரிக்ஸன் போன்ற அனைத்து எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி நிறுவனங்களும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலேயே அமைந்துள்ளன. தோல் மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் சென்னை, காஞ்சிபுரம், வேலுர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களிலேயே அமைந்துள்ளன. உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி தோல்பொருட்கள் உற்பத்தி ஆண்டிற்கு 30,000 கோடிக்கு மேல் இருக்கும். இதுவும் பரவலாக்கப்பட வேண்டும்.

அடுத்ததாக, சிவகாசி அச்சுத்தொழில், பட்டாசு, தீப்பெட்டி தொழில்களில் சிறந்து விளங்குகின்றது. இதனை லிட்டில் ஜப்பான் என்று அன்றய பிரதமர் ஜவஹர்லால் நேரு அழைத்தார். தூத்துக்குடி உர உற்பத்தியிலும், வேதி பொருட்கள் உற்பத்திகளிலும் சிறந்துள்ளது. அங்குள்ள துறைமுகம் வெளிநாட்டு வணிகத்திற்கு உதவுகிறது. ஆனால் ஒன்றிய மாநில அமைச்சர்கள் பலரை ஆளாக்கிய ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் இன்னும் போதிய வளர்ச்சியைக் காணவில்லை. இந்நிலை மாற்றப்பட வேண்டும்.

என்னவெல்லாம் செய்யப்பட வேண்டும்?

பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களில் அதற்கேற்ப தொழில் வளர்ச்சியைக் கொண்டுவருவதற்கு அரசு முன்னுரிமையும் நிதிநிலை அறிக்கைகளில் தனி நிதி ஒதுக்கீடும் வழங்க வேண்டும். தொழிற்சாலை சமூக பொருளாதார கல்வி சுகாதார வளர்ச்சி குழுமிய விளைவுக்கோட்பாட்டின்படியே அமைந்துள்ளது. அதனைத் தகர்ப்பது அரசின் கடமையாகும். பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல், தொழில்முனைவோருக்கு வரி விலக்களித்தல், சிறந்த சாலைப் போக்குவரத்து வசதிகளையும், கல்வி & மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்துதல் போன்றவை அரசின் முக்கியமான கடமையாகும்.

கன்னியாகுமரி, திருச்செந்தூர், திருநெல்வேலி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராமேஸ்வரம், திருவாரூர், தஞ்சாவூர், கங்கைகொண்டசோழபுரம், வேதாரண்யம், கும்பகோணம், சிதம்பரம், திருவண்ணாமலை, பழனி, அரியலூர், பெரம்பலூர் போன்ற இடங்கள் எவ்விதத் தொழில்வளர்ச்சியும் பெறவில்லை. மதச் சுற்றுலா தலங்களாகவே உள்ளன. அதுவும் அனைவருக்கும் பயனளிப்பதில்லை. தமிழகத்தின் தலைநகர் சார்ந்த பகுதிகளும், மேற்கு பகுதிகளும் மட்டுமே வளர்ச்சியடையும்போது, வடக்கு தெற்கு கடலோரப் பகுதிகளும் டெல்டா பகுதிகளும் கோவிலில் மணி அடிப்பதின் மூலம் மட்டுமே வளர்ந்துவிடாது.

மாவட்டங்களுக்கு இடையேயான பொருளாதார வளர்ச்சியை சரியாக திட்டமிடல் வேண்டும். அப்போதுதான் அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரம் சிறந்த முறையில் கட்டமைக்கப்படும். வளர்ச்சியடைந்த மாவட்டங்கள் தங்களின் வலிமையைப் பற்றி பெருமைப்பட்டுக்கொள்ளலாம். அரசின் கொள்கைகள் அழுகின்ற குழந்தைகளுக்கு மட்டுமல்ல; அழத் தெரியாதக் குழந்தைகளுக்கும் பாலூட்டுவதாக அமைய வேண்டும்.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

7

3

பின்னூட்டம் (10)

Login / Create an account to add a comment / reply.

THIRUPPATHI VENKATASAMY   2 years ago

உடலின் எல்லா பாகங்களும் ஒருமித்து வளர்வதுதான் வளர்ச்சி. ஒரு சில பாகங்கள் மட்டும் வளர்ந்தால் அது வீக்கம். தொப்பையும் அது போன்றதுதான். அது உடலுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் பொருந்தும். இந்தியாவிற்குள் நிகழும் சமமற்ற வளர்ச்சி குறித்து அனைவரும் அறிந்ததே. கட்டுரை ஆசிரியர் தமிழ்நாட்டிற்குள் நிலவும் சமமற்ற வளர்ச்சி குறித்து தக்க சான்றுகள் மூலமாகவும் தரவுகள் மூலமாகவும் எடுத்துரைக்கிறார்; நிறுவுகிறார். தமிழ்நாட்டின் முழுமையான கள நிலவரத்தை அறிந்தவர்கள் அதை முழுமையாக ஏற்கவும் செய்வர். தமிழ்நாடு அரசின் கடந்த காலத் திட்டங்களும் வளர்ச்சிக் கொள்கைகளும் அனைத்து இடங்களுக்கும் பொதுவாக இருந்தாலும், சில மாவட்டங்களில் வெற்றி பெற்று, பிற மாவட்டங்களில் வெற்றி பெறவில்லை என்று, எளிதாக கடந்து போக முடியாது. இந்த சூழ்நிலைக்குரிய காரணங்கள் பலவற்றை ஆசிரியர் அடுக்குகிறார். அவை அனைத்தும் ஏற்கத்தக்கதே. அதே வேளையில் பரவலாக்கப்பட்ட வளர்ச்சியிலும் சமப்படுத்தப்பட்ட வளர்ச்சியிலும் அரசு காட்டும் முனைப்பும், பொறுப்பில் இருப்பவர்களின் தனிப்பட்ட கவனமும் கூடக் காரணமாக இருக்கலாம். ஆசிரியர் குறிப்பிடும் வளர்ச்சி குறைந்த மாவட்டங்களிலும், பகுதிகளிலும் சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்த வேண்டும்; கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அந்தக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட கொள்கைகளும் திட்டங்களும் ஏன் இந்த பகுதிகளில் சரியாக முறையாக செயல்படுத்தப்படவில்லை அல்லது செயல்படவில்லை என்பதை ஆய்வு செய்து, அதற்கேற்ற திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். செயல்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அத்திட்டங்கள் வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும். அது பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தரும் இட ஒதுக்கீடு போன்றது. அது சமூக நீதி என்பது போல், வளர்ச்சிச் சமநிலையை எட்ட உதவும். நகரமயமாதலையும், மக்கள் நகரங்களை நோக்கி நகர்வதையும் தடுக்க முடுயாது; தவிர்க்கவும் முடியாது. ஆனால் மற்ற பகுதிகளில் நிகழும் நகரமயமாதல், ஏன் குறிப்பிட்ட மாவட்டங்களில் நிகழவில்லை; அல்லது அதன் வேகம் குறைவாக உள்ளன என ஆய்வு செய்ய வேண்டும். அதனடிப்படையில் அடுத்த கட்ட வளர்சிக் கொள்கையையும் திட்டங்களையும் வகுக்க வேண்டும். அந்த வளர்ச்சிச் சமநிலையை எட்டி, வளர்ச்சி விகிதத்திலும், மனிதவளக் குறியீட்டிலும், மக்களின் மகிழ்ச்சிக் குறியீட்டிலும் உயர்ந்து நிற்கும் சமூகமே மேம்பட்ட சமூகமாக இருக்கும். . அதனை முன்னெடுத்துச் செல்லும் இக்கட்டுரை, சிறந்த பதிவுகளில் ஒன்று. இந்தக் கட்டுரை அரசின் கவனத்தை ஈர்க்கும் என நம்புகிறேன். ஆனால் அரசின் நிதிலை அறிக்கை தயாரிக்கும் பணி சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிடும். நிதிநிலை அறிக்கை வெளியிடும் நாளிற்கு முந்தைய நாள் என்றில்லாமல், சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி இருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ஆயினும், இந்த கட்டுரை கவனிக்கப்படும் என நம்புகிறேன்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

KRISHNAN SIVARAMA KRISHNAN   2 years ago

while taking a decision on investment, first and foremost think any business think is locational factor and logistics with respect to raw materials and finished goods. It will always form a cartel. Say for example, if a new fire work industry to be started, it will by default select Sivakasi and it's surroundings. Because, only if a new factory starts its operations there, Economies of scale will operate. Raw material supplier will have a warehouse located nearby Sivakasi. If this sector is widely distributed across Tamil Nadu, logistics costs will become very expensive and it will have an impact on its price. You can not be an odd man out. If anyone trying to start a facility in different place(s) , he/ she may burn his fingers and they may not get trained labour force and at the end of the day , his/her product will not be competent enough among others and they will be thrown out of the market. Of course, if the factories are located in different districts , it can create employment opportunities and those districts can see the light for development. But, practically not possible . The cons are more than the pros.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

திருக்குறள் கி கணேசன்   2 years ago

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Saravanan P   2 years ago

This article loudly says that poverty and agriculture are twins and the main reason Tamilnadu, why India as a whole is lagging behind because of this reason. At the same time one should not forget that India is a gifted country as for as natural resources including favourable geographical and climatic conditions. India is gifted with perennial rivers and nearly sufficient rainfall except certain limited pockets. Why we are then lagging behind? It is nothing but mismanagement of resources. Though we have a near-sufficient rain fall, rain water is wasted left and right and there are no serious attempts to conserve it. Because of destruction of forests natural climatic conditions have been disturbed leading to irregular monsoons and floods. The problem lies in our approach to development and neglect of agriculture by not ensuring sufficient irrigation sources. Our marketing system is age-old and farmers are at the mercy of middlemen. With no assured remunerative prices for their products farmers and bound to be in distress and that is what is happening here.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

GOWTHAM RAJ   2 years ago

இன்றைய அருஞ்சொல் வலைத்தளத்தில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது, மாவட்டங்களுக்கிடையில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை பற்றி அக்கட்டுரை பேசுகிறது, மேலும் அதற்கான தீர்வுகளை கண்டெடுக்கவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகிறது. மற்றொருபுறம் SIPCOT, SIDCO போன்ற தொழிற் பேட்டைகள் நிறுவுவதற்கு எதிரான குரல்களும் எழும்ப தொடங்கியுள்ளது. இந்த இரண்டு நிகழ்வுகளுடன் வட மாவட்டங்களில் அதிகம் நடக்கும் சாதிய வன்முறைகளையும், வளர்ச்சி குன்றிய மாவட்டங்களில் நிகழும் குற்றச்செயல் வன்முறைகளையும் இணைத்து பார்ப்பது அவசியமாகும். மேலும் கடந்தாண்டு தேர்தல் சமயத்தில் “Small is Beautiful” என்று மருத்துவர் ராமதாசு முன்னெடுத்த தமிழ் நாட்டை மூன்றாக பிரிக்கவேண்டும் என்ற கோரிக்கையும் இதனோடு கோர்த்துப்பார்த்து இக்கட்டுரையை எழுத முயன்றுள்ளேன். சில சூழலியல் அமைப்புகளை தாண்டி இந்த தொழிற்பேட்டை அமைப்பு எதிர்ப்பில் பாமக என்ற அரசியல் கட்சி முன்னணியில் இருப்பது கவனத்திற்குரியது. நிறுவனங்கள்- வாழ்வாதார மேம்பாடு- அரசு நிர்வாகம்(Institutions-Development-Governance) என்ற மூன்றும் ஒன்றோடொன்று நெருக்கமான தொடர்புடையவை. நிறுவனங்கள் மேம்படும்போது அரசு நிர்வாகமும் மக்களின் வாழ்வாதாரமும் மேம்படும். வாழ்வாதார மேம்பாடு என்பது ஊழலை குறைத்து நிர்வாகத்தை மேம்படுத்தும். நிலையான வளர்ச்சி என்பது இவை அனைத்திற்க்கும் அடிப்படை. நிலையான பொருளியல் வளர்ச்சிக்கு உற்பத்தித்துறையும் சேவைத்துறையும் இன்றியமையாதவை. விவசாயமும் ஏழ்மையும் ஒன்றோடொன்று நெருக்கமான தொடர்புடையவை, இந்த இரண்டுடன் மூன்றாவதாக சாதியம் என்ற அக காரணியும் உறவுகொண்டுள்ளாது. விவசாயத்தை அடிப்படையாக கொண்ட கிராம வாழ்க்கையில் சாதியத்தின் வேர்கள் ஆழமாக ஊன்றப்பட்டுள்ளது . விவசாயத்துறை ஒரு அளவுக்கு மேல் நவீனமடைவதில்லை. மேலும் அதிக அளவிலான மக்கள் திரள் இந்த துறையில் இருப்பதும் மனித வளத்தின் விரையமாகவே(Wastage of Human Resource) எடுத்துக்கொள்ளவேண்டும். விவசாயத்தை நம்பி இருக்கும் மாவட்டங்களில்(குறிப்பாக வானம்பார்த்த பூமி விவசாயம் நடக்கும் இடங்களில்) விவசாயம் பொய்க்கும்போதோ அல்லது எதிர்பார்த்த மகசூலும் விலையும் கிடைக்காதபட்சத்திலோ இதர பிற்போக்கு சம்பரதாயங்கள் தலைதூக்கும். தமிழ்ச்சமூகத்தில் அது சாதிய வன்முறை என்றே எதிரொலிக்கும். நிலவுடைமை சமூகங்கள் இத்தகைய வளர்ச்சியின்மையை அடையாளச்சிக்கலாகவே புரிந்துகொள்கின்றன, இதிலிருந்து அவர்களை மீட்பதற்கு பயனற்ற விவசாயத்துறையிலிருந்து தப்பிப்பது அவசியமான ஒன்று. பாமகவின் "தமிழகத்தை மூன்றாக பிரிக்கவேண்டும் " என்ற கோரிக்கையும், தொழிற்பேட்டைகள் அமைவதை எதிர்க்கும் மனப்பாங்கையும் இந்த வகையிலேயே நான் புரிந்துகொள்கிறேன். மக்களின் வாழ்க்கையில் ஒருவித நிச்சயமற்ற தன்மை உருவாகும்போது அவர்களை எளிதில் கிளர்ச்சியடையச்செய்ய முடியும். இது போராட்டமாகவும் மாறலாம். இந்த அவதானிப்பு மிகைப்படுத்தப்பட்ட ஒன்று தான் என்றாலும் எளிதாக கடந்துபோக கூடிய ஒன்றல்ல. மாவட்டங்களுக்கிடையான ஏற்றத்தாழ்வுகளை உற்பத்தி/சேவை துறை முதலீடுகளின் மூலமாக தான் நிகர்செய்ய முடியும் அதற்கு SIDCO, SIPCOT, TIDCO, TIIC போன்ற தொழிற்பேட்டை நிறுவனங்கள் அவசியமானவை. இத்தகைய ஏற்றத்தாழ்வுகளை கண்டுகொள்ளாமல் இருப்பது தொலைநோக்கு பார்வையில் தமிழ்நாட்டின் சட்டஒழுங்கிற்கும், வளர்ச்சிக்கும், சமூக அமைதிக்கும் உகந்ததல்ல. புற சூழலில் மேம்பாடுகள் நிறைந்த ஒரு நிலைத்தன்மையை ஏற்படுத்துவதன் மூலம் சாதி போன்ற அக உணர்வுகளில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். குறைந்தபட்சம் குழுவாத மனோநிலையையேனும் இத்தகைய மாற்றங்கள் ஏற்படுத்தும். சில சூழலியல் குறுங்குழுவாதிகள் சொல்வதை போல் விவசாயத்துறையில் இருந்து நேரடியாக சேவைத்துறைக்கு செல்வதும் இத்தகைய மாவட்டங்களில் சாத்தியமில்லை. முன்னமே சொன்னதை போல் நிறுவனங்கள்- வாழ்வாதார மேம்பாடு- அரசு நிர்வாகம் மூன்றும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. நுணமாற்றங்களும் படிப்படியான மாற்றங்களும் தான் இங்கு முக்கியமேயொழிய திடீர் மாற்றங்கள் என்பவை சாத்தியமற்றவை. சூழலை பாதிக்காத வகையில் நிறுவனங்கள் அமையவேண்டும் என்பதும் நிறுவனங்களே வேண்டாம் என்பது வெவேறான அணுகுமுறைகள். மாவட்டங்களுக்கிடையான சமத்துவம் என்பது எதிர்கால தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அவசிய தேவையாகும் . அது நவீனத்தின் கைபிடித்து நடக்கவேண்டும் ஒழிய சுரேஷ் சம்மந்தம் போன்ற பசுமை விகடன் ஊதுகுழல்கள் சொல்வதை போல் மரபை நோக்கி அமைந்துவிட கூடாது. மிகைப்படுத்தல்கள் எல்லாம் எதிர்கால யதார்த்தமாக கூடும் என்பதை இதை இன்றே எழுதவேண்டும் என்று தோன்றிட்று. 17/03/2022 கெளதம்

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ   2 years ago

*பரங்கிப்பேட்டை மற்றும் சுற்று வட்டார பயணிகள் மூலமாக 20 மாதங்களில் 51 இலட்சங்கள் வருவாய் பெற்ற இந்திய ரயில்வே* இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் முதல் அலை ஏற்பட்ட போது ரயில் போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் அவசியத் தேவைகளுக்காக சிறப்பு ரயில்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. முதலில் நீண்ட தூர ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன. அதன்பிறகு குறுகிய தூர பயணிகள் ரயில்களும் விரைவு ரயில்களாக மாற்றப்பட்டு அதிக கட்டணத்துடன் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டன. பரங்கிப்பேட்டை மற்றும் சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்ட ஊர் மக்கள் சாதாரண பயணிகள் ரயில்களில் பயணம் செய்ய பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்திற்கே வருகை தருவார்கள். விரைவு ரயில்களில் பயணிக்க பெரும்பாலும் சிதம்பரம் செல்வார்கள். கடலூர் துறைமுகம் (OT), திருப்பாதிரிப்புலியூர் (NT) மற்றும் விருத்தாச்சலம் சென்று பயணம் செய்வோரும் உண்டு. கொரோனாவுக்கு முன்பு பரங்கிப்பேட்டை வழியாக 60க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் சென்று வந்தன. அவற்றில் ஒரு சில ரயில்களாவது பரங்கிப்பேட்டையில் நிற்க வேண்டும் என்பதுதான் மக்களின் நீண்டநாள் கோரிக்கை. அப்படி விரைவு ரயில் நின்றால் மக்களின் பயன்பாடு எப்படி இருக்கும் என்பதை கணக்கிடுவதற்காக தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக “பரங்கிப்பேட்டை மற்றும் சுற்றியுள்ள மக்கள் கோவிட் பெருந்தொற்று காலங்களில் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களை எவ்வாறு பயன்படுத்தினர்? அதாவது இருபது மாதங்களில் எத்தனை மக்கள் பயணம் செய்தனர்? எவ்வளவு வருமானம் வந்தது?” என தகவல் கேட்கப்பட்டது. அதற்கு, இந்திய இரயில்வேயின் துணை நிறுவனமான இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC), “பரங்கிப்பேட்டை மற்றும் பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தை பயன்படுத்தும் சுற்று வட்டார மக்கள் மூலமாக கடந்த இருபது மாதங்களில் மட்டும் 17,661 பயணிகள் முன்பதிவும், 51.06 லட்சம் வருமானமும், பரங்கிப்பேட்டையில் மட்டும் 6,797 பயணிகள் முன்பதிவும், 21.78 லட்சம் வருமானமும் கிடைத்துள்ளது” என பதில் தந்துள்ளது (No. 2022/IRCTC/RTI Appeal – 11.02.2022). அதாவது, பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தை பயன்படுத்தும் சுற்று வட்டார மக்களின் மூலமாக தினந்தோறும் சராசரியாக 30 பயணிகள் முன்பதிவும், 8,500 ரூபாய் வருமானமும் கிடைத்துள்ளது. இது கொரோனா காலத்தில் இயக்கப்பட்ட குறிப்பிட்ட 10க்கும் குறைவான ரயில்களில் பயணம் செய்தவர்களின் தகவல் இது. சாதாரணமாக பயணிகள் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் வருகை மற்றும் ஆண்டு வருமானம் போன்றவற்றை ஆராயும்போது 2019-20 காலகட்டங்களில் பரங்கிப்பேட்டையில் 149,160 பயணிகள் வருகையும், 11.45 லட்சம் வருமானமும் கிடைத்துள்ளது. அதாவது சராசரியாக ஒரு நாளைக்கு பரங்கிப்பேட்டையில் சாதாரண ரயில்களில் 409 பயணிகள் ஒவ்வொரு நாளும் பயணம் செய்துள்ளனர். ஆக, எந்த விதத்தில் ஆய்வு செய்தாலும் பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நிற்க வேண்டும் என்பது தவிர்க்க முடியாதது என முடிவுகள் வருகின்றன. பொதுமக்கள் தங்களால் இயன்றளவு பயணங்கள் மூலமாக, வருவாயை அள்ளி வழங்குதல் வாயிலாக, கோரிக்கைகள் அளிப்பதன் வழியாக தென்னக இரயில்வேக்கு தங்களின் பங்களிப்பை தொடர்ந்து வழங்கிக் கொண்டு வருகின்றனர். தென்னக இரயில்வேதான் இதற்கொரு நல்ல தீர்வை தர வேண்டும். நூற்றாண்டுகளை கடந்த, பழமை மிக்க பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தில் துவக்க காலத்தில் பல விரைவு ரயில்கள் நின்று சென்றன. ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் சென்னை, திருச்சி, விழுப்புரம், திருவனந்தபுரம், கொழும்பு (இலங்கை) உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் ரயில்கள் பரங்கிப்பேட்டையில் நின்று சென்றன. அகலப் பாதையாக மாற்றப்பட்ட பிறகு பயணிகள் ரயில்கள் மட்டுமே நின்று செல்கின்றன. விழுப்புரம் மற்றும் மயிலாடுதுறை மட்டும் செல்லும் ரயில்கள் ஆறு பயணிகள் ரயில்கள், மேலதிகமாக பெங்களுர் - காரைக்கால் செல்லும் இரண்டு பயணிகள் ரயில்கள் என மொத்தம் எட்டு ரயில்கள் பரங்கிப்பேட்டையில் நின்று சென்றன. திருச்சி ரயில்வே கோட்டம் தந்துள்ள 2019-20 ஆண்டிற்கான ரயில் நிலையங்களின் வருவாய் தகவல்களை ஆய்வு செய்யும்போது விரைவு ரயில்கள் நின்று செல்லும் சில ரயில் நிலையங்களின் வருவாயுடன் விரைவு ரயில்களே நின்று செல்லாத பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தை ஒப்பிடும்போது 56வது இடத்திலுள்ள இந்த ரயில் நிலையம், விரைவு ரயில்கள் நின்று செல்லும் ரயில் நிலையமாக மாற்றப்பட்டால் 25வது இடத்தை பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அது மட்டுமன்றி சரக்கு போக்குவரத்தையும் இங்கு அறிமுகப்படுத்தினால் மேலதிக வருமானத்தை ஈட்டும் ரயில் நிலையமாக மாறிவிடும். பயணிகள் ரயில்கள் மூலமாகவே மட்டும் ஆண்டுக்கு பதினொரு இலட்சத்திற்கும் அதிகமான வருமானத்தை இந்த ரயில் நிலையம் ஈட்டுகிறது. விரைவு ரயில்கள் நின்று சென்றால் திருச்சி ரயில்வே கோட்டத்தில் அதிக வருமான ஈட்டுகின்ற முன்னனி ரயில் நிலையமாக மாறும் என்பதில் ஐயமில்லை. இவ்வூரை சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்ட ஊர் / கிராம பொதுமக்கள் இந்த ரயில் நிலையம் மூலம் வெளியூர் செல்கின்றனர். பரங்கிப்பேட்டை வழியாக 60க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும் பல விரைவு ரயில்களும் இயக்கப்படுவதற்கான அறிவிப்புகள் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன. இவற்றில் ஒன்றுகூட இங்கு நிற்பதில்லை. இதனால், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அன்றாட வணிகத்திற்கும், தொழிலுக்கும் செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஆகவே, தற்போது பரங்கிப்பேட்டை வழியாக செல்லும் தினசரி விரைவு ரயில்களில் சென்னை, மதுரை, திருப்பதி விரைவு வண்டிகள் உள்ளிட்ட சில ரயில்களை பரங்கிப்பேட்டை நிறுத்தத்தில் நிறுத்த வழிவகை செய்ய வேண்டும் இந்திய ரயில்வே அமைச்சகம். அது ஏறக்குறைய 200க்கும் மேற்பட்ட ஊர் / கிராம மக்களுக்கு பேருதவியாக இருக்கும். - கலீல் பாகவீ, ஒருங்கிணைப்பாளர், பரங்கிப்பேட்டை பயணியர் நலச் சங்கம் (PNO-PNS)

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ   2 years ago

உரிய நடவடிக்கை எடுக்க... *தொடர்ந்து அநீதி இழைக்கும் தென்னக ரயில்வே - RTI தந்த அதிர்ச்சித் தகவல்கள்* பயணிகளின் வருகையும், வருமானமும்தான் ஒரு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான வசதிகள் செய்யப்படுவதாக தென்னக ரயில்வேயின் பல்வேறு செய்தி குறிப்புகள் தகவல்களைத் தருகின்றன. ஆனால், கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை ரயில் நிலையம் மட்டும் தென்னக ரயில்வேயால் தொடர்ந்து புறக்கணிப்புக்கு உள்ளாகும் காரணம் என்னவென்று மக்களுக்குத் தெரியவில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டப்போராளி பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ, "பரங்கிப்பேட்டை, கிள்ளை, புதுச்சத்திரம், ஆலப்பாக்கம் உள்ளிட்ட ரயில் நிலையங்களின் பயணிகளுக்கான வசதிகள்" குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் விபரங்கள் கோரியிருந்தார். இதற்கு தென்னக ரயில்வே, திருச்சி கோட்டம் தந்துள்ள பதில் மிகுந்த பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிக வருமானம் பெற்றுத் தரும், அதிக பயணிகள் வருகை தரும், தினந்தோறும் எட்டு ரயில்கள் நின்று செல்லும் பரங்கிப்பேட்டை ரயில்வே நிலையம் ஒற்றை இருப்புப் பாதையுடன் மிக மிகக் கீழ் தள்ளப்பட்டு எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி உள்ளது. ஆனால், பயணிகள் வருகையும், வருமானமும் மிக மிக குறைவாக இருக்கக்கூடிய, ஆறு ரயில்கள் நின்று செல்லக்கூடிய அருகிலுள்ள மற்ற ரயில் நிலையங்கள் இரண்டு / மூன்று பாதைகளுடன் வசதிகள் மேம்படுத்தப்பட்டு இருக்கின்றன. தென்னக இரயில்வே, திருச்சி கோட்டம் தந்துள்ள பதிலில், 2018 ஆம் ஆண்டு வரை பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், ஆலப்பாக்கம் மற்றும் கிள்ளை ஆகிய நான்கு ரயில் நிலையங்களும் E என்ற தரத்தில்தான் இருந்துள்ளன. 2019 - 2021 வரையுள்ள தகவல்களை தராமல் ரயில்வே துறை மறைத்துள்ளது. 2022-2023 ஆண்டுகளில் பரங்கிப்பேட்டை மட்டும் HG-2 ஆக தரம் இறக்கப்பட்டு மற்ற மூன்று ரயில் நிலையங்களும் NSG-6 என்ற தரத்தில் வைக்கப்பட்டுள்ளன. இடைப்பட்ட ஆண்டுகளில் என்ன நடந்தது? என்ற மற்றுமொறு கேள்விக்கு இதுவரை ரயில்வே நிர்வாகம் பலமுறை கேட்டும் பதில் தரவில்லை.   பயணிகளின் வருகை மற்றும் ஆண்டு வருமானம் போன்றவற்றை ஆராயும்போது 2019-20 காலகட்டங்களில்  பரங்கிப்பேட்டையில் 149,160 பயணிகள் வருகையும், 11.45 லட்சம் வருமானமும், கிள்ளையில் 68,487 பயணிகள் வருகையும், 4.9 லட்சம் வருமானமும், ஆலப்பாக்கத்தில் 47,432 பயணிகள் வருகையும், 2.97 லட்சம் வருமானமும், புதுச்சத்திரத்தில் 20,258 பயணிகள் வருகையும், 1.58 லட்சம் வருமானமும் கிடைத்துள்ளது. அதாவது, சராசரியாக ஒரு நாளைக்கு பரங்கிப்பேட்டையில் 409 பயணிகளும், கிள்ளையில் 188 பயணிகளும்,  புதுச்சத்திரத்தில் 56 பயணிகளும், ஆலப்பாக்கத்தில் 130 பயணிகளும் பயணம் செய்துள்ளனர். மேற்கண்ட ரயில் நிலையங்களிலிருந்து பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து திருச்சி கோட்டம் குறிப்பிடும் தகவல்களை பார்த்தால் பரங்கிப்பேட்டைக்கு மட்டும் எந்தளவுக்கு பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது என்பது தெள்ளத் தெளிவாக விளங்கும்.   உதாரணத்திற்கு... 1. பயணச் சீட்டு வழங்கும் கவுண்டர்: பரங்கிப்பேட்டை மற்றும் புதுச்சத்திரத்தில் தலா ஒன்றும், ஆலப்பாக்கம் மற்றும் கிள்ளையில் தலா இரண்டும் உள்ளன. 2. காத்திருப்பு அறை: பரங்கிப்பேட்டையில் 39, புதுச்சத்திரத்தில் 39, ஆலப்பாக்கத்தில் 46 மற்றும் கிள்ளையில் 53 சதுர அடிகளில் கட்டப்பட்டுள்ளது. 3. குடி தண்ணீர் குழாய்கள்: பரங்கிப்பேட்டையில் 2, புதுச்சத்திரத்தில் 5, ஆலப்பாக்கத்தில் 7 மற்றும் கிள்ளையில் 6 உள்ளன. 4. கழிப்பிட வசதி: பரங்கிப்பேட்டை மற்றும் புதுச்சத்திரத்தில் தலா 2, ஆலப்பாக்கத்தில் 3 மற்றும் கிள்ளையில் 6 உள்ளன. 5. சிறுநீர் கழிக்குமிடம்: பரங்கிப்பேட்டையில் 1, புதுச்சத்திரம் மற்றும் ஆலப்பாக்கத்தில் தலா 2, கிள்ளையில் 4 உள்ளன. 6. பயணிகள் அமரக்கூடிய இருக்கைகள்: பரங்கிப்பேட்டையில் 40, புதுச்சத்திரத்தில் 63, ஆலப்பாக்கத்தில் 230 மற்றும் கிள்ளையில் 39 அமைக்கப்பட்டுள்ளன. 7. மின் விசிறி: பரங்கிப்பேட்டையில் அறவே இல்லை. புதுச்சத்திரத்தில் 2, ஆலப்பாக்கம் மற்றும் கிள்ளையில் தலா 1 உள்ளன. 8. மின் விளக்குகள்: பரங்கிப்பேட்டையில் 25, புதுச்சத்திரத்தில் 90, ஆலப்பாக்கத்தில் 57 மற்றும் கிள்ளையில் 47 அமைக்கப்பட்டுள்ளன. இந்த தகவல்ககளின் அடிப்படையில், தினந்தோறும் சுமார் 409-க்கும் மேற்பட்ட பயணிகள் வரக்கூடிய பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்திற்கும், 56, 130 மற்றும் 188 பயணிகள் வரக்கூடிய மற்ற ரயில் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள பயணிகளுக்கான வசதிகளை நடுநிலையோடு பார்த்தால் தென்னக ரயில்வேயின் புறக்கணிப்பு நன்றாக விளங்கும்.  ஒரே பகுதியில் இருக்கக் கூடிய, அதிலும் பாரம்பரிய மிக்க, அதிக வருமானம் தரக்கூடிய, அதிகமாக பயணிகள் வந்து செல்லக்கூடிய ஒரு ரயில் நிலையத்தை குறி வைத்து ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டார்களா? என்ற நியாயமான சந்தேகம் வருவது இயல்புதானே. அதன் காரணமாகத்தான் பிற ரயில் நிலையங்களையும் ஒப்பீடு செய்து பார்க்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. அதற்காக பிற ரயில் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகளை குறைக்க வேண்டும் என்பது நம் என்ணம் அல்ல. அந்த நிலையங்களுக்கு இன்னும் மேலதிக வசதிகளை தொடர்ந்து ரயில்வே துறை செய்யட்டும். அதே போன்று பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தையும் கவனிக்கட்டும். ஒரு கண்ணில் வெண்ணையும், மறு கண்ணில் சுண்னாம்பும் என்ற பாகுபாடு காட்ட வேண்டாம் என்பதுதான் பரங்கிப்பேட்டை மக்களின் கோரிக்கை.   பரங்கிப்பேட்டை ரயில் நிலையம் மிக மிக மிக ரயில்வே துறையால் புறக்கணிக்கப்பட்டு பாரபட்சம் காட்டப்பட்டு இருக்கின்றது. இதற்கு நடவடிக்கை எடுப்பது யார்? அதிகமாக பயணிகள் வரக்கூடிய, அதிக வருமானம் தரக்கூடிய ரயில் நிலையங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமா? இல்லையா? அதற்காக வைக்கப்படும் மக்களின் கோரிக்கைகளை ஏற்று மேலதிக செயற்பாடுகளை செய்ய வேண்டுமா இல்லையா? தென்னக இரயில்வே, திருச்சி கோட்ட இரயில்வே அதிகாரிகளின் இந்த பாரபட்ச போக்கை தட்டிக் கேட்பது யார்? பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தின் பாரம்பரியத்தை அதற்குண்டான வசதிகளுடன் மீட்டுக் கொண்டு வருவது யார்? பதில்களை எதிர்பார்த்து பரங்கிப்பேட்டை மற்றும் சுற்று வட்டார மக்கள். - பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்கம் (PNO-PNS)

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ   2 years ago

_முறையான நடவடிக்கை எடுக்கப்பட... நீதி வேண்டி..._ *பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்திற்கு மட்டும் ஏன் இந்த அநியாயம்? - அலட்சியத்தில் பல அரசியல்வாதிகள், ஆணவத்தில் பல அதிகாரிகள், ஊமையாகிப் போன பல ஊடகங்கள், செய்வதறியாத நிலையில் பொதுமக்கள்¡* இந்திய ரயில்வே, தமிழகத்தின் பல்வேறு ரயில் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்து வருவதை கண்டு மக்கள் தம்முடைய ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். வடமாநிலங்கள், கேரளா, ஆந்திர மாநிலஙகளில் உள்ளதைப் போன்று அதிகளவு ரயில்வே சேவைகள் தமிழ்நாட்டில் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி. அதே அடிப்படையில், தென்னக ரயில்வே, திருச்சி கோட்டம் அனைத்து ரயில் நிலையங்களை விட பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தை முற்றிலுமாக தொடர்ந்து புறக்கணித்து வருவதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. ரயில் நிலையங்களின் தரங்களை பிரிப்பதற்காக பல்வேறு படித்தரங்களை வைத்திருக்கின்றது ரயில்வே துறை. அனைத்து ரயில் நிலையங்களும் அந்த தரத்திற்கு உட்படுத்தப்பட்டுதான் தரவிறக்கமோ அல்லது அல்லது தர உயர்வோ செய்யப்படுகின்றது. அந்த அடிப்படையில் அந்தந்த ரயில் நிலையங்களில் பல்வேறு வசதிகள் செய்யப்படுகின்றன. ஆனால், உண்மையில் தரம் பிரிக்கப்படும் நிபந்தனைகளின் அடிப்படையில்தான் திருச்சி கோட்டம் ரயில் நிலையங்களை தரம் பிரித்துள்ளதா? என்பது மில்லியன் டாலர் கேள்வி. காரணம், இத்துடன் இணைக்கப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில், ஒரு சில ரயில் நிலையங்கள் எடுத்துக் கொண்டாலும் கூட தரம் பிரிக்கப்படுவதற்குண்டான நிபந்தனைகள் அடிப்படையில் அனைத்து ரயில்களும் அனைத்து ரயில் நிலையங்களும் பிரிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. பரங்கிப்பேட்டை ரயில் நிலையம் மட்டும் குறிப்பிட்டு தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது (நீடுர் ரயில் நிலையமும் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது கூடுதல் தகவல்). அதிலும், ஐந்தாண்டுகள் முடிந்த பிறகே தர மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்பதும் ஒரு சட்டம் உள்ளது. ஆனால், பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தை, பயணிகள் வருகை மற்றும் ஆண்டு வருமானம் பிற ரயில் நிலையங்களை விட அதிகமாக இருந்தும் இரண்டாண்டுகளுக்குள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. பிற ரயில் நிலையங்களில் வருமானமும் பயணிகளின் எண்ணிக்கையும் குறைவாக இருப்பினும் அவை அந்தந்த தரத்திலேயே வைக்கப்பட்டுள்ளன. ஏன், பரங்கிப்பேட்டை ரயில் நிலையம் மட்டும் தரவிறக்கம் செய்யப்பட்டு கொண்டே இருக்கின்றது என பலமுறை பல நபர்கள் பல வடிவங்களில் இது குறித்து தகவல் கேட்டால், அதற்கு தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்டம் பதில் தர முடியாது, அதற்கான காரணத்தைச் சொல்ல முடியாது என்று பிடிவாதமாக உள்ளது. மேல் முறையீடுகள் செய்தும் ப(ய)லனில்லை. நமக்கும் அது ஏன் என்று புரியவில்லை. எனவே, பிற ரயில் நிலையங்கள் எப்படி கவனத்தில் எடுத்துக்கொள்ளப் படுகின்றதோ அதேபோன்றுதான் பரங்கிப்பேட்டை ரயில் நிலையமும் கவனிக்கப்பட வேண்டும். இதற்கென்று தனிப்பட்ட சலுகைகளையோ, விதிவிலக்குகளையோ கேட்கவில்லை. அனைத்து ரயில் நிலையங்களும் எப்படி கவனிக்கப்படுகின்றதோ அப்படி கவனித்தாலே போதும், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடக்க வேண்டாம் என்பதுதான் நம்முடைய கோரிக்கை. பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்திற்கு மட்டும் ஏன் இந்த அநியாயம்? - அலட்சியத்தில் பல அரசியல்வாதிகளும், ஆணவத்தில் பல அதிகாரிகளும், ஊமையாகிப் போன பல ஊடகங்களும், செய்வதிறியாத நிலையில் பொதுமக்களும் உள்ளனர். எனவே, இது குறித்து சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் நல சேவகர்கள், அரசு அதிகாரிகள், ஊடகங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தின் தரத்தை உயர்த்துவதற்கும், அதனுடைய பாரம்பரியத்தை மீட்பதற்கும், அங்கு தேவைப்படும் அனைத்து வசதிகளும் செய்யப்படுவதற்கும் ஆவண செய்யுமாறு பரங்கிப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். - பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ, ஒருங்கிணைப்பாளர், பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்கம் (PNO-PNS) www.facebook.com/PNOPNS www.twitter.com/PNO_PNS

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அ.பி   2 years ago

Villupuram மாவட்ட ம் எந்த குறியிட்டில் உள்ளது என ஆசிரியர் மறந்து விட்டார் போல..

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

செல்வம்   2 years ago

ரியல் எஸ்டேட், ஷேர் ஆட்டோ, நூறு நாள் வேலை இல்லாவிட்டால் சிங்கிதான். வீட்டுக்கொரு ஆள் வெளியூரில். மதுக்கடை, செல்ஃபோன், தொலைக்காட்சி, சுய உதவிக் குழு இல்லாவிட்டால் நாளைக் கடத்துவது சிரமம். அத்தக்கூலியாக ஆயிரம் ரூபாயாவது கிடைத்தால்தான் கட்டுப்படியாகும். அதனால் தேர்தல் பிரச்சாரத்தைத் தவிர மற்ற எல்லாவற்றுக்கும் மலிவான கூலியில் பிறமாநிலத் தொழிலாளர்களைத் தேடுகிறார்கள்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

கொலைகள்மனுஷ்யபுத்திரன்நிலையானவைசீனத்தின் சதுரங்கப் பாய்ச்சல்பூர்வாஞ்சல்தொலைத்தொடர்புபுதுப்பாளையம்தமிழ் முஸ்லிம்கள்ஓணம்அ அ அ: ஜெயமோகன் பேட்டிஅனைத்தையும் பற்றியக் கோட்பாடு98வது தலைவர்செயலூக்கம்உணவுத் தன்னிறைஎன்.மாதவன் கட்டுரைபொதுப் போக்குவரத்துஇமையம் இப்போது உயிரோடிருக்கிறேன்கௌசிக் தேகா கட்டுரைவிடைடி.எஸ்.பட்டாபிராமன்சிறப்பு அந்தஸ்துபாரசிட்டமால்ஹேக்கர்சுந்தர் பிச்சை அருஞ்சொல்தென்னாப்பிரிக்காசமஸ் ராஜன் குறைபைஜுஸ்தலைமைத் தேர்தல் ஆணையர்ஆறாவது கட்ட வாக்குப்பதிவு ராசேந்திரன்: உயர்த்திப் பிடிக்கவேண்டிய உயிர்க்கொட

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!