இன்னொரு குரல் 2 நிமிட வாசிப்பு
100 கோடி தடுப்பூசி சாதனையில் பெருமிதம் ஏதும் இல்லை
@ கேள்வி-நீங்கள் பதில் சமஸ்: அருஞ்சொல் தொடர்பான சந்தேகங்கள்
எனக்குள் ‘அருஞ்சொல்’ தொடர்பாக எழுந்த ஐயங்களுக்கு விளக்கம் கொடுத்திருப்பது சிறப்பு. குறிப்பாக சந்தா செலுத்துவது சம்பந்தமான தெளிவான பதிலுக்கு நன்றி. ‘அருஞ்சொல்’ வளர்ந்து, அறிவு வெளிச்சம் பரப்ப வேண்டும். வாசகர்கள் ஒவ்வொருவரும் சந்தா செலுத்துவதைக் கடமையாக கொள்ள வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
- பி.சரவணன்
@ ஒன்றிய - மாநிலக் கூட்டுசக்திக்கு சாட்சியம் 100 கோடி தடுப்பூசி சாதனை
ஒருவேளை இந்தியா கரோனா முதல் அலையை முறையாகக் கட்டுப்படுத்தியிருந்தும்கூட, தவிர்க்கவே இயலாமல் இரண்டாம் அலையினால் தாக்கப்பட்டு, பாதிப்புக்குள்ளாகியிருந்திருப்பின், நாமும் இந்த 100 கோடி தடுப்பூசி டோஸ் சாதனையைக் கண்டு பெருமிதம் கொண்டிருக்கலாம். ஓராண்டிற்கும் மேலாகியிருப்பினும் நம் மனக்கண் முன்னே இன்றும் நிழலாடிக்கொண்டிருப்பது என்ன? முன்னேற்பாடுகளோ திட்டமிடுதலோ அற்ற, ஒன்றிய அரசின் திடீர் ஊரடங்கு அறிவிப்பும், அலங்க மலங்கடிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களும், அவர்கள் எதிர்கொண்ட சொல்லொண்ணா இடர்பாடுகளும் இழப்புகளும். மானுட நேயம், குடிமக்கள் மீதான கருணை எதும் இல்லை. ஆசிரியர் சமஸ் உரைத்திருப்பதைப் போல், ‘எதிர்க்கட்சி மற்றும் மாநில அரசுகளின் தொடர் அழுத்தத்தின் விளைவாகவே தடுப்பூசி அளித்தே தீர வேண்டிய இடம் நோக்கி இந்திய அரசு நகர்ந்தது. ஆகையால், ஒரு நெருக்கடியால் நிகழ்ந்த ‘நூறு கோடி தடுப்பூசி சாதனை. தொடர்பில் புளகாங்கிதமோ பெருமிதமோ பட ஏதும் இல்லை.
-லாரா
ஒன்றிய அரசு எந்த ஒரு விஷயத்திலும் எதிர்க்கட்சிகளை நல்லுறவோடு ஆலோசித்தது இல்லை. கண்டனக் குரல் எழும்பும்வரை, ‘நான்’ என்ற மமதையிலேயே தொடர்வது ஆபத்தான போக்கு. இந்த விஷயத்திலும் அதுதானே நடந்தது? காங்கிரஸ் தலைவர் ஆரம்பத்தில் தடுப்பூசிகுறித்து பேசியபோது கேலியாகவே பாஜக அமைச்சர்கள் பதில் கூறியதை மறக்க முடியுமா?
-குணசேகரன்







பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
Rajesh 3 years ago
மத்திய அரசு, மாநில அரசு, மோடி அரசு என்றேல்லாம் பார்க்காமல் 100 கோடி தடுப்புகளை செலுத்தியது ஒரு சாதனையே. ஒரு வேலை ஒரு உதாரணத்துக்கு நாம் நாங்கில் ஒரு பகுதி மக்களுக்கே தடுப்பூசி செலுத்தி உள்ளோம் என்று வைத்துக்கொண்டால் நம் நிமைமயை யோசித்து பாருங்கள். பழையதை பேசி உத்வேகத்தை இழப்பதை காட்டிலும் புதிய சாதனைகளை பாராட்டி உத்வேகம் காண்பதே அனைவருக்கும் நலம்.
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.