இன்னொரு குரல் 5 நிமிட வாசிப்பு

திராவிட அரசியலின் இனவாதம்

அரவிந்தன் கண்ணையன்
01 Jun 2022, 5:00 am
6

தமிழில் விவாதங்களை வளர்க்கும் பணியில் தன்னையும் ஈடுபடுத்திக்கொள்கிறது ‘அருஞ்சொல்’. அதனால்தான் தலையங்கம், கட்டுரை ஆகியவற்றுக்கு இணையான முக்கியத்துவத்தை ‘இன்னொரு குரல்’ பகுதிக்கு அளித்து, இணையதளத்தின் பிரதான இடத்திலேயே அதற்கு இடமும் அளிக்கிறது. ‘அருஞ்சொல்’ இதழை வாசிப்பவர்கள் வெறும் வாசகர்கள் மட்டும் இல்லை; எழுத்தாளர்கள், அறிஞர்கள், பத்திரிகையாளர்கள், கொள்கை வகுப்பாளர்களான அரசியலர்கள் – அதிகாரிகள், செயல்பாட்டாளர்கள், ஆசிரியர்கள் என்று பல்வேறு துறை ஆளுமைகளும் ‘அருஞ்சொல்’லை வாசிக்கிறார்கள் என்பதை அறிந்திருக்கிறோம். ஆகையால், கட்டுரைகளை வாசிப்பவர்கள் ‘எனக்குப் பிடிக்கிறது அல்லது பிடிக்கவில்லை’, ‘நான் இதை ஆதரிக்கிறேன் அல்லது எதிர்க்கிறேன்’ என்பதுபோல ஓரிரு வரிகளில் தங்கள் கருத்துகளை எழுதாமல் விரிவாக எழுதிட வேண்டுகிறோம். அப்படி எழுதப்படும் கருத்துகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை ‘இன்னொரு குரல்’ பகுதியில் வெளியாகும். கருத்துகளைப் பின்னூட்டப் பகுதியில் எழுதிடுங்கள் அல்லது aruncholeditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடுங்கள். தயவுசெய்து உங்கள் பெயருடன், ஊர் பெயரையும் குறிப்பிடுங்கள். இரு நாட்களுக்கு முன்னதாக, ராமேஸ்வரம் நகராட்சியில் பணிபுரியும் வெளிமாநிலத்தவர்கள் தங்களை நகராட்சியில் பதிவுசெய்துகொள்ள வேண்டும் என்கிற அறிவிப்பு பேசுபொருளானது. இந்த அறிவிப்பு தொடர்பாக வாசகர் ஒருவரின் கேள்விக்கு ‘கேள்வி நீங்கள் - பதில் சமஸ்’ பகுதியில் பதில் வெளியானது. அந்த பதிலுக்கு ஏராளமான எதிர்வினைகள் வந்தன. அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றை இங்கே தருகிறோம்.  

சமீபத்தில் அமெரிக்காவில் நிகழ்ந்த பெரும் துண்பியல் சம்பவம் டெக்சாஸ் மாநிலத்தில் பள்ளிக் குழந்தைகள் சுட்டுக் கொல்லப்பட்டது. அந்நிகழ்வு குறித்து அமெரிக்கர்கள் உட்பட உலகில் பலரும் விவாதித்தார்கள். அமெரிக்க துப்பாக்கி மோகம் குறித்தெல்லாம் பலவித கண்டனங்கள், கோபச் சொல்லாடல்கள், எள்ளல்கள்கூட நிறைய தரப்புகளில் இருந்து வந்தன.

ஓர் அமெரிக்கனாக நான் மிகவும் வருந்திய, கோபம் கொண்ட, வெட்கம் கொண்ட வெகு அரிதான நேரங்களுள் அது ஒன்று. இதுதான் சமயமென்று ஒருவர் அமெரிக்கர்களே அழுகிய மனம் கொண்டவர்கள் என்று எழுதியதை நண்பர்கள் வாயிலாக அறிந்தேன். நண்பர்கள் நான் ஏதாவது தீவிர எதிர்வினையாற்றுவேன் என்று நினைத்தார்கள். ஆனால், எதற்கு வீணாக எழுதுவானேன் என்று சும்மா இருந்தாலும் மனம் அசைபோட்டவாறே இருந்தது. இன்று காலைகூட அதுபற்றி யோசனை வந்தது. 

வருடத்துக்குப் பல்லாயிரகணக்கான இந்தியர்கள் அமெரிக்காவுக்குப் பிழைப்புக்காக வருகிறார்கள், இங்கேயே குடி அமர்கிறார்கள், தங்கள் கலாச்சார மத அடையாளங்களை நிறுவுகிறார்கள். இன்று தீபாவளி அமெரிக்க வெள்ளை மாளிகையில் கொண்டாடப்படுகிறது, தீபாவளிக்காகப் பள்ளிகள் மூடுவதும் நடக்கிறது. இதனாலெல்லாம் உரசல்கள் இல்லாமலில்லை. ஆனால், அமெரிக்கச் சட்டமும் அமெரிக்கர்களுக்கே உரித்தான பரந்த மனமும் ஒவ்வொரு தருணத்திலும் இந்தியர்கள் பக்கம் நின்றிருக்கிறது. நிறைய எடுத்துக்காட்டுகள் சொல்ல முடியும். அவற்றையெல்லாம் நினைத்துக்கொண்டே வட இந்தியர்களை இனரீதியான எள்ளல் செய்யும் தமிழ்நாட்டை நினைத்துக்கொண்டேன். 'அருஞ்சொல்'லில் ஒரு கட்டுரையை எதிர்பார்த்து தளத்துக்கு வந்தபோது 'தமிழர்களிடம் ஏன் இவ்வளவு இனவெறி?' என்ற தலைப்பில் ஒரு கேள்வி - பதில் பதிவு இருந்தது. படித்தேன், துணுக்குற்றேன், சினமும் வந்தது. 

“வெளிமாநிலத்திலிருந்து வந்து இங்கு பணியாற்றுவோர் நகராட்சி அலுவலகத்தில் பதிவுசெய்துகொள்ள வேண்டும்; இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்பபடும் என்று ராமேஸ்வரம் நகராட்சி விடுத்த அறிக்கையைக் கவனித்தீர்களா?” என்ற வாசகரின் கேள்விக்கு ஆசிரியர் சமஸ், “ஒரு பிரஜையின் குடியுரிமையை டெல்லி மட்டும் எப்படித் தீர்மானிக்க முடியும்? மாநில அரசுக்கும் உள்ளூர் அரசுக்கும்கூட குடியுரிமையைத் தீர்மானிப்பதில் பங்கு இருக்க வேண்டும்.” என்று பதில் சொல்லி இருக்கிறார். மேலும் சமஸ் சொல்கிறார், “ஆனால், ராமேஸ்வரம் நகராட்சி அங்கீகரித்தால்தான் ஒருவர் ராமேஸ்வரத்தின் பிரஜையாக முடியும் என்ற அதிகாரம் ராமேஸ்வரம் மக்களுக்கு இருக்கும் சூழல் உருவாக வேண்டும். சுவிட்ஸர்லாந்து போன்ற நாடுகளில் உள்ள நடைமுறை பாணியையே இங்கே நான் பேசுகிறேன்”.

“வடவர்கள் நம்மவர்களும் அல்ல, நல்லவர்களும் அல்ல” என்ற அண்ணாதுரையின் இனவாத திராவிட இயக்க கோஷத்தின் எதிரொலிகள் இன்றும் கேட்கிறது. அப்போதும் அவர் சொன்னது இனவாதம்தான். “வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது” என்றதும் பொய்யே.

அன்றைய மத்திய அரசின் கேபினட் முதல் மத்திய அரசில் ஐஏஎஸ், ஐபிஎஸ், அதிகார வர்க்கத்தில் எல்லாம் தமிழர்கள் அநேகர் இருந்தனர். தமிழ்நாடும் சுபிட்சமாகவே இருந்தது. திராவிட இயக்கத்தின் அடிப்படைத் தளமே இந்த இனவாதம்தாம். ‘நேட்டிவிஸம்’ என்று அரசியலாளர்கள் இதனைக் குறிப்பார்கள். இது எப்போதுமே பன்மைத்தன்மைக்கு எதிரான விஷம். இந்த நேட்டிவிஸம் என்பது வலதுசாரி, இடதுசாரி இரண்டிலும் உண்டு. அதே வலது, இடதுசாரிகளின் ‘மாடரேட்டு’கள் இதனை நிராகரிப்பார்கள். இந்த இரண்டு வரிகளில் நான் ஆங்கில சொற்களை அல்லது மொழி மாற்ற சொற்களைக் கையாண்டதே சொல்லும் நம் மொழியில், அதாவது நம் பண்பாட்டில், இதையெல்லாம் விவாதிக்கவே அறிவு வரலாறு இல்லை. 

சமஸ் சுவிட்சர்லாந்து குடியுரிமை பற்றி சொல்கிறார். எந்த அர்த்தத்தில் என்று தெரியவில்லை. சுவிட்ஸர்லாந்து குடிமகன், நாட்டுக்குள்ளே மட்டுமல்ல, ஐரோப்பாவில் எங்கும் சென்று பணியாற்ற முடியும். ஒரு நாட்டுக்குள்ளேயே ஒரு குடிமகன் ஓரிடத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு சென்று பணியாற்றுவது, வீடு வாங்கி செட்டில் ஆவதெல்லாம் அடிப்படை உரிமை. இவ்விடத்தில் காஷ்மீர் மற்றும் வேறு சில மாநிலங்களுக்குக் கொடுக்கப்பட்ட விதிவிலக்குகளின் அத்தியாவசியம் எடுத்துக்காட்டாகாது. அதன் தேவைகள் வேறு. 

தமிழர்கள் காலம் காலமாக வேறு மாநிலங்களில் குடியேறி சவுக்கியமாக இருக்கிறார்கள். பெரியாரை நேசிக்கும் என் நாண்பர்களில் சிலர் வேறு மாநிலங்களில்தான் வசிக்கிறார்கள். சிலர், வேறு நாடுகளில். 

குடியுரிமை, அதுவும் ஒரு மண்ணில் பிறந்து அதன் மூலம் இருக்கும் குடியுரிமையை, வெளிநாட்டில் இருந்து குடியேறுபவர்களோடு ஒப்பிடலாகாது. வங்கத்து தொழிலாளியோ முதலாளியோ தமிழ்நாட்டில் வேலை செய்யவும் முதலீடு செய்யவும் முழு உரிமை உள்ளது. சமஸின் மனம் கவர்ந்த முதல்வரே அந்நிய முதலீடுகளைக் கோருகிறாரே? தமிழகத்தின் பொருளாதாரம் முன்னேற வேண்டுமென்றால் அந்நிய முதலீடு மட்டுமல்ல இந்தியாவின் மூலைமுடுக்கில் இருந்தெல்லாம் தொழிலாளர்கள், தொழில் விற்பண்ணர்களும் வேண்டும். இது அடிப்படை பொருளாதார அறிவு. 

கோவையில் குஜராத்திகள் குடியேற்றமும் இந்துத்துவ அரசியலும் அடிக்கடி சுட்டிக்காட்டப்படுகிறது (சமஸ் கட்டுரையில் அல்ல). அதையே பெங்களூரில் தமிழர் பற்றியும் சொல்லலாமே? கோவையின் இந்துத்துவ அரசியல் குஜராத்திகள், வடவர்களின் குடியேற்றத்துக்கும் முன்பே நிகழ்ந்ததுதானே? வடவர்களின் வருகைக்கு முன்பே தமிழகத்தில் இந்து முண்ணனி தீவிரம்தானே? இந்த திராவிட இயக்கத்தினர் என்னமோ தமிழகம் அமைதிப் பூங்கா; வடவர்கள் வந்துதான் கெடுத்துவிட்டார்கள் என்று பம்மாத்து செய்கிறார்கள். சாதியம் புரையோடிப்போன மாநிலம்தான் தமிழகம். சாதியம் மதவாதத்தின் இன்னொரு வடிவம், இன்னொரு வடிகால். 

வடவர்களின் குடியேற்றம் இந்துத்துவ அரசியலுக்கு அடிகோலும் என்று சொல்வது பச்சையான இனவாதம். அப்படியானால் தமிழர்கள் குடியேற்றம் சாதிய அரசியலுக்கு அடிகோலும் என்றும் கர்நாடகத்தினர் சொன்னால்? இந்துத்துவ அரசியல் இந்தியா எதிர்நோக்கும் பேராபத்து. அதனை எதிர்கொள்வதற்கான அறிவுத் தள முயற்சியே இல்லாமல் ஆன்மீக அரசு நடத்திக்கொண்டிருப்பவர்களுக்கு அதனை காரணமாக சொல்லும் யோக்கியதை உண்டா? 

ஒரு தேசத்தில் குடியுரிமை தேசிய அளவில்தான் தீர்மானிக்கப்பட வேண்டும். மாநில உரிமை, உள்ளூர் உரிமைகளின் எல்லைகள் குடியுரிமைகளைத் தீர்மானிக்கக் கூடாது. நாளை ஒரு சென்னைவாசி எளிதாக இதே கேள்வியை சென்னையில் குடியேறுபவர்கள் குறித்துக் கேட்கலாமே? இந்த மாநில உரிமை கோஷங்களின் பின்னால் ஒளிந்துகொண்டிருப்பது இன வெறுப்பும் பிரிவினைவாத அரசியலும்தான். அரசியலாளர்கள் மட்டுமல்ல; மனித உரிமையாளர்களும் இதனை எதிர்ப்பார்கள். எதிர்க்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளின் பின்னால் உள்ள அசிங்கமான இனவாதத்தைத் தோலுறிக்க வேண்டும். 

“காசியில் புலவர் செப்பிடும் உரைதனைக் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்” என்ற மகாகவியின் உள விரிவே என் அரசியல், என் நிலை, என் சித்தாந்தம். இதனால்தான் என்னால் திராவிட இயக்கத்தை ஓர் அறிவியக்கம் என்று ஏற்க முடிந்ததே இல்லை. 

“காக்கை குருவி எங்கள் ஜாதி- நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்; நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை; நோக்க நோக்கக் களியாட்டம்.”

“முப்பது கோடி முகமுடையாள்
உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்
இவள் செப்பு மொழிபதி னெட்டுடையாள் 
எனில் சிந்தனை ஒன்றுடையாள்!"

- அரவிந்தன் கண்ணையன்

தொடர்புடைய கட்டுரைகள்  

தமிழர்களுக்கு ஏன் இவ்வளவு இனவெறி? 
இந்தியாவுக்குத் தேவை மூன்றடுக்குக் குடியுரிமை

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
அரவிந்தன் கண்ணையன்

அரவிந்தன் கண்ணையன், அமெரிக்காவில் வசிக்கும் தமிழர். இந்திய வரலாறு, சமகால அரசியல் தொடர்பில் இணையத்தில் தொடர்ந்து எழுதிவருபவர். உலக வரலாறு, அமெரிக்க அரசியல் தொடர்பில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர்.


3






பின்னூட்டம் (6)

Login / Create an account to add a comment / reply.

K.R.Athiyaman   2 years ago

வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று கோசம் பொய்யானதல்ல. நிஜத்தின் அடிப்படையில் உருவான கோசம். மாநில சுயாட்சி கோரிக்கை 1960கள், 1970களில் அதிகம் ஒலித்தது. அன்று ‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’ என்ற கோசம் முன்வைக்கப் பட்டது. (நான் அதை கேட்டு வளர்ந்தவன் தான்). அதாவது அன்று மத்திய அரசின் ஐந்தாண்டு திட்டங்களில் வட மாநிலங்களுக்கு மிக அதிக நிதி ஒதுக்கீடு, புதிய தொழிற்சாலைகள், அணைகள், அதன் மூலம் வேலை வாய்ப்புகள் கிடைத்தது என்ற விமர்சனம் இங்கு பலமாக எழுந்தது. இதை சரியாக புரிந்து கொள்ள அன்று இருந்த பொருளியல் கொள்கைகளையும் சேர்த்து பார்க்க வேண்டும். அன்று சோசியலிச பாணி கொள்கைகள். Central planning, mixed economic model, with a commanding heights for public sector enterprises. பெரும் தொழில் நிறுவனங்கள் என்றாலே அவை அரசு துறை முதலீட்டில் துவக்கப்படுபவை தான் என்று இருந்த காலம். இரும்பு உருக்காலைகள், ரசயான உர நிறுவனங்கள், கனரக நிறுவனங்கள் இவை பெரும்பாலும் உத்தர் பிரதேசம், பிகார், ஒரிசா போன்ற மாநிலங்களில் அமைக்கபட்டன. பெரும் அணைகட்டுகளும் தான். மத்திய அரசின் பட்ஜெட்டில் கணிசமான தொகை வட மாநிலங்களில் அமைந்த இந்த திட்டங்களுக்காக செலவிடப்பட்ட காலம் அது. எங்களுக்கு கடும் வெறுப்பை, எரிச்சலை அளித்த காலம் அது. தமிழகத்திற்கு BHEL நிறுவனம் மட்டுமே காமராஜர் காலத்தில் (1960களில்) கிடைத்தது. திமுக முன்னெடுத்த வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது கோசத்தின் விளைவாகவே இதை காமராஜர் முன்னெடுத்தார். பின்னர் நிறுவப்பட்ட சேலம் இரும்பு உருக்க்காலை சிறிய நிறுவனம். மேலும் இரண்டாம் கட்ட இரும்பு தயாரிப்பு மட்டும் தான் அதில். இன்று நிலைமை தலைகீழ். தாரளமயமாக்கல், உலகமயமாக்கல் காலம். பெரும் முதலீடுகள், புதிய தொழிற்சாலைகள், வேலை%0

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

அ.பி   2 years ago

இன்று உங்கள் கட்டுரை சரியில்லை

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   2 years ago

அப்படியானால் 'ஆதார்'ஐ எதிர்த்து ஒரு நான்கு கருத்துகளை பதிவிடலாமே, கட்டுரையாளர்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Vasudevan S   2 years ago

புது தில்லியின் மக்கள் தொகுதியில் கிட்டத்தட்ட 75 சதவீதம் வேறு மாநிலங்களில் இருந்து வந்து குடியேறியவர்கள்தான்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Rajendra Prasad Pandurangan    2 years ago

பெங்களூரில் தமிழர்கள் சாதிய அரசியலுக்கு அடிகோலும் விதமாக நடந்துகொண்டார்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது மிகத் தவறானது., அடிப்படையற்றது. அப்படியான ஏதாவது நிகழ்வை நீங்கள் எங்காவது வாசித்தீர்களா, பார்த்தீர்களா? மாறாக அதே கர்நாடகத்தில் வடமொழியினரின் மொழி ஆதிக்க மனோபாவமும், உள்ளூர் மக்களை மொழிசார்ந்து எடுத்தெறிந்து பேசுவதும் பல காணொலிகளில் பகிரப்பட்டுவந்திருக்கிறது. கோவையில் கடந்த தேர்தல்களில் வாக்கு சேகரிப்பில் இந்த மதவெறி உணர்ச்சியை தூண்டுதலை பரவலாக காணமுடிந்தது, அது போல் கோலாரிலோ, பெங்களூரிலோ தமிழர்கள் சாதியை தூண்டி நடந்துகொண்டதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தியா முழுமையிலும் மிக்க்கேவலமாக சாதீய அரசியல் புரையோடிக்கிடக்கையில் அதை தமிழர்களோடு மட்டும் முடிச்சிடுவது நேர்மையற்ற ஒப்பீடு.

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

Thiruvasagam   2 years ago

திரு அரவிந்தன் அவர்களுக்கு, நேற்று உங்கள் கட்டுரையை படித்து புளகாங்கிதம் அடைந்தேன். இன்றைய கட்டுரை அவ்வாறானதாக இல்லை! உங்கள் மக்கள்நாயகம் மறைந்து, மேட்டிமைத்தனம் வெளிப்படுவதாக உணர்கிறேன். திராவிட சித்தாந்தத்தை யாரும் விமர்சிக்கலாம்! அதனூடே “நான் ஆங்கில சொற்களை அல்லது மொழி மாற்ற சொற்களைக் கையாண்டதே சொல்லும் நம் மொழியில், அதாவது நம் பண்பாட்டில், இதையெல்லாம் விவாதிக்கவே அறிவு வரலாறு இல்லை”, என்று கூறுவதை ஏற்க இயலாது! 350 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சில ஐரோப்பிய மக்கள் திரள் போராட்டத்தில் உருவான சில வார்த்தைகள் தமிழில் இல்லை என்றால், அறிவு வரலாறு இல்லை என்று ஏற்றுக்கொள்ள முடியாது! ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புக’ என்ற மரபு தோன்றிய மண் இது! புதிய கருத்துக்கள் முன்வைக்கப்படலாம், அதற்காக மற்றவர்களை வரலாறு அற்ற அகதிகளாக்க வேண்டாம்!! 🤝

Reply 5 0

Login / Create an account to add a comment / reply.

வரி கட்டமைப்புதொகுதிகள் மறுவரையறைஅறிவியல்கருக்கலைப்புசிற்றரசர்கள்சர்வதேச அரசியல்இன்பத்தின் நினைவூட்டல் சோழர்கள்: நர்த்தகி நடராஜ் பஇந்திய பொருளாதாரத்தின் உண்மை நிலைசைபர்சுகாதாரம்அருஞ்சொல் தமிழ்நாடு நவ் ப.சிதம்பரம் பேட்டிவிக்டோரியா அருவிகூடுதல் தலைமை அரசு வழக்கறிஞர்சர்வாதிகார நாடுகோம்பை அன்வர் அருஞ்சொல்கட்டுக்கதைகள்சு.ராஜகோபாலன் பேட்டிஇன்ஃபோசிஸ்பன்முகத்தன்மைஉக்ரைனின் பொருளாதாரம்பண்டிட்டுகள் மீதான வெறியாட்டம்எருமைப் பொங்கல்நல்லெண்ணெய்தி இந்து சமஸ்நேரு குடும்பம்1232 கி.மீ.அலைச்சல்பத்ம விபூஷன்தலைச்சுமை வேலைகள்திசுப் பரிசோதனை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!