வாசகர்களோடு 'அருஞ்சொல்' சார்ந்த நகர்வுகள், அனுபவங்களை ஆசிரியர் பகிர்ந்துகொள்ளும் வகையில் 'ஆசிரியரிடமிருந்து' பகுதி வெளியிடப்படுகிறது. நேரடி அறிவிப்புகள் போக, கூட்டங்கள், சமூகவலைதளங்கள் வழி ஆசிரியர் சமஸ் பகிர்ந்துகொள்ளும் 'அருஞ்சொல்' தொடர்பான செய்திகளும் இங்கே இடம்பெறும்.
வாசகரும் விருதுநகர் மாவட்ட துணை ஆட்சியருமான திருவாசகம் குடும்பத்துடன் இன்று 'அருஞ்சொல்' அலுவலகம் வந்திருந்தார். அவர் மட்டும் அல்லாது அவர் மனைவி, பிள்ளைகள் என்று யாவரும் 'அருஞ்சொல்' வாசகர்கள். தமிழ் வாசிப்புச் சூழல், கல்விச் சூழல் தொடர்பில் வெகுநேரம் உரையாடினர்.
குழந்தைகள் ஜெய்பாரதி, அருனேஷ் இருவரும் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். எப்படி மாணவர்களுக்கு 'அருஞ்சொல்' உதவியாக இருக்கிறது என்று பேசியவர்கள் இன்னும் என்னவெல்லாம் இதழில் வந்தால் நன்றாக இருக்கும் என்ற தம்முடைய அபிப்ராயங்களையும் பகிர்ந்துகொண்டார்கள். போட்டித் தேர்வுக்குத் தயாராகிவரும் ஜெய்பாரதி, அன்றாடம் அதிகாலை வாசிப்பை ‘அருஞ்சொல்’லோடு ஆரம்பிப்பதாகவும், தமிழில் தயாராகும் போட்டித் தேர்வர்களுக்குப் பெரிய அளவில் உதவியாக இதழ் இருப்பதாகவும் தெரிவித்தார்.
குழந்தைகள் இருவருமே சேமிப்புப் பழக்கம் கொண்டவர்களாம். தம்முடைய சேமிப்பிலிருந்து ரூ.25,000/- வழங்கி 'அருஞ்சொல்' வைரச் சந்தாதாரராக இணைத்துக்கொண்டார்கள்.
எல்லோருமே சீக்கிரம் அச்சிதழாகக் கொண்டுவர வேண்டும் என்றார்கள்.
செய்வோம்!
- ஆசிரியர் சமஸ், முகநூல் பதிவிலிருந்து...
1
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.