கட்டுரை, அரசியல், ஆசிரியரிடமிருந்து... 2 நிமிட வாசிப்பு

நாம் கொண்டாட ஏதும் உண்டா?

ஆசிரியர்
24 Oct 2022, 5:00 am
4

வாசகர்களோடு ஆசிரியர் பகிர்ந்துகொள்ளும் வகையில், ‘ஆசிரியரிடமிருந்து’ பகுதி வெளியிடப்படுகிறது. கூட்டங்கள், சமூகவலைதளங்கள் வழி ஆசிரியர் பகிர்ந்துகொள்ளும் குறிப்பிடத்தக்க செய்திகள் இங்கே இடம்பெறும்.

பிரிட்டனை பிரதமராக ரிஷி சுனக் நல்லபடி ஆளட்டும், வாழ்த்துகள்! 

இந்த நேரத்தில் மறைமுகமாக எம்பிக்களால் தேர்ந்தெடுக்கப்படும், பிரதமர் பதவியில் அமரும் இந்திய, இந்துப் பின்னணியைக் கொண்ட ரிஷி சுனக்கை மட்டும் அல்ல; நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் லண்டன் மேயர் பதவிக்கும் ஒரு வெளிநாட்டு பூர்வீகர் - பாகிஸ்தானைப் பின்புலமாகக் கொண்ட முஸ்லிம் சாதிக் கானை - பிரிடிஷார் தேர்ந்தெடுத்திருக்கின்றனர்  என்பதையும் நினைவில் கொள்வோம்.

இந்தியர்களுக்கு இதில் உள்ள சேதி என்ன? வெளியிலிருந்து வருவோரையும்கூட ஒரு சமூகம் எந்த அளவுக்கு அரவணைக்கிறது, மதிப்பளிக்கிறது, பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதுதான்! 

இன்று ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராக ஆவதையும், நேற்று கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபர் ஆனதையும் கொண்டாடும் அதே வாய்கள்தான் கடந்த காலத்தில் சோனியா இந்திய பிரதமர் ஆவதை எதிர்த்து சுதேசி எதிர் விதேசி நியாயம் பேசிப் புறந்தள்ளின என்பதை மறக்க முடியுமா? இது தற்செயலா அல்லது இந்தியர்களுக்கே உரிய இரட்டை நாக்கின் இயல்பா?

அட, வெளிநாட்டுப் பின்னணி கொண்ட சோனியா இருக்கட்டும், இந்தியாவுக்குள்ளேயே பிறந்த முஸ்லிம்கள், தலித்துகள் என்றைக்கு இந்த நாட்டில் பிரதமராக முடியும்? இந்தி தெரிந்திராத ஒரு காஷ்மீரியோ, சிக்கிமியரோ பிரதமர் பதவியைக் கற்பனை செய்ய முடியுமா?

பெருமை கொள்ள ஏதும் இல்லை... 75 ஆண்டு கால சுதந்திரத்தில், ஒரு ஜனநாயக நாட்டின் சொந்த மக்கள் இடையே இன்னமும் இவ்வளவு பாகுபாட்டையும் ஏற்றத்தாழ்வையும் வைத்திருக்கும் நாம் இதுகுறித்து வெட்கப்பட வேண்டும்; நமக்கு நாமே சுய பரிசீலனைக்குள்ளாக்கிக்கொள்ள வேண்டும்!


8

2

பின்னூட்டம் (4)

Login / Create an account to add a comment / reply.

Narayanasami V   3 months ago

இங்கிலாந்திலேயே பிறந்து வளர்ந்த ரிஷி சுனக், சாதிக் கான், அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த கமலா ஹாரிஸ் இவர்களுக்கு இணையாக, ஐரோப்பாவில் பிறந்து, ஐரோப்பாவில் வளர்ந்து, இந்தியாவுக்கு வந்த சோனியா காந்தியை ஒப்பிடுவது சரியா திரு சமஸ்? 'apple to apple' ஒப்புமை சொல்லும் உதாரணம் இருந்தால், உங்கள் கருத்துக்கு இன்னும் பொருத்தமாக இருக்கும். ஆனால், இந்தியாவுக்குள்ளேயே காலங்காலமாக இருக்கும் பல பிரிவினர் இந்தியப் பிதரமர் ஆக இயலாத தன்மையை நீங்கள் சுட்டிக்காட்டியிருப்பது, கசப்பான, வருத்தமான உண்மை.

Reply 0 1

Login / Create an account to add a comment / reply.

Saravanan P   3 months ago

I had chances to read the writings of Mr. Malan and listen to his TV discussions. Every time I wondered how skillful this soft-spoken man in twisting matters and talking blatantly against the known facts and same is the case relating to his response to Arunchol's comments.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

அ.சந்தானகிருந்தான்   3 months ago

மிகவும் நிதர்சனமான கருத்து. நமக்கு இரட்டை நாக்கு என்பது எல்லோருக்கும், எதற்கும் பொருந்தும். வாழ்த்தும் பாராட்டும். உமது பணி தொடர்க.

Reply 3 0

அ.பி   3 months ago

இல்லை தோழர். எல்லோருக்கும் இரட்டை நாக்கு இல்லை. காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் நிலை தலைவர்களின் கையாலாகாத்தனம் ஒரு முக்கிய காரணம்..

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

அதிகம் வாசிக்கப்பட்டவை

லெனின்உள்ளூர் மொழிகள்midsதேசிய புலனாய்வு முகமை அருஞ்சொல் தலையங்கம்யூரியாவிவசாயிகள் போராட்டம்அறையை ஆக்கிரமித்துள்ளது சீன டிராகன்!சந்தேகத்துக்குரியதுபிரஷாந்த் கிஷோர்சி.பி.கிருஷ்ணன் கட்டுரைபிரிட்டிஷ் நாடாளுமன்றம்இந்தியா - பங்களாதேஷ்இந்தியாவுக்கான திராவிடத் தருணம்மறைநுட்பத் தகவல்கள்மகிழ் ஆதன் ஏன்?சவுக்கு சங்கர் சமஸ்சுவாரசியமான காலத்தில் வாழ்வீர்களாகஎஸ்.என். சாஹுஇணையான செயற்கை நுண்ணறிவுஅரசியல் ஆளுமைநடப்புக் கணக்கு பற்றாக்குறைமுன்னோடி மாநிலம்ஜப்பான் பிரதமரின் புதிய பொருளாதாரத் திட்ட அறிவிப்பபிரான்ஸ்வென்றவர்கள் தோற்கக்கூடும்மேற்குத் தொடர்ச்சி மலைஅன்னி எர்னோபிஎஃப்ஐதலைமுடி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!