வாசகர்களோடு ஆசிரியர் பகிர்ந்துகொள்ளும் வகையில், ‘ஆசிரியரிடமிருந்து’ பகுதி வெளியிடப்படுகிறது. கூட்டங்கள், சமூகவலைதளங்கள் வழி ஆசிரியர் பகிர்ந்துகொள்ளும் குறிப்பிடத்தக்க செய்திகள் இங்கே இடம்பெறும்.
நீங்கள் அவரை 'ஊழல்காரர்' என்பீர்கள். இருக்கலாம். பிஹாரின் குண்டர் அரசியல் கலாச்சாரத்தையும், இந்தியாவின் குடும்ப அரசியலையும் முழுக்க அவர் பெயரோடு எழுதுவீர்கள். நடக்கட்டும். மதத்தின் பெயரால் ஒரு நாட்டையே வெறுப்பால் பிளக்கக் கூடிய, எவ்வளவு பெரிய அநீதிகளுக்கும் அஞ்சாத 'நிர்வாக நாயகர்கள்' இடையே இது எதுவும் ஒரு பெரும் குற்றம் இல்லை.
நிதிஷின் துரோகங்களை எத்தனையாவது முறையாக மன்னிக்கிறார் லாலு? பிஹாரில் மதவாதத்தைத் தடுத்து நிறுத்தும் உறுதியான அவருடைய பணியை எத்தனை பேர் உச்சிமுகர்ந்துவிடப்போகிறார்கள்?
இந்த நாட்டில் பெரிய காரியங்களைச் செய்யும் ஒருவர் அங்கீகரிக்கப்படக்கூட பெரிய சாதியிலிருந்து / மேட்டுக்குடி பின்னணியிலிருந்துதான் வந்திருக்க வேண்டும், இல்லையா?
இன்று இந்தப் புகைப்படங்கள் என் மனதைப் பெரும் நெகிழ்ச்சியில் தள்ளிவிட்டன.
லாலு, உங்களுடைய பெரிய மனம் எங்களால் பார்க்க இயலாத உயரத்தில் ஜொலிக்கிறது. இந்த நாட்டில் வரலாற்றின் போக்கை உள்வாங்கி மனிதர்களைச் சரியாக எடை போடும் சிலராலேனும் நீங்கள் நியாயமாக மதிப்பிடப்படுவீர்கள். அவர்கள் இந்நாட்டில் மதவெறியைத் தடுத்து நிறுத்த உறுதியாகப் போரிட்ட நல்லிணக்க நாயகர்களில் ஒருவராக லாலுவின் பெயரை எழுதுவார்கள்.
சீக்கிரம் குணம் அடையுங்கள்... பிரார்த்தனைகள்!
- சமஸ், முகநூல் பதிவு

2



1



பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.