ஆசிரியரிடமிருந்து... 3 நிமிட வாசிப்பு

கல்லூரி சேர்க்கைக் குளறுபடிகளைத் தீர்க்க முடியாதா?

ஆசிரியர்
29 Jun 2022, 5:00 am
4

வாசகர்களோடு ஆசிரியர் பகிர்ந்துகொள்ளும் வகையில் 'ஆசிரியரிடமிருந்து' பகுதி வெளியிடப்படுகிறது. கூட்டங்கள், சமூகவலைதளங்கள் வழி ஆசிரியர் பகிர்ந்துகொள்ளும் குறிப்பிடத்தக்க  செய்திகள் இங்கே இடம்பெறும். 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி ஒரு வாரம் ஆகிறது. அரசுக் கல்லூரிகள் இன்னமும் விண்ணப்பங்களையே வாங்கி முடிக்கவில்லை. ஆனால், அதற்குள் பல சுயநிதிக் கல்லூரிகள் தத்தமது போக்கில் அட்மிஷனை முடிக்கும் நிலையில் இருக்கின்றன. எப்படி இதை அனுமதிக்கிறது அரசு?

ஒரு மாணவர் குறிப்பிட்ட படிப்பைப் படிக்க விரும்புகிறார் என்றால், முதல் நிலைக் கல்லூரி என்று தான் விரும்பும் கல்லூரி நீங்கலாக, ஒருவேளை அங்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், இங்கேனும் கிடைக்கட்டுமே என்று மேலும் சில கல்லூரிகளுக்கும் விண்ணப்பிப்பது இயல்பு.  

எல்லாக் கல்லூரிகளும் ஒரே சமயத்தில் விண்ணப்பங்களைப் பெற்று, தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியலை வெளியிடும்போதுதான் மாணவர்கள் இந்த விஷயத்தில் ஒரு நல்ல முடிவை எடுக்க முடியும். ஆனால், இங்கே என்ன நடக்கிறது?

மூன்று உதாரணங்கள்... 

1. ஒரு ஏழை மாணவி ஆங்கில இலக்கியம் படிக்க வேண்டும். சென்னையில் உள்ள க்யூஎம்சி, எம்சிசி, டபிள்யுசிசி மூன்று கல்லூரிகளுக்கும் விண்ணப்பிக்கிறார். 

அரசுக் கல்லூரியான க்யூஎம்சியில் ஜூலை 7 வரை விண்ணப்பங்கள் வாங்குகிறார்கள். ஆக, அங்கே அவர் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்று தெரிய இன்னும் இரு வாரங்கள் ஆகலாம்.

சுயநிதிக் கல்லூரிகளில் ஒன்றான எம்சிசி அடுத்த வாரத்தில் தேர்வுப் பட்டியலை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு கல்லூரியான டபிள்யுசிசி இந்த வாரத்திலேயே அட்மிஷனுக்கே முன்னேறிவிட்டது.

சுயநிதிக் கல்லூரி அழைக்கும் குறிப்பிட்ட நாளில் மாணவி செல்லவில்லை என்றால், அதோடு அவர் வாய்ப்பை இழப்பார். சரி, முன்கூட்டி வரும் வாய்ப்பைப் பறிகொடுத்திட வேண்டாம் என்று கல்லூரியில் சேர்ந்தால், பிந்தி வரும் அரசுக் கல்லூரி வாய்ப்பை இழப்பார். ஒருவேளை பிந்தி வரும் வாய்ப்பைத் தேர்ந்தெடுத்தால், முந்தி சேர்ந்த சுயநிதிக் கல்லூரியில் செலுத்திய கட்டணத்தை இழப்பார்.  

2. சட்டப் படிப்புக்கான தேசிய நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகி ஒரு வாரம் ஆகப்போகிறது. தமிழ்நாட்டில் சட்டப் படிப்புக்கான பெயர் பெற்ற சுயநிதிக் கல்வி நிறுவனங்களான விஐடி, சாஸ்த்ரா உள்பட பல கல்வி நிறுவனங்களில் அட்மிஷன் முடியும் நிலையில் உள்ளது. ஆனால், அரசுக் கல்வி நிறுவனமான ‘ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ்’ இன்னமும் விண்ணப்பங்களையே வாங்க ஆரம்பிக்கவில்லை. மெரிட்டில் ஒரு மாணவர் ’ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ்’ நிறுவனத்தில் சேர வேண்டும் என்று காத்திருந்தால்  பதைபதைப்பிலேயே இருக்க வேண்டும். வாய்ப்பு கிடைக்காவிட்டால் வேறு நல்ல நிறுவனத்தில் சேர அடுத்த ஆண்டு வரை காத்திருக்க வேண்டியதுதான். 

3. ஜூலை 17 அன்றுதான் நீட் தேர்வு நடக்கவிருக்கிறது. பேப்பர் திருத்தி முடிவுகள் வர ஆகஸ்ட் ஆகும். நீட் தேர்வில் வாய்ப்பை இழந்தால், கலை அறிவியல் பிரிவில் ஏதேனும் படிக்கலாம் என்று ஒரு மாணவர் முடிவெடுத்தால், பெரும்பாலும் எந்த நல்ல கல்லூரியிலும் அவருக்கு இடம் இருக்காது.

இந்தப் பிரச்சினை ஏதோ இன்று உருவாகியிருக்கும் புதிய பிரச்சினை; இந்த அரசின் பிரச்சினை என்று சொல்வதற்கு இல்லை. ஆனால், நாளுக்கு நாள் இதன் தீவிரம் அதிகமாகிவருகிறது. நீட் தேர்வு; க்ளாட் தேர்வு தேதிகள் போன்ற சில விஷயங்களில் மத்திய அரசுடனும் இணைந்து பேச வேண்டிய பிரச்சினையும்கூட இது. 

ஆனால், எப்படியும் தீர்க்க வேண்டிய ஒரு பிரச்சினை. குறிப்பாக, மாநில எல்லைக்குள் உள்ள அரசுக் கல்லூரிகள் - சுயநிதிக் கல்லூரிகள் சேர்க்கை தொடர்பான வேறுபாடுகளை ஒரு அரசு உத்தரவின் வழி தீர்த்திட முடியும். இன்றைய அரசு இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்டி மாணவர்களை அலைக்கழிப்பிலிருந்து மீட்டெடுக்க வேண்டும்.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

3

1





பின்னூட்டம் (4)

Login / Create an account to add a comment / reply.

Gandharajan s   2 years ago

'மிகச் சரியான விஷயத்தை அலசியிருக்கிறார் தோழர் சமஸ்' - SAMPATH S இதை ஆமோதிக்கிறேன்..... 1. எனது நிலை : எனது கல்லூரி டிசம்பரிலிருந்தே அட்மிசனை தொடங்கிவிட்டது, நான் 20 போட்டே ஆகனும்..... 2. என் சக ஆசிரியரின் நிலை: நாங்கள் வேலைப்பார்க்கும் கல்லூரியைவிட மற்ற இஞ்சினியரிங் கல்லூரிக்கு 40 போடனும்.... 10,00,000 கடன் இருக்கிறதாம்.... ஒரு அட்மிசனுக்கு 25000 வருகிறார்களாம்..... 3 இன்னொரு ஆசிரியரின் நிலை: அவர் 500 பெற்றுக்கொண்டு போட்ட ஒரு அட்மிசனை இன்னொரு கல்லூரியின் தாளாளர் 5000 கையில் கொடுத்து தனது கல்லூரிக்கு அழைத்துச் சென்றுவிட்டாராம்..... இன்னும் எத்தனையோ கதைகள் இருக்கும்.......

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

KMathavan   2 years ago

அல்லோலபடும் பெற்றோர்,திக்குமுக்காடும் மாணவ சமுதாயம்.+2 முடித்த என் மகள் அரசு கலைக்கல்லூரிகள்,மத்திய அரசு நுழைவு தேர்வு,தனியார் நிகர் நிலை பல்கலைக்கழகம் 1 மட்டும் இவைகள் அனைத்திலும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் நடந்த வண்ணம் உள்ளன.எப்போதும் ஒரு நடைமுறை உள்ளது, எதுவெனில் முதலில் ஒரு அரசு கலைக்கல்லூரியை தக்க வைத்துக் கொண்டு மீண்டும் தொடர்ந்து பயணிப்பது தேடலில்,அந்த நடைமுறைக்கு என் மகள் உடன் பட வில்லை அரசு கலைக்கல்லூரிகள் சேர்க்கை அழைப்பிதழ் வந்த வண்ணம் உள்ளன,என் வம்சத்தில் முதல் பட்ட தாரி.இப்படி செல்கையில் மத்தியபல்கலைகழம் நுழைவுத்தேர்வு பட்டியல் வெளியாகிறது. ( அதற்க்கான உழைப்பு பெரியது) பலமுறை நானும் என் மகளும் சென்றுள்ளோம் அங்கு,அப்போது என் மகள் அங்கு தான் படிக்க வேண்டும் என ஆவல்கொண்டு என்னிடம் சொல்கிறார்.தனியார் நிகர் நிலைபல்கலைகழகத்தில் சேர்க்கை முடிந்து 720 மணி நேரம் கழித்து மத்திய நிகர்நிலை பல்கலைக்கழகம் திருவாரூர் சேர்க்கைக்கான அழைப்பு இடுக்கிறது என் மகள் எனக்கு இங்கு செட்டாகி விட்டது என ஒற்றை வார்த்தை சொல்லி முடித்து கொண்டார். இப்போது என்ன செய்வது? படித்தது சாஸ்திரா தஞ்சாவூர்

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

SAMPATH.S   2 years ago

கல்வி நீண்ட காலமாக வணிக மயமாகி / கார்ப்பரேட் மயமான தன் விளைவு. இருப்பினும் மிகச் சரியான விஷயத்தை அலசியிருக்கிறீர்கள் தோழர் சமஸ்

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Banu   2 years ago

குறைந்த பட்சம், வேறு கல்லூரியில் இடம் கிடைத்து மாணவர்கள் மாற்று சான்றிதழ் கோரும் போது முழு கட்டணத்தையும் திருப்பிக் கொடுக்க வேண்டும். இன்னும் paramedical course admission online portal open ஆகும் முன்பு கல்லூரியில் ஏறத்தாழ ஒரு செமஸ்டர் முடியும் நேரம் வந்துவிடும். இதுபோன்ற நேரங்களில் இனி TC வாங்கி, கட்டணம் திரும்ப பெறுவது கடினம் என எண்ணி paramedical course களை கைவிடுகின்றனர் மாணவர்கள். இதனால் நல்ல எதிர்காலம் உள்ள மருத்துவ துணைபடிப்புகள் பயிலும் வாய்ப்பை இழக்கின்றனர்

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

காம்யுசுந்தர் பிச்சை அருஞ்சொல்ஸ்டார்ட் அப்அயலுறவில் ‘பெரியண்ணன்’ அணுகுமுறை!சோழர்களின் நிர்வாகக் கலை முக்கியமானது: அஷோக் வர்தனவாசிப்பு அனுபவம்கவிஞர் சுகுமாரன்மரம்பிரதிநித்துவம்மார்கழி மாதம்இருபத்தோராம் நூற்றாண்டில் மானுடம்: அருகிவரும் அறம்ஸ்வீடன்கருத்தியல் குரல்டெட் நார்தௌஸ்நியுயார்க் டைம்ஸ் அருஞ்சொல்கிறிஸ்துமஸ்முஸ்லிம்புஷ்கர் சந்தைகைதுமாநிலங்களின் ஒன்றியம்ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்சுருக்கிபெண் வெறுப்புசளிகாவிரி மேலாண்மை ஆணையம்பாவப்பட்ட ஆண்அறிவுசார் சொத்துரிமைஅபர்ணா கார்த்திகேயன்காப்பிரெட்ரோகிரேட் எஜாகுலேஸன்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!