இன்னொரு குரல், கல்வி 3 நிமிட வாசிப்பு

பிராமணர்களின் சூழ்ச்சி நுழைவுத் தேர்வு என்பதான பேச்சு சரியா?

அரவிந்தன் கண்ணையன்
19 Oct 2021, 5:00 am
0

தமிழில் தீவிரமான விவாதங்களை வளர்க்கும் பணியில் தன்னையும் ஈடுபடுத்திக்கொள்கிறது ‘அருஞ்சொல்’. அதனால்தான் தலையங்கம், கட்டுரை ஆகியவற்றுக்கு இணையான முக்கியத்துவத்தை ‘இன்னொரு குரல்’ பகுதிக்கு அளித்து, இணையதளத்தின் பிரதான இடத்திலேயே அதற்கு இடமும் அளிக்கிறது. ‘அருஞ்சொல்’ இதழை வாசிப்பவர்கள் வெறும் வாசகர்கள் மட்டும் இல்லை; எழுத்தாளர்கள், அறிஞர்கள், பத்திரிகையாளர்கள், கொள்கை வகுப்பாளர்களான அரசியலர்கள் ¬– அதிகாரிகள், செயல்பாட்டாளர்கள், ஆசிரியர்கள் என்று பல்வேறு துறை ஆளுமைகளும் ‘அருஞ்சொல்’லை வாசிக்கிறார்கள் என்பதை அறிந்திருக்கிறோம். ஆகையால், கட்டுரைகளை வாசிப்பவர்கள் ‘எனக்குப் பிடிக்கிறது அல்லது பிடிக்கவில்லை’, ‘நான் இதை ஆதரிக்கிறேன் அல்லது எதிர்க்கிறேன்’ என்பதுபோல ஓரிரு வரிகளில் தங்கள் கருத்துகளை எழுதாமல் விரிவாக எழுதிட வேண்டுகிறோம். அப்படி எழுதப்படும் கருத்துகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை ‘இன்னொரு குரல்’ பகுதியில் வெளியாகும். கருத்துகளைப் பின்னூட்டப் பகுதியில் எழுதிடுங்கள் அல்லது aruncholeditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடுங்கள். தயைகூர்ந்து உங்கள் பெயருடன், ஊர் பெயரையும் குறிப்பிடுங்கள்.

சமீபத்தில் ‘அருஞ்சொல்’ வெளியிட்ட ‘டெல்லி பல்கலைக்கழகம் வெளிப்படுத்தும் அபாயகரமான பிரச்சினை’ தலையங்கமானது, ‘கேரள கல்வி வாரியம் மாணவர்களுக்கு மதிப்பெண்களை வாரி வழங்குகிறது’ எனும் டெல்லி பேராசிரியரின் பேசுக்குக் கண்டனம் தெரிவித்து எழுதப்பட்டிருந்தது. 

இதன் தொடர்ச்சியாக, ‘இன்னொரு குரல்’ பகுதியில் வெளியான ஒரு வாசகர் கடிதம், ‘கேரள கல்வி வாரியம் மதிப்பெண்களை வாரி வழங்குவது உண்மை; இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்த டெல்லி பேராசிரியர் சங்கப் பரிவாரப் பின்னணியைச் சேர்ந்தவராக இருப்பதாலேயே குற்றச்சாட்டைப் புறந்தள்ள வேண்டியது இல்லை’ என்று குறிப்பிட்டது. அக்கடிதத்தைத் தொடர்ந்து, ‘அருஞ்சொல்’ ஆசிரியர் தன்னுடைய பேஸ்புக் பதிவில் சில கேள்விகள் எழுப்பினார். அதன் முக்கியமான அம்சம், ‘பொதுவாக, மாநில அரசுகள் மதிப்பெண்களை அள்ளி வழங்குதன் பின்னணியில் இப்படி ஒரு போட்டி உள்ளதா? ஒருவேளை மாநிலக் கல்வி வாரியங்கள் மதிப்பெண்களை இப்படி அணுகும் என்றால், அதை நாம் எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்? நுழைவுத் தேர்வுக்கு நல்ல மாற்று மதிப்பீட்டுமுறை என்ன இருக்கிறது?’

இதற்கான என்னுடைய எதிர்வினைதான் இது!

ருகாலத்தில் பிட்ஸ்-பிலானி போன்ற கல்லூரிக்கு, பிளஸ்-2 மதிப்பெண்களே  தகுதிப் பட்டியலுக்குப் போதுமானவையாக இருந்தன. அப்போது தமிழகக்  கல்வி முறையில் பயின்றவர்கள் எளிதாக உயர் மதிப்பெண்கள் பெற்றதால் உள்ளே நுழைந்தார்கள். தமிழகக் கல்வி முறையோடு ஒப்பிட்டால் சிபிஎஸ்இ பாடத் திட்டமும், தேர்வுமுறையும், மதிப்பெண் வழங்குமுறையும் மிகக் கடினம்தான். பின்னர் பிட்ஸ் இச்சமமின்மையைத் தவிர்க்க சில கணித வழிமுறைகளைக் கையாண்டது. 

தமிழ்நாட்டு மதிப்பெண் முறையும் மிக தாராளம்தான். இதனால்தான் பிளஸ்-2 தேர்வில் கணிதத்தில் சதம் அடித்த பலரும் அண்ணா பல்கலைக்கழகத்தின்  கணித பரீட்சையில் தோல்வியடைவது தொடர் நிகழ்வாகின்றது. சமச்சீர்க்கல்வி முறையில் பயின்ற மாணவர்களில் ஐ.ஐ.டி. போன்ற நுழைவுத் தேர்வில் வெற்றியடைவோர் மிக, மிகச் சொற்பம். நம் மருத்துவக் கல்லூரி நுழைவுக்கு ப்ளஸ்-2 மதிப்பெண் மட்டுமே என்றபோதும் சரி; அதற்கு முன் நுழைவுத்தேர்வு இருந்தபோதும் சரி; சிபிஎஸ்இ மாணவர்கள் வஞ்சிக்கப்பட்டனர் என்றே சொல்லலாம். 

இந்த இடத்தில்தான், ‘இந்தியாவில் பலதரப்பட்ட கல்வி வாரியங்களும் மதிப்பெண் முறைகளும் இருக்கும்போது, மாணவர்களை உயர்கல்விக்குத் தேர்ந்தெடுக்க நுழைவுத் தேர்வைத் தவிர வேறு வழிகளுண்டா?’ என்று கேட்கிறார் ஆசிரியர். 

இருக்கிறது! புள்ளியியலில் இதற்கு வழியுண்டு. ஒவ்வொரு தொகுப்பிலும் மதிப்பெண்களை அட்டவணையிட்டு அதன் மூலம் உச்ச மதிப்பெண் என்ன, எத்தனை பேர் எடுத்தார்கள் என்பன போன்றவற்றைக் கணக்கில் கொண்டு ‘வெயிட்டேஜ்’ என்று சொல்லப்படும் முறையைக் கையாண்டு ஒரு சமநிலையை நிறுவ முடியும். அப்படித்தான் மேற்படிப்புக்கு அமெரிக்காவுக்கு விண்ணப்பிக்கும்போது பல நாடுகளின் மாணவர்களின் மதிப்பெண்களை அமெரிக்க முறையோடு ஒப்பிட்டு சான்றிதழ் அளிக்கும் நிறுவனங்கள் செயல்படும். ஆயினும், ‘இதெல்லாம் 100% ஒரு சமக் களனை உருவாக்குமா?’ என்றால், ‘கிடையாது’ என்பதே பதில்.

வெளிநாடுகளில் இந்தப் பிரச்சினை எப்படி எதிர்கொள்ளப்படுகிறது என்று ஆசிரியர் வினவுகிறார். ‘கிரேட் இன்ஃப்ளேஷன்’ (Grade Inflation) என்றழைக்கப்படும் இப்பிரச்சினைக்கு சரியான தீர்வில்லை என்பதே அமெரிக்க அளவில் தெரிகிறது. 

அமெரிக்க உயர் பள்ளிகளில் தாராள மதிப்பெண் வழங்கலைப் பற்றி ஆய்வுகள் இருக்கின்றன. இது தொடர் விவாதம். அமெரிக்காவில் பல்கலைக்கழகங்கள் பொது நுழைவுத்தேர்வு மதிப்பெண்களைக் கணக்கில் எடுக்கின்றன. (இப்படி பொது நுழைவுத்தேர்வு என்று சொல்வதுகூட தவறுதான் அது மேற்படிப்புக்கான மாணவனின் தயார் நிலையை அளக்கும் ‘ஆப்டிட்யூட் டெஸ்ட்’).

கூடவே உயர்நிலைப் பள்ளி மதிப்பெண்களும் கணக்கில் உண்டு. சமீப காலமாக சில கல்லூரிகள் அத்தகைய தேர்வை கணக்கில் சேர்க்காமல் மாணவர்களைப் பரிசீலிக்க முயன்றுவருகின்றன. ஆனால், அது இன்னும் பரவலாகவில்லை. இந்தியாவில் ‘நீட்’ போன்ற தேசிய பரீட்சையும் அதன் அடிப்படையிலான மாணவத் தேர்வும் இருக்கின்ற நிலையில் நாடு தழுவிய ஆய்வு ஒன்று தேவையாகிறது.

தலையங்கமானது, ‘கேரள மதிப்பெண் வழங்கும் முறையை மார்க்ஸ் ஜிகாத்’ என்று குறிப்பிடும் பேராசிரியரின் வெறுப்புச் சொற்களைத் தாண்டி இந்தப் பிரச்சனையை நோக்குவோம்’ என்கிறது. ஒருவகையில் அதை ஒப்புக்கொண்டுதான் மேலே எழுதினேன். ஆனால், இன்னொரு கோணத்தில் அதனைக் கணக்கில் கொண்டு வேறு பதிலையும் சொல்ல விழைகிறேன். டெல்லி ஆசிரியர் இந்து அடிப்படையிய மனம் கொண்டவராக இருந்து  அப்படிச் சொன்னதை நாம் கண்டிக்கிறோம், அது தவறு என்று அடையாளப்படுத்துகிறோம். ஆனால், இங்கே தமிழகத்தில் அதன் இன்னொரு பக்கம்போல, ‘நுழைவுத் தேர்வு என்பதே பிராமணர்களின் சூழ்ச்சி’ என்பதான பேச்சு இருக்கிறதே, இது சரியா? 

மேலும், சிபிஎஸ்ஈ மாணவர்கள் மதிப்பெண் பெறுவது எளிதல்ல என்பதைத்  தமிழகத்தில் பலரும் அது என்னமோ பிராமண மாணவர்களை மட்டுமே பாதிக்கிறது என்றும், அதனாலேயே அது பரவாயில்லை என்றும் எண்ணுகிறார்களே, அது சரியா?

சிபிஎஸ்ஈ-யில் பலரும் படிக்கிறார்கள்; சரி, ஒரு பேச்சுக்காகப் பிராமணர்கள் மட்டுமே படிக்கிறார்கள் என்றாலுமேகூட அவர்களும் தமிழ்நாட்டு மாணவர்கள்தான்; அவர்களுக்கு இதுநாள் வரை சம களனை அமைக்க ஒப்புக்கொண்டிருக்கிறோமா? 

நியாயம் என்றால் அது எல்லோருக்கும் பொதுவாக இருக்க வேண்டும்!

தொடர்புடைய சுட்டிகள்: 

1. <https://www.insidehighered.com/admissions/article/2018/09/24/new-study-shows-widespread-grade-inflation-high-schools>

2. https://www.forbes.com/sites/tomlindsay/2019/10/30/grade-inflation-in-us-higher-educationwe-have-a-problem-part-1-of-4/?sh=3d2587ce5a1e 

3. <https://www.usatoday.com/story/opinion/voices/2021/08/24/class-grade-inflation-high-school-teacher/8185250002/

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
அரவிந்தன் கண்ணையன்

அரவிந்தன் கண்ணையன், அமெரிக்காவில் வசிக்கும் தமிழர். இந்திய வரலாறு, சமகால அரசியல் தொடர்பில் இணையத்தில் தொடர்ந்து எழுதிவருபவர். உலக வரலாறு, அமெரிக்க அரசியல் தொடர்பில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர்.








ரயில் எரிப்புமிகைல் கொர்பசெவ்மாமாஜிஜனநாயகப் பண்பு239ஏஏபிடிஆர்மோடியின் உள்நோக்கங்கள்சூரிய ஒளி மின் கலன்அரசர்களின் ஆட்சிதன்னாட்சிகூட்டாட்சிக் கொள்கைஎதிலும் சமரசம்எடுப்புக் கக்கூஸ்டேவிட்சன் தேவாசீர்வாதம்திரிக்குறள்ஜிஎஸ்டி தொடர்பான தீர்ப்பின் முக்கியத்துவம் என்ன?ஸ்டாலினின் வெற்றிஆரிய வர்த்தம்பொருளாதர முறைமைஅறிவு மரபுபாரம்பரிய உணவுஅரசர் கான்ஸ்டன்டைன்மான்டேகு-செம்ஸ்ஃபோர்ட்ஏழைகளே இல்லை - இந்தியாவில்!பேருந்துகள்வரிமுதிர்ச்சிஉலகளாவிய வளர்ச்சிஅவரவர் முன்னுரிமைசுற்றியடித்த வழக்கு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!