கட்டுரை, ஆரோக்கியம் 3.5 நிமிட வாசிப்பு

உணவுப் பழக்கம்: அதிகம் கேட்கப்படும் ஐந்து கேள்விகள்

காரா ரோஸன்ப்ளூம்
28 Aug 2021, 12:00 am
1

1) சிறந்த உணவுப் பழக்கத்துக்கு சைவம்தான் உகந்ததா?

அப்படி ஒன்று கிடையவே கிடையாது. நாம் ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள். எல்லோருக்கும் சிறந்த வழிமுறை என்று ஒரு திட்டத்தை வகுத்துவிட முடியாது. உங்களுக்கான சிறந்த வழிமுறை என்பது உங்களுடைய மருத்துவம் மற்றும் ஊட்டச்சத்துத் தேவைகளைப் பொறுத்ததுதான். அதே நேரத்தில், சாத்தியப்படக்கூடியதாகவும் எளிதில் கிடைக்கக்கூடியதாகவும் ரசித்து உண்ணக்கூடியதாகவும் நீண்ட நாட்களுக்குப் பின்பற்றக்கூடியதாகவும் உங்களுடைய உணவுப் பழக்கம் இருக்க வேண்டும்.

2) சர்க்கரை (அல்லது உப்பு, அல்லது கொழுப்பு) நம் உணவுப் பழக்கத்திலுள்ள மிகப் பெரும் பிரச்சினையா?

ஒரே ஒரு பொருள் எப்போதும் மோசமான உணவுப் பழக்கத்துக்குக் காரணமாக இருப்பதில்லை. எல்லா இடங்களிலும் மலிவானதும் சுவைகூடியதுமான உணவுகள் கிடைக்கும் சூழலில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பீட்ஸா, சிப்ஸ், சோடா போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்கிறோம். எப்போது சிக்கல் ஆகிறதென்றால் இப்படியான பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாகவும், காய்கறிகள், மீன்கள் போன்றவற்றைக் குறைவாகவும் எடுத்துக்கொள்ளும் பழக்கத்தை நீண்ட நாட்களுக்குத் தொடர்வதுதான்.

3) ஒவ்வொரு நாளும் நான் எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டுமா?

வியர்வை வழியாகவும், சிறுநீர் வழியாகவும், சுவாசிப்பதன் வழியாகவும் நம் உடலிலுள்ள நீரை நாம் வெளியேற்றுகிறோம் என்பதால் தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். ஆனால், வயது, பாலினம், உடல் பருமன், அன்றாடச் செயல்பாடுகளின் அளவு போன்றவற்றையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் எல்லோரும் எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சொல்வது எப்படிச் சரியாகும்? அது அமெரிக்க உணவு மற்றும் ஊட்டச்சத்து வாரியம் – 1945 பரிந்துரையிலிருந்து வந்த எண்ணிக்கை. அது ஆராய்ச்சி அடிப்படையிலான பரிந்துரை அல்ல. மேலும், தண்ணீர் போக மற்ற பானங்களிலிருந்தும் உணவுகளிலிருந்தும்கூட உடலில் நீரேற்றம் நடக்கிறது. எனவே, ‘எட்டு டம்ளர்’ என்பதற்கு எவ்வித அறிவியல் அடிப்படையும் கிடையாது. பெரும்பாலும், தாகம்தான் நீங்கள் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதற்கான அறிகுறி. சரியாக இவ்வளவுதான் குடிக்க வேண்டும் என்று எல்லோருக்கும் பொதுவான ஒன்றைச் சொல்லிவிட முடியாது.

4) பழங்களில் நிறைய சர்க்கரை இருப்பதால் அவற்றைத் தவிர்க்க வேண்டுமா?

அமெரிக்கர்களின் உடலில் சர்க்கரை சேர்வதில் சோடா, லெமனேட், குளிர்பானங்கள் போன்றவையே 47% பங்களிக்கின்றன. பழங்கள் மூலமாக வெறும் 1% மட்டும்தான். ஒவ்வொரு நாளும் சாப்பிட வேண்டிய பழங்களை அமெரிக்கர்கள் – 88% பேர் எடுப்பதில்லை – எடுத்துக்கொண்டாலும் குளிர்பானங்களால் வரும் சர்க்கரை அளவை பழங்களால் எட்டிவிட முடியாது. நீங்கள் சர்க்கரையைக் குறைக்க வேண்டுமென்றால் குளிர்பானங்களுக்குப் பதிலாகத் தண்ணீர் குடியுங்கள். நிறைய பழங்கள் சாப்பிடுங்கள்.

5) கால்சியத்துக்காக நான் பால் குடிக்க வேண்டுமா?

அன்றாடம் நாம் பயன்படுத்தும் பால், பாலாடைக்கட்டி, தயிர் போன்ற பொருட்களிலெல்லாம் நிறைய கால்சியம் உள்ளது. ஒரு வேளைக்கு 250 – 350 மிகி கால்சியம் இவற்றின் மூலம் கிடைக்கிறது. (வயதுவந்தவர்களுக்கு ஒவ்வொரு நாளும் 1,000 – 1,200 மிகி கால்சியம் தேவைப்படும்.) கால்சியம் பெறுவதற்குப் பால் பொருட்கள் எளிமையான வழியாகும். ஆனால், அவை மட்டுமே அல்ல. பாதாம், ஓட்ஸ், முந்திரி, வெள்ளை பீன்ஸ், புரொக்கோலி போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. சால்மன், மத்தி மீன்களிலும் கால்சியம் உள்ளது. அடிப்படையில், பால் அவசியமல்ல; ஆனால், கால்சியம் அவசியமானது. கவனமாகத் திட்டமிடுவதன் மூலம் பால் சேர்க்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும் போதுமான கால்சியத்தைப் பெற முடியும்.

© தி வாஷிங்டன் போஸ்ட்

(நம்முடைய ‘அருஞ்சொல்’ ஊடகத்துக்கான பணிகள் 2021 ஆகஸ்ட் 22 அன்று தொடங்கின. தனிமனிதப் பாட்டுக்காக ஆப்பிரிக்கா சென்ற காந்தி, ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் அடியெடுத்து வைத்ததன் வழியாகப் பொதுவாழ்வை நோக்கித் தன் பாதையைத் திருப்பிக்கொண்ட நாள்; நேட்டா இந்திய காங்கிரஸ் தொடங்கப்பட்ட நாள்; அதுவே காந்தியால் நிர்மாணிக்கப்பட்ட முதல் பொது அமைப்பு; கூடவே, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை நாளும்கூட. காந்தியையும் தமிழையும் இணைக்கும் புள்ளியான அந்த நாளிலிருந்து நாம் பணிகளைத் தொடங்கினோம். 1921 செப்டம்பர் 22 அன்று மதுரையில் தன்னுடைய ஆடையை எளியவர்களின் அடையாளமான வேட்டி, துண்டாக மாற்றிக்கொண்டார் காந்தி. காந்தியின் மிக முக்கியமான குறியீடுகளில் ஒன்றானது அவருடைய ஆடை. தமிழ்நாட்டையும் காந்தியையும் பிணைக்கும் இந்த நிகழ்வின் நூற்றாண்டு நிறைவில் நம்முடைய இணையதளம் மக்கள் பார்வைக்கு வந்திருக்கிறது. இடைப்பட்ட ஒரு மாதத்தில் வெளியானவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றை இங்கே கொடுத்திருக்கிறோம். அவற்றில் ஒன்று இது.)


1


பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

udhaya kumar   1 year ago

we want myth broking news like this.best wishes to the new entry.

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

அதிகம் வாசிக்கப்பட்டவை

எஸ்.அப்துல் மஜீத்கோர்பசேவ்: கலைந்த கனவாமுகுந்த் பி.உன்னி கட்டுரைராஜாஜியின் கட்டுரைஎழுத்துஅஞ்சலி கட்டுரைதாமஸ் ஃப்ரீட்மன்பாகிஸ்தான் அரசமைப்புச் சட்டம்தெலங்கானா ராஷ்டிர சமிதிகலப்பு மொழிஅப்துல் மஜீத்பத்திரிகையாளர் கருணாநிதிபேரறிவாளனுக்கான கொண்டாட்டம்: அபாயகரமான தமிழகத்தின்ஹரித்ராநதிசமாஜ்வாதி ஜன பரிஷத்பெரிய மாநிலம்மலிஹா லோதிவலையில் சிக்கும் பெற்றோர்கள்ஸ்பைவேர்ஆதிக்கம்உடல் உழைப்புரத்த அழுத்தம்தாய்மொழிவழிக் கல்விகாஷ்மீர் விவகாரம்பாலசுப்ரமணியன் பொன்ராஜ் கட்டுரைஅரசு ஊழியர்களின் கடமைசேமிப்புகுட்டிக் குலையறுத்தான் சாமிஅசோக்வர்த்தன் ஷெட்டி கட்டுரைதுணை தேசியம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!