கட்டுரை, வரலாறு, புத்தகங்கள் 4 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் வரலாற்றைப் பேசும் ‘சோழர்கள் இன்று’

13 May 2023, 5:00 am
1

மிழ்நாட்டின் பெரும் பேரரசை உருவாக்கிய சோழர்கள் வரலாற்றைப் பேசும் ‘சோழர்கள் இன்று’ நூல் வரும் வாரத்தில் வெளியாகிறது. சோழர்களை மையப்படுத்தியதாக இருந்தாலும், பண்டைத் தமிழ்நாட்டின் 2,500 ஆண்டு கால வரலாற்றையும் அறிமுகப்படுத்தும் நூலாக உருவாக்கப்பட்டிருக்கிறது இது.

வரலாறு எவ்வளவு தெரியும்?

தமிழ்நாட்டில் கடந்த 70 ஆண்டுகளில் யாரெல்லாம் முதல்வர்களாக இருந்தார்கள் என்று கேட்டாலே, நம்மில் சிலர் யோசிப்பார்கள். அப்படியிருக்க தமிழ்நாட்டின் 2,500 ஆண்டு வரலாற்றில் யாரெல்லாம் இங்கே ஆட்சியாளர்களாக இருந்தார்கள், எந்தெந்த அரச மரபினர் எந்தெந்தப் பகுதிகளை ஆண்டார்கள் என்பது பலரும் அறிந்திராத விஷயம். 

உண்மையில், இந்த விஷயங்களையெல்லாம் எளிமையாக விவரிக்கும் சுவாரஸ்யமான நூல்கள் நம்மிடம் இல்லை. ஆனால், 2,500 ஆண்டுகள் வரலாற்றுச் செழுமையைக் கொண்ட நம்மைப் போன்ற ஒரு சமூகத்தினர் நம்முடைய வரலாற்றை அறிந்திருப்பது மிக முக்கியம். ஏனென்றால், இன்றைய நம்முடைய வாழ்க்கைக்கு நேற்றைய வரலாறும் சேர்ந்தே பங்காற்றுகிறது.

கரிகாலனும் நம் அன்றாட உணவும்

தமிழ்நாட்டின் நெல் உற்பத்தியில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியைக் காவிரி டெல்டா மாவட்டங்கள் தருகின்றன. அப்படியென்றால், நாம் சாப்பிடும் மூன்று வேளை உணவில் ஒரு வேளை உணவு காவிரியிலிருந்து வருகிறது என்றாகிறது. காவிரிப் படுகையின் வேளாண்மைக்கு மிக முக்கியமான பங்களிப்பைக் கொடுப்பது அங்கு கட்டப்பட்ட முதல் அணையான கல்லணை. இதைக் கட்டியவர் கரிகாற்சோழன்.

சென்னையில் இன்று ஒரு கோடி மக்கள் வாழ்கின்றனர். தமிழ்நாட்டின் எந்த ஒரு மாவட்டத்தைச் சேர்ந்தவரும் வசிக்கும் இடமாக இருக்கிறது சென்னை மாநகரம்; சொல்லப்போனால், நம்முடைய ஒவ்வொருவரும் வீட்டிலும் யாரோ ஒருவர் சென்னையில் இருக்கிறார்.

சென்னையின் முக்கியமான குடிநீர் ஆதாரங்களில் ஒன்று செம்பரம்பாக்கம் ஏரி. மனிதர்களால் உருவாக்கப்பட்ட மிகப் பெரிய ஏரிகளின் பட்டியலில் உலக அளவில் முதல் வரிசையில் உள்ள ஏரி இது. சுமார் 3,600 மில்லியன் கன அடி கொள்ளவு கொண்டது; 15 சதுர கி.மீ. பரப்பைக் கொண்டது. இது சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட ஏரி.

இப்படித்தான் நம்முடைய இன்றைய அன்றாட வாழ்வின் பல அம்சங்களிலும் நம்முடைய கடந்த கால வரலாறும் ஆட்சியாளர்களும் கலந்திருக்கின்றனர். ஆனால், இதுகுறித்தெல்லாம் நமக்குப் போதிய அளவுக்குப் புரிதல்கள் இல்லை.

இளைய தலைமுறைக்கான முக்கியம்

அது மருத்துவமோ, பொறியியலோ, வணிகவியலோ எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும் ஒரு மாணவருக்கும் இரண்டு விஷயங்களில் அடிப்படையான அறிவு முக்கியம் என்பதை வெளிநாட்டினர் உணர்ந்திருக்கின்றனர். பெற்றோர்கள் அந்த இரு விஷயங்களில் குழந்தைகள் தெளிவாக இருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துவிடுகிறார்கள். அந்த இரண்டு விஷயங்கள்: தாய்மொழியும், சொந்த வரலாறும். 

இன்றைக்குத் தமிழ்ச் சமூகத்தின் இளைய தலைமுறை இந்த இரண்டு விஷயங்களிலுமே பலவீனமான நிலையில் இருக்கிறது. வரலாறு குறித்து சுவாரஸ்யமாக அறிமுகப்படுத்தும் நல்ல நூல்கள் நம்மிடம் இல்லை என்பதும் இதற்கு ஒரு காரணம்.

இந்தக் குறையைப் போக்கும் விதமாகவே ‘சோழர்கள் இன்று’ நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒருவர் ஒரு முழு விடுமுறை நாளை வாசிப்புக்குச் செலவிட்டால், தமிழ்நாட்டின் வரலாறு குறித்த அடிப்படை அறிவை அவர் பெற்றுவிடும் அளவுக்கு செறிவான விவரங்களுடன் இந்நூல் இருக்கிறது.

ஒரு முன்னோடி முயற்சி

முன்னணிப் பத்திரிகையாளரான சமஸ் இந்நூலைத் தொகுத்திருக்கிறார். சமஸை ஆசிரியராகக் கொண்டு இயங்கும் ‘அருஞ்சொல்’ நிறுவனம் இந்நூலை உருவாக்கியிருக்கிறது. எப்போதுமே தமிழ் மொழி, தமிழர் வரலாற்றில் மிகுந்த அக்கறையோடு செயல்படும் ‘தினமலர்’ இந்த நூலின் முக்கியத்துவம் கருதி ‘ஃபர்ஸ்ட் காபி பிடிஎஃப்’ முறையில் இந்நூலைப் பதிப்பித்து, விநியோகிக்கிறது; இந்தப் பணியை நம்முடைய ‘தாமரை பிரதர்ஸ் மீடியா லிமிட்டெட்’ பதிப்பகம் ஏற்றிருக்கிறது.

திரைத் துறையில் முதல் பிரதி அடிப்படையில் ஒரு படத்தை வாங்கி விநியோகிப்பது வெற்றிகரமாக உள்ள நடைமுறை ஆகும். பதிப்புத் துறையில் இப்படி ஒரு முன்முயற்சி இந்நூலின் வழியாகவே மேற்கொள்ளப்படுகிறது. நம்முடைய வரலாறு ஒவ்வொருவருக்கும் கொண்டுசெல்லப்பட வேண்டும் என்பதே இதற்கான அடிப்படைக் காரணம்.

சர்வதேச அறிஞர்கள் பலருடைய எழுத்துகளும் இடம்பெற்றிருக்கும் இந்நூல், சேர, சோழ, பாண்டியர்கள் வரலாற்றில் தொடங்கி தமிழ்நாட்டை ஆண்ட சிற்றரசர்கள், வெளியாட்சியாளர்கள் குறித்த அறிமுகத்தையும் அவர்களுடைய பங்களிப்புகளையும் விவரிக்கிறது. நூலின் பிரதான அம்சமாக சோழர்கள் வரலாறும் அவர்களுடைய பங்களிப்புகளும் பேசப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் இருக்க வேண்டிய நூல் என்று சொல்லத்தக்க வகையிலான இந்நூல், பல்லாண்டுகள் பாதுகாப்பாக இருக்கும்படியாகக் கெட்டி அட்டைக்கட்டில் நல்ல தரத்துடன் உருவாக்கப்பட்டிருக்கிறது.

 

நூலைப் பெற அணுகவும்: 

புத்தகம்: சோழர்கள் இன்று 
தொகுப்பாசிரியர்: சமஸ் 
விலை: 500 
முன்பதிவுக்கான இணைப்பு: https://pages.razorpay.com/pl_Llw0QORt935XFn/view
தொலைபேசி எண்: 1800 425 7700, 75500 09565. (காலை 7 முதல் இரவு 7 மணி வரையில் தொடர்புகொள்ளவும்).
 க்யூஆர் கோட்:

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

1






பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

L.Malarvannan   1 year ago

எப்போதுமே தமிழ் மொழி தமிழர் வரலாற்றில் அக்ககறையோடு செயல்படும் தினமலர்?!. மிகச் சிறப்பு சமஸ்.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

பிரகார்ஷ் சிங் கட்டுரைபி.சி.ஓ.எஸ்.காஷ்மீரிகள்காங்கேயம் பாலசுப்ரமணியம் முத்துசாமிஇந்தியா டுடே கருத்தரங்கம்ஜூலைஜெருசலேம்காங்கிரஸ் வீழவில்லை; மோடி வென்றிருக்கிறார்: சமஸ் பதனியார் நிறுவனங்கள்சமஸ் - ட்ராட்ஸ்கி மருதுபொது விநியோக திட்டம்வியாபாரிகள்மேலாண் இயக்குநர்இந்திய அடிமைப் பணியாகிவிடுமா இந்திய ஆட்சிப் பணி?வறுமைசமஸ் கருணாநிதிமொத்த உற்பத்தி மதிப்புசமூக உரசல்கள்ஊட்டச்சத்துக் குறைவுஅரிய கனிமங்கள்டர்பன்மற்றும் பலர்பிசினஸ் ஸ்டேண்டர்டுஎருமைத் தோல்அரிசி ஆலைமொழி மீட்புப் பணிகள்அகிலேஷ் யாதவ்பெரியார் சிலைமாணவிகள்இந்திய மக்கள்தொகை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!