கட்டுரை, இன்னொரு குரல், இதழியல் 2 நிமிட வாசிப்பு

அறிவுப் பசிக்கு விருந்தாகட்டும் ‘அருஞ்சொல்’லின் புதிய மாற்றம்

திருமாறன் செங்குட்டுவன்
02 Jun 2024, 5:00 am
0

ன்பின் ஆசிரியர் அவர்களுக்கு,

நடப்பு நிகழ்வுகள் மற்றும் அரசியலின் மீதான எனது ஆர்வத்தால், ‘அருஞ்சொல்’லில் வெளியிடப்படும் கட்டுரைகளை முதல் நாளிலிருந்து அனுதினமும் ஆர்வத்துடன் படித்துவருகிறேன். ‘அருஞ்சொல்’லில் வெளிவரும் கட்டுரைகள் யாவும் பல்வேறு துறைகளின் அறிஞர்களால் சீரிய ஆய்விற்குப் பிறகு எழுதப்படுபவை என்றாலும், அது எந்நாளும் படித்தவர்களுக்கு மட்டுமானவையாக இருந்ததில்லை. பாமரரும் படித்துணரும் வகையில் மிகவும் எளிய மொழிநடையில் வருபவை. அதையே ‘அருஞ்சொல்’லின் ஆகச் சிறந்த பலமாக நான் கருதுகின்றேன்!  

ஒரு மருத்துவனாக, ‘அருஞ்சொல்’ இதழில் மருத்துவர் கு.கணேசன் எழுதும் மருத்துவம் சார்ந்த கட்டுரைகளை நான் விரும்பி வாசிப்பவன் என்றாலும், இவ்விதழில் வெளிவரும் அரசியல் மற்றும் இதர துறை சார்ந்த கட்டுரைகளாளும் நான் அதே அளவு ஈர்க்கப்பட்டேன். கடந்த ஆண்டு, உயர்கல்விக்காக நான் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்குக் குடிபெயர்ந்த சூழலிலும், தமிழ்நாட்டின் அன்றாட நிகழ்வுகளை, ‘அருஞ்சொல்’ கட்டுரைகளின் ஊடாக நான் தொடர்ச்சியாக பின்தொடர்ந்துவருகிறேன்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற்றுவரும் இந்தப் பரபரபான சூழலில், தமிழ்நாட்டின் கள நிலவரம் உள்ளங்கை நெல்லிக்கனி என்றாலும், இதர மாநிலத்தின் களச் சூழலை அங்கு இல்லாத இல்லாதபோதிலும் ‘அருஞ்சொல்’லின் கட்டுரைகளின் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது ஒரு பெரும் ஆறுதல்.  

கடந்த ஏப்ரல் மாதத்தில், அமெரிக்கவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற கொலம்பியா பல்கலைக்கழகத்தில், பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் நாட்டு ராணுவம் நிகழ்த்திய தாக்குதலை கண்டித்து மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் நாடுதழுவிய இயக்கமாக மாறி, அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பரவி பெரும் விவாதத்தை உண்டாக்கியது. அந்தப் பல்கலைகழகத்தின் பொது சுகாதார முதுநிலை மாணவராகவும், பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினராகவும், அந்தப் பேராட்டத்தின் போக்கையும், அதன் வீரியத்தையும் அருகிலிருந்து பார்த்தவன் எனும் முறையில், அந்தப் போராட்டத்திற்கு தமிழ் அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் போதிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று எனது நண்பர்களிடம் வருந்தியதுண்டு.    

இச்சூழலில், 2024 மே 10 அன்று ‘அருஞ்சொல்’லில் ராஜன் குறை கிருஷ்ணன் கொலம்பியா பல்கலைக்கழக மாணவர் போராட்டம் குறித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அக்கட்டுரை அந்தப் போரட்டத்திற்கான உரிய மதிப்பை தந்த ஒரே தமிழ் பத்திரிகை என்பதோடு மட்டுமல்லாமல், எவ்வித மிகைபடுத்துதலோ குறைத்துக் கூறுதலோ இல்லாமல் உண்மையைப் பதிவுசெய்த கட்டுரையும் ஆகும். இதிலிருந்து ‘அருஞ்சொல்’ இதழின் அறம் மட்டுமின்றி, தமிழ் வாசகர்களுக்கு உலகின் மறுமூலையில் நடக்கும் ஒரு நிகழ்வாயினும், அதுகுறித்து தெரியப்படுத்த வேண்டும் எனும் முணைப்பையும் நாம் அறிந்துகொள்ள இயலும். 

ஒரு மின்னிதழாக தினம் ஒரு கட்டுரையைத் தந்த ‘அருஞ்சொல்’ இனி வாரம்தோறும் வெளியாகும் வார இதழாக பல கட்டுரைகளைத் தாங்கி வரவுள்ளது எனும் செய்தி, மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளின் அறுசுவை உணவோடு, இனி ‘அருஞ்சொல்’லும் தமிழ் வாசகர்களின் அறிவுப் பசிக்கு விருந்தாக அமைய எனது மனமார்ந்த வாழ்த்துகள். 

மிக்க நன்றி!

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

1






ஆர்.எஸ்.எஸ்டு டூ லிஸ்ட்தற்குறிகள்கதைவங்க அரசியல் சாதியற்றதுமாயக்கோட்டையின் கடவுள்நாகர்கள்முடியாதா?குலசேகரபட்டினத்தில் இரண்டாவது விண்வெளி ஏவுதளம்அரசாங்கம்நல்ல பெண்சுவீடன் அரசுப் பள்ளியில் தமிழ் மொழிக் கல்விவிவசாயி படுகொலைதொல்லைமோடியின் உத்தரவாதம்விரும்பப்படுகின்றன விலை உயர்வும் வேலையின்மையும்!உண்மை விமர்சனம்ஹரிஜனங்கள்அஜீத் தோவலின் ஆபத்தான கருத்துஆரிஃப் முஹம்மது கான்வடிவமைப்புஇரட்டை இலைஒற்றுப் பிழைகளைத் தவிர்ப்பது எப்படி?தன்வரலாறுதைவான் தனி நாடாக நீடிக்குமாஇயக்குநர் மணிரத்னம்அம்பானிவிளிம்புநிலை மக்களிடம் ராகுலுக்கு ஆதரவுகூட்டுப்பண்ணைவருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!