ஆசிரியரிடமிருந்து... 3 நிமிட வாசிப்பு

வீரமணி பேட்டியும் பிஏ கிருஷ்ணனும்!

ஆசிரியர்
30 Jun 2022, 5:00 am
0

வாசகர்களோடு ஆசிரியர் பகிர்ந்துகொள்ளும் வகையில் 'ஆசிரியரிடமிருந்து' பகுதி வெளியிடப்படுகிறது. கூட்டங்கள், சமூகவலைதளங்கள் வழி ஆசிரியர் பகிர்ந்துகொள்ளும் குறிப்பிடத்தக்க  செய்திகள் இங்கே இடம்பெறும். 

ற்று முன் பி.ஏ.கிருஷ்ணன் அழைத்தார். "திக தலைவர் கி.வீரமணியின் பேட்டியைப் பார்த்தேன். மிக முக்கியமான பேட்டி" என்றார். 

திராவிடர் கழகத்தின் அதிகாரபூர்வ பத்திரிகையான 'விடுதலை'யின் ஆசிரியராக கி.வீரமணி அவர்கள் பொறுப்பேற்று 60 ஆண்டுகள் ஆவதை ஒட்டி எடுக்கப்பட்ட பேட்டி அது.

"பெரிய சாதனை இது! 60 வருஷங்கள் ஒரு தினசரி பத்திரிகையைத் தொடர்ந்து பொறுப்பேற்று நடத்துவதும், எழுதுவதும் எவ்வளவு பெரிய விஷயம்! எந்த ஊடகமும், யாரும் கவனப்படுத்தாத விஷயத்தை நீங்கள் சரியாகக் கவனப்படுத்தியிருக்கிறீர்கள். அதேபோல, ஒரு மணி நேரப் பேட்டியும் முழுக்க அவருடைய பத்திரிகை அனுபவங்களையும், பெரியாருடைய பத்திரிகைப் பங்களிப்பையும் பற்றி மட்டும் பேசுவதாக அமைந்திருப்பதும், பேட்டி திசை மாறிடாமல் ஒரே நேர்க்கோட்டில் சென்றிருப்பதும் பிரமாதமான விஷயம்! 90 வயதில் ஒருவர் இவ்வளவு துல்லியமாகப் பேசுவது ஆச்சரியம். நான் இதுகுறித்து எழுத வேண்டும் என்று நினைக்கிறேன்" என்று சொல்லி பூரித்துப் பேசிக்கொண்டிருந்தார். "நன்றி, வாய்ப்பு கிடைக்கும்போது எழுதுங்கள்" என்றேன்.

பெரியார், திராவிடர் கழகம், வீரமணி, விடுதலை இந்தப் பெயர்கள் எல்லாம் பி.ஏ.கிருஷ்ணனுக்கு எவ்வளவு கசக்கும் என்பது ஊருக்கே தெரியும். ஆனால், அவர் எதிர்க்கும் ஒரு கொள்கை சார்ந்து அவர் அளிக்கும் தொடர் கவனத்தையும், வாசிப்பையும், உழைப்பையும் இங்கே தான் நேசிக்கும் கொள்கை சார்ந்து எத்தனை பேர் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள் என்று கேட்டுக்கொண்டால் பலருக்கு ஏமாற்றமே எஞ்சும் என எண்ணுகிறேன்.  

இப்படியொரு பேட்டி வெளியாகி ஒரு மாதம் ஆகிறது; அதுகுறித்து பி.ஏ. கிருஷ்ணன்போல எவர் ஒருவரும் என்னிடம் பேசவில்லை. அந்தப் பக்கம் பேட்டி தந்த ஆசிரியரிடமும் எவரும் பேசியதாகத் தெரியவில்லை. சொல்லபோனால், இன்றுவரை வெறும் 4500 பார்வைகளை மட்டுமே கடந்திருக்கிறது அந்தக் காணொளி. 

இது வெறும் ஒரு பேட்டி சம்பந்தமான விஷயம் இல்லை. 60 ஆண்டுகள் ஒரு தினசரி  பத்திரிகையை சமூகப் பண்பாட்டு இயக்கம் ஒன்று இடையறாது நடத்திடுவது பத்திரிகைத் துறையில் உலக அளவிலான அரும்பணிகளில் ஒன்று. இப்படிப்பட்ட தீவிரமான விஷயங்களுக்கு ஒரு சமூகமாக நாம் கொடுக்கும் மரியாதை என்ன என்ற கேள்வி தொடர்பிலானது; வெளியே தீவிரமான விஷயங்களுக்காகக் கொடுக்கப்படும் போலி குரல்களுக்கும், உள்ளே நாம் வெளிப்படுத்தும் அசலான அக்கறைகளுக்கும் இடையிலான தலைகீழ் வேறுபாடு அது.

இதுவரை இத்தகைய ஓர் அரும்பணிக்காகப் பொதுச் சமூகத்திலிருந்து கி.வீரமணி அவர்கள் எந்த அங்கீகாரத்தையும் பெற்றது இல்லை. ஆனால், "ஆசிரியர் என்று அழைக்கிறீர்களே, எந்தப் பள்ளிக்கூடத்துக்கு ஆசிரியராக இருந்தார் வீரமணி?" என்று கூசாமல் பல தற்குறிகள் கேள்வி கேட்கும் சூழல் இந்தச் சமூகத்தில் இருக்கிறது என்றால், அதற்கு இந்த போலி அக்கறைக் குரல்களும் ஒரு காரணம் என்று எண்ணுகிறேன்.

சமஸ், முகநூல் பதிவிலிருந்து...

தொடர்புடைய காணொளி:

https://www.arunchol.com/veeramani-interciew-on-viduthalai-by-samas 


1


அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

மாபெரும் தமிழ்க் கனவு கிரா பேட்டிசமஸ் பதில்லீசமஸ் - கி.ராஜநாராயணன்மாநில வளர்ச்சிஇந்திய விவசாயிகள்ஜல்லிக்கட்டுபேராசிரியர் கல்யாணிராஜன் குறைகுரியன் வரலாறுமாநிலத்தின்வீழ்ச்சிதிரிபுராபட்டியல் இனத்தவர்அண்ணா சமஸ்குறைந்த பட்ச விலைடி.வி.பரத்வாஜ் கட்டுரைமுரசொலி மாறன்உமர் அப்துல்லா ஸ்டாலின்சியாமா பிரசாத் முகர்ஜிஉணவு நெருக்கடிஆ.சிவசுப்பிரமணியன் அண்ணா பேட்டிதன்னாட்சி இழப்புரஷ்யாவின் தாக்குதல்நீதிபதிகள்கட்டிட விதிமுறைகள்குடிமைப் பணித் தேர்வுபக்க வாதம் தவிர்ப்பது எப்படிமத அரசியல்இமையம் சமஸ்திராவிட இயக்கம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!