புதிதாகத் தொடங்கப்படும் எந்த ஓர் ஊடகமும் தனக்கென்று சில இலக்குகளை வகுத்துக்கொள்வது வழக்கம். நாம் சில இலக்குகளுக்காகவே ஊடகத்தைத் தொடங்குகிறோம். காந்தி குறிப்பிட்ட சுயராஜ்ஜியமும் சமத்துவமுமே நம் லட்சியம். இதில் நமக்கான பணிக்களம் தமிழ்ச் சமூகம்.
எல்லாச் சமூகங்களுக்கும் இணையாகத் தமிழ் மக்களின் உரிமைகளைத் தூக்கிப்பிடிப்பதும், தமிழ்ச் சமூகம் உரிய அதிகாரப் பகிர்வைப் பெறச் செயலாற்றுவதும், சர்வதேச சிந்தனைத் தளத்தில் தனக்கென்று ஒரு தனியிடத்தை அது பெற தமிழ்ச் சமூகத்தில் அறிவொளி பாய்ச்சுவதுமே ‘அருஞ்சொல்’ இதழின் பிரதான பணி இலக்குகள் ஆகும். அதாவது, யாருக்கும் தாழாமல், யாரையும் தாழ்த்தாமல், ஒட்டுமொத்த மனித குல சமத்துவத்துக்காகச் செயலாற்றும் ஓரிடத்துக்குத் தமிழ்ச் சமூகம் முன்னகர வேண்டும். இதற்காக அறிவுத்தளத்தில் உழைப்போரின் முன்வரிசையில், இனி ‘அருஞ்சொல்’ எப்போதும் நிற்கும்.
நவீனச் சமூகமானது, ஊடகங்களுக்கு ஓர் உயரிய இடத்தைக் கொடுத்திருக்கிறது. ஊடகங்கள் தம் பொறுப்பை உணர்ந்து செயலாற்றுகின்றனவோ, இல்லையோ அடிப்படையில் அவை கற்பிக்கும் வேலையையே செய்கின்றன. ஊடகங்கள் இயல்பாகக் கொண்டிருக்கும் இந்த உள்ளார்ந்த பண்பு எவ்வளவு பொறுப்புக்குரியது என்பதை உணர்ந்து ‘அருஞ்சொல்’ செயல்படும். காலம் நெடுகிலும், தானும் கற்றுக்கொண்டே, கற்பிக்கும் பணியையும் மேற்கொள்ளும் ஒரு நல்ல ஆசிரியருக்கான இலக்கணத்தை அது பின்பற்றும்.
தமிழின் தொன்மையான வார்த்தைகளில் ஒன்று ‘சொல்’ ஆகும். சிறப்புக்குரியதும்கூட. சொல் என்பதற்கு ‘மொழி - பேச்சு - உறுதிமொழி - புகழ் - மந்திரம் - கட்டளை - புத்திமதி - பேச்சின் கடவுளாகிய நாமகள்’ என்று பல அர்த்தங்கள் உண்டு. ‘அருமை’ என்ற வார்த்தையும் அப்படியானதே ஆகும். ‘அபூர்வம் - மகத்துவம் - கிடைப்பதற்கரிய’ என்று பல அர்த்தங்களை உள்ளடக்கியது அது.
அருமையான சொல் எனும் இரு சொற்களின் சேர்க்கையான ‘அருஞ்சொல்’ எனும் பெயரை நம்முடைய ஊடகத்துக்கான பெயராக நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ளும்போது, அபூர்வமான, கிடைப்பதற்கரியதான, மகத்துவம் மிக்க விஷயங்களை வாசகர்களுக்குச் சொல்லுவதே நம்முடைய ஊடகத்தின் கடமை என்று நாம் வரையறுத்துக்கொள்கிறோம். காந்தியின் மொழியில் கூறுவது என்றால், நாட்டின் மனதைப் படிப்பதும், அந்த மனதுக்குத் திட்டவட்டமான அச்சமற்ற வெளிப்பாட்டை வழங்குவதுமான தனித்துவம் மிக்க ஊடகத்தின் பணியை ‘அருஞ்சொல்’ மேற்கொள்ளும். தமிழ் மக்களுக்கான சேவையே அதன் ஆதாரமான நோக்கம்.
உலகின் நிகழ்வுகளைத் தமிழ்ப் பார்வையிலிருந்து ‘அருஞ்சொல்’ அணுகும்; பொருளாதாரம், கலாச்சாரம், கலை, இலக்கியம், வரலாறு, அறிவியல், சுற்றுச்சூழல் என்று பல்வேறு துறைகளிலும் கவனம் செலுத்த முற்பட்டாலும், அரசியலுக்கும், அரசு நிர்வாகத்துக்கும் அது பிரதான கவனம் அளிக்கும்; ஆள்வோருக்கும் ஆளப்படுவோருக்கும் இடையிலான பாலமாக அது இருக்கும். இந்தியாவில் சமத்துவத்துக்கான கூட்டாட்சிப் பாதைகளாக சமூக நீதியையும், ராஜ்ஜிய நீதியையும் அது நம்புகிறது; எது ஒன்றின் பெயராலும் உருவாக்கப்படும் வெறுப்பரசியலை ஒருபோதும் அது அனுமதிக்காது; எந்த வகைப் பாகுபாட்டுக்கு எதிராகவும் எப்போதும் அது உறுதிபட நிற்கும்; சாமானிய மக்களின் குரலாக ‘அருஞ்சொல்’ செயல்படும்.
சுதந்திரச் சிந்தனையை ‘அருஞ்சொல்’ ஒருபோதும் எந்த ஒரு சித்தாந்தத்திடமோ அமைப்பிடமோ பறிகொடுக்காது. எந்த ஒரு விஷயத்தையும் குறிப்பிட்ட அமைப்பு அல்லது கோட்பாட்டின் அடிப்படையில் அல்லாமல், தொலைநோக்குப் பார்வையிலிருந்தும், எளியோர் மீதான கரிசனத்திலிருந்துமே ‘அருஞ்சொல்’ அணுகும். காந்தியை ஒரு சித்தாந்தியாக அல்லாமல், மக்கள் மையப் பிரதிநிதியாகக் காணும் ‘அருஞ்சொல்’லின் தார்மீக வழிகாட்டியாக காந்தியும், அதன் திசைக்காட்டியாக அவர் அளித்துச்சென்ற மந்திரக்காப்பும் வழிநடத்துவார்கள். ஆம், நியாயமும் நீதியுமே ‘அருஞ்சொல்’லை வழிநடத்த அது நிர்ணயித்துக்கொண்டிருக்கும் எளிய கோட்பாடுகள்.
மனிதர்கள் கருத்துகளால் நிரம்பியவர்கள். ஜனநாயகத்தின் உயிர்நாடி சுதந்திரமான விவாதங்கள். எல்லாவற்றையும் கண்ணியமான மொழியில் விவாதிக்கும், எதிர்த் தரப்பாரின் நியாயமான விமர்சனங்களையும் மனம் திறந்து ஏற்கும் ஆற்றலைப் பெற்றிருப்பதே ஆரோக்கியமான சமூகம். மக்களுடைய விருப்பத்துக்குரிய கருத்துகளைப் பிரதிபலிப்பது மட்டும் அல்ல; மக்களுடைய விருப்பத்துக்கு அப்பாற்பட்டும், சமூகத்தின் எதிர்கால நன்மைக்கு எது தேவையோ அதை உறுதிபடச் சொல்வதும் ஊடகங்களின் கடமை என்பதைத் தன் முன்னோடிகளிடமிருந்து ‘அருஞ்சொல்’ கற்றிருக்கிறது; அவ்வகையில் துணிச்சலான கருத்துகளைப் பேசும் தமிழ்ச் சமூகத்தின் உரையாடல் களமாக ‘அருஞ்சொல்’ அமையும்!

2

1

பின்னூட்டம் (41)
Login / Create an account to add a comment / reply.
கல்லிங்கரை கருணாநிதி 3 years ago
மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு வணக்கம் கடந்த சில மாதங்களாக அருஞ்சொல் இதழில் வெளியாடும் கட்டுரைகளை வாசித்து வருகிறேன். பல கட்டுரைகள் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய வகையில் இருக்கின்றன. நீங்கள் ஒரு மாத இதழ் அல்லது வார இதழாக கொண்டு வந்தால் இன்னும் வாசிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் நன்றாக இருக்கும். பல நேரங்களில் மொபைல்/கணினியில் தொடர்ச்சியாக வாசிக்க இயலவில்லை. முயற்சி செய்வீர்கள் என நம்புகிறேன் நன்றி இவண் Soft appme10@gmail.com
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.
S.kalpana sekkizhar 3 years ago
வாழ்த்துகள். அருஞ்சொல் சரியான திசை நோக்கிய பயணத்தைத் தொடங்கியுள்ளது.
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.
J JAYABASKAR 3 years ago
எளிமை எழுத்தின் வலிமை வாயிலாக நம் சமுகத்தில் நம்மால் முடிந்த நல் மாற்றங்களை நிகழ்த்தலாம்...நல்ல சமுதாயத்தைப் படைப்போம்...
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Senthil kumar 3 years ago
அருஞ்சொல் பெயர் அற்புதம் நீங்கள் பத்திரிகை ஆரம்பித்தது நடத்திக் கொண்டு இருப்பது இப்போது தான் அறிந்தேன். கட்டுரை இன்னும் பல செய்திகள் அருமை. அனைத்து நண்பர்கள் ஆதரவுடன் மேலும் வளர வாழ்த்துக்கள்.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
முத்ரா முத்துராமன் 3 years ago
வாழ்த்துகள் சமஸ் சார், உங்களை இந்து தமிழ் நடுப்பக்க கட்டுரைகளில் இருந்து அவதானித்து வருகிறேன்- அருஞ்சொல் இப்பொழுது காலத்தின் தேவை, நிச்சயமாகத் தெரியும் அருஞ்சொல் வழக்கமான ஒன்றாக இருக்காது.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
I.Philips ponnudurai 3 years ago
வாழ்த்துகள்! சமஸ் தொடரட்டும் உங்கள் எழுத்துபயணம் தமிழ் மக்களுக்காக!
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Natarajan Selvaraj 3 years ago
அருமை சகோ....எப்போதும் உங்களுக்கு என் ஆதரவும் மரியாதையும்....
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Nazrul 3 years ago
அருஞ்சொல் ஒரு இதழாக கைகளில் தவழும் நாள் எப்போது
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
ASHOKKUMAR P 3 years ago
அருமை. வாழ்த்துக்கள்... சிறப்பான முன்னெடுப்பு..
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
T K PRASANNAN 3 years ago
வாழ்த்துகள். தங்கள் முயற்சிகள் வெல்லட்டும். ஒரு ஆரோக்கியமான ஊடக அறத்தை வென்றெடுப்போம்.
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.
Sudarshan Ramanathan 3 years ago
வாழ்த்துக்கள்.அருஞ்சொல் அறம் சார்ந்து வளர மனமாற வேண்டுகிறேன்.
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
Mr. MANIPRABHU S 3 years ago
வாழ்த்துக்கள் சமஸ்.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Jeyasimmapandian 3 years ago
Vaalthukkal anna
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Ganesh 3 years ago
வாழ்த்துக்கள் சமஸ். உங்களுக்காகவே நான் தினமும் தமிழ் ஹிந்து வாங்க ஆரம்பித்தேன், நீங்கள் எழுதிய கட்டுரைகள் ஒருநாளும் எழுட்சியை தராமல் இருந்ததில்லை. இனி உங்கள் பத்திரிக்கை, நம் பத்திரிக்கை என்பதாகவே உணர்கிறேன். நன்றி!
Reply 5 0
Login / Create an account to add a comment / reply.
Muthukrishnan Krishnan 3 years ago
வாழ்த்துகள் தோழர்!
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Jayashankar 3 years ago
நல்விதையாய் விதைத்து உள்ளீர்கள். நேர்மை மழையாய் சமூகத்துக்கு பங்களித்து செழித்து வளர வாழ்த்துகள் மண்ணின் மைந்தனுக்கு
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
THANGAMANI TEACHER 3 years ago
தமிழ் ஊடகங்களின் போதாமையை அருஞ்சொல் இட்டு நிரப்பும் என்ற எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் எங்களுக்கு எப்போதும் உண்டு. இணைந்து செயல்படுவோம் .வாழ்த்துக்கள் தோழர்.
Reply 3 0
Login / Create an account to add a comment / reply.
Jayalakshmi 3 years ago
தலையங்கமே அபாரம். வாழ்த்துக்கள் சமஸ்.
Reply 3 0
Login / Create an account to add a comment / reply.
R.Sisubalan 3 years ago
வணக்கம் தோழர் . தங்களின் முன்முயற்சி பிரமிக்க வைக்கிறது. மிகப்பெரும் எதிர்பார்ப்பை தோற்றுவித்திருக்கிறது. காலத்தின் கண்ணாடியாக அருஞ்சொல் செயல்பட வாழ்த்துக்கள் ! இரா.சிசுபாலன்,தலைவர் , தகடூர் புத்தகப் பேரவை, தருமபுரி.1
Reply 4 0
Login / Create an account to add a comment / reply.
மு.வீராசாமி 3 years ago
தங்களின் ஆழ்ந்த திட்டமிடுதலும், கடும் உழைப்பும் முதல் இதழில் தெரிகிறது. வாழ்த்துகள்
Reply 4 0
Login / Create an account to add a comment / reply.
RAJADURAI 3 years ago
ஆசிரியர் சமஸ் அவர்களுக்கு வாழ்த்துகள்...
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
Ilango Ramasamy 3 years ago
"அருஞ்சொல்" ன் நோக்கம் நிறைவேற வாழ்த்துக்கள்.
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.
பஞ்சநதிக்குளம் இராசா வீரையன் 3 years ago
நல்வாழ்த்துகள். அருஞ்சொல் அதன் நோக்கத்தில் வெற்றி பெற்று வெல்லுஞ்சொல் ஆக அமையட்டும்
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.
Saravanan 3 years ago
வாழ்த்துகள் தோழர், அருஞ்சொல் அதன் லட்சியத்தை அடைய வாழ்த்துகிறேன்
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.
Dr S S RAMAJAYAM 3 years ago
சிறந்த முன்னெடுப்பு, இணைய தள வடிவமைப்பு சிறப்பு. தோழர் சமஸ் அவர்களின் நன்மன சிந்தனை சமூக ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என்கிற நம்பிக்கையில் அவரை ஆரத்தழுவி முத்தமிட்டு நெஞ்சார வாழ்த்துகிறேன்.. முனைவர் சே சோ இராமஜெயம் கௌரவ விரிவுரையாளர் வரலாற்று துறை அரசு கலைக் கல்லூரி திண்டிவனம் 9943066736
Reply 3 0
Login / Create an account to add a comment / reply.
Indra Kumar T 3 years ago
அருஞ்சொல் இணையத்தின் வடிவமைப்பே மிகவும் சிறப்பாக இருக்கின்றது. தங்கள் பாதை நீண்டு சிறக்க வாழ்த்துகள்.
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.
SABARINATHAN NAGARAJ 3 years ago
' அருஞ்சொல் ' ஆசிரியர் திரு சமஸ் அவர்களுக்கும் ஆசிரியர் குழுவினருக்கும் வாழ்த்துகள் . நல்முயற்சி . தமிழகத்திற்கு தற்பொழுது இப்படியொரு தனித்துவமான ஊடகம் தேவை.
Reply 3 0
Login / Create an account to add a comment / reply.
Dev Anand Radha 3 years ago
எந்த நிலையிலும் நடுநிலை வழுவாமல் செய்திகள் தர வாழ்த்துகிறேன்
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.
Prithivirajan 3 years ago
வாழ்த்துகள் ஆசிரியர் சமஸ்!
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.
Deepaprasath 3 years ago
வாழ்த்துகள் ஆசிரியரே. தாங்கள் தமிழில் ஒரு தனித்துவமான பாதையை தொடங்கியதை நினைத்து மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்கிறேன். நன்றி....
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.
udhaya kumar 3 years ago
best wishes samas anna.
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
முனைவர் பா.ஜம்புலிங்கம் 3 years ago
அருமையான முன்னெடுப்பு. இக்காலகட்டத்திற்குத் தேவையானவற்றை உணர்ந்து அதனடிப்படையில் ஓர் இயங்குதளத்தைக் கொண்டு சிறப்பான ஆரம்பாக அருஞ்சொல் அமைந்துள்ளது பாராட்டிற்குரிய செய்தியாகும். உங்களின் எழுத்தும், அனுபவமும், சமூகப்பிரக்ஞையும் ஒன்றுசேர்ந்து சாதனை படைக்க இது ஓர் இனிய ஆரம்பம். மகிழ்ச்சி. மனம் நிறைந்த வாழ்த்துகள்.
Reply 3 0
Login / Create an account to add a comment / reply.
VIJAYAKUMAR 3 years ago
அற்புதமான முன்னெடுப்பு. உங்கள் சொற்களில் சத்தியம் ஒளிரட்டும். குழுவினருக்கு வாழ்த்துக்கள். கருத்தளவிலும் நிதியளவிலும் எங்களின் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு.
Reply 3 0
Login / Create an account to add a comment / reply.
William Linson Raj D 3 years ago
ஊடகங்களுக்கேயுரித்தான அறங்கள் அருகிக் கொண்டிருக்கிற இக்காலத்தில் புதிய நம்பிக்கையைத் தமிழர்களுக்குத் தந்திருக்கிறது, அருஞ்சொல். இந்த நம்பிக்கையைக் காப்பாற்றும் பெருங்கடமைதான் அருஞ்சொல்லைக் காக்கும் எல்லைதெய்வம்.
Reply 3 0
Login / Create an account to add a comment / reply.
kajamkm 3 years ago
அருஞ்சொல் வார்த்தையே அருமையாக அழகாக உள்ளது..தமிழ் பேசும் நிலமெங்கும் அருஞ்சொல் தனது இறகினை விரித்து,அறத்தை எடுத்துரைத்து,யாவருக்கும் அஞ்சாமல் வாய்மையை பரப்பி பாரெங்கும் விருட்சமாக வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்.... காஜா ஹஸனி . மேலப்பாளையம்.
Reply 3 0
Login / Create an account to add a comment / reply.
சரவணமணிகண்டன் 3 years ago
மிகச் சிறப்பு வாழ்த்துகள். பார்வையற்றோர் திரைவாசிப்பான் கொண்டு அணுகும் வண்ணம் இணைய வடிவமைப்பும் அமைந்திருப்பது சிறப்பு. ஒரு கோரிக்கை: திரைவாசிப்பான்களின் உச்சரிப்பில் மயங்கொலிகளை நாம் துல்லியமாக அறியமுடியாது. இந்தக் குறைபாட்டைப் போக்கவே விசைப்பலகையில் ஒரு குறுக்குவழி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு ஒருங்குறி வடிவிலான உரையை திரைவாசிப்பான் கொண்டு வாசிக்கும் ஒருவர், ஒரு வார்த்தையிலுள்ள மயங்கொலியை அறிய விரும்பினால், அந்த வார்த்தையின் குறிப்பிட்ட எழுத்தில் சுட்டியை (cursor) வைத்துக்கொண்டு, insertinsert பிடித்துக்கொண்டு, முற்றுப்புள்ளி விசையை மூன்றுமுறை அழுத்தினால், அவர் அறிய விரும்பும் எழுத்திற்கான பிரெயில் புள்ளிகள் மற்றும் ஒரு உதாரண வார்த்தையையும் சேர்த்து திரைவாசிப்பான் அவருக்குச் சொல்லும். உதாரணமாக, இறை என்ற வார்த்தையில், றை என்ற எழுத்தில் சுட்டியை வைத்துக்கொண்டு, நாம் மேற்சொன்ன குறுக்கு விசையை அழுத்தினால், திரைவாசிப்பான் அதனை "புறா பிரெயில் புள்ளிகள் 1,2,4,5,6" என வாசிக்கும். இது பார்வையற்றவர்களுக்கு மிகவும் உதவியானது. இந்த வசதி இந்து தமிழ்த்திசையின் இணையத்தில் மிக வெற்றிகரமாகச் செயலாக்கத்தில் உள்ளது. நமது இணையத்திலும் இந்த வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் என விழைகிறேன். நன்றிகளும் வாழ்த்துகளும்.
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
Prakash Ravi 3 years ago
வாழ்த்துக்கள் சமஸ் அண்ணா.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Shahul Hameed 3 years ago
👍
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Satheesh Kumar 3 years ago
😍 அருமை
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Vignesh mohan 3 years ago
"தன்னுணர்வை("தான்-உணர்வு" அல்ல)" அரசியல் உணர்வாக,மானுட விடுதலைக்கான உணர்வாக,சமூக நீதியின் உணர்வாக வெளிப்படுத்தும் தளமே அறம் சார்ந்த ஊடகம்... ஒருவரை ஒருவர் மதிப்போம்,பேசுவோம்,விவாதிப்போம், "அனைவருக்குமான" அற விழுமியங்களை உணர்வோம்.....
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
Abdul Latheef 3 years ago
வாழ்த்துகள்
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.