1 நிமிட வாசிப்பு
ஜெய் பீம்
ஜெய் பீம்
விலை ரூ. 500
தமிழின் முக்கியமான படங்களில் ஒன்று என்பதோடு, உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தியப் படங்களில் ஒரு மைல்கல் ‘ஜெய் பீம்’. சினிமா சூத்திரங்களை உட்செரித்தபடியே இங்கே அதுவரை உருவாக்கிவைக்கப்பட்டிருந்த அழகியல் இலக்கண மதிப்பீடுகளை இப்படம் நொறுக்கித் தள்ளியது.
இந்தியச் சமூகத்தின் ஒட்டுமொத்த அமைப்பிலும் பழங்குடிகள் எவ்வளவு விளிம்பில் அழுத்தப்பட்டிருக்கின்றனர் என்பதையும் நாம் சமத்துவமான அமைப்பு என்று நம்பும் நம்முடைய ஜனநாயக ஆட்சியமைப்பானது, எவ்வளவு கொடூரமான உள்முகத்தை வைத்திருக்கிறது என்பதையும் ஒருசேர அம்பலப்படுத்திய படைப்பு அது.
எப்படி ஒரு திரைப்படமானது மக்கள் அரசியலைப் பேசுவதற்கான கருவியாக அல்லது ஆயுதமாகக் கையாளப்பட வேண்டும் என்பதில் துல்லியமான இடத்தை ‘ஜெய் பீம்’ எட்டியது. படத்தைப் பார்த்த எவரும் நிலைகுலைந்தார்கள். பாதிக்கப்பட்ட மக்கள் தம் குரலாக இந்தப் படத்தைப் பார்த்ததோடு அல்லாமல், பாதிப்புக்குள்ளாக்கும் அமைப்பும், பொதுச் சமூகமும் குற்றவுணர்வுக்கு உள்ளாயினர். விளைவாக, நம் சமூகத்தில் முன்னுதாரணம் அற்ற வகையில் பெரும் விவாதத்தை அது உருவாக்கியது. மொத்தத் தமிழ்நாடும் பேசியது.
நம்முடைய சினிமாக்காரர்கள் பார்வையில், அது மிகக் கரடான ஒரு கதை; இப்படி ஒரு வெற்றியை அது பெறும் என்று எவரும் நம்பியிருக்க மாட்டார்கள். கரடான ஒரு வாழ்க்கைச் சம்பவமானது அதன் தீவிரம் சற்றும் குறையாமல், அசாதாரண வேகத்துடன் மக்களைச் சென்றடைந்ததற்கும், நம் சமூகத்தில் பெரும் விவாதத்தை உண்டாக்கியதற்கும் காரணம் த.செ.ஞானவேலுவின் திரைக்கதை. சினிமாவைப் பயிலக்கூடியவர்கள் தமிழில் கட்டாயம் வாசிக்க வேண்டிய ஒன்று அது.
வெறுமனே திரைக்கதையை மட்டும் கொடுப்பதோடு அல்லாமல், ‘ஜெய் பீம்’ போன்ற ஒரு படம் எப்படி உருவானது என்பதை அதை உருவாக்கிய அணியினரின் உரையாடல் வழியாகவே தர விரும்பியது ‘அருஞ்சொல்’. சூர்யா - ஜோதிகாவின் '2டி என்டர்டெயின்மென்ட்' நிறுவனத்துடன் இணைந்து இந்நூலை அது உருவாக்கி இருக்கிறது.
நீதிநாயகம் கே.சந்துரு, தயாரிப்பாளர் - நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் தொடங்கி தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை விரிவாக இந்நூலில் பேசியிருக்கிறார்கள். ஒரு திரைக்கதை நூலுக்கான முன்மாதிரியாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்நூல் சினிமாவைக் கூர்ந்த பார்வையோடு அணுகும் எவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.
¶
எப்படி வாங்குவது?
இந்தியாவில் இருப்போருக்கு மிக எளிமையான வழி இதுதான்: செல்பேசி எண்: 63801 53325. வாட்ஸப் வழியே வாங்கிடுதல்.
* உங்களுக்குத் தேவைப்படும் நூலுக்கான தொகையை ‘ஜிபே’ மூலம் 63801 53325 என்ற எண்ணுக்குச் செலுத்திடுங்கள். கையோடு உங்கள் இதற்கான ரசீதையும், உங்களுடைய முழு முகவரியையும் 63801 53325 அதே எண்ணுக்கு அனுப்பிடுங்கள். அடுத்த சில நாட்களில் நூல்கள் உங்களை வந்தடையும்.
இந்த எண்ணுக்கு வாட்ஸப் வழி செய்தி மட்டுமே அனுப்பிட முடியும். பேச இயலாது. ஆனால், உங்களுக்கான பதில்கள் உடனடியாக உங்களை வந்தடையும்.
தமிழ்நாட்டுக்குள் அஞ்சல் செலவு எமது. வெளிமாநிலங்களுக்குக் கூடுதலாகத் தேவைப்படும் தொகைப்படும் தொகையை நீங்களே உத்தேசித்து, அனுப்பிடுங்கள்; குறைந்தாலும் குறை இல்லை. வெளிநாடுகளுக்கு நூல்களை அனுப்புவது வாசகர்களுக்குப் பெரும் செலவை வைக்கும் காரியம்; அது சென்றடைவதும் சிரமம் என்பதால், நாங்கள் தவிர்க்கிறோம்.
* உங்களுக்குத் தேவைப்படும் நூலுக்கான தொகையை ‘அருஞ்சொல் மீடியா’ வங்கிக் கணக்குக்கு நேரடியாகச் செலுத்திடுங்கள். இப்படிச் செலுத்தும்போது ‘புத்தகத்துக்கு’ என்று வங்கியில் குறிப்பிடுங்கள். ரசீதைப் படம் எடுத்து, உங்கள் முகவரியையும் குறிப்பிட்டு aruncholmedia@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடுங்கள். அடுத்த சில நாட்களில் நூல்கள் உங்களை வந்தடையும்.
வங்கிக் கணக்கு விவரம்:
A/C Name: Arunchol Media Private Limited
A/C No.: 50200068156429
Bank Name: HDFC, IFSC Code: HDFC0009638
Email: aruncholmedia@gmail.com
* இணைய வழியாக ‘காமன்ஃபோக்ஸ் புத்தக அங்காடி’ தளத்தில் எங்கள் நூல்களை நீங்கள் பதிவுசெய்து, வீட்டில் பெறலாம். அந்தத் தளத்தில் எங்கள் வெளியீடுகளுக்கான பக்கம் இது:
அருஞ்சொல் வெளியீடு
துளி வெளியீடு
* சென்னையிலுள்ள எங்களுடைய ‘அருஞ்சொல்’ பணியகத்துக்கே நேரில் வந்து நூல்களைப் பெற்றுக்கொள்ளலாம். எங்கள் அலுவல் நேரம் திங்கள் - வெள்ளி; காலை 10 - மாலை 5. அவசியம் செல்பேசி வழி தகவல் தெரிவித்துவிட்டு வாருங்கள். முகவரி: அருஞ்சொல், ஜி2, வேணுகா அபார்ட்மென்ட்ஸ், 40, அசோக் நகர் 12-வது அவன்யு, சென்னை - 600 083. செல்பேசி எண்: 63801 53325. இந்த எண்ணுக்கு வாட்ஸப் வழி செய்தி மட்டுமே அனுப்பிட முடியும். பேச இயலாது. ஆனால், உங்களுக்கான பதில்கள் உடனடியாக உங்களை வந்தடையும்.
¶
அருஞ்சொல் வெளியீடுகளின் சிறப்பு என்ன?
ஆண்டுக்கு அதிகபட்சம் நான்கு நூல்கள் - தரமான நூல்கள் - மட்டுமே வெளியிடுவது என்று உறுதியேற்றுச் செயல்படுகிறது ‘அருஞ்சொல்’ வெளியீடு. ஆகையால், ‘அருஞ்சொல்’ எனும் பெயர் முத்திரை இருந்தால், ‘தரம் உறுதி’ என்றும் உத்தரவாதத்துடன் நூலை வாங்கலாம்!
1
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.