கோடை மழையில்
ப்ளம் மரங்களின் இலைகள்தான்
குளிர் காற்றின் நிறம்.
- சைமாரோ
᱘
புத்தருக்கு அர்ச்சித்த பூக்கள்
மிதந்து வருகின்றன
குளிர் கால நதியில்.
᱘
பார்
கம்பளிப்பூச்சியின் மயிர்களில்
காலைத் தென்றல் வீசுவதை.
- பூஸான்
᱘
என்னை நான் காண்கிறேன் ஒரு சித்திரத்தில்
அந்தக் குதிரை மெதுவாக நடக்கிறது
கோடை கால தரிசு நிலத்தில்.
- பாஷோ
- மொழிபெயர்ப்பு: இளங்.கார்த்திகேயன்
ஆங்கில மூலம்: 'Haiku, in Four Volumes', R.H.Blyth


2





பின்னூட்டம் (2)
Login / Create an account to add a comment / reply.
Adalarasan 4 years ago
ஹைகூ அருமை தொடர வாழ்த்துகள்
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
VIJAYAKUMAR 4 years ago
அருமை. தொடர்க!
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.